காலந்தோறும் உடலும் ,மனமும் மாறிக்கொண்டு வரும்போதும் அவர்களிடத்தில் அன்பு ஒன்றே மாறாமல் இருந்தது. தீபா பிரேமின் மீது கொண்ட அன்பும் அத்தகையதுதான். ராக்கி, சௌமியாவின் மீது கொண்ட அன்பும் அப்படித்தான்.வீடு சீர் செய்ய ஆரம்பித்து 3 மாதங்கள் ஓடி விட்டன. இவனால் ஊருக்கு போய் பார்க்க முடியவில்லை. அது ஏமாற்றத்தை கொடுத்தது. தீபா நானும், குமரனும் போகட்டுமா போய் பார்த்து வரட்டுமா என்றான். நிஜமாக சொல்கிறாயா ? ஆமாம் அது நம்முடைய வீடு. நிச்சயம் போய் பார்க்கிறேன் என்றாள்.இந்த வாரம் குமரனுக்கு பரீட்சைகள் முடிந்ததும் அழைத்து போகிறேன் என்றாள். நான் இஞ்சீனியர் கிட்ட பேசிடறேன் என்றான். நீ கவலைபடாதே பிரேம். அவள் இன்னும் சிறு பெண் தான். ரஞ்சனி நானும் வரவா என்றாள். இப்போது வேண்டாம் என்றாள் தீபா. திட்டமிட்டபடி தீபா கிளம்பி விட்டாள். குமரன் சீட் பெல்ட் போட்டுக்கோ.. அம்மா பேச்சை கேக்கணும் என்றான் பிரேம்.அவள் கார் ஓட்டும் விதமே