அவள் பெயர் மீரா. சென்னையில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். பார்க்க மிகவும் அழகானவள், ஆனால் அமைதியானவள். வகுப்பில் யாருடனும் அதிகம் பேச மாட்டாள். எப்போதும் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே கற்பனையில் மூழ்கி விடுவாள்.
அவள் கற்பனையில் ஒரு காதலன் இருந்தான். அவன் பெயர் கூட அவளுக்கு தெரியாது. ஆனால் அவள் மனதில் அவன் தான் ஹீரோ. உயரமானவன், கார் வைத்திருக்கும் பெரிய பணக்காரன், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகன். தினமும் இரவு தூங்கும் போது அவனுடன் பேசுவது போலவே தூங்குவாள்.
ஒரு நாள் அவளுடைய நெருங்கிய தோழி பூஜா அவளிடம், "ஏய் மீரா, எப்ப பாத்தாலும் தனியா சிரிச்சிக்கிற, என்ன யோசிக்கிற?" என்று கேட்டாள்.
முதலில் சொல்ல தயங்கிய மீரா, பின்பு மெதுவாக சொன்னாள். "நான் ஒருவனை காதலிக்கிறேன் பூஜா. அவன் பெரிய பணக்காரன். அவனுடன் நான் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்."
பூஜா ஆச்சரியத்துடன், "என்னது? கற்பனையிலா? அவன் யாரு? எங்க இருக்கான்? நீ அவன்கிட்ட உன் காதலை சொன்னியா?" என்று கேட்டாள்.
அதற்கு மீரா சோகமாக, "இல்லை பூஜா. சொல்ல பயமா இருக்கு. அவன் பெரிய பணக்காரன். அவன் நிச்சயம் பணக்கார பெண்ணை தான் கல்யாணம் பண்ணுவான். என்னை மாதிரி சாதாரண பொண்ணை எப்படி ஏற்றுக்கொள்வான்? அதனால் தான் நான் கற்பனையிலேயே அவனுடன் வாழ்கிறேன்" என்றாள்.
பூஜாவிற்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.
சில நாட்களுக்கு பிறகு மீரா ஒரு பெரிய முடிவு எடுத்தாள். எப்படியாவது அவனை நேரில் பார்க்க வேண்டும் என்று. அவன் அடிக்கடி அந்த ஊர் பக்கம் காரில் போவதாக கேள்விப்பட்டிருந்தாள். மறுநாள் காலையிலேயே கிளம்பி அந்த ஊருக்கு சென்றாள். பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த போது, திடீரென அவன் வெள்ளை நிற காரில் வேகமாக வந்தான்.
அவனை பார்த்ததும் மீராவின் இதயம் படபடவென அடித்தது. கைகள் நடுங்கியது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு கையை காட்டி காரை நிறுத்தினாள்.
"சார், நீங்க போகும் வழியில் ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும், அங்கு என்னை இறக்கி விட முடியுமா? பஸ் கிடைக்கல" என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
அவன் அவளை பார்த்து புன்னகைத்து, "வாங்க, உட்காருங்க" என்றான்.
காரில் ஏறியதும் அவளுக்கு ஒரே சிரிப்பு. மனதிற்குள் நினைத்து கொண்டாள், "அவனை பார்க்க தான் இவ்வளவு தூரம் வந்தேன், இப்போது அவன் காரிலேயே போகிறேன்" என்று. அது அவள் கற்பனையில் கூட நினைக்காத ஒரு தருணம். காரில் ஏசி காற்று, அவன் போட்டிருந்த பர்ப்யூம் வாசனை, எல்லாம் அவளுக்கு கனவு போல இருந்தது.
பஸ் ஸ்டாப் வந்ததும் இறங்கி விட்டாள். ஆனால் தன் காதலை சொல்ல முடியாமல் வீட்டிற்கு வந்து விட்டாள்.
அடுத்த நாள் கல்லூரியில், எல்லா தோழிகளும் அவரவர் காதல் கதையை பேசி கொண்டிருந்தார்கள். அப்போது ஒருத்தி மீராவை பார்த்து, "ஏய் மீரா, உனக்கு எப்ப கல்யாணம்?" என்று கேலியாக கேட்டாள். அந்த வார்த்தை அவள் மனதை கூர்மையான கத்தி போல குத்தியது.
வீட்டிற்கு வந்து அழுதாள். "நானே என் காதலனுடன் இன்னும் வாழவே இல்லை. கற்பனையில் மட்டும் தான் வாழ்கிறேன். எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்?" என்று தனியாக புலம்பினாள்.
ஒரு நாள் மாலை கடற்கரைக்கு சென்றாள். அங்கு தனியாக உட்கார்ந்து கடலை பார்த்து கொண்டிருந்தாள். அப்போது அவள் கற்பனை மீண்டும் ஆரம்பித்தது. அவளும் அவள் காதலனும் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் நனைய கடல் அலையை பார்த்து கொண்டு பேசுவது போல. அந்த கற்பனை அவ்வளவு அழகாக இருந்தது.
அப்போது பூஜா அங்கு வந்தாள். மீராவின் கண்ணில் கண்ணீரை பார்த்து, "தோழி ஏன் இப்படி பேசுகிறாய்?" என்று கேட்டாள்.
மீரா நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.
அதற்கு பூஜா தெளிவாக சொன்னாள், "இப்படியெல்லாம் சொல்லாதே மீரா. பணத்துக்கும் காதலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பணத்தை யார் வேணுமானாலும் சம்பாதிக்க முடியும். ஆனால் உண்மையான அன்பு தான் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அதனால் உன் காதலனிடம் போய் சீக்கிரம் சொல்லு. கண்டிப்பாக உன் காதலை ஏற்றுக்கொள்வான். ஒருவேளை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் உன் அன்பை புரிந்து கொள்ளாதவனாக தான் இருப்பான். அவனுக்காக நீ கவலைப்பட தேவையில்லை."
தோழியின் இந்த வார்த்தைகள் மீராவிற்கு புது தைரியத்தை கொடுத்தது.
மறுநாள் கோவிலுக்கு சென்றாள். கடவுளிடம், "என் கற்பனை காதலை நிஜமாக்கி கொடு" என்று மனமுருகி வேண்டினாள். வேண்டுதல் முடிந்து திரும்பும் போது, கோவில் வாசலில் அதே கார் நின்று கொண்டிருந்தது. அவனும் கோவிலுக்கு வந்திருந்தான்.
இந்த முறை மீரா தயங்கவில்லை. நேராக அவனிடம் சென்று, "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.
அவன் ஆச்சரியமாக பார்த்தான்.
மீரா தன் கற்பனை காதல் முழுவதையும், பயத்தையும், அன்பையும் அவனிடம் கொட்டி தீர்த்தாள்.
அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு சிரித்தான். "நானும் உன்னை அந்த பஸ் ஸ்டாப்பில் பார்த்ததில் இருந்து யோசித்து கொண்டிருக்கிறேன். நீ ஏன் என் காரில் ஏறினாய் என்று. இப்போது தான் புரிகிறது. பணம் இருந்தால் தான் காதல் வரும் என்று நீ நினைக்கிறாய், ஆனால் உண்மையான காதல் பணத்தை பார்க்காது" என்றான்.
அன்று தான் மீராவிற்கு புரிந்தது, கற்பனை அழகானது தான், ஆனால் கற்பனையை தாண்டி நிஜத்தில் காதலை சொல்லும் தைரியம் தான் வாழ்க்கையை அழகாக்கும் என்று.
கற்பனை காதல் அன்று நிஜமானது.
---