Nizhal Tharum Vasantham - 34 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 34

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 34

காலையில் அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தினேஷ் நின்று கொண்டிருந்தான். என்னப்பா வேணும் ?எங்க அம்மாவை காணோம் சார் என்றான். எத்தனை நாளா ? 10 நாள் ஆச்சு சார்.உன் பேரென்ன தினேஷ். வீடு எங்க இங்க தென்றல் நகர். எழுதி கொடுத்துட்டு போ நாங்க பார்க்கிறோம் என்றார்கள். மீரா காணாமல் போன விஷயம் ராக்கிக்கு லேட் ஆகத்தான் தெரிந்தது. ராக்கியும் சௌமியாவும் கடைக்கு சென்ற போது கடை பூட்டியிருந்தது. மீரா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ரம்யா ஃபோன் எடுக்கவில்லை. தினேஷ் வீட்டுக்கு போன போது அவன் அழுது கொண்டிருந்தான். நான் போலீஸ் ல கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கேன் சார் என்றான். ரம்யா வீடு எங்கே என்று தெரியுமா என கேட்டான். தெரியுமே . நீயும் வருகிறாயா என்றான் . சரி போகலாம் .நீ எதுவும் சாப்பிட்டாயா ? வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட வைத்து அழைத்து சென்றான்.

ரம்யா எங்கே என கேட்டான் தினேஷ் . அவ இனிமே வேலைக்கு வர மாட்டா என்றார்கள். நாங்க ஒரு நிமிஷம் பேசிட்டு போய் விடுகிறோம். இவங்க அம்மா மீராவை காணோம். நீங்க யாரு போலீஸா ? இல்ல சார். அதெல்லாம் வேண்டாம் சார். நீங்க மொதல்ல கிளம்புங்க என்றார்கள். தினேஷ் நீ கவலைப்படாதே நாங்கள் அடுத்து ஸ்டேஷன் தன் போகிறோம். உன் ஃபோன் நம்பர் கொடுத்து விட்டு போ. நாங்களே உன்னை கூப்பிடுகிறோம் என்றான் ராக்கி. அவனை அப்படியே விட்டு செல்ல மனமில்லாது ஸ்டேஷன் சென்றார்கள். ஸ்டேஷனில் சரியான பதில் இல்லை. ஸ்டேஷன் விட்டு வெளியே வந்த போது unknown நம்பரில் இருந்து கால் வந்தது. எடுத்தான். நான் ரம்யா பேசுகிறேன். மேடத்தை யாரோ கடத்தி விட்டார்கள் என்றாள். நீங்கள் தான் எப்படியாவது மேடத்தை காப்பாற்ற வேண்டும் என்றாள். போனை வைத்து விட்டாள்.

சிக்கல் மேலும் இறுகிக்கொண்டிருந்தது. மீரா எங்கு போனாள். ஆந்திராவில் எங்கு போனாள் எதற்கு போனாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. சரி லேட் ஆகிறது ஆபீஸ் போவோம் என்றான் ராக்கி .சௌமியா அந்த கடையில் ஏதாவது க்ளூ கிடைக்கலாம் என்றாள். நாளைக்கு தினேசை கூட்டி போகலாம் என்றான். ஒரு புதிருக்கு மற்றொரு புதிர் விடையாக முடியாது. ரஞ்சனி அன்று வீட்டில் இருந்தாள் .தீபா என்ன நடக்கிறது என்றே தெரிய மாட்டேங்குது என்றாள். என்னக்கா ஆச்சு? பிரேம் ரொம்ப நெர்வஸ் ஆ இருக்காரு.ம் நானும் கவனித்தேன்.
சரி நான் போய் குமரனை ஸ்கூலில் இருந்து அழைத்து வருகிறேன் என்றாள். நானும் வர வா அக்கா என்றாள்.சரி.
இளவேனில் கிட்டேயிருந்து ஃபோன் வந்தது. இவள் போனை அணைத்தாள். குமரன் மும்முரமாக விளையாண்டு கொண்டு இருந்தான். அம்மா என்றான் உற்சாகமாக இவளை பார்த்தவுடன்.

தினேஷ் கடையை திறந்தான். அங்கு நோட்டு புத்தகங்கள் கூட இல்லை. சுத்தமாக இருந்தது. ராக்கி அங்கு எதிர் கடையில் இருந்த சிசி டிவி ஃபுடேஜ் வாங்கி பார்த்தான். அவள் காணாமல் போன அன்று இரவு 10 மணிக்கு அவள் கடை திறக்கும் காட்சி இருந்தது. அவள் கடைக்குள் நுழைந்து ஷட்டரை உள் பக்கமாக சாத்துகிறாள். கடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதன் பிறகு அந்த சிசிடிவி ஃபுடேஜில் ஒன்றும் இல்லை.இளவேனில் போனை ரஞ்சனி எடுக்காதது தீபாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. என்னாச்சு ரஞ்சனி ? ஏன் ஃபோன் எடுக்கவில்லை. மாமாவுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை போல. அவர் பேச்சிலே அது தெரிகிறது என்றாள். நான் இனிமேல் இளவேனில் ஃபோன் பண்ணினால் எடுக்க போவதில்லை என்றாள்.

அந்த கடையை சல்லடை போட்டு தேடிய போது ஒரு பாங்க் லாக்கர் கீ கிடைத்தது. ஏதோ ஒரு மூலையில் கிடந்தது. தினேஷ் அழைத்து கொண்டு போய் பாங்க் லாக்கர் திறந்து பார்த்த போது ராக்கி கொடுத்த தகவல் ஷீட் , கைத்துப்பாக்கி ஒன்றும் இருந்தது.தினேஷ் அது அம்மாவுடையதுதான் என்றான்.இவனை தேட போய் தான் அம்மா யாரிடமும் மாட்டிக்கொண்டிருக்க வேண்டும். ஆந்திராவில் எங்கு போய் தேடுவது. டிக்கெட் புக்கிங் ஆப்
தினேஷ் போனில் இருந்தது, ஆமாம் சார் என்னுடைய ஃபோன் வாங்கித்தான் டிக்கெட் புக் பண்ணினார்கள்.அது ஏதோ ஒரு டவுன் பேராக இருந்தது. சரி அம்மா போட்டோ இருந்தால் whatsapp பண்ணு . நான் இன்று இரவே அங்கு போய் பார்க்கிறேன். சௌமியா நானும் வரவா என்றாள் அதெல்லாம் வேண்டாம்.தம்பி இந்த அக்காவோடு தங்கி கொள். அதுதான் சேஃப் என்றான்.

அந்த டவுன் பீமாவரம்.இவன் போய் சேர்ந்த போது விடிகாலை ஆகியிருந்தது.அருகில் இருந்த லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டான்.காலை 10 மணிக்கு வெளியே கிளம்பினான்.பிரேம் ஃபோன் பண்ணியிருந்தான். எங்கே போனாய் ராக்கி ? என்றான். ஆந்திரா வரை வந்திருக்கிறேன் எனக்கு ஒரு அவசர வேலை என்னிடம் பணம் வாங்கி கொண்டு கொடுக்க மறுத்து விட்டார்கள் என்றான். பிரேம் சரி சரி நேரத்தோடு வந்து விடு என்றான்.
அவளை பஸ் இறக்கிவிட்ட லொகேஷனில் ஆட்டோ ஸ்டண்ட் இருந்தது. அங்கு போட்டோவை காட்டி விசாரித்த போது நான் தான் அந்த மேலத்தெரு வீட்டில் இறக்கி விட்டேன் என்றான். இவன் உஷாராக அட்ரஸ் மட்டும் குறித்து கொண்டான். ரொம்ப தாங்க்ஸ் என்றான்.

இன்னும் இரண்டு நாளில் குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டும் இந்த ராக்கியை வேறு காணவில்லை என்றான் பிரேம். தீபா சௌமியாவிடம் பேசினாள். ராக்கி இன்று நைட் கிளம்பி நாளை காலை வந்துவிடுவான் என்றாள்.அந்த வீட்டை தூரத்தில் இருந்து நோட்டம் விட்டான். அந்த வீட்டில் ஆள் நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை. அருகில் இருந்த வீட்டில் விசாரித்த போது இரண்டு நாட்கள் முன்னதாக காலி செய்து விட்டு போய்விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது. கணவன் மனைவி,கைக்குழந்தை இருந்திருக்கிறது. அந்த வீட்டு ஓனர் விசாரித்த போது அவன் ஒரு பொறுக்கி என்று சொல்லிவிட்டு ,நீங்கள் போகலாம் என்றார். அவர் ஃபோன் நம்பர் வாங்கி கொண்டான். அவன் அட்வான்ஸ் இன்னும் என்னிடம்தான் இருக்கிறது என்றார். அவன் ஃபோன் நம்பர் கொடுத்தார். அதை சேவ் செய்ய முயற்சித்த போது ஏற்கனவே சேவ் ஆகி இருந்தது . இளவேனில் என்னை ஏமாற்றி விட்டான் என்றார்.
இளவேனிலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது.


எல்லா சாமிக்கு வேண்டிய பூஜை சாமான்கள், கல்யாண பத்திரிக்கை போன்ற வேண்டியதை எடுத்துக்கொண்டாயா தீபா. எல்லாம் எடுத்தாச்சு. ராக்கி காலையில் வந்துவிட்டான். சௌமியா அந்த பையன் தினேசையும் குலதெய்வம் கோவிலுக்கு
அழைத்துக்கொண்டு போக முடிவு செய்தாள். இது யார் என கேட்ட போது தெரிந்தவர்கள் இவனை எங்களிடம் விட்டுவிட்டு ஊருக்கு போயிருக்கிறார்கள் என்றாள் சௌமியா. எல்லோரும் காரில் எறிக்கொண்டார்கள். ரஞ்சனி ஏனோ அமைதியாய் இருந்தாள். இன்று இரவு பயணம் செய்து காலையில் 6 மணிக்கெல்லாம் கோவிலுக்கு போய்விடலாம் என்றான். ரமேஷ் கோவிலில் எல்லா ஏற்படும் செய்திருக்கிறான்.கோவிலில் ரமேஷும் , இளவேனிலும் எல்லோரையும் வரவேற்றனர். கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செயதிருந்தார்கள்.

தீபாவும், ரஞ்சனியும் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். பிரேம் ஊர் மக்களிடம் பேசிக்கொண்டு இருந்தான். ராக்கி இளவேனில் இப்படிப்பட்டவன் என தெரிந்தும் அமைதியாய் இருந்தான். இளவேனில் ரஞ்சனியிடம் பேச கூட இல்லை. இதை எல்லோருமே கவனித்தார்கள். சௌமியாவிடம் சொல்லி வைத்து இருந்தான்.பூஜை நடந்து கொண்டிருந்தது.குமரன் அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தான். ஊர்க்காரர்களிடம் யாராவது புதிதாக தென்பட்டார்களா கையில் குழந்தையோடு என்றான் ராக்கி. ஆமா புதிதாக ஒரு பெண் குடியேறி இருக்கிறாள் ஆனால் அந்த பெண் ஆந்திர மாநிலத்தவர் என்றார்கள். ரஞ்சனியும்,இளவெனிலும் சாமி கும்பிட்டனர் .பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

ராக்கி இப்போதைக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என நினைத்தான். இளவேனில் வசம் மீரா இருந்தால் அவளுடைய உயிருக்கு ஆபத்து என நினைத்தான். போலீஸ் போனாலும் அதுவும் ஆபத்துதான். எல்லோரும் சாப்பிட்டார்கள். அப்புறம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது என பிரேமை பார்த்து ரமேஷ் கேட்டான். எல்லாம் ரெடி, சமையல். நாதஸ்வரம். அய்யர், மண்டபம் எல்லாம் ரெடி.சாயங்காலம் கிளம்பி விட்டார்கள். இன்னும் ஒரு வாரமே கல்யாணத்துக்கு இருந்தது. மீரா ஃபோன் வைத்து அவள் லொகேஷன் கண்டுபிடிக்க ஃப்ரெண்ட் ஒருவரிடம் சொல்லி வைத்திருந்தான். அவர்கள் லொகேஷன் அனுப்பியிருந்தார்கள். அது சென்னை ஆந்திரா பார்டர் சுங்கசாவடியை காட்டியது. ஊர் திரும்பியதும் அங்கு போய் விசாரித்து கொள்ளலாம் என்று எண்ணினான்.

ரஞ்சனி மரியாதைக்கென இரண்டு வார்த்தை இளவேனில் கூட பேசியிருக்க வேண்டும் என்று பிரேம் சொன்னான். மாமா உங்களுக்கு விருப்பமில்லாத இடத்தில் எனக்கென்ன வேலை என்றாள்.சரி சரி கோவப்படாதே ரஞ்சனி என்றான். சௌமியாவும், ராக்கியும் அந்த சுங்கசாவடி சென்று இளவேனில் போட்டோவையும்,மீரா போட்டோவையும், காட்டி விசாரித்தனர். ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை. அங்கிருந்த சிசிடிவி பார்த்தனர் அப்போதும் ஒன்றும் சிக்கவில்லை. இப்போது என்ன செய்ய போகிறாய் ராக்கி. மீராவுடைய கடைசி கால் அங்கிருந்து தான் போயிருக்கிறது. அது போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு போயிருக்கிறது. அவங்களை உனக்கு தெரியுமா என்றான் தினேஷிடம்.தெரியும் அம்மாவோட குளோஸ் ஃப்ரெண்ட். போலீஸ் ஆள் எடுக்கும் போது ரெண்டு பெரும் ஒண்ணா போனாங்க அப்படின்னு அம்மா சொல்லி இருக்காங்க. அவங்க வீடு தெரியுமா தெரியும். சரி வா போய் பார்க்கலாம் . அவர்கள் வீட்டில்தான் இருந்தார்கள். எனக்கு உடம்பு சரியில்லை மீரா ஃபோன் பண்ணினது உண்மைதான். ஆனா நானும் அவளுக்கு திருப்பி ஃபோன் பண்ணப்போ அவ எடுக்கலை .

நடந்ததை சொன்னான். இளவேனில் இப்போ எங்கே என்றாள். இவன் சொன்னான். நான் அவனை அரெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்கிறேன். வேறு வழியே இல்லை என்றாள். அவர்கள் விடை பெற்றுக்கொண்டனர். நான் இவனை பார்த்துகொள்கிறேன் என்றாள்.தினேஷ் ரொம்ப தாங்க்ஸ் அங்கிள் என்றான். இந்த கல்யாணம் எப்படியும் நிற்கத்தான் போகிறது. ரஞ்சனியை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. இளவேனில் கிட்டேயிருந்து ஃபோன் வந்தது. என்ன ராக்கி என்னை அரெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்கிறாயா ? நானும் ரஞ்சனியும் நெருக்கமாக இருக்கிற வீடியோவை சோசியல் மீடியாவில் போடுவேன் என்றான். அப்படியெல்லாம் செய்யாதே உனக்கென்ன வேண்டும். 10 லட்சம் . மீராவை என்ன செய்தாய். அது உனக்கு தேவையில்லாதது என்றான்.ராக்கி செய்வதறியாது தவித்தான். பிரேமுக்கு ஃபோன் செய்தான். பிரேம் ஃபோன் எடுக்கவில்லை .