ஹரிதாவின் பகல் கனவுகள் part 23

  • 320
  • 114

கனவு 23 சௌமியாவுக்கு மூன்று நாட்களாக ஜுரம். அவளை ஹாஸ்பிடலில் அனுமதித்து இருந்தார்கள். ஹரிதா சௌமியாவை பார்க்க அவள் அம்மாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் போயிருந்தாள் .சௌமியா மயக்கத்தில் இருந்தாள் சலைன் ஏறிக்கொண்டிருந்தது. இவள் அருகில் போய் சௌமியா என்று கூப்பிட்டு பார்த்தாள். அவளிடத்தில் அசைவு இல்லை. டாக்டர் இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று சொல்லியிருப்பதாக சௌமியா அம்மா சொன்னாள். நான் இடையில் வந்து பார்க்கிறேன் என்று ஹரிதா சொன்னாள். சௌமியா அம்மா அப்பா கவலையில் இருந்தார்கள் ஒரே பெண்ணாயிற்றே. ஹரிதா வீட்டுக்கு வந்த பிறகும் அதே சிந்தனையில் இருந்தாள். சௌமியா பற்றிய சிந்தனையில் இருந்தாள். அவள் உடல் நிலை சீக்கிரம் தேற கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் ஹரிதா . ரஞ்சித்துக்கும் கீர்த்திக்கும் மெசேஜ் பண்ணியிருந்தாள். அவர்கள் திரும்ப அழைத்த போது விஷயத்தை சொன்னாள். ரஞ்சித் அதைப் பற்றி கவலைப்படவில்லை. கீர்த்தி நான் சீக்கிரம் வந்து பார்க்கிறேன் என்றாள். நீ கொஞ்சம்