பூமியின் தெற்கு திசை மனிதர்கள் உள்நுழைய முடியாத அடர்ந்த காடு, கருங்காடு என்று பெயர். அது தீய சக்திகளின் கோட்டை கூடாரமாக உள்ளது, மரம், செடி கொடிகளால் செழிப்புற்று இருக்கிறது எங்கு பார்த்தாலும் புதரும், பகல்வேளையே இரவு போன்று காட்சியளிக்கும் அடர்ந்த காடாகும்,கொடிய மிருகங்களும, தீய ஜீன் சக்திகளும், விஷம் நிறைந்த பாம்புகளும், வேட்டையாடும் பறவைகளும் மட்டுமே அங்கு வாழ முடிகிறது. காட்டைச் சுற்றி எல்லைப்புறத்தில் மலைகளால் சூழப்பட்டு அதற்கு அப்பாலே தேசங்கள் இருந்தனர். இக்காட்டில் உள்ள மிருகங்களுக்கும், புதை குழிகளுக்கும், புதர்களுக்கும் மற்றும் தீய சக்திகளுக்கும் பயந்து எவரும் இக்காட்டினுள் வருவதில்லை, மீறி வருபவர்களுக்கு ஏதாவது ஒரு விபரீதத்தில் மரணத்தை ஏற்படுத்தி விடும். அவர்களின் உடலும் கிடைப்பதில்லை, இறந்தவர்களை தேடி கண்டடைய காட்டினுள் ஒருவரும் நுழைவதும் இல்லை. விறகு வெட்டி வருபவர்கள், காட்டினுள் மூலிகைச் செடி பறிப்பவர்கள் மற்றும் பழங்கள் சாம்பிராணிகளை சேகரிக்கும் வைத்தியர்கள் என தேசத்தை ஒட்டி உள்ள