ஹரிதாவின் பகல் கனவுகள் part 7

  • 144
  • 51

கனவு 7 ஹரிதாவுக்கு இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை. வைரஸ் ஃபீவர் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ரெஸ்ட் எடுக்குமாறு சொன்னதால் பள்ளிக்கு இரண்டு நாட்களாய் போகவில்லை. சமர், சௌமியா, ஆறுமுகம் எல்லோரும் வந்து பார்த்து பேசி விட்டு போனார்கள். அவள் மனம் சமர் வருத்தப்படுவானே என நினைத்து கவலை அடைந்தது. தூக்கம் வரவில்லை. ஏன்தான் இந்த ஜூரம் வந்ததோ உடலை அசைக்கவே முடியவில்லை. வியர்த்து கொட்டியது. அம்மா வந்து மின்விசிறி ஸ்பீட் அதிகம் வைத்துவிட்டு போனாள் . என்ன செய்யலாம் ஏதாவது செய்து சீக்கிரம் இந்த பெட்ரூம் விட்டு வெளியே போனால் தேவலாம் என்று இருந்தது. ரஞ்சித் காலேஜ் முடித்து விட்டான். அவனுடைய டிகிரி வாங்கும் பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் இருக்கிறதென்று சௌமியா சொல்லியிருந்தாள் . ரஞ்சித்தும் வந்து இவளை பார்த்து போனான். அப்போது அவசியம் அந்த பட்டமளிப்பு விழாவிற்கு அவள் வர வேண்டும் என சொல்லிப் போனான். காலம்