இருப்பதிலேயே எளிமையானது அன்புதான்.அதை வாரிக்கொடுப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும்.நீலன் ரஞ்சனி காதல் என்பதும் அப்படித்தான். ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த அன்பை முறையாக கொடுக்கும் நேரம் வந்தது. சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள் வாழ்த்துக்கள் ரஞ்சனி. உன்னுடைய நீண்ட கால பொறுமைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றாள். சௌமியாவுக்கு தன்னுடைய தொலைந்த காதல் மீது ஏக்கம் உண்டானது. ராக்கியும் ரஞ்சனியிடம் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்தான்.ரஞ்சனியும், நீலனும் பீச் போயிருந்தனர். என்ன திடீர்னு பீச்சுக்கு என்ன பண்ண போற என்றாள். நீ இப்படியே பேசிக்கொண்டிரு.. சும்மா சொன்னேன் என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டாள் . அவள் ஏதோ சொல்ல வந்தாள். நீ சொல்லியதெல்லாம் போதும் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். எனக்காக அந்த பாட்டை பாடேன் என்றாள். அவன் அடங்கிய குரலில் அந்த நாடோடி பாடலை பாடினான். அவன் மடியில் தலை வைத்து கொண்டாள். சுபா ஊரில் இருந்து வரும் நாளுக்காக காத்திருந்தான்