இருவருமாக ஏதேதோ பேசியபடி இருக்க.. அவர்கள் அறியாமலேயே இருவருக்குள்ளும் ஒரு தோழமை உணர்வு வந்திருந்தது…
முல்லை இப்போது சரியாகி இருந்தாலும், தன் அன்னையும் உடன் பிறந்தவர்கள் செய்ததையும் மன்னிக்க சர்வேஸ்வரனுக்கு மனமில்லை…
எனவே முல்லையிடம் தான் இந்த விஷயத்தில் எடுத்திருக்கும் முடிவு பற்றி கூற..
அவளோ முதலில் அதிர்ச்சியானாள்…
பிறகு அவனிடம் இப்படி ஒரு யோசனை வேண்டாம் என்று எடுத்துரைக்க…
அவனும் அது எதையும் காதில் வாங்காமல் நிச்சயமாக தான் ஏற்பாடு செய்திருந்த திட்டப்படி செய்யப் போவதாகவும்…
இதன் மூலமாக தன் பெற்றவருக்கும், தம்பிகளுக்கும் ஓரளவிற்கு புத்தி வரட்டும் என்று கடுமையாக கூறினான்…
ஆனால் முல்லைக்கோ ஏற்கனவே இந்த விஷயத்தில் மாமியாருக்கு தன்மீது அதீத கோபம் இருப்பதும்,
இத்தனை ஆண்டுகளாக அவர் செய்யும் அத்தனை தவறுகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மூத்த பிள்ளை…
இப்போது எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்பது தன்னால் தான் என்று அவரின் எண்ணமும் புரிந்து இருந்ததால்…
சர்வேஸ்வரன் தீர்வாக நினைத்துச் செய்யும் இந்த விஷயமும்,
அவரின் முழு கோபத்தை தன்னிடமே திருப்பும் என்று உணர்ந்திருந்தாள்..
எனவே அவனின் திட்டத்தை கைவிடச் சொல்லி அவளின் மன்றாடல்கள் எதுவும் அவன் செவியில் ஏறவில்லை.
ஆனால் முல்லையிடம் கூட கூறாத ஒரு உண்மை…
ஒருவேளை இப்போதும் முல்லைக்கு நடக்கும் அநியாயத்தை அவன் தட்டிக் கேட்காமல் விட்டுவிட்டால்,
நாளை அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்ற பயமே அவனுக்கு அதிரடியான திட்டம் தீட்டுவதற்கு காரணமாக அமைந்தது…
அதன்படி மறுநாள் விடிந்ததும் அனைவரும் காலை உணவிற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க..
நிதானமாக தயாராகி வந்தவன் முல்லையை அழைத்து தனக்கு அருகில் அமர வைத்துக் கொண்டான்..
இதுவரை அவன் சாப்பிடும் போது முல்லை அந்த இடத்தில் இருந்ததே இல்லை எனலாம்…
ஏனெனில் அவன் மீது இருந்த கோபமும், வருத்தமும் அவளை அவனின் அருகே வர விடாமல் செய்திருந்தது..
ஆனால் இன்று அவனே அவளை கைபிடித்து அருகில் அமர வைத்துக் கொண்டதும்,
சர்வேஸ்வரன் தாய்க்கு உள்ளுக்குள் தீ பிடித்து உலைகளன் என கொதித்தது…
ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் சாமர்த்தியமாக மறைத்தவர்..
“தம்பி நைட் ரொம்ப லேட்டா வந்தியோப்பா..?”
எப்போதும் இருக்கும் அதே அக்கறையான நாடகத் தொனியில் இருக்கும் கேள்விகள்…
அதன் உண்மை தன்மை அறிந்தாலும், ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் சலித்தபடி வெளியே அமைதியாக பதில் கூறுவான்..
என்னதான் அவர்களின் கேள்வி ஒட்டுதல் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையாக இருப்பதாக தோன்றினாலும்,
பெற்ற அன்னை கேள்வி கேட்கும் போது பதில் அளிக்காமல் இருப்பது தவறு என்று அவனின் மனசாட்சி எடுத்துரைப்பதால்..
கேட்கும் ஒரே விதமான கேள்விகளுக்கு எப்போதும் போல் நிதானமாக பதில் அளிப்பவன்…
இன்று முல்லைக்கு அவர் செய்த அனைத்து கெடுதல்களும் தெரிந்ததால் அமைதியாக அவரை ஊன்றி கவனித்தபடி மௌனமாக இருந்தான்…
தான் கேள்வி கேட்டும், பதில் கூறாமல் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் மகனின் விழிகளிலிருந்து எதுவும் புரியாமல் இருக்க…
ஒரு வேளை நேற்று முல்லையை தான் அதிகமாக சித்ரவதை செய்தது தன் மகனுக்கு தெரிந்திருக்குமோ என்று சரியாக கணித்தார்…
ஆனால் முல்லை இதைப்பற்றி நிச்சயமாக பேசியிருக்க மாட்டாள்…
அதையும் மீறி அவளை இதை அரைகுறையாக கூறி இருந்தாலும்
தன் பிள்ளை தன்னை நிச்சயமாக தவறாக நினைத்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது..
ஆனாலும் அவன் முகத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்தவர்…
“என்னப்பா உன்கிட்ட தான கேட்கறேன்.. நைட் வர ரொம்ப லேட் ஆச்சா?”
அவரின் அதீத அக்கறை எப்போதும் போல் மனதிற்கு சலிப்பைத் தர,
“அதெல்லாம் ஒன்னுமில்ல.. உங்ககிட்ட வேற ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..”
இப்போது எல்லாம் அவன் அதிகமாக அம்மா என்று சொல் உபயோகப் படுத்துவதில்லையோ என்ற வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவர் மனதில் சந்தேகம் எழுந்தது..
ஆனால் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் “என்னப்பா என்ன விஷயம்..?”
தன் பிள்ளை தன்னிடம் எதுவும் கூறாமல் செய்வதில்லை என்ற இறுமாப்பு மட்டுமே அந்த கேள்வியில் இருந்தது…
அவனும் அவரை நேர்கொண்டு பார்த்தபடி “ஒன்னும் இல்ல.. நம்ம ஃபேக்டரியோட புது யூனிட் ஆரம்பிக்கிற வேலை நடந்துக்கிட்டு இருக்கு .. உங்களுக்கு தெரியும் இல்ல…”
அதுதான் அவருக்கு நன்கு தெரியுமே..
அவன் பாக்டரி அதில் நடக்கும் ப்ரொடக்ஷன் அதில் உற்பத்தியாகும் பொருட்கள் பற்றி விலாவரியாக தெரியாவிட்டாலும்
அவன் தொழிலில் முன்னேற்றம் அடையும் போது..
ஒவ்வொரு விஷயத்தையும் தன் அம்மாவிடம் விளக்கமாக கூறி
அவரின் ஒப்புதலின் பேரில் தான் அடுத்த அடியை எடுத்து வைப்பான்..
அப்படி இருக்க இந்த புது ஃபேக்டரி விஷயமும் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால்…
“ஏன் உன் தம்பிகள எதுவும் பார்த்துக்கொள்ள சொல்லலாம்னு நினைக்கிறியா..?”
அதாவது அவன் தம்பிகளுக்கு அந்த பொறுப்பை ஒப்படைத்தால் அவர்கள் மிக நன்றாக வேலை செய்வதாக அவ்வப்போது சர்வேஸ்வரன் காதில் படும் படும்படி கூறி
அவன் மனதில் ஆழப் பதிய வைக்கலாம் என்று நினைத்தார்…
எப்போதும் இதுபோல் புது தொழிலின் பொறுப்பை தன் இளைய மகன்களுக்கு வாங்கிக் கொடுப்பதும்,
ஆனால் அவர்கள் அதை சரிவர செய்யாமல் மறுபடியும் அந்த மொத்த வேலையும் சர்வேஸ்வரன் தலையில்தான் வந்து முடியும்…
இதற்காகவே அவன் இரண்டு முறை வேலை பார்ப்பது போல் ஆகிவிடும்..
ஆனாலும் தன் அம்மா கூறிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக இதைப் பற்றி பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இத்தனை நாட்களாக சரி என்று இருந்தான்.
ஆனால் சர்வேஸ்வரனும் அவர் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கூறினான்…
அப்படி சர்வேஸ்வரன் கூறிய பதில் என்ன..? அடுத்த அத்தியாயத்தில்…