சரியாக அந்த இரட்டைக் கொம்பனின் ஆழ்ந்த மவுன வழிபாட்டிற்கு நேர் முகத்தில் நடந்து சென்றாள் கலிக் தேவதை, கொடூர தீய சக்திக்கும் கலிக் தேவதைக்கும் நடுவே ஒரு சூலம் ஊண்டப்பட்டு இருந்தது, அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்தது அதன் ஓரங்களில் ஒளி வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தது. அது கலிக் தேவதையின் மேல் இருந்து வந்த ஒளிப்பட்டதால் ஓரங்கள் மின்னியது.மிகுந்த கருமை நிறம் கொண்ட அந்த சூலம் திடீரென முழுவதுமாக ஒளி பெற்றது. அவ்வொளி பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்தது. நான்கு தேவதைகளும் அந்த வசிய ஒளியினை கண்டனர். ஆனால் கலிக் தேவதை அச்சூலத்திற்கு மிக அருகில் இருந்தாள். இவற்றை கவனித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களும், தீய சக்திகளும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர். கடுமையான தவத்தில் ஆழ்ந்திருந்த அந்த கொடூர உருவம் கொண்ட தீய சக்தியின் கையில் உள்ள சூலம் தான் இது என்று தேவதைகள் உணர்ந்திருந்தார்கள்.இச்சூலத்தை எடுத்து