ஹரிதாவின் பகல் கனவுகள்

(0)
  • 36
  • 0
  • 2.9k

அந்த அதிகாலை விடியும்போதே அத்தனை அழகாய் இருந்தது. மாற்றங்கள் நிரம்பிய அவள் வாழ்வில் எவ்வளவோ இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஹரிதாவுக்கு காப்பி என்றால் கொள்ளை இஷ்டம். அவள் அந்த காப்பியை ரசித்து பருகியபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஸ்கூல் செல்ல நேரம் ஆகிவிட்டதென்று அம்மா எப்பவும் போல சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் 10 ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி நினைவுகள் என்றதும் அவள் மனம் ஒரு நிமிடம் யோசித்தது. அடுத்து ஆண்களுடன் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று அவள் அப்பா சொல்லியிருந்தார்.

1

ஹரிதாவின் பகல் கனவுகள் part1

கனவு 1 அந்த அதிகாலை விடியும்போதே அத்தனை அழகாய் இருந்தது.மாற்றங்கள் நிரம்பிய அவள் வாழ்வில் எவ்வளவோ இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஹரிதாவுக்கு காப்பி என்றால் இஷ்டம். அவள் அந்த காப்பியை ரசித்து பருகியபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஸ்கூல் செல்ல நேரம் ஆகிவிட்டதென்று அம்மா எப்பவும் போல சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் 10 ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி நினைவுகள் என்றதும் அவள் மனம் ஒரு நிமிடம் யோசித்தது. அடுத்து ஆண்களுடன் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று அவள் அப்பா சொல்லியிருந்தார். இப்போது முழுக்க பெண்கள் படிக்கும் பள்ளியில்தான் அவள் படித்து வந்தாள். அப்பா அப்படி சொல்ல காரணமும் இருந்தது. ஹரிதா ரொம்ப கூச்ச சுபாவம் மிக்கவள். பேசுவதற்கே தயங்குபவள். இது தவிர அந்த ஊரில் நல்ல ஸ்கூல் அதாவது மேல்படிப்புக்கென்று வேறு பள்ளி கிடையாது. என்னமா என்ன யோசனை என்றபடி வந்தார் சிவராமன். ஒண்ணுமில்லை ...Read More

2

ஹரிதாவின் பகல் கனவுகள் part 2

கனவு 2ஹரிதாவுடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. சமரை பார்த்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. பிருந்தா டீச்சரிடம் அவனைப் பற்றி கேட்கலாம் என நினைத்தாள். பிறகு போனவன் போனவனாகவே இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டாள். ஆனால் அவனை எதிர்த்து அவனோடு சரிக்கு சமமாக பேச முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. பிற பெண்களை போல தானும் மற்ற ஆண்களுடன் நட்பாக பழக முடியாதது குறித்து யோசித்தாள்.அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் என்று சௌமியா சொல்லியிருந்தாள். அவர்கள் நோக்கமெல்லாம் உடல் ரீதியானது என்றே ஹரிதாவுக்கு போதிக்கப்பட்டு இருந்தது.உடல் ரீதியாக தான் எந்த வகையிலும் தாழ்த்தப்படக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள். ஹரிதா ஊர் திருவிழாவிற்காக அப்பாவுடைய சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தாள் .அங்கு பாட்டியும், தாத்தாவும் இருந்தார்கள். திருவிழா களை கட்டியிருந்தது.ஹரிதா உற்சாகமாக அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டாள். மனம் லேசாக இருந்தது. இப்படியே அப்பா, அம்மா . தாத்தா , பாட்டி என்று குடும்பம் என ...Read More

3

ஹரிதாவின் பகல் கனவுகள் part 3

கனவு 3 டீச்சர் அப்படி அழுது ஹரிதா பார்த்ததில்லை. அழாதீங்க மேடம் என்று சொன்னாள். எல்லாம் என்னுடைய நேரம் என்று சொன்னாள் பிருந்தா. இருங்க நான் போட்டு எடுத்து வரேன் என கிச்சன் உள்ளே போனாள். எல்லாவற்றையும் தேடி எடுத்து காபி போட்டு கொண்டு வந்து டீச்சரிடம் கொடுத்தாள். ரொம்ப தாங்க்ஸ் ஹரிதா என்றாள். என்ன இந்த டீச்சர் நம்மை விட வீக் ஆக இருக்கிறார்கள் என்று யோசித்தவாறே விடைபெற்றுக்கொண்டாள். ஹரிதா மனதில் டீச்சர் மேல் பரிதாபமே உண்டாயிற்று. அன்று எப்பவும் போல ஸ்கூல் போனாள். வகுப்புகள், போதனைகள் என தொடர்ந்தன. என்ன மாதிரியான பருவம் இது . எல்லோரும் இந்த பருவத்தில் சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதாக சொல்வார்கள். தான் மட்டும் அதில் இருந்து விலகி சதா சந்தேகத்துடனே இருக்கும்படி உள்ளதே என கருதினாள். அவள் அம்மாவிடம் இது பற்றி கேட்ட போது உனக்கு எந்தவித தொந்தரவையும் நாங்கள் கொடுக்கவில்லை. ...Read More

4

ஹரிதாவின் பகல் கனவுகள் part 4

கனவு 4 ஹரிதாவுக்கு தன் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. சமர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது போல தன்னால் அப்படி முடியவில்லையே என்று நினைத்தாள். காலம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தது. ஹரிதா எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லபடியாக முடித்திருந்தாள்.இரண்டு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள் .எங்காவது பயணம் போக வேண்டுமென்று ஹரிதா அம்மா சொல்லிவந்தாள். நீங்கள் போய் வாருங்கள் நான் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கொள்கிறேன் என்றாள். அதெல்லாம் சரியா வருமா நீ சும்மா இருக்க மாட்டாய் ஊர் வம்பை இழுத்து வருவாய் என்றாள் ஹரிதா அம்மா. அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது நீ தேவையில்லாமல் பயப்படுகிறாய் என்றாள் ஹரிதா. இரண்டு நாட்களில் ஹரிதாவை கொண்டு போய் கிராமத்தில் விட்டுவிட்டு ஹரிதா அப்பா, அம்மா இருவரும் திருச்செந்தூர் சென்றனர். அவர்களது பயணம் ஒரு வாரம் நீடிக்கும் என்றே தோன்றியது ஹரிதாவுக்கு . ஹரிதா கிராமத்துக்கு ...Read More

5

ஹரிதாவின் பகல் கனவுகள்part 5

கனவு 5 ஆன்மா, மெய்ப்பொருள் ,உடல் இது குறித்து யோகா கிளாசில் விளக்கப்பட்டது. ஹரிதா இவைகளை கவனமாக கேட்டுக்கொண்டாள் . சிந்து டீச்சர் தன்னுடைய வேதனைகளை அந்த சிரிப்பை பயன்படுத்துவதாய் உணர்ந்தாள் . வெறும் உடலால் ஆன்மாவை உணர முடியாது அதற்க்கு பயிற்சிகள் தேவை என்று ஹரிதாவுக்கு போதிக்கப்பட்டது. ஆன்மாவை மனதின் கட்டுப்பாட்டில் வைக்க யோகா உதவும் என்று நம்பிக்கை இருந்தது. சௌமியா விசாரித்தாள் நீ ஏற்கனவே சாமியாரிணிதானே இப்போ யோகா கிளாஸ் வேற போற .. எப்படி இருக்கு யோகா கிளாஸ் என்றாள். அது நல்ல எஃபக்ட் இருக்கு. முன்ன மாதிரி இல்லை கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு என்றாள் ஹரிதா . யாருடி சொன்னா நான் சாமியாரிணி அப்படின்னு? கூடிய சீக்கிரம் எல்லோர் மாதிரியும் நானும் செட்டில் ஆவேன் என்றாள். ம் நல்ல முன்னேற்றம் என்றாள் சௌமியா. காட்டிலே தவம் செய்வது போல வீட்டிலும் தவம் செய்தாள் ஹரிதா ...Read More

6

ஹரிதாவின் பகல் கனவுகள் part 6

கனவு 6 இப்போது என்ன செய்ய போகிறாய் ஹரிதா என்றான் ஆறுமுகம். அதுதான் எனக்கும் புரியவில்லை. சமரை பார்த்து பேச வேண்டும் அவ்வளவுதான். அவன் அட்வாண்டேஜ் என்ன செய்வாய். அப்படி ஒன்று இருக்கிறதோ ? ம் என்ன செய்ய செய்யலாம் நீயே சொல் ஆறுமுகம். அவனிடத்தில் ஃபோன் பண்ணி பேசு என்றான். இது வொர்க் அவுட் ஆகுமா ? நிச்சயம் வொர்க் அவுட் ஆகும் . சரி நீ டிபன் சாப்பிட்டாயா ? இன்னும் இல்லை சரி வா. அங்கே இருக்கிற சிறிய உணவகம் ஒன்றில் போய் சாப்பிட்டார்கள். சரி நான் அப்போது கிளம்பட்டுமா என்றாள். வீட்டுக்கு வா அடுத்த வாரம் அப்பா, அம்மா உன்னை பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் என்றாள். சரி வருகிறேன் என்றான். விடைபெற்றுக்கொண்டாள். அவள் சைக்கிளில்தான் வந்திருந்தாள். பார்த்து ஜாக்கிரதையாக போ என்று ஆறுமுகம் சொல்லியிருந்தான். தான் ஒன்றும் அறியாத பெண்ணில்லை எல்லா பக்குவமும் தனக்கும் தெரியும் ...Read More