கடவு உள்ளம்

  • 16.9k
  • 2.5k

கருவறையில் அமர்ந்திருந்த கபாலிக்கு‌ அந்த கூச்சல்களையும் வசவுகளையும் எண்ணி சற்று மன சங்கல்பம் உண்டானது. அருகில் இருந்த பட்டரை ஓரக்கண்ணால் ஏற பார்த்தான் ஆனால் அவன் மேனியில் எந்த அசைவுகளும் தென்படவில்லை. கபாலியின் மனக்குமுறலை அந்த பட்டர் எப்படி அறிந்திருப்பார். ஒருவாறு மனத்தாங்கலுடன் அமர்ந்திருந்த தொனியில் 'சாம்பு மவனே எதனா பாட்ட போட சொல்லுடா' என்று முனுமுனுக்கையில் உலகாளும் ஈஸ்வரனின் குரல் கேட்டதோ என்னவோ சட்டென பட்டர் 'நாழி ஆயிடுத்து பூஜய ஸ்டார்ட் பண்ணுங்கோ' என கூறினார் அவ்வாறு கூறும்பொழுதே பிரணவ மந்திரத்தின் ஓங்காரம் ஒலிக்க தொடங்கியது."தென்னாடுடைய சிவனே போற்றிஎன்னாட்டவர்க்கும் இறைவா போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி"ஓம்ம்ம்ம்ம்ம்ம் நமசிவாய" ஒலித்தது.இந்த கானத்தை கேட்ட மாத்திரமே கபாலியின் மனம் சற்று அமைதி கண்டது. அந்த அமைதி நீடிக்கவில்லை திரை விலகியதுமே பிரணவ மந்திரத்தின் சூத்திரமே அடங்கியது. ஜனத்திரள் மயிலை கபாலிஸ்வரனின் உச்சடாணங்களை‌ ஜபித்தது அதுவும் சிறிது நேரம் மட்டும் தான் தாக்குபிடித்தது .'குனித்த