ஹரிதாவின் பகல் கனவுகள் part 6

  • 333
  • 108

கனவு 6 இப்போது என்ன செய்ய போகிறாய் ஹரிதா என்றான் ஆறுமுகம். அதுதான் எனக்கும் புரியவில்லை. சமரை பார்த்து பேச வேண்டும் அவ்வளவுதான். அவன் அட்வாண்டேஜ் எடுத்துக்கொண்டால் என்ன செய்வாய். அப்படி ஒன்று இருக்கிறதோ ? ம் என்ன செய்ய செய்யலாம் நீயே சொல் ஆறுமுகம். அவனிடத்தில் ஃபோன் பண்ணி பேசு என்றான். இது வொர்க் அவுட் ஆகுமா ? நிச்சயம் வொர்க் அவுட் ஆகும் . சரி நீ டிபன் சாப்பிட்டாயா ? இன்னும் இல்லை சரி வா. அங்கே இருக்கிற சிறிய உணவகம் ஒன்றில் போய் சாப்பிட்டார்கள். சரி நான் அப்போது கிளம்பட்டுமா என்றாள். வீட்டுக்கு வா அடுத்த வாரம் அப்பா, அம்மா உன்னை பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் என்றாள். சரி வருகிறேன் என்றான். விடைபெற்றுக்கொண்டாள். அவள் சைக்கிளில்தான் வந்திருந்தாள். பார்த்து ஜாக்கிரதையாக போ என்று ஆறுமுகம் சொல்லியிருந்தான். தான் ஒன்றும் அறியாத பெண்ணில்லை எல்லா பக்குவமும் தனக்கும் தெரியும்