பிரேம் தீபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நான் பேசினால் ரமேஷ் கேட்பாரா என்றாள். அதெல்லாம் கேட்பான் நீ பேசு. எனக்கு டைம் ஆச்சு நான் ஆபீஸ் கிளம்புறேன் என்றான். தீபாவுக்கு இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. பூஜாவுக்கும், ரமேஷுக்கும் என்ன கருத்து வேறுபாடு என்றும் தெரியவில்லை. சரி பேசித்தான் பார்ப்போமே என்று ரமேஷுக்கு ஃபோன் செய்தாள். அது அவன் பிஸி ஆக இருக்கும் நேரம் என்பதால் எடுக்கவில்லை. மதியம் 2 மணி போல அவனே ஃபோன் செய்தான். என்ன அண்ணி என்னையெல்லாம் மறந்து விட்டீர்கள் போல என்றான். அதெல்லாம் இல்லை நீதான் பிள்ளையை பார்க்க கூட வரவில்லை என்றாள். சொல்லுங்க அண்ணி என்ன விஷயம். அப்பா ஃபோன் பண்ணியிருந்தார் ஓ குழந்தை விஷயமாவா எனக்கு இப்போ குழந்தை வேண்டாம் அண்ணி . பூஜாவோ சின்ன பொண்ணு அவ மனசுல குழந்தை ஆசை வளர்த்துவிட்டு இப்படி பண்ணினா அவ உடம்பும், மனசும்