DNA ️ கொலைகள் -2 அந்த நீல நிற ஹோண்டா ஷைன் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த சாலையில் விரைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் கவனமுடன்தான் வேலை செய்கிறேன். ஆனால் சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் டிக்டேட் படி ரிசல்ட் அமையமாட்டேங்குது. அப்படிப் பார்த்தாலும் எங்க தப்பு செய்யறேன்னு சொல்லவும் மாட்டேங்குறாரு. அது மட்டுமில்லாம உன்ன என்னமோ நெனைச்சேன் ஆனா நான் எதிர்ப்பார்க்கற அளவுக்கு இல்ல. அதுவும் ஃபாரின்ல ப்ரோக்ராம் பண்ணவன் ரிசர்ச் சென்ட்டரல்ல ஒர்க் பண்ணவன்னு சொல்ற ஆனா இப்படி சொதப்பிடறியே கொஞ்சம் கேர்ஃபுல்லா பண்ணுனு சொல்றாரே தவிர எங்க தப்பு பண்றேன்னு சொல்லாம அவரே அதை சரி செஞ்சிடறாரு. நான் என்ன தப்பு பண்றேன்னு சொன்னாத்தான நம்மள டெவலப் பண்ணிக்க முடியும். சரி இன்னைக்கு என்ன ஆனாலும் விடறதில்லை. அவரோட டிக்டேட்டா இல்ல நானானு ஒருகை பார்த்திடறேன் என்று பலவிதமான சிந்தனைகளுடன் வண்டியை விரட்டிக் கொண்டிருந்தவன் பெயர் ரகு, ஃபியூட்சர்