ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பிரேமின் வாழ்வில் தீபா தற்செயலாக வந்தாள். சௌமியாவை இவன் கை விட வேண்டும் என்று நினைக்கவில்லை.எப்படியோ தீபாவும், ரஞ்சனியும் இவனின் உண்மையான அன்பை புரிந்து கொண்டனர்.தீபா ,ரஞ்சனி மற்றும் குமரன் தான் அவனுடைய உலகம். அவனுடைய பலம், பலவீனம் போன்றவை அந்த உலகத்துக்கு மட்டுமே தெரியும். ஆபீஸ் மாற்றங்கள் உடனே பலன் கொடுக்க போவதில்லை. ஆனால் லாங் டெர்ம் என்ற விதத்தில் நல்ல பலனை கொடுக்கும். ரஞ்சனி அதை execute செய்ய பொருத்தமானவள்.ஒரு பெருந்தொகை அதற்காக ஒதுக்க வேண்டியிருந்தது. ரஞ்சனி நீ இன்னும் படிக்க விரும்பினால் நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம். இந்த படிப்பு போதும் என்றாள்.குமரகுரு பிறந்தநாள் அன்று எஜுகேஷன் டிரஸ்ட் துவங்க இருந்தது.அதற்கான ஃபார்மாலிட்டீஸ் முடிவடைந்து விட்டது.
எஜுகேஷன் டிரஸ்ட் கமிட்டியில் தீபாவையும் ஒரு உறுப்பினராக சேர்த்தான். அவள் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த கம்பெனி மூலமாக உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டான்.குமரன் இப்போது இரண்டாம் வகுப்பு போகிறான். அவன் அதிகம் குறும்புகள் செய்பவனில்லை. காரியத்தில் கண்ணாய் இருந்தான். தனக்கு எது தேவை எது தேவையில்லை என்பதில் உறுதியாய் இருந்தான்.சௌமியா , ராக்கி குழந்தை இப்போது வேண்டாம் என இருந்தனர். தீபா எவ்வளவோ சொல்லியும் சௌமியா கேட்கவில்லை. நானே இன்னமும் சின்ன சின்ன தவறுகள் தினந்தோறும் செய்கிறேன். என்னால் என்னையே பார்த்துக்கொள்ள சிரமமாய் இருக்கும் போது நான் எப்படி ஒரு குழந்தையை வளர்ப்பேன் என்றாள். அவளுக்கு குழந்தை என்றால் ஆசைதான் ஆனால் யார் பொறுப்பெடுத்து கொள்வது.
தீபா தன்னால் முடிந்த போதெல்லாம் ஆபீஸ் வந்தாள். பிரேமுடன் பேசுவாள். அப்படித்தான் அன்றும் வந்திருந்தாள். சார் மீட்டிங் ல இருக்காரு என்றார்கள். மீட்டிங் முடிந்து சில பேரும் ,கடைசியாக சௌமியாவும் வந்தனர். என்ன தீபா ஆபீஸ் ஜாயின் பண்ணுறீங்களா ? சர்ப்ரைஸ் எல்லாம் ஒன்னுமில்ல நான் பிரேமிடம் பேச வந்தேன் என்றாள். ஆல் தி பெஸ்ட் என்றாள் ரஞ்சனி. ஒரு மணிநேரம் கழித்தே அவனை பார்க்க முடிந்தது.என்னாச்சு இவ்வளவு நேரம் என்றாள். கிளையண்ட் புதுசு அதனால் கொஞ்சம் கஷ்டம் என்றான். என்ன விஷயம் தீபா.இப்போது எனக்கு பணம் கொஞ்சம் தேவை . நான் இப்போதுதான் ப்ராஜக்ட்டுக்கு ஒதுக்கினேன் என்றான். சரி பரவாயில்லை. எதற்காக பணம் தீபா. அப்பா பிறந்த நாளன்று எல்லோருக்கும் சாப்பாடு போட ஆசைப்பட்டேன்.ஓ அவ்வளவுதானா இரு செக் தருகிறேன் என்றான். தாங்க்ஸ் பிரேம்.
குமரகுரு இருந்திருந்தால் வேறு மாதிரி வாழ்க்கை இருந்திருக்கும். அவர் இந்நேரம் ரஞ்சனிக்கு கல்யாணம் செய்து பேரப்பிள்ளைகளோடு விளையாடிகொண்டிருப்பார். இளவேனில் இவர்களுடைய வாழ்வில் ஒரு கறுப்பு பக்கம் . அதை ஒன்றும் செய்ய முடியாது. சுபா ஃபோன் பண்ணியிருந்தாள்.எப்படி இருக்கிறாய் பிரேம்? தீபா ரஞ்சனி குமரன் எல்லாம் சவுகரியமா என்றாள். எல்லாம் ஓகே. உன் மகள் லலிதா எப்படி இருக்கிறாள். அவள் தினமும் ஒரு முறையாவது குமரன் பற்றி கேட்காமல் இருக்க மாட்டாள். வாசன் சளைக்காமல் பதில் சொல்லுவார் என்றாள். கொஞ்ச நேரம் பேசி விட்டு வைத்து விட்டாள். பாவம் மதன் மாதிரி ஒரு ஆளிடம் சிக்கி எப்படியோ மீண்டு விட்டாள்.தீபாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என்ன பண்ணலாம் என சௌமியா , ராக்கியிடம் ஐடியா கேட்டான். ஒரு diamaond நெக்லஸ் என்றாள் சௌமியா. இது நிஜமாவே ஐடியா வா ? வேறு ஏதாவது சொல். கார் வாங்கி கொடுக்கலாம் என்றாள். இது ஓரளவுக்கு சரி. அவளுக்கு நான்தான் கார் ஓட்ட கற்றுத்தர வேண்டும் என்றான். தீபா அப்பா பிறந்த நாளில் கார் வாங்கி கொடுக்கலாம் எனவும் முடிவு செய்தான்.
ரஞ்சனி ஸ்ட்ரக்சர் மாற்றங்களை திறமையாக கையாண்டாள் . அவள் நல்ல திறமைசாலி. நாளைக்கு சண்டே எங்கு போகலாம் என்றான். குமரன் நீங்க ரெஸ்ட் எடுங்க அப்பா நாங்க போயிட்டு வறோம் என்றான்.முன்னேயும், பின்னேயும் எதிரிகள் இருந்தார்கள். அதனால் வண்டி ஓட்டும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வான். ஆனால் தீபா கொஞ்சம் அலட்சியமாக இருப்பாள். ஊரில் இருக்கும் சொந்த வீட்டையும் பழுது பார்த்து வைத்து விட விரும்பினான். ரமேஷ் அந்த வீட்டை சரி வர பராமரிப்பதில்லை. ஊருக்கு போவதென்பதே இப்போது மிகுந்த மனதுக்கு கஷ்டமான காரியம் ஆகிவிட்டது. அப்பா ,அம்மா மறைவுக்கு பிறகு யார் இருக்கிறார்கள் இவனுக்கு. எப்படியும் அந்த வீட்டில் அவர்களின் ஆன்மா இருப்பதாக நம்பினான். இவன் சிறு வயது முதல் வளர்ந்த வீடு அது. தீபா அதை இடித்து கட்ட விரும்பினாள். இவன் மறுத்து விட்டான். ஏதோ ஒரு வகையில் அதன் உள் கட்டமைப்பு நான் வாழ்ந்த விதத்தை நினைவு படுத்துகிறது என்றான்.
சௌமியா , ராக்கி இருவரிடமும் ஐடியா கேட்டான் . எந்த கார் வாங்கலாம் என. அவர்கள் ஒன்றை தேர்வு செய்து சொன்னார்கள். அவர்கள் சொன்ன விதம் இவனுக்கு பிடித்திருந்தது. நாளைக்கே புக் செய்கிறேன் என்றான் பிரேம். தீபாவை அழைத்து கொண்டு ஷோ ரூம் போனான். அது ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டுமென்று சௌமியாவும், ராக்கியும் கார் வாங்க போவதாக சொன்னான். காரின் உள்ளே அமர்ந்து பார்த்தாள். இந்த கார் சௌமியா வாங்கி கொள்ளட்டும் என்றாள். ஏன் உனக்கு வேண்டாமா? எனக்கெல்லாம் வாங்கி தருவீர்களா ? பானி பூரி , ஐஸ் கிரீம் இப்படித்தான் வாங்கி தருவீர்கள் என்றாள்.குமரன் அம்மா நீங்க இந்த காரே வாங்கிக்கோங்க என்றான். வேண்டாம்பா நாமெல்லாம் ரொம்ப ஆசைப்படகூடாது. ரஞ்சனி ,அக்கா இந்த கார் நமக்குத்தான் என்றாள். உண்மையாகவா? மாமா சும்மா விளையாட்டுக்காக சொன்னார். நீ ஓட்ட ஏற்ற கார் என்றாள். அவள் பிரேமை அணைத்துக்கொண்டாள்.
காரை எடுத்துக்கொண்டு உள்ளூரில் எல்லா இடமும் சுற்றி பார்த்தார்கள். தீபாவே ஓட்டினாள். அவள் முகத்தில் பெருமிதம் வழிந்தோடியது. போதும் வீட்டுக்கு போகலாம் என்றார்கள். சௌமியாவும், ராக்கிக்கும் வயது வித்தியாசமிருந்தது. ஆனால் ராக்கியோ சௌமியாவோ அதை பெரிது படுத்தியதில்லை. தீபா தூங்கபோகும் முன் லவ் யு பிரேம் என்று சொல்லிவிட்டுத்தான் போவாள். அன்றும் அப்படித்தான் சொன்னாள். இவன் அது மட்டும் போதாது என்றான்.ரஞ்சனி பிரேமின் பழைய மாடல் வீடு புளூ பிரிண்ட் ரமேஷிடம் இருந்து வாங்கினாள் . அவனுக்கு ஒரு அமெளண்ட் செட்டில் செய்தார்கள். அந்த வீட்டை இடிக்காமல் என்னென்ன செய்ய முடியும் என பார்த்தார்கள். காம்பவுண்ட் கட்ட வேண்டும் என்றாள் ரஞ்சனி. இந்த அறைக்கு ஜன்னல் வைக்க வேண்டும் என்றாள். இப்படியாக குறிப்புகளை சேர்த்து பட்ஜெட் போடப்பட்டது. அதை சிவில் இஞ்சீனியருக்கு அனுப்பி எவ்வளவு செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
தீபா நான் அந்த பணத்தை கம்பெனிக்கு திரும்ப செலுத்தி விடுவேன் என்றான். என்ன பிரேம் நான் என்றைக்கு உன்னையும் என்னையும் பிரித்து பேசி இருக்கிறேன். நீ அதெல்லாம் ஒண்ணும் பண்ண வேண்டாம் என்றாள். கம்பெனி உன்னுடைய உழைப்பால் உயர்ந்தது அதில் உனக்கு உரிமை இல்லை என யார் சொல்ல முடியும் என்றாள்.ரஞ்சனி மாமா எப்பவுமே இப்படித்தான். அடுத்தவங்க என்ன சொல்லுவாங்க அப்படின்னு யோசிப்பார். ம் போதும் டிஸ்கஷன் எனக்கு பசிக்குது என்றான் குமரன். நீ வா நான் உனக்கு சப்பாத்தி பண்ணி தருகிறேன் என்றாள் ரஞ்சனி.இந்த தீபாவளிக்கு ஊருக்கு போனால் என்ன என்றான். தாராளமாக போகலாம். இன்னும் 6 மாதமிருக்கிறது தீபாவளிக்கு. வாங்க மாமா சாப்பிடலாம் சப்பாத்தி தயார் என்றாள்.
தீபாவளிக்குள் இந்த வேலையெல்லாம் முடிக்க முடியுமா என இஞ்சீனியரிடம் கேட்டான். தாராளமாக என்றார்கள். அப்போது பிரச்சனை இல்லை. அவன் மனம் சிறகடித்து பறந்தது.நாளைக்கு நான் மட்டும் போய் பார்த்து விட்டு வருகிறேன் என்றான்.சரி போய் விட்டு வா பிரேம். இரவு 10 மணிக்கெல்லாம் கார் எடுத்துக்கொண்டான். காலை 5 மணிக்கு போய் சேர்ந்த போது வீடு பூட்டிக்கிடந்தது. பக்கத்து வீட்டில் அதன் சாவியை வாங்கினான். தூசி மண்டலமாக கிடந்தது. . இவனுடைய பையில் இருந்து கைலியை எடுத்து கட்டி கொண்டான். சட்டையை கழற்றி ஒரு பக்கமாக வைத்து விட்டு சுத்தப்படுத்த தொடங்கினான். குமரன் ஃபோன் செய்திருந்தான். என்னப்பா செய்கிறீர்கள் சாப்பிட்டீர்களா என்றான். அப்போது மணி 10 ஆகி விட்டது . கதிரேசன் வந்தான். நீ ஏன் இந்த வேலையெல்லாம் பார்க்கிறாய் என்றான். என்னவோ அதில் ஒரு மனதிருப்தி கிடைக்கிறது.
வீட்டுக்கு வா டிபன் சாப்பிடலாம் என்றான். பரவாயில்லை மதியம் வருகிறேன். இப்போது இடையில் குளித்தால் மறுபடி தூசியில் இறங்க மனம் வராது என்றான். சரி அப்போது மதியம் சமைக்க சொல்லிவிடுகிறேன் என்றான் கதிரேசன். ஒரு வழியாக எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி முடித்தான்.
கிணற்றடியில் போய் குளித்தான். உடை மாற்றிக்கொண்டு ஸ்வாமி விளக்கை ஏற்றினான். அப்பா ,அம்மா படத்துக்கு மாலை அணிவித்தான்.மதியம் கதிரேசன் வீட்டில் சாப்பிட்டு விட்டு திரும்ப இஞ்சீனியர் ஆபீஸ் போனான். அவர் இவனை வரவேற்றார். எல்லாவற்றையும் இறுதி செய்து பணம் அட்வான்ஸ் கொடுத்தான். பிரேம் நீ கவலைப்படாதே தீபாவளி மறக்க முடியாத தீபாவளி ஆக இருக்கும் என்றார் இஞ்சீனியர்.
அவ்வப்போது எனக்கு அப்டேட் பண்ணுங்கள் என்றான்.
என்ன எல்லாம் முடிந்ததா என்றாள் தீபா. ஓரளவுக்கு எனக்கு தெரிந்த நுணுக்கங்கள் எல்லாம் சொல்லி இருக்கிறேன். இன்னைக்கு ஆபீஸ் போறியா பிரேம். ஆமாம் போகத்தான் வேண்டும் என்றான். ஆபீஸில் சௌமியா விசாரித்தாள்.. அந்த வீடு அதன் மதிப்பை இழக்க கூடாது அதுதான் என்னுடைய ஆசை என்றான்.ராக்கி எனக்கும் அது போல ஒரு வீடு கட்ட ஆசை என்றான். ம் சீக்கிரம் ஃபோன் இஎம்ஐ கட்டு முதலில் என்றாள்.அதென்ன அப்படி சொல்லிவிட்டாய் நிச்சயம் ஒரு நாள் வீடு கட்டுவேன் . அப்பா, அம்மா என்னை வெறுத்தாலும் நான் அவர்கள் பெயரையே வீட்டுக்கு வைப்பேன் என்றான்.சௌமியா பார்த்தீங்களா என்னை அப்படியே மறந்து விட்டான் என்றாள்.அவளை ஏதோ சொல்லி சமாதானபடுத்தினான். எஜுகேஷன் டிரஸ்ட்டுக்கு அனுமதி கிடைத்து அதன் பணிகள் ஆரம்பமாயிற்று.காலம் வேகமாக ஓடியது. மழைக்காலம் வரும் முன் வீட்டுபணிகளை முடிக்கும்படி கேட்டுக்கொண்டான் பிரேம். வீடு நாளொரு வண்ணம் பொழுதொரு நிறம் என மாறி வருவதை ரசித்தான் பிரேம்.தீபாவும்,ரஞ்சனியும் அவன் நிம்மதியாக இருப்பதை பார்த்து சந்தோஷம் அடைந்தனர்.