கனவு 28 எக்ஸாம்ஸ் தேதி நெருங்க நெருங்க ஹரிதாவுக்கு பயம் பற்றிக்கொண்டது. சௌமியா எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக இருந்தாள். என்னடி பண்ணுறது எப்படிடி எக்ஸாம் எழுதுவது? எனக்கு படிச்சது எல்லாம் ஆவியாய் போய் விட்ட மாதிரி ஃபீலிங்க் என்றாள் ஹரிதா. சும்மா புலம்பாதே என்னை விட நல்ல மார்க் வாங்குவாய் பார் என்றாள் சௌமியா. ம் கேட்க நல்லாத்தான் இருக்கு நடக்கனுமே .. நீ ஒண்ணும் கவலைப்படாதே நாளைக்கு ஜெயித்து வைப்போம் புரோகிராம் ஒண்ணு ஒரு இன்ஜினியரிங் காலேஜ் சார்பாக நடத்துறாங்க .. நாம அதிலே கலந்து கொள்வோம் என்றாள். சரிடி நீ சொல்லுறதுல நம்பிக்கை இருக்கு நாளைக்கு அந்த புரோகிராமிலே கலந்துப்போம் . அதில் மாணவர்கள் மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இவளும் சில சந்தேகங்கள் கேட்டாள். சில பேர் புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருது என்றனர். அவர்கள் தன்னம்பிக்கை ஸ்பீச் கொடுத்தனர். முன்னாள் மாணவர்கள் இந்நாள் டாக்டர்கள்,இஞ்சீனியர்கள் பேசினார்கள்