ஹரிதாவின் பகல் கனவுகள் part 27

  • 129

கனவு 27 அன்று மழை வரும்என்று ஹரிதா எதிரபார்த்திருக்கவில்லை. குடையும் எடுத்துப் போயிருக்கவில்லை. ஹரிதா நல்ல வேளையாக அருகில் இருந்த காம்ப்ளக்ஸ் உள்ளே போனாள். மழை விட்டபாடில்லை.. சோவென பெய்து தீர்த்துக் கொண்டிருந்தது. அவள் மழையை விரும்பாதவள் இல்லை எனினும் இப்போது இந்த மழை அவசியமா என கேள்வி எழுப்பிக்கொண்டாள் . மழை முழுவதும் பெய்து ஓய்ந்த போது முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. அவள் கடைத்தெருவுக்கு சில சாமான்கள் வாங்க வந்தாள். அப்போது தான் மழையில் மாட்டிக்கொண்டாள் . எப்படியோ மழையில் லேசாக நனைந்து வீடு போய் சேர்ந்தாள்.வெயில் பருவம் மாறி குளிர்ச்சியான சூழ்நிலை வந்தது போல தோன்றியது. இந்த மழை எல்லாம் போதாது என சிலர் பேசிக்கொண்டு சென்றனர். எல்லோரையும் போல மழை வந்தால் கொண்டாட்டமென இருந்தவள்தான் ஹரிதாவும்.என்னவோ இப்போதெல்லாம் அது வெறும் சிறுவயது கனவு போலத் தோன்றியது. அம்மா சுட சுட டீ கொண்டுவந்து கொடுத்தாள். இவள்