பகுதி - 3
பொதுவா நம்ப எல்லோருடைய வாழ்கையும் ஒரு வித தேடலில் தான் தொடங்க ஆரம்பிக்கிறது. அந்த தேடலின் முடிவில் பலர் தன்னையே தொலைத்துவிட்டு ஏதோ மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டும் , யாரையோ மகிழ்விக்க தன்னையும் இழக்கின்றனர். எல்லாரும் மத்தவங்க மத்தவங்கனு யோசிச்சாலும் ஏதோ ஒரு சில பேரு தான் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் நினைத்து பார்க்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே வேண்டியதை செய்து காட்டுகின்றனர்.
பலர் அது எப்போது தான் நடக்குமோ ...? என்று காலத்தை குறை கூறுவர். ஆம் , வாழ்கை எப்படி வேண்டுமானால் இருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு தான் வாழ வேண்டும் என பலர் கூற கேட்டு இருப்போம். அது சரி என்ற பொழுதிலும் அதையே கடைசி வரை தொடர முடியாது அல்லவா, அதை மாற்றி தானே ஆக வேண்டும். இவை அனைத்தும் உடனே ஒரே நொடியில் நடந்துவிடாது. ஆனால் அந்த நிலை மாற பல நாள் ஆனாலும் எதிர்பார்பதை நடத்த ஒரு நிமிடம் ஆகாதா என்ன ? நம் வாழ்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உடனே மறையாமல் இருக்கலாம் .
ஆனால் ,என்றாவது ஒரு நாள் "ஒரு சிறு நொடி "மாற்றி விட்டு போகும்
அனைத்தையும் , அந்த நொடிக்காக காத்திருப்போம்... இந்த உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளும்
" உயிர் " , "உணர்வுகள் "நிறைந்தது. நாம் என்றோ அழுத கண்ணீர் துளிகளை அந்த வானம் பார்த்து இருக்கலாம். நம்மை தொட்டுச்சென்ற காற்று உணர்ந்து இருக்கலாம். நம் வலி என்னவென்று ....
அதனால் நம்பிக்கை இழக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.. "இதுவும் கடந்து போகும் " என்று செல்வதை விட " இதை கடந்து விட்டோம் இன்னும் சில நாள் தான் என்று சமாதானம் செய்து தான் ஆக வேண்டும். சில நாட்களுக்கு பிறகும் சிலருக்கு முன்பு இருந்த நிலையை விட காலம் மோசமான பாதையில் பயணிக்க வைக்கலாம்... ஆனால் முடிவு ஒன்று இருக்க தானே செய்யும். எதிர்பார்காத சந்திப்புகளையும் வாழ்வில் நிகழ்த்திவிட்டு செல்லலாம்.. எல்லாவற்றிற்கும் நாம் தயாராகாமல் இருந்தாலும் அமைதியாக ஏற்கலாமே...?
இங்க நம்மில் பலரும் செய்ற ஒரே மாதிரி விஷயம் என்ன தெரியும் மா ? நம்ப உணர்வு என்னனு புரியாதவங்ககிட்ட போய் நம்பள புரிய வெக்க முயற்சி பண்ணி, புரிய வெக்க முடியாம ...." திரும்ப திரும்ப போய்" சொல்லி , அதும் முடியாம கடைசில ஆறுதலுக்கு கூட யாரும் இல்லாம தன்னையும் இந்த காலத்தையும் குறை சொல்ற கூட்டம் தான் பலரும் .
இந்த உலகத்துல வாழ்வதற்கு தேடல் ரொம்ப முக்கியம் . அப்டி அந்த தேடல் எப்போ தெரியுதோ அப்போ தா நாம்ப வாழ்றோம் அப்டி னு அர்த்தம் .
தேடலா ?... அது என்ன தேடல் ?.... யாரை யார் தேடணும் ?..எங்க போய் தேடணும் ? அப்படி எல்லாம் யோசிக்க வேண்டியதே இல்லை ." உன்னை நீ உனக்குள் தேடு "." உன் வினையின் பயணம் எங்கே னு போயி தேடு" ...
அந்த பயணம் பொதுவா எல்லாரும் போகுற பயணம் போல இருக்காது. நீ போக வேண்டிய இடத்தை பார்த்து ரசித்து முடித்து , மீண்டும் அதே இடத்தை அடையும் பயணம் போல் இருக்க போவதும் இல்லை .
மாறாக அங்க போகணும் ,அந்த பயணம் எப்படி தா இருந்துவிட போகுதுனு நினைக்குறவங்க பலர் இருந்தாலும், ஒரு சிலரால் மட்டுமே போக முடியுற பயணம் தா அது ...
இதை படிக்குற எத்தனை பேரு , தான் வாழ்வின் வினையின் பயணத்தில் பயணிக்குறீங்க சொல்லுங்க பார்போம் .
அதிகப்பட்சம் ஒரு மனிதனோட சராசரி வாழ்க்கை என்னவா இருந்து விட போகுது ? இங்க எல்லாம் கிடைச்சி வாழ்கின்ற மனிதனும் யாரும் இல்லை..., எதுவுமே கிடைக்காம போனவர்களும் இருக்க முடியும் மா என்ன ?
ஒருத்தன் தன் வாழ்க்கைல மத்தவங்களுக்காகவும் , தன் குடும்ப சூழ்நிலையிலும் வாழ்கின்றவன் ஆயிரம் பேரு இருக்கட்டுமே .. ஒரு முறையாவது தான் விரும்பிய ஒன்றுக்கு போராடி அடையும் அந்த உணர்வுக்கு யாராலும் விளக்கம் தரமுடியாது . அந்த மாதிரி தான் இந்த " மூணு " பேரும் தான் வாழ்க்கையில் ஒருமுறையாவது தனக்காக வாழ்ந்திட முடியாத னு ஓடிட்டு இருப்பவர்கள்.
பெரும்பாலும் இந்த சராசரி பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளில் காட்டுகின்ற அக்கறை மற்றும் பாசம் ஏன் அவர்கள் தங்களின் சொந்த முயற்சியில் கிடைக்கும் தங்களின் வாழ்வின் வினையின் பயணத்தில் பெற்றோர் நாட்டம் காட்ட மறுக்கின்றனர்...! ஏன் என்று இன்று வரை எனக்கு புரியவில்லை ...?
இங்க பல பேரு அவங்காள நெனச்சிட்டு இருக்க ஒரு விசியம் என்ன தெரியும் மா ? இங்க நடக்குற எல்லா நிகழ்வும் , எல்லார் வாழ்க்கையிலும் ஒரே மாதிரி தான் நடக்கும் னு நெனச்சிட்டு வாழ்கின்ற வாழ்க்கை தான் ... அது என்ன ஒரே மாதிரி நடக்குற வாழ்க்கை ?
தனக்கு ஒரு தவறு நடந்தா ...! அதே மாதிரி தான் உனக்கும் நடக்கும் நடக்கும் னு அடுத்தவர்களை பேசிட்டு வாழ்கின்றது தான் . தனக்கு வலிச்சது மாதிரி தானே மத்தவங்களும் அனுபவிப்பாங்கனு யோசிக்குறது பதில் இப்படி பேசிட்டு இருப்பாங்க ...
இந்த ஒரு நிகழ்வு கண்டிப்பா எல்லார் வாழ்கையிலும் தினம் தினம் நடந்துட்டு தான் இருக்கும் ...
நா இவ்ளோ நேரம் உங்க கிட்ட சொல்லிட்டு இருந்த மாதிரி தான் இந்த "மூணு " பேரும் அவங்க அவங்க வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆழமான வலிகளுக்கு மத்தியிலும் தங்களின் வினையின் பயணத்தை விடாது பயணித்தார்கள் ...