Sivavin Malare Mounama.. - 5 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 5

Hi, நான் உங்கள் சிவா..
Please, முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.காலை மணி 8.30 போல இருக்கும். இன்னைக்கு Office க்கு Second Half வர்றேன்னு முன்னாடியே inform பண்ணிட்டேன். 1 week ஆ Overstay பண்ணி project முடிச்சி, நேத்து தான் எல்லாம் நல்ல படியாக முடிந்தது. காலையிலேயே Gym ல் Workout பண்ணிவிட்டு Fresh up ஆகி Sleeveless Nike T shirt, Cargo pant போட்டுக் கொண்டு, வீட்டின் முதல் மாடியில் என் Room வெளியே Open Balcony யில் நின்று கொண்டு காஃபி குடித்துக் கொண்டு இருந்தேன். முதல் நாள் இரவிலிருந்து நல்ல மழை.‌. இப்போதுதான் மழை விட்டிருந்தது. மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது வீதியெல்லாம் கழுவி விட்டது போல பளிச் என்றிருந்தது. இன்னமும் ஆங்காங்கே உள்ள சாலையோர மரங்களின் இலைகளிலிருந்து மழை தண்ணீர் கீழே அவ்வப்போது சொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் நின்று கொண்டிருந்த கார்களின் மீது இரவு பெய்த மழை துளிகளும், மரங்களின் இலைகள் விழுந்து windshield லாம் கொஞ்சம் குப்பை யாக காணப்பட்டது. தெருவில் அவ்வப்போது ஜனங்களின் நடமாட்டம் தென்பட, குடைகளும், Raincoat வகையறாக்களையும் பார்க்க முடிந்தது. சற்று தூரத்தில் தலைசுமையாக எடுத்து வந்து காய்கறி விற்கும் மூதாட்டியின் குரல் ஏதேதோ காய்கறி பேரை ராகத்துடன்.. வரிசையாக சொல்லி விற்கும் நீண்ட சப்தம் காற்றில் கரைந்து தேய்ந்து மறைந்தது.. வெளியே வானம் இன்னும் மேகமூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சில் என்று காற்று அடித்துக்கொண்டிருக்க, சிறிது தூரத்தில் புறாக்கள் சில வட்டமிட்டு பறப்பதுமாய்.. சில.. சப்தமிட்டபடியே மாடி, ஓடுகளில் நடப்பதுமாய் இருந்தன. பார்ப்பதற்கு காலை பொழுதில் அழகாக இருந்தது. வீட்டு Balcony சுற்றி சட்டிகளில் இருந்த பூக்கள் முதல் நாள் மழைக்கு ஃப்ரஷ் ஆக பூத்துக் குலுங்கின. மாடியில் ஒரு பக்கம் மல்லிகை கொடி மேலேறி மேலே முழுவதும் படர்ந்து இருந்து, இன்னும் குளுமையான சூழ்நிலையை கொடுத்தது. பால்கனி தரையில் பூக்கள் மழையினால் சிதறி கிடந்தன. வீசும் காற்றுக்கு இலைகள் அசைந்த வண்ணம் இருந்தன. இங்கிருந்து பார்க்கும் போது கொஞ்ச தூரத்தில் பெருமாள் கோவில் கோபுரம் தெரிய.. காற்றிற்கு அவ்வப்போது அங்கே பாடப்படும் கீர்த்தனைகள் காதில் விழுந்த வண்ணமாய் இருந்தது. இந்த climate ல், இதையெல்லாம் பார்த்து கொண்டு, அனுபவித்து கொண்டே சூடான காஃபி குடிப்பது உற்சாகமாகவும், மனதுக்கு ரம்மியமாகவும் இருந்தது.

ஏனோ மலர் சித்தி ஞாபகம் வந்தது. மலரைப் பற்றி நினைத்தாலே அதுவும் இந்த சூழ்நிலையில் நினைத்தால் மனதெல்லாம் ஏதோ பூ பூத்தது போல்.. புது எனர்ஜி வந்தது போல் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. Last week அவ B day அன்னைக்கு என்னோட மனசிலிருக்கிறதை அப்படியே Open ஆ அவகிட்ட சொல்லி எவ்வளவு Convince பண்ணாலும் கடைசி வரைக்கும் மலர் ஒத்துக்கவே இல்லையே. என்ன Problem மோ அவளுக்கு.. ஒண்ணும் புரிபடவில்லை. எதை கேட்டாலும் ஏதோ ஒரு Reason, Answer.. இது தான் Problem னு தெரிஞ்சா நாம ஏதாவது தீர்வு சொல்லலாம். அதையும் சொல்ல மாட்டேங்கிறாள். இதற்கு என்ன தான் Solution னு தெரியலை. யோசிக்க யோசிக்க எனக்கு மண்டை தான் சூடேறுது.

அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும் இனியும் Compel பண்ணி என்ன Problem? னு கேட்க தோண மாட்டேங்குது. சில சமயம் மலரைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கு. அவள் சொன்ன மாதிரி தனி ஒரு ஆளாக போராடி இந்த Society ல எத்தனை Problems Face பண்றாளோ?.. உண்மையிலேயே மலரை நினைச்சு பார்த்தால் பாவமா இருக்கு. எதையும் யார்கிட்டேயும் சொல்ல முடியாத Problem யை தன் மனசில பூட்டி வச்சுகிட்டு தனக்கு தானே அவள் அவஸ்தை படற மாதிரி தோணுது.

இந்நேரம் மலர் என்ன பண்ணிகொண்டு இருப்பாள்? University க்கு கிளம்பி கொண்டு இருப்பாள். Saree லயா? இல்லை சுடிதார் ஆ? எது போட்டாலும் என் மலருக்கு எதுவும் suit ஆகும். நல்லாயிருக்கும். அப்படி ஒரு structure.. height... Colour.. slim.. சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த கன்னக்குழி சிரிப்பு.. முதன் முதலில் அந்த சிரிப்பில் தான் நான் மயங்கினேன். இப்ப அவ என் பக்கத்துல இருந்தால்? நினைக்கவே ஆசையாக இருந்தது. மலரை மட்டும் கல்யாணம் பண்ணி இருந்ததால் .. நம்ம லைஃப் எப்படி இருந்திருக்கும்? கண்டிப்பாக made for each other ஆகத்தான் இருந்திருக்கும். மலரை பற்றி நினைக்கையிலேயே என் மனதுக்கு ஒரு வித ஆனந்தத்தை கொடுத்தது. மனசெல்லாம் Pleasant ஆக இருந்தது.

பின்னால் யாரோ மாடி ஏறி வரும் சப்தம் கேட்க, திரும்பினால் வாவ்.. மலர் சித்தி தான்,

ஹாய் ரவி., Good Morning என்று சொல்லியபடி.. என்னால் நம்பவே முடியவில்லை. Light Gold yellow colour with Design ல் Chudi Top Light Grey colour leggings Bottom.. அவள் வெள்ளை நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. தூக்கி வாரிய தலைமுடியை பின்னலிட்டு, கொஞ்சம் போல் பூ வைத்து நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டுடன் அதன் கீழே சின்ன சந்தனம் கீற்று.. காலை வேளையில் மலரை அந்த மாதிரி பார்க்க அழகாக அம்சமாக இருந்தாள். மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தவன்.. பின் தெளிந்து..
ஹாய்.. சித்தி.. இப்பதான் உன்னய நினைச்சிகிட்டிருந்தேன்... நீயே வந்துட்ட.. இரு ஒரு நிமிஷம்.. நான் என் கையை கிள்ளி பார்த்துக்கிறேன். இது கனவா இல்லை நிஜமானு..

மலர் அழகாக கன்னம் குழி விழ சிரித்து.. டேய்.. நான் தான் நிஜம்மாவே.. ஆனா நீ Sweet ஆ அப்படியே ஆளை மயக்குற மாதிரியே பேசற பாரு...

யாரு.. நீ மயங்கிடுவ என் பேச்சுல.. நான் தான் உன் மேல எப்பவோ மயங்கி போய் உன் பின்னாடியே..‌ ஆனா நீ..

உஷ்.. டேய் போதும்.. மெதுவா பேசு யாருக்காவது கேட்டுடப்போகுது..

ஓகே.. ஓகே.. காபி குடிக்கிறியா? எடுத்துகிட்டு வரச் சொல்றேன். மலர், இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க.. Awesome.. Any thing spl.?

Nothing spl. காஃபி வேணாம், இப்ப தான் அக்கா கொடுத்தாங்க.. கீழே உன் புராணம் தான் இவ்வளவு நேரம், சரி உங்க அம்மா சொல்றதை காது கொடுத்து தான் கேளேன்.

ப்ச்சு... விடு சித்தி.. அவங்கவங்களுக்கு அவங்க நினைக்கிறதுதான் நடக்கனும்.. அடுத்தவங்களை பத்தி கவலையே இல்லை. ச்சே..

ரவி என்னாச்சு? ஏன் mood out ஆகுற?
அங்க உள்ளே அக்கா என்னமோ உன்னைபத்தி புலம்பி தள்றாங்க. அவங்க சொல்றதை கேட்கவே மாட்டேங்கிறியாம்? ஏண்டா?

என்ன சித்தி? அம்மாவுக்கு என்ன வேணுமாம்? நேத்துலேயிருந்து எனக்கு ஒரே குடைச்சல்.

அக்காவிற்கு உன் Marriage பத்தி தான் எல்லாம் கவலை. உன் கல்யாணத்தை பத்தி பேசுனாலே நீ பிடி கொடுத்தே பேச மாட்டேங்கிறியாம்?
எத்தனை நல்ல சம்பந்தம் வந்தாலும் சரி, பொண்ணுங்க ஃபோட்டோ காண்பிச்சாலும் சரி எதுவும் கண்டுக்க மாட்டேங்கிறியாம்? இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு பிடிவாதம் பிடிக்கிறியாம்.

என்ன சித்தி.. பழைய புராணம் தானே..
இது ஒண்ணும் புதுசு கிடையாதுல்ல.

Last week கூட உனக்கு பொண்ணு பார்க்க எல்லாம் arrange பண்ணிட்டு.. last minute ல உனக்கு தெரிஞ்சு போயி.. நீ வீட்டுக்கே வராம abscond ஆயிட்டியாம். அதனால cancel ஆயிட்டாம். என்னடா இதெல்லாம்?
அவங்க கிட்ட எதுவுமே சொல்ல மாட்டேங்கிறியாம். அக்கா என்னய உன் கிட்ட பேசச்சொல்லி, Convince பண்ண சொன்னாங்க... உன் மனசில என்ன இருக்கு? னு கேட்க சொல்லி எ..ன்..ன..ய உன்..கி..ட்..ட..

நான் நிமிர்ந்து சித்தியின் முகத்தை Serious ஆக பார்க்க.. சித்தியின் பேச்சு தடைபட்டது.

சித்தியின் கண்களை பார்த்த படியே, சித்தி, என் மனசில என்ன இருக்கிறது னு உனக்கு நல்லா தெரியும். நான் உன்னய லவ் பண்றேன்.. உன்னதான் Marriage பண்ணிக்குவேன்.. என்கிறதுல தீர்மானமா இருக்கேன்னு கூட உனக்கு தெரியும்.
ஆனா, என் மனசில என்ன இருக்கு ங்கிறதை பத்தி இங்கே யாருக்கும் கவலை இல்லை. ஏன் உனக்கு கூட..

ஐயோ ரவி, இதெல்லாம் ஒத்து வராது நடக்கவும் நடக்காது. சொன்னா கேளு.. ப்ளீஸ்.. அக்கா சொல்ற மாதிரி ஒரு நல்ல பொண்ணா உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ..

என் மனசுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பொண்ணு நீ தான்..

உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது ரவி..

சித்தி என்னோட மனசும் மாறப்போவதில்லை. உன்னோட பிடிவாதமும் மாறப்போவதில்லை.. விடு.
தயவுசெய்து என்னய என் போக்குல விட்டுடுங்க.
இன்னும் 6 மாசத்தில எனக்கு Deputation ல Norway போக சொல்லி Company Offer பண்ணியிருக்காங்க. ஆனால் அங்க permanent ஆ Settle ஆக Chances நிறைய இருக்கு. So Prepare ஆகிகிட்டிருக்கேன். ஆனா, அங்க போயிட்டா நான் வெள்ளைக்காரி எவளையாவது கல்யாணம் பண்ணிப்பேன் னு மட்டும் யாரும் நினைக்காதிங்க.. என் மனசுல உன்னைத்தவிர வேற யாருக்கும் இடமில்லை. ஆனா என்ன..
நான் அங்க போயிட்டா இங்கே யாருக்கும் எந்த Problems ம் இருக்காது. முக்கியமா உனக்கு..

நீ இங்க இருந்தா எனக்கு Problem னு நான் சொன்னனா?

அப்படி இல்லை.. நான் அங்க போயிட்டன்னா நாம Meet பண்றது.. என்னோட இந்த லவ், Marriage Matter உன் கிட்ட Discussion, proposals, compulsions.. இந்த மாதிரி எந்த தலைவலியும் இருக்காது. யார் தொந்தரவும் உனக்கு இருக்காது. So, நீ Happy யா இருக்கலாம்.

சித்தியிடம் இருந்து சின்ன விம்மல் வர, நிமிர்ந்து பார்த்தால் அவள் கண்கள் கலங்கியிருக்க, வலது கையால் தன் வாயை மறைத்த படி மறுபக்கம் எங்கோ பார்த்து கலங்குவது தெரிந்தது.

I am Sorry சித்தி.. உன் மனசு கஷ்ட்டபடனும்னு இதை சொல்லலை. யதார்த்தம் இதான். அதை முதல்ல நீ புரிஞ்சுக்கோ. இன்னொன்னு இனிமேல் நீ என்கிட்ட வந்து வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க, அம்மா சொன்னாங்க, ஆட்டுக்குட்டி சொன்னாங்கனு, அப்படி இப்படி னு இங்கே வந்து சொன்ன... அதுவும் உன் கிட்டேயிருந்து இந்த மாதிரி வார்த்தையை கேட்கும் போது எனக்கு.. எனக்கு .. என்ன சொல்றதுன்னே தெரியலை. உடம்பெல்லாம் கீழேயிருந்து மேலே வரைக்கும் அப்படியே சள.. சள.. னு எரியுது.. என்று சித்தி யை பார்க்க.. அவள் கண்கள் விரிய, முகம் மலர்ந்து, கன்னக்குழி விழ light ஆக சிரித்து.. அதை நான் பார்த்து விடக்கூடாதென்று, கையால் மறைத்து கொண்டு.. மறுபக்கம் திரும்பி சிரிக்க..

அதைப்பார்க்க எனக்கும் சந்தோஷமாக இருந்தது.
இருந்தாலும் நான், சிரி.. நல்லா சிரி.. ஏன்னா என் பொழப்பு அப்படித்தான் சிரிப்பா இருக்கு.. என்றேன் பொய்க்கோபத்துடன்..

மறுபடியும் சிரித்து கொண்டே., இல்லடா.. அப்படி இல்லை.. உங்க அம்மா பாவம்.. அவங்களை நினைச்சு பாரு.. இந்த வயசில அவங்களுக்கு தேவையா?

அதேதான் நானும் கேட்கிறேன். இந்த வயசில அவங்களுக்கு இதெல்லாம் தேவையா? சித்தி ப்ளீஸ் .. நீ மட்டும் என் லவ்வை Accept பண்ணி என்னய Marriage பண்ணிக்கிறேன்னு சொல்லு.. நான் இப்பவே அம்மாவை Convince பண்ணி ஒத்துக்க வைக்கிறேன். கல்யாணியும் எனக்கு Support ஆ தான் பேசுவா. அவளுக்கும் உன்னய ரொம்ப பிடிக்கும்.

ரவி நீ அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில இங்கதான் வருவனு எனக்கு தெரியும். நான் உனக்கு எந்த விதத்திலும் suit ஆக மாட்டேன். அத முதல்ல நீ புரிஞ்சுக்கோ. இதுல நிறைய Practical Problems இருக்கு. உன்ன விட நான் 2 வயசு பெரியவ.

ஐயோ சித்தி இதெல்லாம் ஒரு Problem யே.. இல்ல..

இரு..இரு.. என்னய சொல்ல விடு. என்னதான் நான் உங்க அம்மா வுக்கு கூடபிறக்கலைனா கூட ஒரு வகையில முறையில நான் அவங்களுக்கு தங்கச்சி முறை. அதைதான் இந்த உலகம் பேசும்.

சித்தி நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் ஏதாவது Criticise பண்ணிகிட்டுதான் இருக்கும். அதையெல்லாம் கண்டுக்காம அதை தாண்டி நாம போகனும்.

நான் சித்தியின் மென்மையான இரு கைகளையும் பிடித்து கொண்டு.. அவள் அழகான பெரிய மையிட்ட கண்களை பார்த்த படியே..
சித்தி.. நான் உன்னை மனசார லவ் பண்றேன். நீ தான் என் லைஃப். என் லவ் ஃப்யூர் லவ். உன்ன நான் அப்படி லவ் பண்றேன். வேற யார்கிட்டேயும் நான் இந்த மாதிரி Propose பண்ணதில்லை. உன்னை அன்னைக்கு Function ல பார்த்த நாள்ளேயிருந்து சொல்றதுக்கு என்ன.. உன் மேல பைத்தியமா இருக்கேன். உன்னை அப்படி Deep ஆ லவ் பண்றேன். அன்னையிலிருந்து நான் நானாகவே இல்லை.

நான் சொல்ல சொல்ல.. மலரின் அழகான பெரிய கண்கள் இன்னும் மலர்ந்து.. விரிந்து சிறு புன்னகை யுடன் ஆசையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

உன்ன Marriage பண்ணிகிட்டு உன் கூட வாழனும்னு ஆசைப்படறேன். உன்ன சந்தோஷமா வச்சிக்கனும்.. உன் கூட சேர்ந்து நானும் சந்தோஷமா இருக்கனும் னு ஆசைப்படறேன். நீ என் லைஃப் Full ஆ என் கூடவே Travel பண்ணனும்னு நான் ரொம்ப ஆசைப்படறேன்.

இல்ல என்னய பிடிக்கலை.. லவ் பண்ண முடியாது.. அந்த மாதிரி எண்ணம் உனக்கு இல்லை.. அப்படினா கூட... Open ஆ என் கிட்ட சொல்லிடு. உன்னய இனி நான் Compel பண்ணலை. இனி உன் மூஞ்சியிலே நான் முழிக்கலை. உன்னய தொந்தரவும் பண்ண மாட்டேன்.

நான் சொல்ல சொல்ல.. சித்தியின் விரிந்த கண்கள் சிவந்தன.. கண்களில் கண்ணீர் தழும்பியிருக்க.. உதடு துடிக்க.. கூரான நாசி சிவக்க.. என் கைகளை இறுக்கி பிடித்து பின் தள்ளி விட்டு, என் கண்களை பார்த்து..

போடா.., இதுதானா நீ என்னை புரிஞ்சிகிட்டது. உன்னய போயி யாராவது பிடிக்கலை வேணாம்னு Reject பண்ணுவாங்களா?. அவ்வளவு Handsome நீ. என்னோட ஃப்ரண்ட்ஸ், Colleague's நிறைய பேர் இத சொல்லியிருக்காங்க. ஏன் கவிதா கூட சொல்லியிருக்கா.. இங்க பிடிக்கிறதுங்கிறது வேற.. லவ் பண்றது Marriage ங்கிறது வேற.. உன்னய எனக்கு ரொம்ப பிடிக்கும். But நீ என்னய போய் லவ் பண்ற.. என்னோட நிலைமை உனக்கு தெரியாது. நான் உனக்கு suit ஆகவே மாட்டேன். Please புரிஞ்சுக்கோ.. என்று கலங்கிய கண்களுடன், அழுகையை கண்ட்ரோல் பண்ண தன் கீழுதட்டை கடித்து கொண்டே என்னை பார்க்க, எனக்கே சங்கடமாகிப் போய்..

Sorry மலர், உன்னய Hurt பண்ணியிருந்தால், Really I am Sorry என்று, அவள் கைகளை ஆதரவாக பிடிக்க போக, போடா.. என்று என் கைகளை தட்டி விட்டு, பின் என் மார்பின் மேல் சாய்ந்து அவள் என்னை அணைத்து கொண்டு விசும்ப.. அவளை பூப்போல அணைத்து கொண்டே என் ஒரு கையால் அவள் கூந்தலை காதருகில் கோதி விட்டு, அப்படியே அவள் தலையில் அழுத்தி முத்தமிட்டு அவள் காதில் மறுபடியும் Sorry இட்லி மாவு என்றேன். மலர் என் மார்பில் இன்னும் சாய்ந்து கொண்டு, கொஞ்சம் சிரித்தபடியே என் நெஞ்சில் தன் கைகளால் விளையாட்டாக குத்தி, பின் என்னை ஏறெடுத்து பார்த்து, ம்ஹூம் என்று தன் வாயை இருபக்கமும் அசைத்து பழிப்பு காட்டி, பின் என் மேல் நன்கு சாய்ந்து என்னை இறுக்கி அணைத்து கொண்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து நான் மெதுவாக.. சித்தி உனக்கு இங்கே இருக்க பிடிக்கலை.. யாராவது ஏதாவது சொல்லுவாங்க.. அப்படி னு நீ நினைச்சினா.. நாம Marriage பண்ணிகிட்டு Foreign ல போய் Settle ஆயிடலாம். என்ன சொல்ற? என் லைஃப் ல நீ இல்லாம என்னால சந்தோஷமா வாழ முடியாது. அதேபோல வேற யாருக்கும் என் மனசில, லைஃப் ல இடமில்லை. நீதான் எனக்கு எல்லாமே. சித்தி என்னை புரிஞ்சுக்கோ.. என்னோட காதலை ஏத்துக்கோ ப்ளீஸ்..

என் மார்பிலிருந்து தலையை தூக்கி என்னைப்பார்த்து.. இல்ல ரவி, Foreign.. இதெல்லாம் கேட்க நல்லாயிருக்கும். ஆனா... என்னோட கசப்பான past.. இந்த சமாஜம்.. உனக்கப்பறம் உன் sister கல்யாணி, அவ லைஃப்.. இப்படி நிறைய இருக்கு.

சித்தி எப்ப பாரு..‌ கசப்பான past அது இது னு ஏதாவது நொண்டி சாக்கு சொல்லிட்டு இருக்காதே.. அதப்பத்தி Details கேட்டா எதுவும் சொல்ல மாட்ட.. நான் இப்ப கேட்கிறேன் சொல்லு.. என்ன அது.. விளக்கமா சொல்லு.. என்னால ஏதாவது பண்ண முடியுமானு பார்க்கிறேன்.

நான் பேச பேச.. மலர் கண்களில் கண்ணீர் தழும்பியிருக்க..
கண்களை துடைத்த படியே, ரவி, ப்ளீஸ் இந்த discussion யை இதை, நாம இப்போதைக்கு இப்படியே விட்டுடுவோம். நேரம் வரும்போது நானே உன் கிட்ட எல்லாம் சொல்றேன்.
சரி, இப்ப அக்கா உன் கல்யாண விஷயமா கேட்டா நான் என்ன சொல்றது?

ம்.. ஒரு முழக்கயிறா? இல்ல விஷ bottle ஆ னு தெரியாம குழம்பிகிட்டிருக்கேன்னு போய் சொல்லு..

ஓரடி என்னை விலகி, அப்படியே என்னை பார்த்து முறைத்தவள்.. பின் களுக் கென்று என்னை பார்த்து சிரித்து.. ஓவரா சீன் போடவேணாம். ஒழுங்கா மூடிகிட்டு இரு என்று அழகாக சிரிக்க..
சிரிக்கும் போது அவளின் அழகான ரோஸ் கன்னத்தில் குழி விழ... என்னை அப்படியே மயக்கியது.

ஐயோ.. மலர் கொல்லுரியே.. என்று சொல்லி.. என் கைகளால் காற்றில் அவள் உதட்டை பிடிப்பது போல பிடித்து அப்படியே என் பக்கம் இழுப்பது போல் action பண்ணி, என் உதட்டில் முத்தமிட்டுக்கொள்ள...

என் செய்கையை பார்த்து வியந்து, பின்னால் சாய்வது போல சாய்ந்து.. அவள் கண்கள் விரித்து, இன்னும் அழகாக சிரித்து தன் உதடுகளை சுழித்து பழிப்பு காட்டிக் கொண்டு போக..

அப்படியே என் வலக்கையை கையை அவள் பக்கம் நீட்டி பின் மெதுவாக என் நெஞ்சில் குத்திக் கொள்வது போல செய்ய.. என்னை பார்த்து சிரித்துக் கொண்டே ஆள் காட்டி விரலால் ஜாக்கிரதை என்பது போல சைகை செய்து கொண்டே சென்றாள். மேகக்கூட்டத்தில் மறைந்த நிலவு போல என் கண்பார்வை யிலிருந்து மறைந்து போனாள்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன. Please mail to..
siva69.com@gmail.co

தொடரும்..