நினைக்காத நேரமேது - 9

  • 1.3k
  • 444

நினைவு-9 நாட்கள் தன்போக்கில் நகர, நல்லதொரு நாளில் தேவானந்தன், நாதன் அன்ட் கம்பெனியை, ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸோடு இணைத்துக் கொண்டு எம்.டி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று, "திவ்யா... வரவேற்புக்கு எல்லாம் ரெடியா இருக்காம்மா?" என்று ராமநாதன் வினவ, "எல்லாம்‌ ரெடி சர்." என்றாள் திவ்யா. "தேவானாந்தனுக்கு மஞ்சள் கலர்னா ரெம்ப பிடிக்கும். பொக்கே எல்லோ ஃப்ளவர்ஸ் தானம்மா சொல்லியிருக்க?" "ஆமா சர்." என்றாள். அலுவலக ஊழியர்கள் அனைவரும் தமது புது எம்.டி.யை வரவேற்க ஆவலாய்க் காத்துக் கொண்டிருந்தனர்.  தேவானந்தனின் கார் அலுவலக வாயிலை வந்தடைந்தது. தகவல் ராமநாதனுக்குத் தெரிவிக்கப்பட்டது. கார் டிரைவர் இறங்கிக் காரின் பின் கதவைத் திறந்து விட, தேவானந்தன் இறங்கினார். ஒரு கணம் திவ்யாவின் கண்கள், தாத்தாவோடு சேர்த்துப் பேரனையும் எதிர்பார்த்ததோ என்னவோ? சற்றே சோர்ந்தது. திவ்யா ஊழியர்கள் சார்பாக பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க, இராமநாதன் தன் நண்பனுக்கு சந்தன மாலை போட்டு வரவேற்றார். "என்ன ராமா? அரசியல்வாதிய