Aditi - 3 in Tamil Fiction Stories by Ganes Kumar books and stories PDF | அதிதி அத்தியாயம் - 3

Featured Books
Share

அதிதி அத்தியாயம் - 3

மோகன் சென்னைக்கு வந்தவுடன் தன் ஆஃபீஸ் வேளைகளில் தன்னை ஈடுபடுத்த ஆரம்பித்தான்...ரகுவும் ஸ்கூலுக்கு செல்ல ஆரம்பித்தான்...மோகன் இப்பொழுதெல்லாம் முன்னர் போல் இரவு பத்து மணி வரை எவ்வளவு வேலையாக இருந்தாலும் இரவு ஏழு மணிக்கே வீட்டிற்கு வந்துவிடுவான்...ரகுவுடன் பொழுது கழிக்க...இப்பொழுதெல்லாம் ரகு மோகனின் மாரில் தான் படுத்து உறங்குவான்...
அப்படி உறங்கும் வேளையில் தான் ரகு தன் மனத்தில் நீண்ட நாட்களாக தேக்கிவைத்திருந்த கேள்வியை மோகனிடம் கேட்டான்

"நீதான் அம்மாவ கொன்னையா...."ரகு

மோகன் அதிர்ச்சியுடன் ரகுவை பார்க்கிறான்.

"நா ஏன் அம்மாவ கொல்லனும்..."மோகன்

"பிறகு ஏன் அம்மா கூட அன்னைக்கு சண்டை போட்டுட்டு இருந்த..."ரகு

"சண்டை போடல ரகு பேசிட்டு இருந்தோம்...அம்மாவும் அப்பாவும் எப்பையும் சண்டை போட்டதில்ல..."

"ஏன் என்ன அன்னைக்கு அம்மா முகத்த பாக்க விடல..."

"நீ பயந்துடுவனு ரகு...நீ ரொம்ப சின்ன பையன் அதான் உன்ன பாக்க விடல..."

"அம்மா ஏன் இப்படி நம்ம எல்லாரையும் விட்டு போயிடுச்சு..."

"அம்மா எங்கையும் போல....நம்ம கூட தான் சாமியா இருக்கு எப்பையும் நம்ம கூடத்தான் இருக்கும்...சரி பேசுனது போதும் அப்படியே நீ தூங்கு...."மோகன் ரகுவின் முதுகில் தட்டிக்கொடுக்க ரகு அப்படியே நித்திரைக்கு செல்கிறான்.


காலையில் சரோஜா தாம் ரகுவை பள்ளிக்கூடத்திற்கு தயார்படுத்துவாள்...ரகுவின் படிப்பினை நோட்டமிட மோகன் தனியாக ஓர் ஆசிரியரை ஏற்பாடு செய்துவிட்டார்...விடுமுறை நாட்கள் என்றால் மோகன் வேலைகள் எதுவும் இல்லாமல் இருந்தாரானால் அவன் ரகுவை பார்க்கிற்கு அழைத்து செல்வான் இல்லையென்றால் தோட்டக்காரன் செல்வத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவான்.தோட்டக்காரன் செல்வம் சாமியல்காரி சரோஜாவின் கணவன் இருவரும் இங்கு வேலை செய்து பின் ஒருவரையொருவர் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவர்கள்...இவர்கள் கல்யாணத்திற்கு மல்லிகா மூன்று பவுன் தங்க செயின் பரிசளிப்பாக வழங்கினாள்.

இந்த ஞாயிறும் மோகனிற்கு வேலை இருக்க அவன் செல்வத்திடம் ரகுவை ஒப்படைத்துவிட்டான்.

செல்வம் ரகுவை நடந்து பக்கத்தில் இருக்கும் சென்ட்ரல் பார்க்கிற்கு அழைத்து சென்றான்.செல்வம் ஓரிரு

நாள் உணவு உண்ணாமல் கூட வாழ்ந்துவிடுவான் ஆனால் செயது பீடி குடிக்காமல் இருக்கமாட்டான்...வீட்டின் உள் பீடி குடிப்பதை மோகன் பார்த்தால் தாறுமாறாக திட்டுவிடுவான் இருந்தாலும் செல்வம் யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் உட்கார்ந்து பீடி குடிப்பது உண்டு...ஞாயிற்றுகிழமைகளில் இப்படி ரகுவை அழைத்து வரும் சாக்கில் ஒரு பாக்கெட்டை காலி செய்திவிடுவான்...இன்றும் அதுபோல் பாக்கெட்டின் முதல் பீடியை எடுத்து வாயில் வைத்தவாறு ரகுவை முன்செல்ல விட்டுவிட்டு பின் புகைத்துக்கொண்டு வருகிறான்...

ரகு பார்க்கில் சென்று விளையாட ஆரம்பிக்க செல்வம் பார்க்கின் நோ ஸ்மோக்கிங் போர்டின் கீழே உக்கார்ந்துக்கொண்டு ரகுவை நோட்டமிட்டவாறு தன் பீடிகட்டை காலி செய்யும் வேலையை ஆரம்பிக்கிறான்.

ரகு இரண்டு மணிநேரம் தன் ஆசை தீர விளையாண்டுவிட்டு வீட்டிற்கு திரும்ப தயாராகிறான்...இருவரும் பதினொன்றுமணி வெயிலில் நடக்க ஆரம்பிக்கின்றனர்.

பீடிக்கட்டு காலியான காரணத்தினால் செல்வம் வரும்பொழுது ரகுவிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பிக்கிறான்.

"துரை உங்கப்பாரு என்ன போட்டு திட்டப்போறாரு...ஏதோ நா உங்கள புடிச்சு இவ்வளவு நேரம் விளையாட வச்ச மாதிரி...அப்பவே போவோம்னு சொன்னேன் கேட்டிங்களா இப்ப பாருங்க வெயில.."

ரகு கெக்கபுக்கவென்று சிரிக்கிறான்.

"புண்ணியத்தரிசி...வெயில்ல கஷ்டப்படாத செல்வம் அய்யாட்ட சொல்லி ஒரு சைக்கில் வாங்கி தர்ற சொல்றேன்னு சொல்லிச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி அதுக்குள்ள அந்த அம்மாவ இப்படி ஆக்கிட்டானுங்க இனி என்ன மாறியான பரதேசி எல்லாம் யாரு பாத்துப்பாங்க...உங்கப்பாரு வேலைய மட்டு வாங்குவாறு ஆனா மரத்துல காய்க்கிற ஒரு மாம்பழத்துக்கு கூட கணக்கு கேப்பாறு..எல்லா உங்கப்பா தப்புன்னு சொல்லமுடியாது அந்த மேனாமினுக்கி தான் எல்லாத்துக்கும் காரணம்...அவதான் நல்லா இருந்த மனுஷன இப்படி மாத்திட்டா..."

ரகு செல்வம் பேசுவதை உன்னிப்புடன் கவனிக்கிறான்.

"நா சொன்னேன்னு வெளிய யார்ட்டையும் சொல்லாத..நம்ம அம்மாக்கு நடந்ததுலையும் அவளுக்கு பங்கு இருக்குமோனு எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது...அவளுக்கு உங்கப்பாரு மேல ஒரு கண்ணு அவர எப்படியா வளைச்சு போட்டுறனும்னு நல்லா தலுக்கு மொழுக்குனு வேற இருக்காளா ஆதான் உங்கப்பாவும் ஈஸியா விழுந்துட்டாரு ஆம்பளைங்களுக்கு சாபமே இந்த சபலம் தான...நம்ம அம்மாவும் அவ்வளவு சுலபமா அவசரப்பட்டு விட்டுக்கொடுத்துட்டு போய்ட்டாங்க...ஏன் நாங்களா இல்லையா அவங்களுக்கு அவங்களுக்கு ஒரு பிரெச்சனைனா நாங்க வந்து நின்றுக்க மாட்டோமா..."

ரகு யோசித்துக்கொண்டு வருகிறான்...

"இதலா நா சொல்லக்கூடாது துரை ஆனா...என் மனசு கேக்கல அந்த மவராசி போட்ட உப்பை தின்னு வளர்ந்த நாய் நா...தயவுசெஞ்சு அந்த மேனாமினுக்கிய வீட்டுக்குள்ள விட்டுராதிங்க...நம்ம அம்மாவோட ஆத்மா சாந்தி அடையாது...இத்தனையும் பண்ணிட்டு நம்ம அம்மா இந்த வீட்டுல இருப்பா அவ நமக்கு கெடுதல் செய்வானு நம்பூதிரிய கூட்டிட்டு வந்தப்பவே நா இந்த வீட்டுல இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்...ஆனா எங்கம்மாவோட குழந்தை நீங்க உங்கள காப்பாத்த வேண்டிய பொறுப்பு இப்ப எங்ககிட்ட தான் இருக்கு அதான் அந்த மகராசிக்கு நாங்க செய்ற நன்றி கடன்...அதுக்குத்தான் நாக்க கடிச்சுக்கிட்டு இன்னும் இங்க இருக்கேன்..."

செல்வம் கண்ணை துடைத்தவாறே நடக்க ரகு யோசித்தவாறே அவனுடன் நடக்கிறான்.

மோகன் வீட்டில் வேலை செய்துக்கொண்டிருக்கும் வீட்டின் வெளியே கார் வரும் சத்தம் கேட்கிறது...தன் ரூமின் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறாள்.தன் அப்பா ரிச்சர்ட் காரில் இருந்து இறங்கி வருவதை பார்க்கிறான்...வேகமாக ஹாலிற்கு அவரை வரவேற்க ஓடுகிறான்.

இதற்கு முன் இவர்கள் வாரணாசி சென்றிருந்த போதும் இவர்களைத்தேடி இங்கு வீட்டிற்கு வந்து யாருமில்லாத்தால் ஏமாற்றத்தோடு திரும்பிசென்றுவிட்டாராம் சரோஜா நேற்று காலை தான் சொன்னால் இன்று மாலை ரகுவை அழைத்துக்கொண்டு அப்பாவின் வீட்டிற்கு செல்லலாம் என்று தான் மோகன் இருந்தான் அதற்குள் அவரே வந்துவிட்டார்.

"வாங்க அப்பா...உட்காருங்க.."மோகன்

ரிச்சர்ட் உக்காருகிறான்.

"ஏதா சாப்பிடுறிங்களாப்பா.."

"இல்ல வேணாம் கொஞ்சம் தண்ணி இருந்தா..குடு போதும்"

"சரோஜா..."மோகன் கூப்பிட

"சொல்லுங்கய்யா..."

"அப்பாக்கு தண்ணி கொண்டு வா...அப்பாவோட க்ளாஸ்ல"

சரோஜா கிச்சனில் இருந்து ஒரு சில்வர் க்ளாஸில் தண்ணி கொண்டுவருகிறாள்...ரிச்சர்ட் அதை குடிக்கிறான்

"வெர் இஸ் மை க்ராண்ட் சைல்ட்.."ரிச்சர்ட்

"பக்கத்துல இருக்க பார்க்குக்கு விளையாட போயிருக்கான்ப்பா...இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்..."

"ஓ..."ரிச்சர்ட் எதையோ யோசிக்கிறான்.

"ரெண்டு நாள் முன்னாடி நீங்க பாக்க வந்ததா சொன்னாங்க.. இன்னைக்கு ஈவினிங் நானே வரலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.."

"சன்...ஐ ஃபீல் ஐ ஃபெய்ல்ட் மிஸரெப்லி அஸ் எ ஃபாதர்..."

"ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க.."

"இல்ல மோகன் ஒரு லைஃப் பார்ட்னர்ங்கிறவங்க நம்மளோட லைஃப் முன்னேற்றத்துக்கு
காரணமா இருக்கணும்...நம்மளோட முன்னேற்றத்த தடுக்குறவங்களா இருக்க கூடாது...அந்த வகையில நா உனக்கு பெரிய தப்பு பண்ணிட்டேன்...மோகன்.."ரிச்சர்ட்

இருவருக்குமிடையே ஒரிரு நிமிடம் கனத்த அமைதி நிலவுகிறது.

"அடுத்து என்ன பண்லானு இருக்க...உன் பெர்சனல் லைஃப்ல..."

"அடுத்து ரகு இருக்கான் நம்ம...கம்பெனி இருக்கு அதுல என்னோட முழு.."

"மோகன்...நம்ம கம்பெனியோட ஷேர்ஸ் போன பத்து நாள்ல டிவெண்ட்டி பெர்ஸன்ட் ட்ராப் ஆயிருக்கு...தெரியுமா.."

"தெரியும்.."

"சரி...அத கூட விடு காசு போனா வரும்..ஆனா வாழ்க்கை...அடுத்து ரிலேசன்ஷிப்ல என்ன ஸ்டெப் எடுத்து வைக்கலானு முடிவு எடுத்து வச்சிருக்க..."

"இல்லப்பா எனக்கு திரும்பி இன்னொரு அதுலா வேண்டாம் எனக்கு ரகு போதும்..."

"ஏன்..."

"என்னோட ரிலேஸன்ஷிப் ரகுவ எப்படியாவது பாதிச்சிடுமோனு பயமா இருக்கு என்ன கம்பல் பண்ணாதிங்க..."

"உனக்கு உன் பையன் மேல இருக்க அன்பு எனக்கு என் பையன் மேல இருக்காதா...உனக்கு இப்ப எத்தனை வயசு ஆகுது ஜஸ்ட் தர்ட்டி வொன்..என்ன பாரு நா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன் நாற்பத்தி அஞ்சு வயசுல...உன்னால இனி வர மிச்ச வாழ்க்கைல செக்ஸ்ங்கிற ஒரு விஷயத்துல கவனம் இல்லாம சாமியார் மாறி வாழ்ந்துட முடியுமா...இந்த ஹார்ட்லியோட பரம்பரை ஏதோ ஒரு தர்ட்
க்ளாஸ் ப்ராஸ்டிட்யூட் கிட்ட போறதோ அத இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதையோ எந்த காலத்துலையும் நா அனுமதிக்க மாட்டேன் மோகன்...சரி அதைக்கூட விடு ஆனா கண்டிப்பா நம்மள மாறியான ஆளுங்க வாழ்க்கைல நம்ம வேலைல இருக்குற டிப்ரஸன் ஸ்ட்ரெஸ் எல்லாம் ஷேர் பண்ணிக்க ஒருத்தி நம்ம கூட இருக்க வேண்டியது அவசியம் டா..."

"ஆனா...."

"புரியது...எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரகுவும் முக்கியம் தான்...வர்ற போற பொன்னு அவன தன்னோட பையனா பாக்கணும்னு எதிர்பாக்குற அவன் சித்தி கொடுமைக்கு ஆளாகிட கூடாதுனு யோசிக்குற...அதெல்லாம் யோசிச்சு தான் நா ஒரு முடிவோட வந்திருக்கேன்..."

"என்ன..."

"ஜுலிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு.."

"அப்பா..."மோகன் அதிர்ச்சியுடன்