நிழல் தரும் வசந்தம் - 48

பிரேமுக்கு பிரிவு உபச்சார விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது. தீபா ஏன் பிரேம் இப்படி செய்தீர்கள். ரஞ்சனி சின்ன பெண். அவளால் இத்தனை பொறுப்புகளையும் தாங்க முடியுமா என்றாள். ம் நானும் யோசித்தேன் . அவள் வேகத்துக்கு கம்பெனி தாங்குமா என்பதையும் பார்க்க வேண்டும். நான் ஸ்வாமிகளை பார்த்துவிட்டு வருகிறேன் என்றான். சரி. ஸ்வாமிகள் சோர்வாய் இருந்தார். எல்லாவற்றையும் உதறிவிட்டு நீ என்னவாக போகிறாய் என்றார். நான் நானாக போகிறேன். என்னுடைய இயல்பே மாறிவிட்டது . என்னை நான் திரும்ப மீட்டு கொள்வேன் என்றான். நீ நன்கு யோசித்து விட்டாயா? அது சுலபமில்லை. காசு இல்லாவிட்டால் உலகம் உன்னை மதிக்காது. நான் என் தேவைக்கு சம்பாதிப்பேன் என்றான். நல்லது அடுத்த முறை நான் நிச்சயம் இங்கு இருக்க மாட்டேன் என்றார். ஆசீர்வாதம் வாங்கி கொண்டான். பிரிவ உபச்சார விழாவிற்கு தீபாவும் வந்திருந்தாள். பிரேம் அவன் பின்னணி, அவனை மணந்து கொண்டது , குமரகுரு