Oru Devathai Paarkkum Neram Ithu - 35 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 35

Featured Books
  • Wheshat he Wheshat - 2

         وحشت ہی وحشت قسط نمبر (2)   تایا ابو جو کبھی اس کے لیے...

  • Wheshat he Wheshat - 1

    Wheshat he Wheshat - Ek Inteqami Safar
    ترکی کی ٹھٹھورتی ہوئی...

  • مرد بننے کا تاوان

    ناول: بے گناہ مجرمباب اول: ایک ادھورا وجودفیصل ایک ایسے گھر...

  • مرد بننے کا تاوان

    ناول: بے گناہ مجرمباب اول: ایک ادھورا وجودرضوان ایک ایسے گھر...

  • صبح سویرے

    رجحان ہم ہمت کے ساتھ زندگی کا سفر طے کر رہے ہیں۔ کندھے سے کن...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 35

சொல்லுங்க ரேவந்த் ம்ம் அனன்யா உங்ககிட்ட எல்லாமே சொல்லி இருப்பா .. நான் தப்பு செய்து விட்டதா நினைக்கலை .. என் மனசுல இருக்குறத அவ கிட்ட சொன்னேன் அவ்ளோதான். அவளும் பெருசா react பண்ணலை. அவ மனசு மாறுனா நீங்க அதை தடுக்க கூடாது இது என்னோட request என்றான். ரேவந்த் உங்க நம்பிக்கையை நினைச்சா ஆச்சரியமாய் இருக்குது. அவளோட விருப்பம் அதுன்னா நான் தடையா இருக்க மாட்டேன். thank you so much விஷால்.விஷால் சுபாவிடம் ரேவந்த் பற்றி சொன்னான். இதெல்லாம் என்ன விளையாட்டு விஷால் ? நீயும் அவனை கண்டிக்காம விட்டுருக்க என்றாள். அனன்யாகிட்ட நான் பேசுறேன் என்ன துணிச்சல் இந்த ரேவந்துக்கு.. விடு சுபா என்னவோ எனக்கு உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு என்றான் விஷால்.

அனன்யா எப்போதும் போல ரேவந்துடன் பழகி வந்தாள். ரேவந்த் இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தான்.அனன்யாவுக்காக வீடு ஒன்றை வாங்க திட்டமிட்டான் விஷால். அனன்யாவிடம் சொன்னான் . பெங்களூர் ல வாங்கலாம் விஷால் என்றாள்.உனக்கு பிடிச்ச மாடல் வீடுகளை அனுப்பு அனன்யா நானும் தீபாவும்,சுபாவும் போய் பார்க்கிறோம் என்றான். சரி விஷால். தீபாவுக்கும், சுபாவுக்கும் இதில் மிகுந்த சந்தோஷம். சுபா உடனே வர முடியாது தீபாவை அனுப்பி வைக்கிறேன் ரெண்டு நாளில் நான் வருகிறேன் என்றாள். தீபா உற்சாகமாக சென்னை கிளம்பினாள். அங்கிருந்து காரில் பெங்களூர் போவதாக ஏற்பாடு .விஷால் எல்லா வித கனவுகளை கொண்ட வீட்டை தேடும் பணியில் இறங்க தயார் ஆனான். தீபா இவனை கட்டிக்கொண்டாள். விஷால் வீடு எப்படி வேணும்னு அனன்யா சொன்னாளா.. சுற்றி கார்டன் வைத்து வேணும்னு சொன்னா. அப்புறம் பீச் நடந்து போற தூரத்துல இருக்கணும்னு சொன்னா . வாவ் என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லி இருக்காளே என்றாள் தீபா.


தீபாவும் இவனும் பெங்களூரை சுற்றி வந்தனர். நிறைய building promoters போய் பார்த்தனர். மதியம் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டனர். தீபா தினமும் நம்ம வீட்டுலே இருந்து பீச்சுக்கு போகணும் விஷால் உன்னை கட்டிகொண்டு நீச்சல் அடிக்கணும் என்றாள். ம்ம் விஷால் நாம நாலு பேரும் சந்தோஷமா பீச் ஹவுஸ் ல இருக்கணும் விஷால் நடக்குமா ? நிச்சயம் நடக்கும் என்றான். தனி வீடு வேணுமா இல்லை apartment வேணுமா என்ற கேள்விக்கு அனன்யா தனி வீடுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள் அதோடு நீச்சல் குளமும் இருக்க வேண்டும் என சொன்னாள் .பட்ஜெட் கொஞ்சம் அதிகமாய் போனது. அனன்யா சந்தோஷம் தானே முக்கியம். இரவு அறை எடுத்து தங்கினார்கள். விஷாலும் தீபாவும் தனியாக இருப்பது இது முதல் முறை என்பதால் அவள் அதிகம் வெட்கப்பட்டாள் .தீபா நீ எனக்காக வெயிட் பண்ணுறத நினைத்தாலே கஷ்டமா இருக்கு என்றான். இதில் ஒரு கஷ்டமும் இல்லை. நீ என்னை நினைக்கிறாய் என்பதே எனக்கு சந்தோஷம் என்றாள் தீபா. அவளை அணைத்து முத்தமிட்டான்.

இரண்டு நாளில் சுபாவும் பெங்களூர் வந்துவிட்டாள்.அவளுக்கு டான்ஸ் கிளாஸ் வேலையால் உடனே வரமுடியவில்லை. சில முக்கியமான லேக் களையும் சுற்றி பார்த்தனர். சுபா டான்ஸ் கிளாஸ் நடத்துற மாதிரி arrangement உள்ள வீடாய் இருக்க வேண்டும் என்றாள். சரி சுபா. சுபாவும், தீபாவும் இதுவரை பார்த்த வீடுகளின் போட்டோக்களை அனன்யாவுக்கு அனுப்பி வைத்தனர்.நாம ரொம்ப தூரம் வந்து விட்டோம் விஷால் என்றாள் சுபா.அனன்யாவிடம் பேசினான் வீடெல்லாம் பிடிச்சிருக்கா எந்த மாடல்னு செலக்ட் பண்ணி விட்டாயா என்றான். வீடு பிடிச்சிருக்கு ஆனா பட்ஜெட் ரொம்ப அதிகமா இருக்கு என்றாள். முதல்லே செலக்ட் பண்ணு அனன்யா மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்றான் விஷால். சரி விஷால். தீபாவிடம் மாடி எப்படி அமையவேண்டும் என சுபா சொல்லி கொண்டிருந்தாள்.

சுபா, தீபா இருவரையும் கட்டிகொண்டு படுத்திருந்தான் விஷால். விஷால் என்ன சுபா ?அப்பா ரொம்ப அவசரபடுத்துறாரு நீ வந்து அடுத்த வாரம் அவரை பார்க்குறியா என்றாள். சரி சுபா. நீ அதை பத்தி கவலைபடாதே நாளைக்கு அனன்யா கிட்ட பேசுவோம். மறுநாள் அனன்யாவிடம் பேசினார்கள்.சுபாவோடு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி கொள் விஷால் அப்புறம் நான் வந்ததும் ரெண்டு கல்யாணமும் ஒரே மேடையில் நடத்தலாம் என்றாள். சுபா அனன்யா இல்லாம எப்படி என்றாள். நான் எங்கிருந்தாலும் உங்களையெல்லாம் நினைக்காம இருக்க மாட்டேன். நீ துணிந்து கல்யாணம் பண்ணிகொள் என்றாள் அனன்யா.ஒரு வீட்டை செலக்ட் செய்தார்கள். அட்வான்ஸ் குடுத்து வைத்தார்கள். மிச்சமுள்ள சில வேலைகள் முடிந்ததும் பேலன்ஸ் தருவதாக சொன்னான் விஷால். விஷால் அலுவலகத்தில் பெங்களூருக்கு ட்ரான்ஸ்பர் கேட்டு இருந்தான்.தீபாவும், சுபாவும் ஊருக்கு போனார்கள்.

வீடு வேலை முடிய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என சொல்லியிருந்தார்கள்.அதற்குள் ட்ரான்ஸ்பர் கிடைத்து விட்டால் நன்றாக இருக்குமென நினைத்தான் விஷால். சுபா அப்பாவை பார்க்க எல்லா விதத்திலும் தயார் ஆனான் விஷால். சுபாவோடு ரிஜிஸ்டர் மேரேஜ் என்பதில் அவனுக்கு உடன்பாடில்லை ஊரறிய கல்யாணம் செய்ய வேண்டும் என்பதே சுபாவின் விருப்பமாகவும் இருந்தது . சுபாவின் அப்பா இவனை வரவேற்றார். கல்யாண ரிசப்ஷன் வைக்க வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. அவருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் என்பது பிடிக்கவில்லை ஆனால் தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கல்யாணம் முடிந்ததும் பெங்களூர் போய் இருக்க வேண்டும் என்பது சுபாவின் விருப்பம். டான்ஸ் ஸ்கூல் இருப்பதால் இப்போதைக்கு சொந்த ஊரிலேயே இருக்கட்டும் என்றான் விஷால்.இடையில் வந்து பார்த்து போவதாக சொன்னான் விஷால்.

ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள் சுபாவும், விஷாலும். சுபா அப்பா தம்பி நான் பார்த்துக்கிறேன் மத்த எல்லா கல்யாண வேலையும் என்றார்.ஒரு மாதம் கழித்து கல்யாணம் என சொன்னார். சுபாவோடு மொட்டை மாடியில் படுத்திருந்தான். சுபா உனக்கு எல்லாம் ஓகே தானே . ம்ம் எப்படா உன் கூட சேர்ந்து வாழ போறேன்னு இருக்கு. டான்ஸ் ஸ்கூல் பெங்களூர் மாத்தனும் அதுக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணனும் . நம்ம கூட தீபாவும் வந்து விடட்டும் என்றாள் சுபா. கண்டிப்பா . அனன்யாவிடம் கல்யாண தேதி உறுதியானதை சொன்னான் விஷால். ரொம்ப ஹாப்பி யா இருக்கு விஷால். சுபா உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்றாள். அனன்யா உன் படிப்பெல்லாம் எப்படி போகுது ? நல்லா போகுது என்றாள்.

நம்ம கல்யாணம் முடியும் வரை தீபா டான்ஸ் ஸ்கூல் கொஞ்ச நாள் பார்த்துக்கொள்ளட்டும் என்று யோசனை சொன்னான் விஷால்.
சுபா honeymoon கனவுகளில் மூழ்கினாள் .விஷால் சுபாவுடன் இருந்த ஆரம்ப நாட்களை நினைத்து கொண்டான். அவள் இல்லாவிட்டால் தான் அப்போதே உடைந்து போய் இருக்க வாய்ப்புகள் அதிகம் என நினைத்தான். கல்யாணத்துக்கு தேவையான ஷாப்பிங் தீபாவும், சுபாவும் தொடங்கி விட்டார்கள். சுபா அப்பா உற்சாகமாக இருந்தார். விஷாலின் அப்பாவும், அம்மாவும் கல்யாண வேலைகளில் ஒத்துழைப்பு தந்தனர். சுபா அப்பா கல்யாண ரிசப்ஷன் மியூசிக் party ஏற்பாடு செய்திருந்தார்.விஷால் கல்யாணத்துக்கு பிறகு சுபாவை எக்காரணம் கொண்டும் பிரிய கூடாதென நினைத்தான்.விஷாலும் சுபாவும் கோவிலுக்கு போய் கல்யாணம் நல்லபடியாய் நடக்க வேண்டி கொண்டார்கள்.

விஷால் கல்யாணத்துக்கு நெருங்கிய நண்பர்களை அழைத்திருந்தான். சுபாவும் அவளுக்கு தெரிந்தவர்களை invite பண்ணுவதில் பிஸியாக இருந்தாள். ஏதோ ஒரு சலனம் அவனை அனன்யாவை நினைத்து கவலை பட செய்தது . ஆனால் அனன்யா தெளிவாக இருந்தாள். கல்யாணம் ஒரு நிகழ்வுதான். நான் உன் மேல வைத்து இருக்கிற காதல் அதை விட பெருசு என்றாள். நாட்கள் நெருங்க நெருங்க லேசான பதட்டம் உண்டாயிற்று . காதலிக்கும் போது இல்லாத பதட்டம் இப்போது புதிதாக அவனிடத்தில் உண்டாயிற்று. தீபா இதெல்லாம் ஜஸ்ட் கல்யாண டென்ஷன் எல்லாருக்கும் இருக்கும் என்றாள். சுபா 15 நாட்கள் முன்னதாகவே வர சொல்லிவிட்டாள். இனி குடும்பமாக இருக்க போகிறோம் என்பதே சுபாவுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

விஷாலும் , சுபாவும் ரிஜிஸ்டர் ஆபீஸில் மாலை மாற்றிக்கொண்டார்கள். கோவிலில் வைத்து மேளங்கள் முழங்க சுபாவுக்கு தாலி கட்டினான் விஷால். சுபாவின் அப்பா கண் கலங்கினார்.அனன்யா வீடியோ காலில் வந்து வாழ்த்தினாள். தீபா விழா மேடையை நடன மேடையாக்கினாள். அன்று மாலையே ரிசப்ஷன் நடந்தது . இருவரும் கைகளை கோர்த்து கொண்டனர்.தாங்க்ஸ் விஷால் என்றாள் கண்ணீர் மல்க. சுபா எல்லாரும் பார்க்கிறாங்க பாரு, கண்ணை துடைத்து விட்டான் விஷால். இனிமே ஒரு பிரச்சனையும் இல்லை . ரிசப்ஷன் சிறப்பாக நடைபெற்றது.தீபா ஃபர்ஸ்ட் நைட் நடத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளை கவனித்தாள் .அனன்யா சுபாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள். என்ன சொல்லுறா என்றான். twins வேணுமாம் அதுவும் பையன் தான் வேணுமாம். விஷால் சிரித்தான்.

புது தாலி மின்ன சுபா பால் எடுத்து கொண்டு முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய முகம் மகிழ்ச்சியில் பளபளத்தது. அவளுடைய மனம் ஒரு புறம் அனன்யா இல்லாத ஏக்கத்தில் இருந்தாலும் மறுபுறம் விஷாலுக்காக ஏங்கியது .இனி என்றைக்கும் சொந்தமாக விஷால் அருகில் இருப்பான். சுபா என்ன வெக்கம் எல்லாம் படுற என்றான் விஷால். இந்த இரவு நீண்டு கொண்டே போக வேண்டுமென சுபா நினைத்தாள். விஷால் ஏதோ பேசி கொண்டிருந்தான். அவள் மென்மையாக அவனை அணைத்தாள் . சுபா நீ இன்னும் அழகாகி விட்டாய் என்றான். அவள் உதட்டில் முத்தமிட்டான். விஷால் அவள் அன்பில் மயங்கினான் . இப்போது அவள் அன்பின் அழகில் அவளுள் கலந்தான்.இனி பிரிவுக்கு இடமில்லை. நெருங்கி அவளுடைய உடைகளை களைந்தான்.

ஒரு வாரம் கழித்து கேரளாவுக்கு ஹனிமூன் சென்றார்கள். மூணாறு, அதிரபள்ளி falls , ஆலபுழா, கொச்சின்,திருவனந்தபுரம் போன்ற இடங்களை சுற்றினார்கள். சுபா காதல் கணவனோடு இயற்கையை கண்டு களித்தாள். அனன்யா இடையில் ஃபோன் பண்ணினாள் அவளுக்கு சுபா அவ்வப்போது எடுத்த போட்டோக்களை அனுப்பி கொண்டிருந்தாள்.என்ஜாய் பண்ணுங்க என்று அனன்யா சொன்னாள். சுபாவோடு திருமணம் ஆகுமென்று திட்டம் எல்லாம் வைத்திருக்க வில்லை. கடவுள் விருப்பபடியே சுபாவுடன் கல்யாணம் நடந்தாக நினைத்தான்.சுபாவை சென்னைக்கு அழைத்து போனான். வீட்டை சுத்தம் செய்தார்கள். விளக்கேற்றி வைத்தாள் சுபா. இன்னும் மூணு மாதத்தில் பெங்களூர் வீட்டுக்கு போகலாம் என சொல்லி இருந்தான்.

விஷாலும், சுபாவும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர் . சுபா சமைத்து கொண்டிருந்தாள். எதுக்கு சுபா சமைக்கிற இன்னைக்கு வெளியே எங்காவது போகலாம் என்றான் விஷால் . இனி எங்கேயும் போகக்கூடாது எல்லாமே இந்த வீட்டில்தான் என்றாள். அவளை தூக்கி சுற்றினான். ராட்டினம் போல அவன் மனம் மிதந்தது. சுபா அவனை நன்கு கவனித்து கொண்டாள். அனன்யா சிறிய dancing ஜோடி சிலை ஒன்றை அனுப்பி இருந்தாள். விஷால் லீவு முடிந்து ஆபீஸ் போக தொடங்கினான். சுபா தீபாவிடம் விஷாலுடனான காதல் அனுபவத்தை சொல்லி கொண்டிருந்தாள்.விஷால் அவளுக்கு மல்லிகையும், ரோஸ் பூவும் வாங்கி வந்திருந்தான். நான் வேணா தீபாவை வர சொல்லட்டுமா வேணாம் விஷால் இனி நான் எல்லவற்றையும் சமாளிப்பேன் தனியா என்றாள். ம்ம் உன்னையும் நெஞ்சில் சுமப்பேன் என்றாள்.சுபா தினசரி வேலைகளில் ஈடுபட்டு வந்தாள். விஷாலுக்கு பெங்களூர் ட்ரான்ஸ்பர் கிடைத்து விட்டது. அவனும் சுபாவும் அதை கொண்டாட தயார் ஆனார்கள்.அனன்யாவும் ,தீபாவும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.