கனவு 11 பிருந்தா டீச்சர் கல்யாணத்துக்கு போகலாமா வேண்டாமா என யோசித்தாள் ஹரிதா. சமரை சந்திக்க வேண்டி வருமே எனவும் சிந்தித்தாள். அதுதான் அவன் கூட ஒன்றுமில்லை என்றாயிற்றே பிறகென்ன என கல்யாணத்துக்கு போவதென தீர்மானித்தாள். கல்யாணம் ஒரு விடுமுறை தினத்தில்தான் வைத்திருந்தார்கள். இவளுக்கு துணை யாரும் இல்லை.அவளேதான் அவளுக்கு துணையாக இருக்க வேண்டும். ஆறுமுகத்துக்கும்,சௌமியாவுக்கும் பிருந்தா டீச்சர் அவ்வளவு பழக்கமில்லை. சௌமியா விசாரித்தாள் சமர் கல்யாணத்துக்கு வருகிறானா என்றாள். அவன் வராமல் எங்கு போய்விடுவான். ம் அப்போ ஏதோ ஒன்று நடக்க போகிறது . அதெல்லாம் ஒன்றும் என்னிடம் நடக்காது என்றாள் ஹரிதா.கல்யாண தினத்தன்று சிம்பிள் ஆக அலங்கரித்து கொண்டிருந்தாள். அவள் ஆட்டோவில் போய் மண்டபத்து வாசலில் இறங்கினாள் . சில பெண்கள் அவளை வரவேற்றனர். சமர் எங்கிருக்கிறான் என அவள் கண்கள் தேடின. அவன் அவள் கண்ணில் படவேயில்லை . கூல் டிரிங்க்ஸ் கொடுத்தார்கள். பிருந்தா டீச்சர் மணப்பெண்