அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித்து விட்டார்கள்,அவர்கள் பிரமிப்பிற்கு காரணம் அந்தக் கூட்டம் முழுவதும் வந்தது ஒருவருக்காக என்பதால் மட்டுமே.அது சாதனையாளர்களுக்கு, விருது வழங்கும் விழா இங்கு எத்தனையோ சாதனையாளர்கள் வந்தாலும் அங்குள்ள மக்கள் அனைவரின் கையிலும் அவள் ஒருவளின் பெயரை இடம் பெற்றிருந்தது, அவள் ஆழினி . அனைவரும் அவள் பெயர் தாங்கிய பேனரோடு அவள் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த ஆடிட்டோரியம் கதவு திறக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு சூழ கம்பீரமாக நடந்து வந்தால் ஆழினி,அவள் வரவும், அந்த நிகழ்ச்சிக்கு விருது வழங்குவதற்காக வந்திருந்த விருந்தினர் அவளுக்கு இந்த ஆண்டின் தலை சிறந்த எழுத்தாளருக்கான விருதே ஆழினிக்கு கொடுத்தார்.ஆழினியும் சிறு புன்னகையோடு அந்த விருதை வாங்கிக் கொண்டால், அவள் விருது வாங்கும் போது அங்கு சூழ்ந்திருந்த மக்கள் கூட்டம் அனைவரும் ஆழினி,ஆழினி என்று அவள்