DNA கொலைகள் - 5

DNA ️ கொலைகள்-5தேவன் திருச்சபை தோட்டத்தில் அனைத்து ஃபார்மாலிக்டைசையும் முடித்து ரோஸ்லின் மேரியின் உடலை ஆம்புலன்ஸில் அனுப்பி விட்டு இன்ஸ்பெக்டர் ரவி ஜீப்பிற்கு வந்தார். அவரோடு வந்த கான்ஸ்டபிள் முருகனும், ஏட்டு கனகாபிஷேகமும் கேட்டனர் அடுத்து என்ன சார் மூவ்மெண்ட். நேரமும் மிட்நைட் ஆயிடுச்சு. ஜீப்பிலேயே வீட்டுக்கு போயிடறீங்களா? வண்டியைக் கூட காலையில் வந்து எடுத்துக்கலாமே.இல்லைங்க. ஸ்டேஷனுக்கு வந்துட்டே போறேன். விஷயத்தை எஸ்.பி.க்கிட்ட சொல்லிடலாம்னு பார்த்து ஆஃபிஸுக்கு ரெண்டு முறை ஃபோன் பண்ண பட் லைன் கிடைக்கலை. ரெண்டு முறையும் எங்கேஜ்டாவே இருந்தது. ஒன்னு எஸ்.பி.க்கிட்ட பேசிடனும். இல்லைனா அவர மீட் பண்ண நாளைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கிடணும். ரெண்டுல ஏதாவது ஒன்னு நடந்தாத்தான் கொஞ்சமாவது மைன்ட் ஃப்ரீயாகும். சரி வாங்க ஸ்டேஷனுக்கு போவோம் என்று ஜீப்பில் ஏறினார்.ஸ்டேஷனுக்கு வந்தவர் வரும் போதே கான்ஸ்டபிள் முருகனை டீ வாங்கி வரச் சொல்லிவிட்டு, அது வந்ததும் ஆயாசமாய் ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி