ராக்கி சௌமியா கல்யாணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரேம் எல்லோரையும் வரவேற்று உபசரித்தான். சௌமியா அம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். தீபாவும், ரஞ்சனியும் கூட வந்தவர்களை வரவேற்றனர். காலம் போடும் முடிச்சுகளை யார் அறிவார். சௌமியா அம்மாவுக்கு இது ஒரு வகையில் நிம்மதி. இனி அவர் தன் கடைசி காலத்தை நிம்மதியாக கடக்கலாம். ரஞ்சனி இந்த அனுபவத்தை மறக்கவே மாட்டாள். அவள் விரும்பியது கிடைக்காமலே போய்விட்டது என்றைக்குமாக.காதல் இந்த வார்த்தையின் பொருள் புரியாமலேயே அதை கடந்து வந்து விட்டாள். ராக்கி சௌமியாவுடன் ஜோடியாக வரவேற்புக்கு வந்தவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டான். தீபா மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் காணாமல் போயிற்று.
பிரேம் பந்தியில் நின்று பரிமாறினான். மாப்பிள்ளையும் பெண்ணும் சாப்பிட வருகிறார்கள் என யாரோ சொன்னார்கள். காமிரா பிளாஷ் பளீச்சிட சௌமியாவும், ராக்கியும் வந்தார்கள். அந்த வெளிச்சம் இவன் கண்களை கூச செய்தது. தான் எவ்வகையிலும் சௌமியாவுக்கு தகுதியானவன் இல்லை என்பதை காலம் மீண்டும் உறுதி செய்ததாக உணர்ந்தான். என்ன வேண்டும் சௌமியா என்றான் ராக்கி. அவள் புன்னகைத்தாள். அந்த ஒரு நொடி அற்புதமானது. பிரேம் சில ஸ்வீட் அவர்கள் இலையில் வைத்தான். ராக்கி அவற்றை சௌமியாவுக்கு ஊட்டினாள். பதிலுக்கு அவளும் அவனுக்கு ஊட்டினாள் .தீபாவும், ரஞ்சனியும் சாப்பிட வந்திருந்தனர். நீயும் எங்க கூட சாப்பிடு பிரேம் என்றாள் தீபா. ஒரு அழகான ப்ரெசெண்ட் வாங்கி வைத்திருந்தாள் தீபா.
குமரன் அங்குமிங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்தான்.
ஆபீஸ் வேலைகள் அதிகமாக இருந்தன. சண்டே அதுவுமாக ரஞ்சனியை ஆபீஸ் வர சொல்லியிருந்தான் பிரேம்.அவள் சற்று தாமதமாக வந்தாள். ரஞ்சனி இந்த விஷயங்களை கவனி என்று நோட்ஸ் மெயில் அனுப்பி இருந்தான். சரி மாமா என்றாள். அக்கா என்ன செய்கிறாள் என்றான் . குமரனை குளிப்பாட்டி கொண்டிருந்தாள்.இன்னும் ஒரு வாரத்துக்கு சௌமியாவும், ராக்கியும் வரமாட்டார்கள் அவர்கள் அவர்களுக்கு பிடித்த இடத்துக்கு போகிறார்கள் என்றான். சரி மாமா. நாம் தான் அவர்கள் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும். புரிகிறது மாமா. சரி நீ இருந்து இந்த வேலைகளை பார். நான் லஞ்ச் வாங்கி கொண்டு வருகிறேன் என்றான். செக்யூரிட்டி இருக்கிறார் ஏதாவது எமர்ஜென்சி என்றால் கூப்பிட்டு கொள் .
லஞ்ச் வாங்கி இருவரும் சாப்பிட்டனர். தீபா ஃபோன் பண்ணியிருந்தாள். நீ சாப்பிட்டாயா தீபா என்றான். ம் சாப்பிட்டேன் . குமரன் தூங்குகிறான் என்றாள். எத்தனை மணிக்கு வருவீர்கள் . அது 8 மணி ஆகலாம் என்றான். சரி நைட் என்ன பண்ணட்டும். வேண்டாம் நாம் வெளியே போய் சாப்பிடலாம். ஓகே பை . ரஞ்சனி அவன் சொன்ன பைல்களை எல்லாம் verify செய்தாள். கூட corrections செய்தாள். ரஞ்சனி சோர்வே இல்லாமல் வேலை செய்தாள். செக்யூரிட்டி கூப்பிட்டு டீ வாங்கி வர செய்தான்.மாலை 7 மணி ஆகி இருந்தது . முக்கால்வாசி வேலைகள் முடிந்திருந்தன. என்ன ரஞ்சனி நாம் நம்மை வேலையில் மூழ்கடித்து கொள்வதை தவிர என்ன செய்ய முடியும் என்றான். அது விதியின் பாதை என்றாள். சரிதான் .
8 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போனான். அவள் தயாராகி உட்கார்ந்திருந்தாள். குமரன் சித்தி என்று ரஞ்சனியை கட்டிக்கொண்டான். சிக்கலே இல்லாத மொழி குழந்தை மொழி. போலாமா 10 நிமிடத்தில் ரெடி ஆகி விடுகிறேன் என்றான். சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். அவள் வெளியூர் போகிறேன் என்று சொல்லிவிட்டு போனாள். சரி. ரொம்ப நாள் கழித்து வெளியே வருகிறோம் என்றான். ஆமாம் குமரன் எனக்கு ஐஸ்கிரீம் என்றான். தீபா அதெல்லாம் நீ ஒழுங்கா சாப்பிட்டாத்தான் என்றாள். ரஞ்சனி ஏன் உன் முகம் இப்படி இருக்கிறது.என்னவோ இன்னைக்கு என் யோசனை எல்லாம் ஆபீஸ் பற்றியே இருக்கிறது என்றாள். சரி சரி ஆர்டர் பண்ணு என்றான். ரஞ்சனி தயங்கி தயங்கி ஆர்டர் பண்ணினாள்.
ராக்கி ஃபோன் பண்ணியிருந்தான். சரி நான் அனுப்பி விடுகிறேன் என்றான் பிரேம். செலவுக்கு கொஞ்சம் பணம் அனுப்ப சொல்லி கேட்டான் . அவனுடைய அப்பா அம்மாவை எதிர்த்துதான் இந்த கல்யாணத்தை செய்தான் ராக்கி.மூவரும் வீடு திரும்பினர். ரஞ்சனி அக்கா நான் உன் கூட படுத்து கொள்கிறேன் என்றாள். சரி ரஞ்சனி . இவன் இவனுடைய அறைக்கு சென்றான். அவள் தீபாவுடன் பேச நினைத்தாள். ஆனால் தூங்கி போய்விட்டாள். என்ன ஆனாலும் ராக்கி முன்னால் தாழ்ந்து போக கூடாது என்ற வைராக்கியம் உண்டாயிற்று.
மணி 4 இருக்கும் விழிப்பு வந்துவிட்டது. ஹாலுக்கு வந்த போது பிரேமும் ஏதோ ஆபீஸ் வொர்க் பார்த்து கொண்டிருந்தான்.
டீ போட்டு எடுத்து வரவா என்றாள் . தாங்க்ஸ் ரஞ்சனி என்றான். அவள் டிவி யை போட்டாள். ஜோசியம் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் எதையோ அடித்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். மாமா நாமும் எங்காவது போலாமா என்றாள் . இன்னும் ரெண்டு மாதத்தில் போகலாம். சுபாவிடம் பேசுகிறேன் என்றான். சரி மாமா. சுபா என்ன நினைப்பாள் இந்த கல்யாணத்தை பற்றி என அறிய ஆவலாக இருந்தான்.பிரேம் காலையில் போய் சௌமியா அம்மாவை பார்த்து வந்தான். தீபா குமரனை ஸ்கூலில் விட சென்றாள். இவனும் ஆபீஸ் கிளம்பினான். ரஞ்சனி மாமா நான் இன்று வரவில்லை என்றாள். சரி.
என்ன ரஞ்சனி வேலைக்கு போகவில்லையா என்றாள் தீபா. என்னவோ போக தோனவில்லை. நீ வா சாப்பிடு என்றாள்.
மாலை இவன் ஆபீஸ் விட்டு வரும்போது ரஞ்சனி தூங்கி கொண்டிருந்தாள். என்ன ஆச்சு ரஞ்சனிக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை என்றாள் தீபா. இவன் அருகில் போய் ரஞ்சனி என்றான். எழுந்தவள் எப்போ மாமா வந்தீங்க என்றாள். என்ன ஆச்சு உனக்கு ஏன் டல் ஆ இருக்குற .. ஒண்ணுமில்லை எனக்கு வர வர எதிலேயும் இண்டரெஸ்ட் இருக்க மாட்டேங்குது. நான் நாளைக்கே சுபா கிட்ட பேசி டிக்கெட் புக் பண்ணுறேன். உனக்கொரு சேஞ்ச் ஆ இருக்கும். சரி மாமா. சரி வா டிபன் சாப்பிடலாம் என்றான் . அவள் முகம் கழுவி வந்தாள்.எனக்கு கவலையா இருக்கு ரஞ்சனி உன்னை இப்படி நான் பார்த்ததேயில்லை . என்ன செய்ய மாமா சில சமயம் சொல்ல முடியாம போயிடுது என்றாள். போதும் அவளை ரொம்ப கேள்வி கேட்காதீங்க. சரி சரி சாப்பிடும்மா .
சுபா ஓகே சொல்லிவிட்டாள். இன்னும் ஒரு வாரத்தில் தீபா, ரஞ்சனி, குமரன் மூவரும் அமெரிக்காவில் உள்ள சுபா வீட்டிற்கு போகிறார்கள். நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்றாள் தீபா. சௌமியாவும் ராக்கியும் இங்கே வருவதாய் சொல்லி இருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் இருவரும் சந்தோஷமாய் போய் வாருங்கள் என்றான். வாசன் பேசினான் என்ன பிரேம் எப்படி இருக்கீங்க ? நீங்க ஒண்ணும் கவலைபட வேண்டாம் நான் பத்திரமா பார்த்து கொள்கிறேன் என்றான். ஊருக்கு போயிருந்த சௌமியாவும். ராக்கியும் திரும்ப வேலைக்கு வந்து விட்டார்கள். ரஞ்சனி யு எஸ் போவதால் அவள் பார்த்த பொறுப்புகளை தற்காலிகமாக சௌமியாவிடம் ஒப்படைத்தான். என்ன சௌமியா எப்படி இருக்கிறாய் என்றான் பிரேம். நான் நல்லா இருக்கிறேன் . ராக்கி என்னை நல்லா கவனித்து கொள்கிறார்.
ராக்கி, சௌமியா ஹனிமூன் போட்டோக்களை ஷேர் செய்திருந்தார்கள். ரஞ்சனி அவற்றை திரும்ப திரும்ப பார்த்துகொண்டிருந்தாள். நாளை கோவிலில் பூஜை செய்கிறோம் நீங்கள், தீபா, ரஞ்சனி எல்லோரும் வந்து விடுங்கள் என்றாள் . எந்த கோவில்? நான் லொகேஷன் whatsapp பண்ணுகிறேன். சரி.தீபா அம்மா வந்திருந்தார்கள் அவர்கள் தான் எல்லாவற்றையும் எடுத்து செய்தார்கள். ரஞ்சனி, தீபா, குமரன் மூவரும் பயபக்தியோடு சாமி கும்பித்தனர். இவன் கடமைக்கு கடவுளை பார்த்து நின்றிருந்தான். பிரேம் இங்கே வா என்றாள் தீபா. ஒழுங்கா நில்லு என்று சொல்லி சிரித்தாள்.
ம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது . பூஜை நிறைவடைந்தது. 100 பேருக்கு அன்னதானம் போட்டார்கள். சௌமியா அம்மா இன்னமும் அர்ச்சகரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
ராக்கி அப்பா ,அம்மா இன்னும் என் மேல கோவமாத்தான் இருக்காங்க என்றான். எல்லாம் மாறிவிடும் ராக்கி நீ நம்பிக்கை இழக்காதே .பிரசாதத்தை வாங்கி கொண்டு விடை பெற்றான் பிரேம் .ரஞ்சனி சௌமியாவிடம் போட்டோ எல்லாம் நன்றாக இருந்ததாக சொன்னாள் . தாங்க்ஸ் ரஞ்சனி . குமரன் அன்று ஸ்கூல் போகவில்லை. பிரேம் வீட்டுக்கு வந்து வேஷ்டியை மாற்றினான். அவர்கள் இவர்களுக்கும் அன்னதான பிரசாதம் கொடுத்து விட்டிருந்தார்கள்.மதியம் நான் சமைக்க போவதில்லை என்றாள் தீபா. ரஞ்சனியும், பிரேமும் தீபா நீ ஆபீஸ் வருகிறாயா ஒரு சேஞ்ச் ஆக இருக்கும் என்றான். வருகிறேன் குமரன் சும்மா இருப்பானா நானும் வருவேன் என்றான். அந்த நாள் இனிய நாளாய் மாறிற்று.
அமெரிக்கா போக டிக்கெட் புக் செய்தான். இவர்கள் ஏற்கனவே விசா வாங்கி வைத்திருந்ததால் பிரச்சனை இல்லை. அவர்கள் அப்பாவோடு போயிருக்கிறார்கள். என்ன தீபா உன்னுடைய ஆங்கிலம் எல்லாம் பக்காதானே என்றான். ஓகே என்றாள். லக்கேஜ் அதிகம் வேண்டாம். குமரனுக்கு விண்டோ சீட் என்றான். ஐ ஜாலி என்று சொல்லியபடி போனான். நீங்களும் வாங்களேன் என்றாள். இல்லை தீபா இது ரஞ்சனி மன மாற்றத்துக்கு தான். நான் நிறைய தடவை போயிருக்கிறேன் என்றான். ரஞ்சனி எனக்கு கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றாள். பணம் கொடுத்தான். குமரனுக்கு நல்ல ஜெர்கின் வாங்கி கொடு.சாப்பாடு விஷயத்தில் கவனமாய் இருங்கள் என்றான்.
இன்னும் ஒரு வாரம் இருந்தது . இந்த வருஷத்து பெஸ்ட் இவனுக்கு பெருமை தாளவில்லை. இது அவ்வளவு சீக்கிரம்
யாருக்கும் கிடைக்காது. சௌமியா , ராக்கி ஆகியோர் வாழ்த்தினார்கள்.தீபாவிடம் கேக் வாங்கி ஆபீஸில் உள்ள எல்லோருக்கும் குடுக்க சொன்னான். தீபா தன் அப்பாவை நினைத்து கொண்டாள். ரஞ்சனி சாதிப்பாள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் சாதிப்பாள் என்று நினைக்கவில்லை. ரஞ்சனிக்கு ஒரு மோதிரம் பரிசளித்தான் பிரேம். சீக்கிரம் கல்யாணம் செய்தால் நிறைய மோதிரங்களை பார்க்கலாம் என்றான் பிரேம். நீங்கள் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பியுங்கள் மாமா . நான் வந்ததும் பேசி முடிக்கலாம் என்றாள். ரொம்ப நன்றி ரஞ்சனி என்றான். இதுக்கு ஏன் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறீங்க.
குமரனை பிரிவது சற்றே சிரமம் தான். ஆனால் இது ஒரு நல்ல வாய்ப்பு பயணம் செய்வதற்கு அதை ஏன் தவற விட வேண்டும். ஏர்போர்ட்டுக்கு வழியனுப்ப சௌமியா , ராக்கி வந்திருந்தார்கள். அவர்கள் திரும்பி வர இரண்டு மாதங்கள் ஆகும் எனும் பொது பிரேமுக்கு ஏக்கமாக இருந்தது.