நிழல் தரும் வசந்தம் - 25

ஒரு புறம் சௌமியா மறுபுறம் தீபா என பிரேமின் நாட்கள் நகர தொடங்கியது . சௌமியாவுடனான காதல் முடிந்து போன கதை. அதை மீண்டும் தொடர முடியாது. இதை பிரேம் நன்கு உணர்ந்து இருந்தான். ஆனால் அவள் வாழ்வை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் பிரேமுக்கு இருந்தது. தீபா இதை பற்றி வெளிப்படையாக பேசமாட்டாள். அவளுக்கும் சில எல்லைகள் இருந்தன. என்ன பிரேம் டீப் திங்கிங் ? என்றாள் தீபா. சௌமியாவுக்கு நாம் என்ன செய்தால் சரியாக இருக்கும் . நீயே கல்யாணம் செய்து கொள் என்றாள். நான் சீரியஸ் ஆக கேட்கிறேன். அவளிடமே இந்த கேள்வியை கேட்பது நல்லது. அது வேண்டாம். நீ இப்படியே இரு சாமியார் பிரேம். கரெக்ட் நாம் ஸ்வாமிகளை பார்த்து வருவோம் . அவர் சொன்னால் சரியாக இருக்கும். நான் வரவில்லை. நீயும் சௌமியாவும் மட்டும் போய் வாருங்கள் என்றாள். இவன் சௌமியாவை தேடினான். ரொம்ப தேடாதே