nizhal tharum vasantham in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 48

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 48

பிரேமுக்கு பிரிவு உபச்சார விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது. தீபா ஏன் பிரேம் இப்படி செய்தீர்கள். ரஞ்சனி சின்ன பெண். அவளால் இத்தனை பொறுப்புகளையும் தாங்க முடியுமா என்றாள். ம் நானும் யோசித்தேன் . அவள் வேகத்துக்கு கம்பெனி தாங்குமா என்பதையும் பார்க்க வேண்டும். நான் ஸ்வாமிகளை பார்த்துவிட்டு வருகிறேன் என்றான். சரி. ஸ்வாமிகள் சோர்வாய் இருந்தார். எல்லாவற்றையும் உதறிவிட்டு நீ என்னவாக போகிறாய் என்றார். நான் நானாக போகிறேன். என்னுடைய இயல்பே மாறிவிட்டது . என்னை நான் திரும்ப மீட்டு கொள்வேன் என்றான். நீ நன்கு யோசித்து விட்டாயா? அது சுலபமில்லை. காசு இல்லாவிட்டால் உலகம் உன்னை மதிக்காது. நான் என் தேவைக்கு சம்பாதிப்பேன் என்றான். நல்லது அடுத்த முறை நான் நிச்சயம் இங்கு இருக்க மாட்டேன் என்றார். ஆசீர்வாதம் வாங்கி கொண்டான்.

பிரிவ உபச்சார விழாவிற்கு தீபாவும் வந்திருந்தாள். பிரேம் அவன் பின்னணி, அவனை மணந்து கொண்டது , குமரகுரு மறைந்தது, குமரன் பிறந்தது என எல்லாமும் அவள் கண் முன் நிழலாடின. நவீனையும் அவள் நினைக்க தவறவில்லை. சௌமியா, ராக்கி மற்றும் நீலன், ரஞ்சனி அமைதியாக எல்லோரும் பிரேம் பற்றி பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர். பிரேம் இறுதியாக பேச எழுந்தான். எல்லோருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னிடம் இந்த கம்பெனியை ஒப்படைத்து சென்ற குமரகுரு அய்யா அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.தீபா, ரஞ்சனி உங்களுக்கும் என் நன்றி. எதுவுமே நிலை இல்லாத இந்த உலகத்தில் அமைதி தேடி நான் இந்த நகரத்தையும், எனக்கு பிரியமானவர்களையும் விட்டு செல்கிறேன். இது ஒரு வகையில் சுயநலம் தான். ஆனால் என்னுடைய ஆன்மா விடுதலையையே விரும்புகிறது. இந்த பயணத்தில் துணை நின்ற அத்தனை பேருக்கும் நன்றி. விடைபெறுகிறேன் என்றான். எல்லோரும் கை தட்டினார்கள்.

நாம் எங்கே போகிறோம் என்றாள் தீபா. நீ அவசரப்படவேண்டாம். நான் கதிரேசனிடம் எனக்கொரு வேலைக்கு சொல்லியிருக்கிறேன். நீ இங்கிருக்கும் சூழ்நிலை அனுசரித்து பிறகு வந்தால் போதும் என்றான்.கட்டாயம்
போய்த்தான் ஆக வேண்டுமா மாமா என்றாள் ரஞ்சனி. நான் பல முறை சொல்லிவிட்டேன். நான் எனக்கான உலகத்தை தேடி போகிறேன் என்றான்.நீலன் என்ன எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறாய் ?நான் அடிக்கடி வந்து பார்த்து கொள்கிறேன் . கதிரசனிடம் சொல்லி பிரேமுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைக்குமா என பார்க்க சொன்னான். கதிரேசனும் தன் பங்குக்கு அறிவுரை கூறினான். இப்போதே ஊருக்கு வர வேண்டிய அவசியம் என்ன . நிம்மதி என்பது நாமாக நினைத்து கொள்வது தான் என்றெல்லாம் கூறினான். குமரனை அமெரிக்கா அனுப்பியது பெரிய தவறு. தனியாக பிள்ளை தவித்து போயிருப்பான் என்றும் கதிரேசன் கூறினான்.

பிரேம் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டான். அதன் விளைவுகளை சந்திக்க தயாராய் இருப்பான். இம்முறையும் அவனுடைய முடிவு பல பேர் வாழ்க்கையில் புயலை கிளப்பிய போதும் அவன் உறுதியாய் இருந்தான். என்ன உங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் அவ்வளவுதானே? இங்கேயே உங்களுக்கு தனி வீடு கட்டி தர சொல்கிறேன் என்றான் நீலன்.உங்களால் என்னை புரிந்து கொள்ள முடியாது. நிரந்தரமின்மையை வெறுக்கிற என்னால் தற்காலிக ஏற்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தியானம் அதற்குள் ஒரு தியானம். மனம் வேண்டுவதை அடைய நிலையான சூழ்நிலை வேண்டும். அதை தேடி போகிறேன் என்றான்.தீபா இவருக்கு என்ன ஆயிற்று என்று புரிந்து கொள்ள முடியவில்லையே. எல்லாவற்றையும் உதறுவதன் மூலம் என்ன கிடைக்க இருக்கப்போகிறது.

பிரேமை ஒரு கட்டாயப்படுத்தி ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்து போனார்கள். அவர்கள் பிரேமிடம் ஒரு குறையுமில்லை. அவர் தேடுதலை தீவிரமாக்கி இருக்கிறார். அவர் தேடுவது ஒன்றும் இல்லை வெறும் அமைதி தான் என்று உணர்ந்ததும் அவர் திரும்ப இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார் என்றனர். எல்லோருடைய வாழ்விலும் வரும் ஒரு பகுதி தான் இது என்றனர். வீட்டுக்கு வந்தவுடன் சிறிது நேரம் தூங்கினான். அவள் அவனை எழுப்பி ஜூஸ் குடுத்தாள். என்ன ஆச்சு தீபா எதற்கு டாக்டர் வரை போனீர்கள் என்றான். எனக்கு ஒன்றும் இல்லை.அப்போது ஃபோன் வந்தது ஸ்வாமிகள் முக்தி அடைந்து விட்டதாக சேதி வந்தது. பிரேம், தீபா, ரஞ்சனி, நீலன் ஆகியோர் ஆசிரமம் நோக்கி விரைந்தனர்.

இன்று காலை அவர் தன்னுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசியதாகவும், மன்னிப்பு கேட்டதாகவும் சொன்னார்கள். 12 மணிக்கு தியானத்தில் இருக்கும் போதே உயிர் போய்விட்டது. போலீஸ் வந்து விசாரித்தார்கள். அவருடைய மகள் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இன்னமும் திருமணம் ஆகியிருக்கவில்லை. இவன் ஆறுதலாக பேசினான்.அவர் கடைசியாக சந்நியாசம் எனக்கு தோல்வியைத்தான் தந்திருக்கிறது என்று சொன்னார். உன்னை நான் இப்படி விட்டு செல்வதற்காக வருத்தப்படுகிறேன் என்றார். அவர் நிலமையை அவரே மோசமாக்கி கொண்டார். நான் வருகிறேன் என விடை பெற்றுக்கொண்டாள் . போலீஸ் அனுமதி பெற்று அவருடைய போட்டோ ஒன்றை எடுத்தான். அதை பாக்கெட்டில் வைத்து கொண்டான். நிறைவேறாத ஆசைகள் எப்பவுமே நம் ஆன்மாவுக்கு எதிரிகள் . நான் சௌமியாவை விரும்பியதும் அப்படித்தான்.

வீட்டுக்கு வந்து குளித்தான். நெற்றியில் பட்டையை போட்டுக்கொண்டு தியானத்தில் இறங்கினான். ஒரு மணி நேரம் இருக்கும்.ஸ்வாமிகள் புகைப்படத்தை தொட்டு கும்பிட்டான். நீலனும், ரஞ்சனியும் டாகுமெண்ட்சில் ஏதோ சந்தேகங்கள் இருப்பதாக சொல்ல ஆபீஸ் புறப்பட்டு சென்றான்.தீபா மதியம் போல சாப்பிட்டு விட்டு கார்டன் போய் ஊஞ்சலில் அமர்ந்தாள்.தனக்கு வாய்த்தது எல்லாம் தன்னை விட்டு நழுவி போனதை எண்ணி வருந்தினாள். குமரன் என்ன நினைப்பானோ அவன் மனது என்ன பாடுபடுமோ என்று யோசித்தாள். சுபாவுக்கு ஃபோன் பண்ணினாள் . பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின் குமரன் எப்படி இருக்கிறான் என்றாள். முன்னை விட இப்போது பரவாயில்லை. விளையாட்டில் ஆர்வம் செலுத்துகிறான் என்றாள். பிரேம் எப்படி இருக்கிறான் என்றாள். இவள் நடந்ததை சொல்லி அழுதாள். நான் ஒரு முறை பிரேமிடம் பேசி பார்க்கிறேன் என்றாள்.


மாலை 8 மணிக்கு நீலன், ரஞ்சனி அவர்களோடு பிரேமும் வந்தான். நல்ல வேளை மாமா நீங்கள் வந்தீர்கள். இல்லையென்றால் அந்த விஷயம் தெளிவு அடைந்து இருக்காது . பிரேம் நீ சுபாவிடம் பேசினாயா தீபா? ஆமாம். அவளும் என்னென்னவோ சொல்கிறாள். உன்னைவிட பல மடங்கு வருத்தப்பட்டாள் . நான் இன்று இரவு கிளம்புகிறேன் என்றான். ரஞ்சனி இன்னும் இரண்டு நாளில் நீலன் பர்த்டே வருகிறது அதை கொண்டாடிவிட்டு போகலாம் என்றாள்.நீலன் உனக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றான். சரி இரண்டு நாட்கள்தானே இருக்கிறேன் என்று சொன்னான்.நீலனுக்கு டிரஸ் எடுப்பது, அவனுக்கு கேக் ஆர்டர் செய்வது என்று நாட்கள் ஓடிவிட்டது. நீலன் தன் வாழ்வில் வரும் சிறப்பான பர்த்டே என்றான். சௌமியாவும், ராக்கியும் வந்திருந்தார்கள். நீலன் கேக் வெட்டி ரஞ்சனிக்கு ஊட்டினான். தீபா மகிழ்ச்சி அடைந்தாள்.

அன்று இரவு பிரேமை வழி அனுப்ப தீபா,ரஞ்சனி,நீலன் ஸ்டேஷன் வந்திருந்தார்கள். நீலன் எல்லாமே உன் கையில்தான் இருக்கிறது என்றான். மனம் நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தது. காலை 6 மணிக்கெல்லாம் ஊர் போய் சேர்ந்து விடலாம்.சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். நீ எங்களை இப்படி தவிக்க விட்டு போவது நியாயமில்லை என்றாள். ம் எல்லாம் முடிந்த கதை . இனிமேல்தான் என் கதை ஆரம்பம் என்றான். அவள் போனை வைத்துவிட்டாள். சௌமியா உனக்காக நான் எதையுமே தியாகம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டான். இவன் கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தான். அதில் பிரதானமாக அவனுடைய அப்பா, அம்மா போட்டோ, தீபா, குமரன் போட்டோ இருந்தது. உடைகள் இருந்தன. வீட்டை திறந்தான். ஒரே தூசியாக இருந்தது. அவற்றை உடை மாற்றிக்கொண்டு சுத்தம் பண்ணினான்.

காலையில் கதிரேசன் வீட்டுக்கு போய் சாப்பிட்டான். அவனுடைய மனைவி பிள்ளைகளை ஸ்கூல் அனுப்ப தயாராகி கொண்டிருந்தாள். கதிரேசன் 11 மணி போல இவன் வீட்டுக்கு வந்தான், எங்கிருந்தோ ஒரு கேஸ் சிலிண்டர் கொண்டு வந்திருந்தான். நீ ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய் என்றே தெரியவில்லை என்றான் கதிரேசன். மழை வரும் போல இருந்தது. கதிரேசன் சாயங்காலம் வந்து பார்ப்பதாக சொல்லி போனான். பிரேம் போய் காய்கறிகள் வாங்கி வந்தான். சமைக்க தொடங்கினான். தீபா ஃபோன் பண்ணி என்ன பிரேம் என்ன பண்ணுகிறாய் என்றாள். சமைக்கிறேன் என்றான். நீ என்ன பண்ணுகிறாய் என்றான். நான் மதியம் நீலனுக்கும், ரஞ்சனிக்கும் சாப்பாடு கொண்டு போக போகிறேன் என்றாள்.

மதியம் சாப்பிட்டுவிட்டு ஹாலில் தலையணை போட்டு தூங்கினான். கனவு அதில் இவன் உடல் எரிவது போலவும் எல்லோரும் சுற்றி நின்று அழுவது போலவும் கனவு கண்டான். ஸ்வாமிகள் மட்டும் சிரித்து கொண்டிருந்தார். இவன் திடுக்கிட்டு விழித்தான்.மணி 4 ஆகி வீட்டிருந்தது. போய் பால் வாங்கி வந்தான்.டீ போட்டு குடித்தான். கொஞ்ச நேரம் நியூஸ் பார்த்தான். கோவிலுக்கு கிளம்பினான். கடவுளே என்னை காப்பாற்று என்று வேண்டிக்கொண்டான். அங்கு வந்திருந்த சிலர் இவனை அடையாளம் கண்டு கொண்டனர். இவனை நலம் விசாரித்தனர்.அதிகம் அவர்கள் கேள்வி கேட்காதது ஆறுதல் அளித்தது. மறு நாள் காலையில் தீபா வந்து விட்டாள். இவன் அவள் ரூமுக்கு ஏ சி போட சொல்லியிருந்தான்.

மாலையில் சிறிது தூரம் நடந்தார்கள். என்ன தீபா திடீரென வந்துவிட்டாய் என்றான். என்னால் தனியாய் இருக்க முடியவில்லை. வருகிற திங்கள்கிழமை வேலையில் ஜாயின் பண்ணுகிறேன் என்றான். 8000 ரூபாய் சம்பளம். நல்லது என்றாள். அவளுக்கு சலனங்கள் இல்லை. இருவரும் மார்க்கெட் போய் வந்தனர். அவனுக்கு பிடித்த காய்கறிகளாக வாங்கினாள். அவர்கள் வீட்டின் மாடியில் சில செடிகளை நட்டுவைத்தாள்.ரோஸ் செடிகள்,செம்பருத்தி போன்றவை அவளுக்கு இஷ்டம்.சண்டே என்பதால் இரு சிறுமிகளும் இவன் வீட்டுக்கு வந்திருந்தனர். தீபாவோடு பேசிக்கொண்டும்,விளையாடிக்கொண்டும் இருந்தனர். மதியம் இவர்களோடு சாப்பிட்டனர். கதிரேசன் 7 மணி போல வந்து கூட்டிப்போனான். என்ன தீபா டிவி பார்க்கிறாயா என்றான். ஆமாம் அமெரிக்கா நியூஸ் தான். இப்போது அங்கே பனிப்புயல் வீசுகிறது என்றாள்.எல்லாம் இரண்டு நாட்களுக்குள் அடங்கி விடும் என்றான்.