Nizhal Tharum Vasantham - 23 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 23

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 23

பிரேம் தீபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நான் பேசினால் ரமேஷ் கேட்பாரா என்றாள். அதெல்லாம் கேட்பான் நீ பேசு. எனக்கு டைம் ஆச்சு நான் ஆபீஸ் கிளம்புறேன் என்றான். தீபாவுக்கு இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. பூஜாவுக்கும், ரமேஷுக்கும் என்ன கருத்து வேறுபாடு என்றும் தெரியவில்லை. சரி பேசித்தான் பார்ப்போமே என்று ரமேஷுக்கு ஃபோன் செய்தாள். அது அவன் பிஸி ஆக இருக்கும் நேரம் என்பதால் எடுக்கவில்லை. மதியம் 2 மணி போல அவனே ஃபோன் செய்தான். என்ன அண்ணி என்னையெல்லாம் மறந்து விட்டீர்கள் போல என்றான். அதெல்லாம் இல்லை நீதான் பிள்ளையை பார்க்க கூட வரவில்லை என்றாள். சொல்லுங்க அண்ணி என்ன விஷயம். அப்பா ஃபோன் பண்ணியிருந்தார் ஓ குழந்தை விஷயமாவா எனக்கு இப்போ குழந்தை வேண்டாம் அண்ணி . பூஜாவோ சின்ன பொண்ணு அவ மனசுல குழந்தை ஆசை வளர்த்துவிட்டு இப்படி பண்ணினா அவ உடம்பும், மனசும் தாங்காது என்றாள்.நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் நான் மறுபடி அவ கிட்ட பேசிபார்க்கிறேன் என்றான். இவளுக்கு நிம்மதியாய் இருந்தது .

குமரன் சேட்டைகள் பண்ண ஆரம்பித்து விட்டான். அம்மாவை கண்டதும் சிரிக்க தொடங்குவான். பிரேம் மாலை 4 மணி போல போன் பண்ணி என்ன ரமேஷிடம் பேசினாயா என்ன சொன்னான். அவன் யோசித்து சொல்வதாக சொன்னான். நல்ல வேலை செய்தாய்.உனக்கு என்ன வாங்கி வரட்டும் ? எனக்கொன்றும் வேண்டாம் குமரனுக்கு ஏதாவது விளையாட்டு சாமான்கள் வாங்கி வாருங்கள் என்றாள்.மறுநாள் காலை 10 மணி போல பூஜா தீபாவிடம் பேசினாள். அவர் உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா என்றாள். யாரு ? என் ஹஸ்பண்ட். ரமேஷா ஆமாம் . நாங்க அபார்ஷன் பண்ண வேணாம்னு இருக்கோம் என்றாள். ரொம்ப சந்தோஷமா இருக்கு . நீங்க செஞ்ச இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன் என்றாள்.பூஜா அழ தொடங்கிவிட்டாள். பூஜா என்ன இது சின்ன பிள்ளை மாதிரி . குழந்தையை நல்லபடியா வளருங்க என்றாள் தீபா.

பூஜா பேசினாள் என பிரேமிடம் சொன்னாள். அவர்கள் அபார்ஷன் முடிவை கை விட்டுவிட்டார்கள் என்றாள். ரொம்ப தாங்க்ஸ் தீபா . நீ நிச்சயமா இதை செய்வாய் என தெரியும் என அவள் நெற்றியில் முத்தமிட்டான். இன்னும் சில மாதங்களில் பூஜா வளைகாப்பு வர இருக்கிறது. நாம் போவோமா இல்லையா ? அதெல்லாம் அப்புறம் அவர்கள் கூப்பிட்டால் பார்த்துக்கொள்ளலாம் . ரஞ்சனி டிகிரி வாங்கும் ஃபங்சன் நாளை மறந்து விடாதே என்றான். நான் எப்படி மறப்பேன் . அவள் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் இந்த நிலையை அடைந்திருக்கிறாள் என்றான்.ரஞ்சனி ஒரு புதிய சாரீ வாங்க கடை கடையாய் அலைந்து கொண்டிருந்தாள் தீபாவோடு. நீ ஆன்லைன் ஆர்டர் பண்ண வேண்டியது தானே என்றாள் தீபா . அதற்கு நேரம் இல்லை. பேசாமல் பிரேம் மாமாவிடமே சொல்லி இருக்கலாம் அவர் வாங்கி வைத்திருப்பார். அவருக்கு அவர் உடையே வாங்க தெரியாது இருவரும் சிரித்தார்கள்.குமரனும் சிரித்தான்.

நான் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு எங்கே போய் இருந்தீங்க மூணு பேரும் . அதுதான் உன் இடுப்புல உட்கார்ந்து இருக்குற பெரிய மனுஷன் குமரனையும் சேர்த்து தான் கேக்குறேன் . இவளுக்கு நாளைக்கு ஃபங்சன் போட்டு போக சாரீ இல்லைனு சொன்னா அதுதான் போனோம்.கிடைச்சதா எனக்கு தெரியும் கிடைக்காதுன்னு அதனால் நானே வாங்கி வந்தேன் என்றான். அந்த கலர் தீபாவுக்கும், ரஞ்சனிக்கும் பிடித்திருந்தது. ரொம்ப தாங்க்ஸ் மாமா என்றாள் . எப்படி உங்களுக்கு சாரீ பத்தியெல்லாம் தெரிஞ்சது என்றாள் தீபா. அதெல்லாம் சீக்ரட் . எனக்கு பசிக்குது வா சாப்பாடு போடு என்றான். குமரனை ரஞ்சனியிடம் கொடுத்துவிட்டு கிச்சன் உள்ளே நுழைந்தாள்.

ரஞ்சனி இன்றைக்கு நீ ஆபீஸ் வர வேண்டாம் . எத்தனை மணிக்கு பட்டமளிப்பு விழா . காலை 11 மணிக்கு. நான் ஆபீஸ் போய்விட்டு அங்கிருந்து வருகிறேன் என்றான். எதுக்கு மாமா நீங்க எங்களை விட்டுட்டு போறீங்க. கொஞ்சம் அர்ஜண்ட் வேலை இருக்கு. நீயும் அக்காவும் நேரத்தோட போங்க என்றான். அவள் அப்பாவின் படத்தின் முன் நின்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தாள். தீபா கிளம்பி விட்டாள். மணியாகிறது பார் போகலாம் என்றாள். நானே டிரைவ் பண்ணுகிறேன் என்றாள் ரஞ்சனி. தேவையில்லாத டென்ஷன் அதெல்லாம் ஒண்ணுமில்லை நானே ஸ்மூத் ஆக ஓட்டுவேன் என காரை கிளப்பினாள் . இவன் கோவிலுக்கு போய் ரஞ்சனி பெயரில் அர்ச்சனை செய்தான். பிறகு அங்கிருந்து ஆபீஸ் போய்விட்டு திரும்ப பட்டமளிப்பு விழா நடக்கும் இடத்துக்கு வந்தான். எங்கே என்னை விட்டு விட்டு கோயிலுக்கு போனீர்களா என்றாள் தீபா. என்னவோ தோன்றியது போனேன். ரஞ்சனி பெயர் சொல்லி கூப்பிட்டார்கள் . கரகோஷம் விண்ணை பிளந்தது. இவனுக்கு பெருமையாய் இருந்தது. போட்டோ எடுத்தான். அவன் சித்தி பாரு, சித்தி பாரு என குமரனை தூக்கி காட்டினான்.

அவள் சிறியதொரு உரை ஆற்றினாள் . எல்லோரும் அதை பாராட்டினார்கள். அவளுக்கு வேலைவாய்ப்பு வழங்க சில நிறுவன அதிபர்கள் பேசினர். அவற்றை எல்லாம் நாகரீகமாக மறுத்து விட்டாள். ஃபோன் காலில் ரமேஷ் வந்திருந்தான் . நாங்க யுட்யூப் லைவ் பார்த்தோம் . ரொம்ப சந்தோஷம் பிரேம் ரஞ்சனிக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்றான். பூஜாவும் பாராட்டினாள் . மதியம் அங்கேயே லஞ்ச் அரேஞ்ச் செய்யப்பட்டு இருந்தது. நைட் டின்னர் பிரேம் பெரிய ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தான். தீபா மனம் நிறைந்திருந்தது. அந்த நாள் இனிய நாளாக மாறியது. மறுநாள் ஆபீஸ் வந்தவுடன் எல்லோரும் பூங்கொத்து கொடுத்து ரஞ்சனியை வரவேற்றார்கள். கேக் வெட்ட சொல்லி வேண்டுகோள் விடுத்தார்கள். பிரேம் இதை எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சி அடைந்தான்.

சுபா இரண்டு மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா திரும்பும் நாளும் வந்தது. ரெண்டு மாசம் போனதே தெரியவில்லை என்றாள். அவள் குழந்தை தீபாவை பார்த்து சிரித்தது. நீங்கள் எல்லோரும் அவசியம் அமெரிக்கா வரவேண்டும் என்றாள் சுபா. எனக்கென்று வேறு யார் இருக்கிறார்கள். நான் முயற்சி பண்ணுகிறேன் என்றான். ரஞ்சனியையாவது அனுப்பி வை என்றாள். இவன் நீ பத்திரமாக போய் வா, ஃபோன் பண்ணு என்றான். வீட்டுக்கு வந்ததும் என்ன ரஞ்சனி நீ மட்டும் போகிறாயா டிக்கெட் போடட்டுமா என்றான். அதெப்படி நீங்கள் ரெண்டு பேர் இல்லாமல் நான் போக மாட்டேன் என்றாள். எப்படியும் நீ உன் கணவனோடு ஹனிமூன் தனியாகத்தான் போயாக வேண்டும் என்றாள் தீபா. எப்போ பார்த்தாலும் என் கல்யாண பேச்சு தானா என்று அங்கலாய்த்து கொண்டாள். அது மிகவும் அவசியம் என்றான்.

நான் நேற்று சரியாக தூங்கவில்லை, தூங்க போகட்டுமா என்றாள் ரஞ்சனி. சரி . தீபா குழந்தையை தூங்க வைத்தாள். ரஞ்சனி இப்படி பிடிவாதம் பிடிக்கறதுல அர்த்தம் இல்ல.அவ மனசுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணக்கூடாது என்றான். என்னவோ போங்க என்றவாறு அவனை அணைத்து கொண்டாள்.நிறைய திட்டங்கள் ரஞ்சனியின் எதிர்காலம் குறித்து இவனிடம் இருந்தன . ஆனால் அவள் விருப்பம் என்ற ஒன்றை மீறி இவன் எதுவும் செய்ய விரும்பவில்லை. ரஞ்சனி மனது மாறும் என்ற நம்பிக்கையில் அவன் இருந்தான். ரமேஷ் தனது ஃபேக்டரி பார்க்க தீபா, ரஞ்சனி, பிரேம் ஆகிய மூவரையும் அழைத்திருந்தான். என்ன இவ்வளவு நாள் கழித்து கூப்பிடுகிறான். நீங்களும், ரஞ்சனியும் போய் வாருங்கள் என்றாள் தீபா. போகவில்லையென்றால் தப்பா நினைப்பான். எனக்கென்ன ஃபேக்டரி பத்தி தெரியும் நீங்க போய்ட்டு வாங்க . குழந்தையையும் இந்த வெயிலில் அழைத்து போக வேண்டாம் என்றாள். எப்போது வர சொல்லியிருக்கிறான். அடுத்த மாதம் முதல் வாரம் .


ஃபேக்டரி பத்தி எல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினாள் ரஞ்சனி. பிரேம் சில யோசனைகளை முன்வைத்தான். பூஜாவுக்கு ஃபேக்டரியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது இருந்தது.சேஃப்டி ஹெல்மெட் போட்டுக்கொண்டு சுற்றிபார்த்தார்கள். பிரேம் அப்பா அவர்களுக்கு இளநீர் வெட்டிக்கொடுத்தார். அப்பா எப்பவுமே இப்படித்தான். இப்போது ஃபேக்டரி ஓரளவு நல்ல லாபத்தில் இயங்குகிறது என்றான் ரமேஷ். பிரேம் அப்பா கடையை பார்த்தால் ரொம்பவே சிதிலமடைந்து போயிருந்தது. இவன் அவரிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்து சீர் செய்து வைத்து கொள்ளும்படி சொன்னான். அவர் முதலில் மறுத்தாலும் பிறகு வாங்கி கொண்டார். எல்லோரும் குழுவாக போட்டோ எடுத்துக்கொண்டனர். இவர்கள் காரில் போயிருந்தனர். என்ன ரஞ்சனி எப்படி இருந்தது ஃபேக்டரி விசிட் . எனக்கு உங்கள் ஊர் ரொம்ப பிடித்து விட்டது என்றாள். விடை பெற்றுக்கொண்டனர்.

ரஞ்சனி அசந்து தூங்கி கொண்டிருந்தாள். இவன்தான் வண்டி ஒட்டி வந்தான். இவனுக்கும் தூக்கம் சொக்கியது, எப்படியோ சமாளித்தான். இரவு நேரம் எங்கேயும் நிறுத்த வேண்டாம் என நிணத்தான். என்ன மாமா தூக்கமா நான் ஓட்டவா என்றாள். அதெல்லாம் இல்லை. நீ தூங்கு என்றான்.அவள் சிரித்தாள். எனக்கு பசிக்கிறது என்றாள்.அருகில் இருந்த தாபா ஒன்றில் நிறுத்தினான்.
அவள் சொன்னதற்கும் சாப்பிட்டதற்க்கும் சம்பந்தமே இல்லை. அக்காவுக்கு ஃபோன் செய்கிறேன் என்றாள். அக்கா இங்கு எல்லாமே நன்றாக இருந்தது. நீயும் வந்திருக்கலாம் . குமரன் என்ன செய்கிறான். இப்போதுதான் சோறு ஊட்டி விட்டேன் . தூங்காமல் அடம் பண்ணுகிறான் என்றாள்.

நீயே வண்டி ஓட்டு ஜாக்கிரதை என்றான் பிரேம்.நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்றான். விடிகாலையில் வீடு வந்து சேர்ந்தார்கள். தீபா தூங்கி கொண்டிருந்தாள். இவனிடத்தில் ஒரு சாவி இருந்தது. சத்தம் கேட்டு அவள் விழித்து கொண்டாள். வந்தவுடனே ஃபோன் பண்ணி இருக்கலாமே என்றாள். நீயே சோர்வாக இருப்பாய் அதுதான். சரி வாங்க . நன்றாக விடிந்து விட்டது. இவன் தீபாவுடன் பேசிக்கொண்டிருந்தான். ரஞ்சனி உள்ளே போய் விட்டாள். பூஜா எப்படி இருக்கிறாள் என்று கேட்டாள் அவள் இப்போது சந்தோஷமாய் இருக்கிறாள். எனக்கு இதை கேட்கவே மகிழ்ச்சி ஆக இருக்கிறது. அப்பா கடைக்கு கொஞ்சம் பணம் கொடுத்து வந்தேன் என்றான். அவர் பிடிவாதக்காரர் அந்த கடையை விட மாட்டார் . பிரேம் நீ போய் தூங்கு என்றாள்.

தீபா மனதில் கவலைகள் இல்லை.ஆனால் சிந்தனை ஓடியது அவளுடைய அப்பா இல்லாமல் போய்விட்டாரே என்ற ஆதங்கம் எழுந்தது. அவர் இருந்திருந்தால் பிரேம் இன்னும் நன்றாக இருந்திருப்பான். ரஞ்சனி முன்னேற்றத்தை அவர் பார்க்காமல் போனது வருத்தமாய் இருந்தது. வாசல் கதவை சாத்திவிட்டு டிவி போட்டாள். ஏதோ ஒரு தியானம் ஓடிக்கொண்டிருந்தது. அவள் மனதிலும் அமைதி குடி கொள்ள ஆரம்பித்து இருந்தது.