அவள் பெயர் மீரா. சென்னையில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். பார்க்க மிகவும் அழகானவள், ஆனால் அமைதியானவள். வகுப்பில் யாருடனும் அதிகம் பேச மாட்டாள். எப்போதும் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே கற்பனையில் மூழ்கி விடுவாள்.அவள் கற்பனையில் ஒரு காதலன் இருந்தான். அவன் பெயர் கூட அவளுக்கு தெரியாது. ஆனால் அவள் மனதில் அவன் தான் ஹீரோ. உயரமானவன், கார் வைத்திருக்கும் பெரிய பணக்காரன், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகன். தினமும் இரவு தூங்கும் போது அவனுடன் பேசுவது போலவே தூங்குவாள்.ஒரு நாள் அவளுடைய நெருங்கிய தோழி பூஜா அவளிடம், "ஏய் மீரா, எப்ப பாத்தாலும் தனியா சிரிச்சிக்கிற, என்ன யோசிக்கிற?" என்று கேட்டாள்.முதலில் சொல்ல தயங்கிய மீரா, பின்பு மெதுவாக சொன்னாள். "நான் ஒருவனை காதலிக்கிறேன் பூஜா. அவன் பெரிய பணக்காரன். அவனுடன்