நினைக்காத நேரமேது - 7

  • 1.4k
  • 516

நினைவு-7 பிள்ளைகள் கவனிப்பு, வீட்டுப் பாடம், இரவு சமையல், சாப்பாடு என அன்றைய நாளுக்குரிய வேலைகள் நேரம் தவறாமல் தன் வருகையைப் பதிவு செய்தன. சதிஷ் இரவுப் படுக்கைக்கு பிள்ளைகளை ஒழுங்கு படுத்திக் கூட்டிச் சென்றான். இரவு நேரம். தனிமை… வழக்கம் போல் பவளமல்லி செடித் திட்டில் திவ்யா! துணைக்கு கைபேசியில் ஒலிக்கும் பாடல்கள். "முழுநிலா எப்பவும் அழகு! பிறைநிலா இன்னும் அழகு... வளர்பிறை நிலாப் பக்கத்துல மின்னுற அந்த ஒற்றை நட்சத்திரம் மேலும் அழகு. அது மின்னுறப்ப நிலவுக்கு மூக்குத்தி மாதிரி எனக்குத் தோனும்!" பிறைநிலவில் பார்வையைப் பதித்திருந்தவள் கூற, "இப்ப எனக்கும் அப்படித்தான் தோணுது. உனக்கு நட்சத்திரம் மூக்குத்தியாத் தோணுது. எனக்கு அதுவே இடமாற்றமாத் தோணுது. மின்னுற நட்சத்திரம் மீது சிறு முத்தம்." எனத் தொடராமல் நிறுத்தியவனை,  வான்பிறையில் தன் பார்வையைப் பதித்திருந்தவள், 'என்ன!?” என்பது போல் பார்க்க... போர்டிகோ தூணில் கைகட்டி சாய்ந்து நின்றவனது பார்வை, நிலவில் இல்லாமல்