பிரேம் தன் அப்பாவிற்கு செலுத்த வேண்டிய இறுதி அஞ்சலியை செலுத்தினான். தீபா அவனை தேற்றினாள். சௌமியாவும் , ராக்கியும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தனர். ரஞ்சனி செய்வதறியாத நிலையில் இருந்தாள். குமரனை தூக்கிகொண்டு இங்குமங்கும் சென்றாள்.சுபா வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தாள் .ரமேஷ் அப்போது ஒரு பையனை இளவேனில் இங்க வாயேன் என்றான். அவனை ரமேஷ் பிரேமுக்கு அறிமுகபடுத்தி வைத்தான். பிறகு சரி நீ போய் வேலையை பாரு என்றான். இவன்தான் நான் சொன்ன பையன் ரஞ்சனிக்கு. பையன் சின்ன பையனா இருக்கானே . பார்க்க அப்படித்தான் தெரிவான், வயசு 24 ஆச்சு. நான் விசாரித்து விட்டேன் என்றான் ரமேஷ் .
ரஞ்சனி அவர்தான் இளவேனில் . நீ பேசுறதுன்னா பேசு. இப்போ என்ன மாமா அர்ஜண்ட்? அதில்லம்மா கல்யாணம் இப்போ பண்ண முடியாது. பேசி வைச்சுக்கலாம் நல்ல பையனா தெரியறான். சரி சரி நானே பேசுறேன். அவன் பந்தல்காரர்களிடம் பணம் கொடுத்து செட்டில் செய்து கொண்டிருந்தான். ரஞ்சனி கிட்டே போய் அவனிடத்தில் ஹாய் என்றாள். நாங்க வருகிறோம் என்று அவர்கள் கிளம்பினார்கள். திரும்பி பார்த்தான் நீங்க? நான் ரஞ்சனி ஒரு 5 மினிட்ஸ் பேசலாமா? சரி வாங்க. எனக்குத்தான் மாமா, யாரு பிரேம் சித்தப்பாவா? ஆமாம் வரன் பாக்குறது சம்பந்தமா பேச சொன்னாங்க என்றாள். ஓ நான் உங்க போட்டோவை இன்னும் பார்க்கலை அதனால தான் தெரியல சாரி.இட்ஸ் ஓகே. நீங்க ஃப்ரீயா இருக்குறப்ப இந்த நம்பர் ஈவினிங் கால் பண்ணுங்க என மிஸ்டு கால் கொடுத்தாள். சரிங்க என்றான். சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க .. நாங்க சாயங்காலம் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம் என்றாள்.
பேர் நல்லா இருக்கு , பையனும் நல்லா இருக்கான்.ஜாதக பொருத்தம் கூட ஓகே என்றான் பிரேம். நீங்க அவசரப் படாதீங்க அவங்க என்ன எதிர்பார்க்கிறார்கள் என தெரிய வேண்டாமா என்றாள் தீபா. ரமேஷ் கிட்ட சொல்லி இருக்கேன்.. அவன் பேசிப்பான் அதெல்லாம்.ரஞ்சனி நான் என் ஃபோன் நம்பர் குடுத்திருக்கேன் பார்க்கலாம் என்றாள். வரும்பொது சௌமியாவும், ராக்கியும் இவர்கள் கூடவே காரில் வந்து விட்டார்கள். பிரேம் அப்பாதான் இவனை சொந்த ஊரோடு பிணைக்கும் ஒரே சக்தியாக இருந்தார் , இப்போது அவரும் போய்விட்டார் எனும் போது துக்கமாய் இருந்தது.இளவேனில் பயோ டேட்டாவை பார்த்தாள் ரஞ்சனி.
பிரேம் சரியாக தூங்க முடியாமல் தவித்து வந்தான். அவனை பார்க்கவே தீபாவுக்கு கஷ்டமாக இருந்தது.என்ன பிரேம் இன்னும் தூங்காம இருக்கே .. மணி 2 ஆக போகுது என்றாள். சாரி தீபா நீ போய் தூங்கு நான் இப்போ போயிடறேன் என்றான். இளவேனில் வீட்டோடு மாப்பிள்ளையாக வர சம்மதித்து விட்டிருந்தான் .அவன் வேலையை பெங்களூர் மாற்றம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்தனர். ரஞ்சனி இளவேனில் கூட பேசினாள்.அவளுக்கு அவனை பிடித்திருந்தது.நிச்சயம் இப்போது வைத்துக்கொள்ளலாம் என்றும் கல்யாணத்தை 3 மாதம் கழித்து வைத்து கொள்ளலாம் என்றார்கள். அவர்கள் வீட்டில் பெரிதாக டிமாண்ட் எதுவும் வைக்கவில்லை. கல்யாணம் பெண் வீட்டார் நடத்தி கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். இளவேனில் பெங்களூர் வந்திருந்தான். வேலை மாற்றல் விஷயமாக வந்தவன் ,ரஞ்சனியை மீட் பண்ண முடியுமா என கேட்டான்.
அவள் பிரேமிடம் கேட்டுவிட்டு ஓகே சொன்னாள். சௌமியா கூட வந்திருந்தாள். சௌமியா தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள். எனக்கு பிரேம்
சித்தப்பாவை சிறு வயதில் இருந்தே தெரியும். அவர் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தவிர உங்களை எனக்கு பார்த்தவுடன் பிடித்துவிட்டது என்றான்.சௌமியா அவன் வேலை பற்றி சில கேள்விகளை கேட்டாள்.அவனும் தயங்காமல் பதில் சொன்னான்.விடைபெற்றுக்கொண்டான். என்ன ரஞ்சனி இன்னும் ஏதாவது இருக்கா என்றாள் சௌமியா.எனக்கு அவர் பெண்களை மதிப்பார் என்றே தோன்றுகிறது என்றாள். ம் அது ரொம்ப முக்கியம் .
ரஞ்சனி நிச்சயத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் தீபாவுக்கு மனதில் இளவேனில் இவ்வளவு சிம்பிள் ஆக இருக்கிறான் என்றால் எதையாவது மறைக்க முயற்சி செய்கிறானா என்று யோசித்தாள். நடப்பது நல்லவை ஆக இருக்கட்டும் என்றாள். அவர்கள் குடும்பத்தார் ஊரில் இருந்து வந்திருந்தார்கள். வீட்டை சுற்றி பார்த்தார்கள். பிரேமை நம்பி குமரகுரு எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார் என்றார்கள்.நிச்சயத்துக்கு ஒரு நாள் முன்பே சொந்தக்காரர்கள் வந்து விட்டனர். குமரன் ஸ்கூல் போகாமல் விளையாடி கொண்டிருந்தான். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது . பிரேம் கவலைகள் எல்லாம் மறந்து ஆபீஸ் வேலையில் மூழ்கி இருந்தான். சௌமியா , ராக்கி ரெண்டு பேரும் காலையிலேயே வீட்டுக்கு வந்துடுங்க என்றான். சரி பிரேம் . அவங்க என்னதான் சொன்னாங்க வரதட்சணை பத்தி.அவங்க எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க. நான் என் கடமையை செய்ய போறேன் என்றான்.
அப்பா இருந்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார் என ரஞ்சனி நினைத்தாள்.கோவிலுக்கு போய் வந்தார்கள். இளவேனில் வேலை மாற்றல் வாங்கி கொண்டுவிட்டான்.நிச்சயதார்த்தம் நடைபெற்றது . மாப்பிள்ளை இப்போவே இங்க வந்து போறது நல்லா இருக்காது. நான் அவருக்கு தங்குவதற்கு பிளாட் அரேஞ்ச் பண்ணி குடுக்கிறேன் என்றான் பிரேம்.வேலைக்கு ஜாயின் செய்து விட்டான் இளவேனில் . அடிக்கடி அவனுக்கு ரஞ்சனியை பார்க்க தோன்றும் ஆனால் அவள் இவனை விட பிஸி அதனால் பார்க்க முடியாது. ரமேஷ் ஊரில் உள்ள சொந்த வீட்டை விற்று விடலாம் என்றான். ரமேஷ் உன் பங்கு உனக்கு வந்து சேரும் . வீட்டை விற்க வேண்டாம் என்றான் பிரேம்.
அந்த வாரக்கடைசியில் ரஞ்சனி இளவேனில் வீட்டுக்கு போயிருந்தாள் . வீடு வசதியாய் இருக்கிறதா என்றாள் . அதெல்லாம் பரவாயில்லை. ஏன் யாரையும் கூட அழைத்து வரவில்லை என்றான். எல்லோரும் நகை கடை, புடவை கடை என்று பிஸி என்றாள். அவளுக்கு வீட்டை அவன் வைத்திருந்த விதம் பிடித்து போயிற்று. சரி அப்போ நான் கிளம்புறேன் என்றாள். அவள் கையை பிடித்து இழுத்து முத்தமிட்டான். அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. என்னதான் சிட்டி கல்ச்சர் பெண்ணாக இருந்தாலும், அவன் மேல் ஆசை இருந்தாலும் இப்படி செய்வான் என எதிர்பார்க்கவில்லை. இளவேனில் இனி இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டு வந்தாள். அவன் மணம் அவள் மேல் வீசியது. அவன் ஃபோன் பண்ணி சாரி சொன்னான்.
சௌமியாவிடம் இதைபற்றி சொன்னாள். இதெல்லாம் பெரிய விஷயமா என்றாள். ஆனால் நீயும் பதிலுக்கு ஏதாவது கொடுத்திருக்க வேண்டும் என்றாள்.வீட்டுக்கு போய் குளித்தாள். என்ன தைரியம் அவனுக்கு .. நான் தான் அவனுக்கு அந்த இடத்தை கொடுத்தேன் என தன்னையே குறை சொல்லிக்கொண்டாள். தீபாவிடம்,ரஞ்சனியிடமும் இதை சொல்ல வேண்டாம்என சௌமியாவிடம் சொன்னாள். பிரேம் என்னம்மா வீடு எப்படி இருந்தது ? பரவாயில்லை மாமா. ஏன் மாமா எல்லாத்தையும் விட்டு கொடுக்கறதுதான் கல்யாணமா ? எனக்குன்னு ஒண்ணுமே இருக்காதா என்றாள். போக போக நீயே புரிஞ்சுக்குவ என்றான். இரண்டு நாட்கள் கழித்து கல்யாண பத்திரிக்கை எடுத்துக்கொண்டு வந்தான் இளவேனில். பிரேம் , தீபா இருந்தார்கள் ரஞ்சனி வெளியே போயிருந்தாள். வாங்க மாப்பிள்ளை என்ன சாப்பிடறீங்க என்றான். ஒண்ணும் வேணாம் சித்தப்பா இந்த கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தேன் என்றான்.
கிளாஸ் ல பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. அதெல்லாம் பழகி போச்சு மாமா . அவங்க பண்ணுறதை பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க. இவன் ரஞ்சனியை தேடுவதை உணர்ந்த பிரேம் அவ வெளில போயிருக்கா. இப்போ வந்திடுவா .. நான் ஃபோன் பண்ணுறேன் என்றார். மாப்பிள்ளை வந்திருக்காரு சீக்கிரம் வா வீட்டுக்கு என்றான் . ஒண்ணும் அவசரமில்லை இன்னொரு நாள் பார்த்துக்கொள்கிறேன் என்றான். அவள் ஓடி வந்திருந்தாள். கடைக்கு சாக்லேட் வாங்க போயிருந்தேன் குமரனுக்கு. மாப்பிள்ளைக்கு குடும்மா என்றான் பிரேம். சாக்லேட் குடுத்தாள்.சரி பேசிட்டு இருங்க உள்ளே போனான் பிரேம். என்ன ஆச்சு ஃபோன் பண்ணலை என்றான். அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை .. நீங்க ஃபோன் பண்ணா நான் எடுக்காம இருக்க மாட்டேன் என்றாள்.
invitation பார்த்தவள் நல்லா வந்திருக்கு என்றாள். தீபா அவனுக்கு ஜூஸ் எடுத்து வந்திருந்தாள். தீபா அப்பா அம்மா நல்ல இருக்காங்களா என்று விசாரித்தாள். நாளைக்கு நீங்க ஃப்ரீ யா என்றான் ரஞ்சனியிடம். ஃப்ரீதான் சொல்லுங்க . இங்க பக்கத்து கோவில் விசேஷம் நீங்க வருவீங்களா என்றான். தீபா தாராளமா கூட்டிட்டு போங்க என்றாள் . ரஞ்சனி சரி என்றாள். அவன் மனசே இல்லாமல் கிளம்பி போனான். என்ன அக்கா அவன் கேட்டவுடனே சரின்னு சொல்லிட்ட ? அவர் நம்ம சொந்தக்காரர். உனக்கும் தான் என்றாள். ம் புரியுது.இவள் கோவிலுக்கு சாரி கட்டி ரெடி ஆக இருந்தாள். அவன் டூ வீலர் கொண்டு வந்திருந்தான். இவள் காரிலேயே போலாமே என்றாள். சரி சரி பைக்கிலேயே போகலாம் என்று சொன்னாள். அவன் தோளை பிடித்து கொண்டாள். புதியவை வேறு அவளுக்கு சிரமத்தை கொடுத்தது.
கோவில் கும்பாபிஷேகம் என்பதால் கூட்டம் அதிகம். இவனுடைய கையை இருக்க பிடித்து கொண்டாள். ஸ்வாமி பேருக்கு அர்ச்சனை செய்தாள். கல்யாண பத்திரிக்கையை சாமி பாதத்தில் வைத்து வாங்கி கொண்டார்கள். ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.வீட்டுக்கு போவோமா என்றான். வேறு எங்காவது போகலாம் என்றாள். அவள் அவன் எவ்வளவு தூரம் போவான் என பார்க்க விரும்பினாள்.ம்யூசியம் போனார்கள் . அங்குள்ள பழங்கால பொருட்களை பார்த்தார்கள். ரஞ்சனி அன்றைக்கு நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. பரவாயில்லை நீ இன்னொரு முறை அப்படி செய்தாலும் தப்பில்லை என்றாள். அவன் புன்னகைத்தான். வீட்டில் கொண்டு வந்து விட்டான்.
தீபா ஆர்வத்துடன் என்ன நடந்தது என கேட்டாள். சாமி பிரசாதத்தை அவள் நெற்றியில் பூசினாள் ரஞ்சனி.
பிரேம் அவளுக்கு நிறைய செய்ய ஆசைப்பட்டான். ஆனால் எதுவாக இருந்தாலும் இப்போது வேண்டாம். ஒரு வருடம் போகட்டும் என்றாள் ரஞ்சனி. சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். கல்யாணத்துக்கு கட்டாயம் வருவேன் என்றாள்.அவள் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப நினைவு படுத்தி சிரித்த வண்ணம் இருந்தான் இளவேனில்.மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணினான். ரஞ்சனி ஃபோன் பண்ணினாள். எங்கே இருக்கே இங்க வீட்ல தான்.. என்ன பண்ணுற ?துணி துவைக்கிறேன். நான் நாளைக்கு ஃப்ரீ தான் எங்கேயாவது போலாமா என்றாள். நிச்சயமாக போகலாம் என்றான் .