nizhal tharum vasantham in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 45

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 45

இருப்பதிலேயே எளிமையானது அன்புதான்.அதை
வாரிக்கொடுப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும்.நீலன் ரஞ்சனி காதல் என்பதும் அப்படித்தான். ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த அன்பை முறையாக கொடுக்கும் நேரம் வந்தது. சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள் வாழ்த்துக்கள் ரஞ்சனி. உன்னுடைய நீண்ட கால பொறுமைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றாள். சௌமியாவுக்கு தன்னுடைய தொலைந்த காதல் மீது ஏக்கம் உண்டானது. ராக்கியும் ரஞ்சனியிடம் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்தான்.ரஞ்சனியும், நீலனும் பீச் போயிருந்தனர். என்ன திடீர்னு பீச்சுக்கு என்ன பண்ண போற என்றாள். நீ இப்படியே பேசிக்கொண்டிரு.. சும்மா சொன்னேன் என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டாள் . அவள் ஏதோ சொல்ல வந்தாள். நீ சொல்லியதெல்லாம் போதும் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். எனக்காக அந்த பாட்டை பாடேன் என்றாள். அவன் அடங்கிய குரலில் அந்த நாடோடி பாடலை பாடினான். அவன் மடியில் தலை வைத்து கொண்டாள்.

சுபா ஊரில் இருந்து வரும் நாளுக்காக காத்திருந்தான் பிரேம். நிச்சயத்துக்கான நாள் குறிக்க ஐயரை வர சொல்லியிருந்தான். சுபாவும் வந்து விட்டாள். நல்ல நாள் பார்த்தார்கள். அந்த மாதம் 15ம் தேதியே நல்ல முகூர்த்த தேதி என்று சொன்னார்.நிச்சயத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்தார். சமையல்,நாதஸ்வரம், மேளம் போன்றவைகளுக்கு அட்வான்ஸ் கொடுத்தான். டி ஜே மியூசிக் ஏற்பாடும் பண்ணியிருந்தான். பிரேம் பந்தல்காரர்களுக்கும், பூ டெகரேஷன் செய்பவர்களுக்கும் தகவல் கொடுத்தான்.இன்னும் 10 நாள் இருந்தது விழா நடத்த. முக்கியமான எல்லோரையும் அழைக்க வேண்டும் என எண்ணினான். அதன்படி லிஸ்ட் ரெடி பண்ணி பத்திரிக்கை அனுப்பினான். ஒரு 150 பேராவது வர வேண்டும் என விரும்பினான். கல்யாணத்துக்கு 600 பேராவது வருவார்கள் என கணக்கு போட்டான். கதிரேசனுக்கு ஃபோன் பண்ணி குடும்பத்தோடு வர சொன்னான். அவன் இரண்டு மூன்று நாட்களில் வருவதாக சொல்லி இருக்கிறான்.

ரஞ்சனியின் கல்யாணத்தை தன்னுடைய பெண்ணின் கல்யாணம் நடத்துவது போல் நடத்த ஆசைப்பட்டான் பிரேம் .ரஞ்சனி , நீலன் இருவரையும் கூப்பிட்டு பேசினான். அவர்களுடைய ஃபிரண்ட்ஸ், காலேஜ்மேட்ஸ் , ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள் என யாராவது இருந்தால் அவர்களையும் அழைக்கும்படி கேட்டுக்கொண்டான்.தன்னுடைய எல்லா ஆபீஸ் ஸ்டாஃப்களுக்கும் invitation அனுப்பியிருந்தான்.ரஞ்சனி மனதில் லேசான பயம் இன்னும் இருந்தது. அதை நீலன் கண்டுபிடித்து விட்டான். இன்னும் என்ன தயக்கம் ரஞ்சனி என்றான். என்னவோ ஒரு பெண்ணுக்குள்ள இயல்பான பதட்டம்தான் என்றாள். பதட்டத்தை நான் போக்கவா? அதற்கு இன்னும் நாள் இருக்கிறது. நான் சென்னை போய் வரலாம் என்று இருக்கிறேன் என்றான். என்ன விஷயம். சில பேரை நேரில் அழைக்க வேண்டியிருக்கிறது என்றான் நீலன். அதெல்லாம் வேண்டாம் நீ போனால் ஒரு வாரம் ஆக்கிவிடுவாய் என்றாள். இரண்டே நாள் தான் வந்து விடுவேன் . ரொம்ப முக்கியமானவர்கள் என்றான்.பிரேமிடம் போய் முறையிட்டாள் ரஞ்சனி. இவன் சென்னை போகிறானாம் என்னவென்று கேளுங்கள் என்றாள். அவன் முன்பே என்னிடம் சொன்னான் நானும் வேண்டாம் என்று தான் சொன்னேன்.ஒரு சேஞ்ச் ஆக இருக்கட்டுமே. அதன் பிறகு எங்கு போனாலும் உன் கூடத்தான் போக போகிறான். சரி மாமா. குட் கேர்ள் .

சுபா, தீபா, ரஞ்சனி,சௌமியா ஆகியோர் நிச்சயத்துக்கும்,கல்யாணத்துக்கும் டிரஸ் எடுக்க போயிருந்தனர். குமரன் வீட்டிலேயே லலிதா கூட விளையாடி கொண்டிருந்தான். பிரேம் துணிக்கடையின் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தான். அவன் மனதில் பல புதிய சிந்தனைகள் உண்டாயிற்று. இனி ரஞ்சனி வாழ்வில் முடிவெடுக்க நீலனும், சுபாவும் இருப்பார்கள். நீலன் ஃபோன் பண்ணியிருந்தான். இன்று இரவு சென்னை விட்டு கிளம்பி விடுவதாக சொல்லியிருந்தான். காரில் தான் போயிருந்தான். நீலன் எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்க முடிந்ததா ? என்றான். முக்கியமானவர்கள் எல்லோருக்கும் வைத்து விட்டேன். ஒரு சிலருக்கு தபாலில் அனுப்பி விட்டேன் என்றான். நீலன், ரஞ்சனி காத்திருக்கிறாள் சீக்கிரம் வந்து சேர் என்றான்.தீபா இவனை கூப்பிட்டாள். இந்த புடவை எப்படி இருக்கிறது என்றாள். எனக்குத்தான் எடுத்தேன் என்றாள். நன்றாக இருக்கிறது. ரஞ்சனி எங்கே ? ரெஸ்ட் ரூம் போயிருக்கிறாள். அவள் வந்ததும் நீலன் ஃபோன் பண்ணியதாக விஷயத்தை சொன்னான்.

பிரேமுக்கும் உடைகள் எடுத்தார்கள் . கல்யாணத்துக்கு வேஷ்டி சட்டை. ரிசப்ஷனுக்கு வேறு மாதிரியான மாடர்ன் உடைகள்.சௌமியா மணி ஆகிவிட்டது நான் கிளம்ப வேண்டும் குழந்தை விழித்து கொள்வாள் என்றாள். பிரேம் நான் உன்னை வீட்டில் டிராப் செய்கிறேன் என்றான். நான் ராக்கியை வர சொல்லுகிறேன் என்றாள். ராக்கி போனை எடுக்கவில்லை. நாம் போகலாம் பிரேம் என்றாள். நீங்கள் மூவரும் டிரஸ் எடுத்துக்கொண்டு இருங்கள் நான் சௌமியாவை வீட்டில் விட்டு வருகிறேன் என்றான். சௌமியா வீட்டில் அவள் அம்மாவும். குழந்தையும் இருந்தனர். குழந்தை மோகிதா இன்னும் தூங்கி கொண்டிருந்தது. அவள் குழந்தையை தூக்கிகொண்டு உள்ளே போனாள். இவனுக்கு ராக்கியிடம் இருந்து ஃபோன் வந்தது. இல்லை நான் சௌமியாவை வீட்டில் டிராப் செய்து விட்டேன் என்றான். ரொம்ப நன்றி பிரேம் என்றான்.

சௌமியா நான் கிளம்புகிறேன் என்றான். இரு ஏதாவது சாப்பிட பண்ணி தருகிறேன் என்றாள். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்றான். சொன்னால் கேட்கணும். ராக்கி அதற்குள் வந்து விட்டான். சௌமியா சௌமியா என குரல் குடுத்தான். தர்பூசனி பழம் வாங்கி வந்திருந்தான். இரு பிரேம் இப்போது நறுக்கி தருகிறேன் என்றான். உள்ளே போய் கத்தி எடுத்துக்கொண்டு வந்து சீராக கட் பண்ணி கொடுத்தான். பிரேம் உதடு முழுக்க சிவப்பானது. சரி நான் வருகிறேன் என கிளம்பி மீண்டும் துணிக்கடைக்கு வந்த போது ஷாப்பிங் முடிந்திருந்தது.ரஞ்சனி, தீபா,சுபா ஆகியோர் வண்டியில் எறினார்கள். என்ன ஷாப்பிங் எல்லாம் திருப்தி ஆக இருந்ததா என்றான். அதெல்லாம் ஓகே. கடைசி நேரம் வரை ஷாப்பிங் இருக்கும் என்றாள் சுபா. வீட்டுக்கு போய் சாப்பிடலாமா இல்லையை ஹோட்டல் ஏதாவது போவோமா என்றான். ஹோட்டல் போகலாம் என்றாள் ரஞ்சனி.

மாலை 3 மணி ஆகி விட்டது எல்லோரும் வீடு திரும்ப.எல்லோரும் வாங்கிய பொருட்களை சாமி அறையில் வைத்தனர். குமரனும்,லலிதாவும் அவர்களுக்கு வாங்கிய பொம்மைகளையும் , பலூனையும் வாங்கி கொண்டனர். பிரேம் அவனுடைய அறைக்கு போனான். தீபா என்ன பிரேம். இங்கேதான் வாயேன் என்றான். வேண்டாம் நீ சில்மிஷம் செய்வாய் என்றாள். அவளை அணைத்தவாறே நாமும் எங்காவது கல்யாணம் முடிந்தவுடன் போனால் என்ன என்றான். உன் சொந்த ஊருக்கா ? எப்படி கண்டுபிடித்தாய் . உன் வேலையே அது தானே? என்ன இப்படி சொல்லிவிட்டாய். நீ விரும்பும் இடத்துக்கே போவோம் என்றான். நீ கையை எடு யாராவது பார்த்து விட போகிறார்கள். ம் நீ ரொம்பத்தான் யோசிக்கிறாய். எனக்கு உன்னை விட்டால் வேறு யோசனை இல்லை என்றாள்.

மாலை பந்தல்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வேலையை துவங்கிவிட்டார்கள். பூ அலங்காரம் செய்பவர்களும் அவர்களுடைய வேலையை செய்ய துவங்கி விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் டீ, ஸ்நாக்ஸ் கொடுக்க சொல்லி இருந்தான் பிரேம். அலங்காரத்தில் ஒரு குறையும் இருக்க கூடாது என்று சொல்லி வைத்திருந்தான். கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். மாலை 7 மணிக்கு குடும்பத்தார் மொத்தமும் அதில் பங்கேற்றனர். நீலன் 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான். அவன் வந்து சேர்ந்ததும் தான் ரஞ்சனிக்கு நிம்மதி உண்டாயிற்று. நீலன் அவளுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு சாரி வாங்கி வந்திருந்தான். தாங்க்ஸ் நீலன் என்றாள். நான் முதன் முதலில் உனக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன் வெறும் தாங்க்ஸ் தானா என்றான். என்னுடைய எல்லாமும் உனக்குத்தான் என்று சொல்லிவிட்டு மறைந்தாள் ரஞ்சனி .

பிரேம் .. என்ன தீபா? நாம் சற்று அதிகமாக செலவு செய்கிறோமோ ? என்றாள். இது உன் அப்பா ஆசை . அதில் குறை ஏதும் வைக்க நான் தயாரில்லை என்றான். டிபன் சாப்பிட எல்லோரும் அமர்ந்திருந்தார்கள்.இங்கே வா நீலன் இங்கே என்று சைகை செய்தாள் ரஞ்சனி. அவள் பக்கத்தில் போய் அமர்ந்தான். எப்படி இருக்கிறது இந்த டிரஸ்.நல்லா இருக்கு . நான் இன்று என்னுடைய ஃபிரண்ட்ஸ் சிலரை invite பண்ண போகிறேன் என்றாள். நானும் வரட்டுமா ?வேண்டாம் அவர்கள் என்னை கிண்டல் செய்வார்கள்.பிறகென்ன என்னைத்தானே கல்யாணம் பண்ண போகிறாய். ம் நீ அருகில் இருந்தால் எனக்கு பேச்சு வராது. போதும் கிசுகிசுத்தது சாப்பிடுங்கள் ரெண்டு பேரும் என்றாள் சுபா.
பிரேம் வேறு ஏதாவது வேலை பாக்கி இருக்கிறதா ?என்றாள் சுபா. ஒன்றுமில்லை.நான் ஆபீஸ் வரை போய் விட்டு வருகிறேன் என்றான்.

சௌமியா பிள்ளையை தொட்டிலில் போட்டு தாலாட்டி கொண்டிருந்தாள். ராக்கி வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தான். நாம் நேரத்தோடு ஃபங்சன் போக வேண்டும் என்றாள். நிச்சயமாக. நீ ப்யூடி பார்லர் போவதென்றால் சொல்லு வழியில் உன்னை இறக்கி விட்டு செல்கிறேன் என்றான். நாளைக்கு போய்க்கொள்கிறேன் என்றாள். ஃபங்சன் நாளை மறுநாள் தான் என்றாள். அவன் விடைபெற்றுக்கொண்டான். ராக்கியிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என பிரேம் சொல்லியிருந்தான்.என்ன பிரேம் முக்கியமாந விஷயம். இந்த டாகுமெண்ட்ஸ் எல்லாம் சரி பார்த்துவிட்டு ஏதாவது திருத்தம் இருந்தால் சொல் என்றான். சரி பிரேம் . இரண்டு நாட்கள் டைம் எடுத்தக்கொள். ஒண்ணும் அவசரமில்லை. நீலனையும், ரஞ்சனியையும் கூட ஆபீஸ் வார சொல்லியிருந்தான். எல்லாவித மேனேஜ்மெண்ட் பொறுப்பும் எனக்கு பிறகு யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். அதற்கான டாகுமெண்ட்ஸ் ரெடி என்றான். இதுக்கு என்ன அவசரம் மாமா. நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் . உன் கல்யாணத்துக்கு பிறகு சொல்கிறேன் என்றான்.

நீலன் அதிகாலையிலேயே குளித்து ரெடி ஆகி விட்டான். முதலில் கோவிலுக்கு போய் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ரஞ்சனியும் தயாராகி விட்டாள். மங்கள நாள் இனிதே துவாங்கியது . மண்டபத்தில் ஆட்கள் வர துவங்கினர் . சௌமியாவும், ராக்கியும் மற்றும் சுபாவும் வந்தவர்களை உபசரித்தனர். பிரேம் , தீபா இருவரும் மணமேடையில் ஐயர் கேட்ட சாமான்களை சரி பார்த்து கொண்டிருந்தனர். குமரகுரு படத்துக்கு பெரிதாக மாலை போடப்பட்டு இருந்தது. கோவிலுக்கு போய் வந்த நீலனும், ரஞ்சனியும் குமரகுரு படத்தின் முன் விழுந்து வணங்கினர்.