சிறந்த காதல் ஜோடி

  • 528
  • 141

கார்த்திக் ராஜ்* என்று ஒரு பிசினஸ்மேன் இருந்தான். அவனுக்கு வயது இருபத்தி ஆறு. அவன் சென்னை நகரத்தில் ஒரு பெரிய ஐடி கம்பெனியும் எக்ஸ்போர்ட் பிசினஸும் செய்து வந்தான். அவன் வாழ்க்கை முழுவதும் வேலை தான். தினமும் காலை ஒன்பது மணிக்கு கருப்பு நிற சட்டை அணிந்து பைக்கில் வேலைக்கு போவான். அவன் யாரிடமும் பேச மாட்டான், சிரிக்க மாட்டான். அவன் அம்மா அப்பா வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவன் தனியாக ஒரு பெரிய பங்களாவில் வசிக்கிறான். அந்த வீட்டில் பணம் இருக்கிறது, ஆனால் உயிர் இல்லை.கார்த்திகா என்று ஒரு கல்லூரி பொண்ணு இருந்தாள். அவளுக்கு வயது பத்தொன்பது. இப்போது http://B.Sc கணிதம் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே *கார்த்திக் ராஜை* பார்த்து விட்டாள்.ஒரு ஆண் வேலைக்கு போகிறான், அவனை காதலிக்கும் ஒரு பெண் பன்னிரெண்டாம் படிக்கிறாள் என்று தான் இந்த கதை ஆரம்பிக்கிறது.