ஹரிதாவின் பகல் கனவுகள் part 30

  • 96

கனவு 30 நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரிதா போர் செட்டில் கும்மாளம் போட்டாள். தாமரை சற்றே தயக்கத்துடன்தான் அவளுடன் இருந்தாள். ஒரு வழியாக இருவரும் குளியலை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். போர் செட் குளியல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது ஹரிதாவுக்கு. இப்போதைக்கு இந்த விடுமுறை எப்படி போகுமோ என்றிருந்த ஹரிதாவுக்கு இந்த முறை நல்ல விஷயங்களால் நிரம்பியிருந்தது. அவள் தாமரையுடன் எடுத்த போட்டோக்களை சௌமியாவுக்கும், கீர்த்திக்கும் அனுப்பியிருந்தாள். ஆறுமுகம் வரும் போது அவனுக்கு அந்த போட்டோக்களை காண்பிக்கலாம் என எண்ணியிருந்தாள் .ஹரிதா தாமரையிடம் நான் திலீபன், மஞ்சுவை பார்க்க வேண்டுமே என்றாள். தாமரை பயந்துவிட்டாள். அதெல்லாம் வம்பு தேவையில்லாத வேலை என்றாள். சும்மா சொல்லுடி இங்கே டவுனில் இருப்பதாக சொன்னாயே அவன் ஃபோன் நம்பர் கிடைக்குமா என்றாள். அதெல்லாம் வேண்டாம்டி தாத்தாவுக்கு தெரிஞ்சால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்றாள் தாமரை. இவள் முகம் வாடிவிட்டது. சரி சரி மூஞ்சை தூக்கி