ரஞ்சனி கால் பண்ணுவதை பார்த்ததும் நீலன் யோசித்தான். அப்புறம் எடுத்தான். என்ன நீலன் எப்படி இருக்கீங்க . நான் நல்லா இருக்கேன்.நாங்க எல்லாம் ஒரு ஆபீஸ் ட்ரிப் ஏற்பாடு பண்ணியிருக்கோம் நீங்களும் வரீங்களா? என்றாள்.இங்க பெங்களூர் பக்கத்துலதான் டூ டேஸ் ட்ரிப். இல்ல அது வந்து .. ஏதாவது அர்ஜண்ட் வொர்க் இருக்கா? அப்படியெல்லாம் இல்லை. நான் எல்லாம் பாத்துக்கிறேன் நீங்க வாங்க என்றாள். சரி மேடம். ரஞ்சனின்னே கூப்பிடுங்க என்றாள். நான் டீடெயில்ஸ் அனுப்பி வைக்கிறேன் என்று போனை வைத்தாள். எதற்கு தான் இவ்வளவு நெர்வஸ் ஆகிறோம் என்று யோசித்து பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை.ramanagara,savandurga,skandagiri,nandi hills,manchanabele dam போன்ற இடங்களுக்கு போவதாக தீர்மானம். மலையேற்றம், அருவிகள் மற்றும் அணைக்கட்டு பகுதிகள் போன்றவற்றிற்கு போவதாய் ஏற்பாடு.
ரஞ்சனி ட்ரிப் கிளம்புவதற்குள் வீடே ரெண்டு பட்டது. நீலன் வருகிறான் என ரஞ்சனி பிரேமிடம் சொன்னாள். நீ கூப்பிட்டாயா ? ஆமாம் கம்பெனி சார்பாக கூப்பிட்டேன் என்றாள். எல்லா வேலையும் செய்து விட்டு ஒன்றுமே தெரியாத பெண் போல இருக்கிறாயே என்றான். தீபா மலையேற்றம் எல்லாம் ஜாக்கிரதை என்றாள். ஃபோன் பண்ணு அடிக்கடி என்றான் பிரேம். அவளுக்கு தேவையான உடைகள், ஜெர்க்கின்கள், கையுறைகள் போன்றவற்றை வாங்கி கொடுத்திருந்தான் பிரேம்.அந்த நீலனும் வருகிறானா ட்ரிப்புக்கு என்று பிரேமிடம் கேட்டாள் தீபா. ஆமாம் ரஞ்சனி ட்ரிப்புக்கு கூப்பிட்டு அவன் மாட்டேன் என எப்படி சொல்லுவான் என சிரித்தான்.டூர் வாகனம் வாசலில் வந்து நின்றது. ரஞ்சனி எல்லோரிடமும் விடை பெற்றுகொண்டான். அவள் உட்கார இடம் பார்த்தாள். நீலன் பக்கத்தில்தான் இடம் கிடைத்தது. அவள் அவன் பக்கதிதில் உட்கார்ந்து வருவதை சிலர் ரசித்தார்கள்.
டிபன் சாப்பிட நிறுத்திய போது தாங்க்ஸ் என்றாள். நீங்கள் வந்ததற்குத்தான் . அதெல்லாம் பெரிது படுத்தாதீர்கள். உங்கள் பெருந்தன்மை அது என்றான். இருவரும் சேர்ந்தே டிபன் சாப்பிட்டனர். பிரேம் சார் எப்படி இருக்கிறார். மாமாவுக்கு என்ன எப்போதும் என்னை கிண்டல் செய்வார் என்றாள். பிரேம் சார் எனக்கொரு வாழ்த்து செய்தி அனுப்பினார். என்ன ? இந்த ட்ரிப் நல்லபடியாய் அமைய . ம் அவர் சரியான குறும்புக்காரர்.நான் மியூசிக் அடிக்ட் அதனால் கொஞ்ச நேரம் பாட்டு கேட்கிறேன் என காதில் இயர் பேட் மாட்டிக்கொண்டாள். நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா என்றாள் . இல்லை பரவாயில்லை என்றான். அவள் மியூசிக் கேட்டுக்கொண்டே இவன் மேல் சாய்ந்து தூங்கி விட்டாள். சாரி சாரி நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றாள். இதில் என்ன இருக்கிறது ? காற்று இதமாக வீசும் போது தூக்கம் வரத்தான் செய்யும் என்றான்.
மலையேற்ற நிகழ்வுக்கு எல்லோரும் தயாராய் இருந்தார்கள். கைட் சொல்வதை கவனமாக கேட்டார்கள். இவன் அவள் கூட போக விரும்பினான். வேறு ஒரு பெண் ரஞ்சனி உடன் ஜாயின் பண்ணி விட்டாள். இவனுக்கு சற்று ஏமாற்றமாய் இருந்தது. இவன் ஒற்றையாய் மலை ஏறுவது சிரமம்தான். ஆனால் பேச்சு துணைக்கு ஆள் இருந்தால் நல்லது . இவன் மற்ற யாரையும் எதிர்பார்க்கவில்லை. இவனே முயற்சி செய்து கொஞ்ச தூரம் போய் விட்டான்.வாட்டர் பாட்டில் எல்லாம் வைத்திருந்தான். யாருக்காக வந்தானோ அவளே வராத போது இப்படி கஷ்டப்படுவதில் என்ன பயன். இருந்தும் மனம் தளராமல் மலை ஏறினான்.சற்று தொலைவில் அவளும், அவள் தோழியும் நின்று கொண்டிருந்தனர். என்ன ஆச்சு என்றான். ஒரு சிறிய பிரேக் அவ்வளவுதான் என்றாள். இவர்கள் மூவருமாக போனார்கள். ஒரு tent ஒன்றை அமைத்தார்கள். மற்ற எல்லோரும் மெதுவாக வந்து சேர்ந்தார்கள். ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது.
மாலை வேளையில் camp மாதிரி ஏற்பாடு செய்திருந்தார்கள்.யாராவது பாடுங்கள் பாடுங்கள் என்று எல்லோருமே ஒருவரை ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சீட்டு குலுக்கி பார்த்து தேர்ந்தெடுப்போம் என்றார்கள்.நீலன் பெயர் வந்ததும் எல்லோரும் அமைதி ஆனார்கள். அவன் கையில் கிடார் கொடுக்கப்பட்டது. அவன் ஏதோ ஒரு நாட்டுபுற பாடலை பாடினான். அவன் ஆன்மாவை உருக்கி பாடினான். எல்லோரும் மெய் மறந்தார்கள். ரஞ்சனி அவளும் பாடினாள். எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.குளிர் மெல்ல பரவிக்கொண்டிருந்தது. நீலன் பாடுவதை வீடியோ எடுத்து பிரேமுக்கு அனுப்பினாள் ரஞ்சனி. பிரேம் தீபாவிடம்
வீடியோவை காட்டினான். நல்ல பாட்டு எனக்குத்தான் புரியவில்லை என்றாள்.
எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு திரும்பினார்கள். டிரிங்க்ஸ் அரேஞ்ச் செய்யப்பட்டது . ஆனால் நீலன் அங்கு போகவில்லை. என்ன நீலன் நீ டிரிங்க்ஸ் சாப்பிட மாட்டாயா? பொய் சொல்லாதே என்றாள்.அம்மா இருக்கிறவரை அப்படித்தான் இருந்தேன். அப்புறம் விட்டுவிட்டேன் என்றான். குட் நைட் என்றாள். பிரேமுக்கு ஃபோன் செய்தாள் என்ன மாமா வீடியோ பார்த்தீர்களா என்றாள். அவன் பாவம் என்றான். உன்னிடம் மாட்டிக்கொண்டு விட்டான். அப்படி சொல்லாதீர்கள். என்னவோ அவன் பாடினான் . எல்லோரும் கரைந்து விட்டார்கள் . டின்னர் சாப்பிட்டாயா என்றான். ஆச்சு. அவனை கவனமாக பார்த்துக்கொள் என்றான். யாரோ பெல் அடித்தார்கள். கதவை திறந்தால் நீலன். என்ன ஆச்சு அவர்கள் முழு போதையில் என்னையும் வற்புறுத்துகிறார்கள் நான் இங்கேயே ஓரமாக படுத்து கொள்ளட்டுமா ?வேண்டாம் நான் அவர்களிடம் பேசுகிறேன் என்றாள். சரி நானே பார்த்துக்கொள்கிறேன் .. நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்றான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள். அவன் ரூமில் நீலன் இல்லை. தேடிக்கொண்டு ரிசப்ஷன் போனாள் . அங்கே சோபாவில் படுத்திருந்தான். மணி 2 ஆகி விட்டிருந்தது. நீலன், நீலன் என்னாச்சு ரஞ்சனி ? இந்நேரத்தில் என்ன பண்ணுகிறீர்கள் என்றான். அவனை அவளுடைய ரூமுக்கு அழைத்து சென்றாள். பேசாமல் படுங்கள் இங்கே சோபாவில் என்றாள். அவளுடைய வாசனை ரூம் முழுக்க ரம்மியமாய் இருந்தது. அவள் நைட் டிரஸ் அணிந்திருந்தாள். நீலன், நீலன் என்று கூப்பிட்டாள். என்ன ரஞ்சனி . நாளைக்கு என கூட அருவிக்கு வந்துவிடுங்கள் என்றாள். படகு சவாரி அருமையாக இருக்கும் என்றும் சொன்னாள். நிச்சயமாக வருகிறேன்.
காலையில் டீ எடுத்து வந்து அவனை எழுப்பினாள். நீ ஏன் இதெல்லாம் . அவள் பேசாமல் குடியுங்கள் என்றாள். டீ நன்றாக இருந்தது. அவன் மனமில்லாமல் அவன் ரூமுக்கு போனான்.
படகு சவாரியின் போது இவன் தோளை கெட்டியமாக பிடித்துக்கொண்டாள். அவன் கண்ணை திறந்து பார் ரஞ்சனி என்றான். பயத்தில் அவளுக்கு கண்கள் மூடியிருந்தன. அருவி நீர் முழுவதும் அவர்கள் மேல் வாரி இறைத்தது போல சில்லிட்டது. நீலன் நீ தைரியசாலிதான் என்றாள்.என் கால்கள் எப்படி நடுங்கியது என்பதை நீ பார்க்கவில்லை என்றான்.அவர்கள் மாலையில் அணைக்கட்டு பகுதிக்கு சென்றனர். எல்லோரும் குழுவாகவும், தனியாகவும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இவனுடைய தோளில் கை போட்ட படி ஒரு செல்பி எடுத்து கொண்டாள். அணைக்கட்டு மாலை வேளையில் வெளிச்சத்தில் பிரம்மாண்டமாய் தோன்றிற்று.
நீலன் வரும் போது இடம் மாறி உட்கார்ந்திருந்தான்.அவள் என்னவோ சொல்ல நினைத்தாள். தன்னையே அவள் மறக்க தொடங்கியிருந்தாள். எல்லோரும் இந்த ட்ரிப் ரொம்ப உற்சாகம் மிகுந்ததாக இருந்ததாய் உணர்ந்தார்கள். நான் ஃபோன் பண்ணுகிறேன் என நீலனிடம் சொல்லிவிட்டு வீடு வந்ததும் இறங்கி கொண்டாள்.
பிரேம் அவளை வரவேற்றான். என்னாச்சு எப்படி இருந்தது ட்ரிப் என்றதும் தீபா அவளை தொட்டுப்பரத்தாள். ஜுரம் வந்திருந்தது. அவள் தும்மிக்கொண்டே இருந்தாள். டாக்டர் வந்து பார்த்துவிட்டு சாதாரண ஜுரம் தான் என்று சொன்னார். மதியம் போல எழுந்து நீலனுக்கு ஃபோன் செய்தாள். என்னாச்சு ரஞ்சனி குரலே சரியில்லை என்றான். ஜுரம். நீ சேஃப் ஆக போய் சேர்ந்து விட்டாயா என்றாள். ம் இப்போதுதான் வந்தேன். சரி ரஞ்சனி மருந்து சாப்பிடு நாளை பேசுகிறேன் என்றான். ஓகே என்றபடி ஃபோன் வைத்தாள். பிரேம் அவளுக்காக ஆவி பிடிக்க வெந்நீர் கொண்டு வந்தான். ஏன் மாமா இதெல்லாம் நீங்கள்.. நீ மூச்சு விட மிகவும் கஷ்டபடுகிறாய் என்று நீலன் இப்போதுதான் போனில் சொன்னான். அவன் அதற்குள் உங்களுக்கு சொல்லிவிட்டானா ? என்றாள்.
ஆவி பிடித்த பிறகு சற்று தேவலை மாமா என்றாள். சரி வா ஏதாவது சாப்பிடலாம் என்றான். எனக்கு பசிக்கவில்லை. பிரட் வாங்கி வைத்திருக்கிறேன் அதையாவது சாப்பிடு என்றான்.தீபா அக்கா எங்கே ? குமரனை ஸ்கூலில் இருந்து அழைத்து வர போயிருக்கிறாள். அவள் நிற்கவே தடுமாறினாள். அவன் தோளை கெட்டியாக பிடித்து கொண்டாள். தீபா வந்ததும் ஜுரம் குறைந்திருக்கிறது.. நீ நாளைக்கும் ஆபீஸ் போக வேண்டாம் என்றாள்.என்ன ஆச்சு பிரேம் இவளுக்கு ? காதல் ஜுரம். ஓ அவன் வேலையா இது ?
என்றாள். அக்கா அவன் ரொம்ப நல்லவன் என்றாள்.யாரு ? நீலன் தான்.
மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து விட்டாள். அவளுக்கு என்ன நடந்தது என்பதே மங்கலாக நினைவிருந்தது. நீலன்.. அவனுக்கு ஃபோன் பண்ண வேண்டும் என்று மனம் துடித்தது. அவன் ஃபோன் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்தே ஃபோன் எடுத்தான். எங்கு போயிருந்தாய் இத்தனை காலையில். கோவிலுக்கு உனக்கு குணமாக வேண்டியிருந்தேன் என்றான். நிஜமாகவா? என்னை நீ இன்னும் நம்பவில்லையா? ம் நம்புகிறேன். என்ன வேண்டிக் கொண்டாய் .. அதெல்லாம் சொல்லக்கூடாது. தீபா வந்து விட்டாள். யார் போனில் என்றாள் ? நீலன் . ம் நடக்கட்டும் என்றாள். நான் இன்று ஆபீஸ் போகவில்லை. பிறகு கால் பண்ணுகிறேன் என்றாள். அவள் மனதில் நீலன் பாடிய பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. அவள் உடலும் மனமும் துள்ளி குதித்து கொண்டிருந்தது. சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். ஆபீஸ் முழுக்க உன்னையும் அவனையும் பற்றித்தான் பேச்சு. அவன் பாட, நீ பாட ஒரே ரொமான்சாம் . இவள் வேறு என்ன சொன்னார்கள் என்றாள். நான் நேரில் சொல்கிறேன் என வைத்துவிட்டாள்.
இவளும் கோவிலுக்கு போக விரும்பினாள். நீலன் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள்.பிரேம் இரண்டே நாளில் ரஞ்சனியிடம் இவ்வளவு மற்றமா என ஆச்சர்யப்பட்டான். மாலையில் எல்லோருக்கும் கேக் செய்து கொடுத்தாள் ரஞ்சனி. ரொம்ப தாங்க்ஸ் என்றான் குமரன்.அவள் மனம் எதை தேடியதோ அதை அடைந்து விட்டதாகவே நினைத்தது. நீலன் கால் பண்ணியிருந்தான்.அவள் மெதுவாக எடுத்து பேச தொடங்கினாள்.நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்றான். சொல்லு நீலன் எதுவாக இருந்தாலும் சொல்லு என்றாள்.