Alagiya thimiree!! - 2 in Tamil Love Stories by pooja books and stories PDF | அழகிய திமிரே!!!! - 2

The Author
Featured Books
Categories
Share

அழகிய திமிரே!!!! - 2

ஹீரோயின் அறிமுகம்....


சென்னை... 


அந்த நடுத்தர வர்க்கத்து வீட்டின் அதிகாலை மௌனத்தை ஆருத்ராவின் கொலுசு சத்தம் மெல்லக் கலைத்தது.

ஐஞ்சறை அடி உயரம்... செதுக்கிய ஓவியம் போன்ற அழகு... 


உருண்டையான முகம் , சந்தன தேகம் மானை ஒத்த விழிகள்..


அடர்த்தியான இமைகள்..


எடுப்பான மூக்கு அதில் குட்டி நோஸ் பின்....


செந்துர இதழ்கள்..


இந்திரன் படைக்கும் போதே வியந்து விட்டான் போலும் அதான் மற்றவர் கண் படாமல் இருக்க தாடையில் கொஞ்சம் பெரிதாக மச்சத்தை வைத்து விட்டான்.......


அதை வைத்ததும் தான் அவள் பேரழகியாக தெரிவாள் என்று தெரியாமல்...


அழகை விட அவளது விழிகளில் மின்னும் அந்தத் தீர்க்கமான அறிவுதான் அவளுக்குக் கவசம்......




ஒரு பூவின் மென்மை அவளது தேகத்தில் இருக்கலாம், ஆனால் அவளது குணம் ஒரு வைரம்!....



குளித்து தலைக்கு டவலை கட்டி கொண்டு 

அவள் கண்ணாடி முன் நின்று தன் நெற்றியில் அந்தச் சிறிய கருப்புப் பொட்டை வைத்தபோது, அவளது பிம்பம் அவளுக்கே ஒரு சவாலை விடுத்தது....


மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் அந்த மெல்லிய தோள்களில் தான் இருந்தது...


வெளியே முற்றத்திற்கு வந்தவள் துளசி மாடத்தில் விளக்கை ஏற்றி துதி பாடி விட்டு..


பூஜை அறைக்கு சென்றாள்..


அங்கே மிடுக்காக காட்சி தந்தார் அவளின் இஷ்ட தெய்வங்கள் ஆன ராமரும் ராவணனும்.......


ஆம் அவள் ஒரு ராம ராவண பக்தை‌‌...


மனைவியை தவிற வேறு பெண்ணை நிழலிலும் தீண்டாத ராமனை பிடிக்கலாம்...


ஆனால் ராவணனை பிடிக்க காரணம் ஏன் என்று கேட்டால் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை தீண்ட கூடாது என்ற கர்ப்பு நெறிக்காக அவரை பிடிக்குமாம்.......


அவளது சிந்தனை ஒரு தனித்துவம் மிக்கது.......


ராமனின் ஏகபத்தினி விரதமும், ராவணனின் 'பெண் சம்மதமின்றித் தீண்டக் கூடாது' என்ற அந்த உயரிய கட்டுப்பாடும் அவளைப் பொறுத்தவரை ஒரு ஆணின் முழுமை.....


"தனக்கு வரப்போறவன்... ராமனைப் போல நேர்மையாகவும், ராவணனைப் போல அதிகாரமிக்கவனாகவும் இருக்க வேண்டும். ஆனால் அந்த அதிகாரத்திலும் ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டும்!" என்று நினைப்பவள் அவள்.......


பாவம் விதி என்ன எழுதி வைத்து இருக்கிறது அவளுக்கு என்று தெரியவில்லை ....


பூஜையை முடித்துவிட்டு, வெளியே வர அங்கே நடு ஹாலில் சிரித்த முகமாக இருந்தார் அவளின் அப்பா ஹரி சந்திரன்...

குட் மார்னிங் அப்பா என்று புன்னகையுடன் சொன்னவள் அங்கு இருந்த நாற்காலியில் ஏறி அவர் ஃபோட்டோக்கு மல்லிகை மாலையை அணிவித்து விளக்கு ஏற்றி வைத்தாள்...

ஆம் அவளுக்கு அப்பா இல்லை அவள் பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே இறந்து விட்டார்.........


அவர் போட்டோவை தன் விரலால் வருடியவள் கண்ணில் சிறு கண்ணீரும் எட்டி பார்த்தது..

அதை துடைத்து கொண்டாள் ஆருத்ரா.....

எல்லா நாள போலவும் இந்த நாளும் நல்ல நாளா அமையனும் என்று கண்களை மூடி வேண்டி கொண்டாள் ருத்ரா.....


தலைத் துண்டை அவிழ்த்தாள். அடர்த்தியான ஈரம் சொட்டும் கூந்தல் அவள் முதுகில் ஒரு கருப்பு அருவியாக இடை வரை இறங்கியது.


சமையல் அறை சென்றவள் அங்கு மும்முறமாக சமைத்து கொண்டு இருக்கும் தன் அம்மா சங்கவியை பின் இருந்து கட்டி அணைத்து குட் மார்னிங் மா என்று சொல்ல...


மார்னிங் டா என்று காஃபியை நீட்ட அதை வாங்கி குடித்தாள்.......


ருத்ரா இத  உன் தங்கச்சிக்கு கொடு என்று காஃபியை கொடுத்து விட்டு அவர் சமையல் வேலையை தொடங்க...


இன்னுமா தூங்குறா  எரும மாடு இவள என்று அதை வாங்கி கொண்டு போனாள் ஆருத்ரா.......


ஆருத்ரா குடும்பம் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் அப்பா இருக்கும் வரை......


ஆருத்ரா  ஸ்கூல் படிக்கும் போது ஒரு ஆக்ஸிடென்டில் அவள் அப்பா இறந்து விட அவர் சேர்த்து வைத்து இருக்கும் பணம் ஸ்கூல் படிப்பு வீட்டு செல்லுக்கு போதுமானதாக இருந்தது........


இடையில் அவள் அம்மா மருத்துவ செலவு இடியாக விழ அதன் பின்னர் வீட்டு பொறுப்பு ஆருத்ரா தலையில் விழுந்தது...


முதலாம் ஆண்டு காலேஜ் படித்து கொண்டே பார்ட் டைம் வேலையில் சேர்ந்தாள் காலையில் காலேஜ் மதியத்தில் இருந்து ஈவ்னிங் வரை ஒரு ரெஸ்டாரன்டில் வேலை பார்ப்பாள் இரவு காலேஜ் அசைன்மெண்ட் படிப்பு பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பது என்று செல்லும் அவள் வாழ்க்கை ‌...


எந்த சூழ்நிலையிலும் படிப்பை மட்டும் விட்டு விட வில்லை கடைசி இரண்டு ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் அவள் படிப்பு செலவை காலேஜே ஏற்று கொள்ள அவளுக்கு பணம் தட்டுபாடு ஏற்பட வில்லை..


அவள் ஆசை பட்ட படியே படித்து முடித்து வேலையில் சேர்ந்தவள்..


இப்போது ஆறு பூஜியத்தில் சென்னையிலே வேலையும் கிடைத்து விட்டது..........


தன் குடும்ப பொறுப்பை 19  வயதில் இருந்தே தன் தோலில் சுமக்கும் மிடில் கிளாஸ் பெண் என்று சொல்வது கூட அவளுக்கு கர்வம் தான் என்று நான் நினைக்கிறேன்........


ஏய் எரும மாடு ஏந்திரி டி மணி என்ன ஆகுது ???

கும்பகர்ணனுக்கு தங்கச்சி மாதிரி இன்னும் தூங்குற என்று ஒரு அடி வைக்க..


எழுந்தவள் ருத்ரா கையில் இருந்த காஃபியை வாங்கி குடித்து விட்டு இன்னும் பத்து நிமிஷம் அக்கா என்று பெட் சீட்டை இழுத்து தலையோடு போர்த்தி கொண்டாள்...


உத விழும் எழுந்து போய் குளி டி காலேஜ்க்கு டைம் ஆகுது என்று இவள் பெட் சீட்டை பிடுங்கி எறிய..


கொட்டாவி விட்ட படி கண்களை கூட திறக்காமல் ஏழு மணி தான் ஆகுது என்று சலித்து கொண்டே எழுந்து அமர்ந்தாள் அவளின் செல்ல தங்கை அகல்யா......


பெட்டை விட்டு இறங்கி குளிக்க போக இத மடிச்சி வச்சிட்டு போ என்றாள்  ஆருத்ரா கண்டிப்பான குறளில் அங்கு கிடந்த படுக்கை விருப்பை காட்டி


ச்ச உன் கிட்ட ரொம்ப தொல்ல அக்கா!! இதுக்கு ஹாஸ்டல் வார்டன்ட் எவ்வளவோ பறவால நீ என் அக்காவா இல்ல வார்டனானு தெரியல ???

என்று சொல்லிய படி அதை மடித்து வைத்தவள்...


அங்கே கையை கட்டி கொண்டு நின்று தன்னையே பார்க்கும் தன் அக்காவை பார்த்து இப்போ ஓகேவா என்று கேக்க..


ம்ம் குட் சீக்கிரம் கிளம்பி வா எனக்கு டைம் ஆச்சினா உன்ன விட்டுட்டு போய்டுவே அப்புறம் காலேஜ்க்கு நடந்து தான் போகனும் ஆட்டோக்கு காஸ் தர மாட்டேன் என்று சொல்ல...


சரியான பிடி டீச்சர் என்று அவளை முறைத்து விட்டு குளிக்க சென்றாள் அகல்யா.....


அகல்யாவை விரட்டிவிட்டு ஆருத்ரா தன் அறைக்குச் சென்றாள். ஒரு காட்டன் சுடியை அணிந்தவள் அந்த துப்பட்டாவை படித்து ஒரு சைடாக பின் செய்தாள்..

சிம்பிளாக இருந்தாலும் பேரழகி தான் அவள்......

ஈரம் சொட்டும் கூந்தலை உலர்த்திக்கொண்டே, அன்றைய வேலைகளைத் தன் மனதிற்குள் வரிசைப்படுத்தினாள்........



சாப்பாட்டு மேஜையில், "இந்தா ருத்ரா, டிபன் சாப்பிடு," என்று சங்கவி அம்மா தட்டை வைக்க, ஆருத்ரா அவசரமாகச் சாப்பிடத் தொடங்கினாள்..


ஸ்கூட்டியை எடுத்தவள் ஹாரன் அடிக்க அவசரமாக ஐடி கார்டை மாட்டிய படி ஓடி வந்து அமர்ந்தாள் அகல்யா...

ஏய் டிபன் பாக்ஸ் மறந்துட்ட என்று கொண்டு வந்து கொடுத்தார் சங்கவி அதை வாங்கியவள் டாடா மா என்று சொல்ல.....

டிபன கூட மறந்துட்டு காலேஜ் போறீயா என்று ருத்ரா கேக்க நான் காலேஜ் பேக்கையே மறந்துட்டு போவேன் என்று அல்லவா சொன்னாள்‌......


அவளை திரும்பி முறைத்தாள் ருத்ரா கோவ படாத அக்கா ரொம்ப அழகா தெரியுற அப்புறம் என் காலேஜ் பாய்ஸீ எல்லாம் பூவ தூக்கிட்டு வந்துடுவாங்க என்று சொல்ல...


உனக்கு வாய் அதிகம் என்றாள் ருத்ரா 


அவளை காலேஜில் டிராப் செய்தவளின் பயணம் தொடங்கியது வீட்டு பொறுப்பு உடன் தான் வேலை செய்யும் ஆர்வி குருபின் பொறுப்பையும் சேர்த்து சுமக்க............


அந்தச் சாம்ராஜ்யம் இப்போது ஒரு மெல்லிய நூலிழையில் தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது....


லண்டனில் இருக்கும் அந்த வாரிசுக்குத் தன் தாத்தாவின் உடல்நிலை மீதோ, இங்கிருக்கும் தொழிலாளர்கள் மீதோ துளியும் அக்கறை இல்லை என்பது அவளது எண்ணம்...........


சென்னையில் சாலை நெரிசலில் அவளது (ப்ரிட்டி) ஸ்கூட்டிக்கு அவள் வைத்த பெயர் அது..........

நெரிசலை தாண்டி 

மிக பெரிய கட்டிடத்தின் பார்க்கிங்கில் நுழைந்தது........


தனது ஐடியை காட்டி உள்ளே சென்றவளை சில கண்கள் மரியாதையோடு பார்த்தது..

சிறு வயதிலேயே எத்தனை பொறுப்பாக இருக்கிறாள் என்று 


சில கண்கள் ஏக்கத்தோடு பார்த்தது..

ஏன் இவளை போல் நம்மால் இருக்க முடியவில்லை என்று..‌‌


சில கண்கள் பொறாமையோடு பார்த்தது‌......


எப்படி இவளுக்கு மட்டும் இத்தனை புத்திசாலி தனம் என்று..

அத்தனை கண்களையும் நிமிர்ந்த நடை உடன் கடந்து சென்றாள் ஆருத்ரா..........


தன் கேபினுக்கு சென்றவள் அவள் மேஜையில் மீது இருந்த ராமரை பார்த்து புன்னகை செய்து விட்டு தன் அப்பாவின் ஃபோட்டோவை பார்த்தவள் கண்களை மூடி என் நேர்மையில் இருந்து தவறாம என்ன பாத்துகோங்க பா என்று வேண்டுதலை வைத்து விட்டு இன்று நடக்க போகும் மீட்டிங்கான அனைத்து கோப்புகளையும் சரி பார்த்தவள் அதை எடுத்து கொண்டு தன் பாஸ் கேபின்க்கு சென்றாள் ஆருத்ரா......


மே ஐ கம் இன் சார் என்று கேக்க..


அந்த கருப்பு கலர் ரோலிங் சேரில் அமர்ந்த படி எஸ் கம் இன் என்றது ஒரு கம்பீரமான குரல்....


கதவை திறந்து கொண்டு உள்ளே போக குட் மார்னிங் ருத்ரா என்றார் ரகுவீர்...


குட் மார்னிங் சார் என்றாள் தன் கையில் இருந்த பிபி டாப்லெட்டை அவரிடம் நீட்டி அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டிய படி........


புன்னகை உடன் எடுத்து போட்டு கொண்டார் ரகுவீர்....


இன்று நடக்கும் மீட்டிங் பற்றி தகவல் கொடுத்து கொண்டு இருந்தாள்.....


ரகுவீர் தாத்தாவைப் பொறுத்தவரை ஆருத்ரா வெறும் ஊழியர் அல்ல, தன் மகனுக்குப் பிறகு தன்னைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு தூண்......


தன் பேரன் ஆதிரன் லண்டனில் சாம்ராஜ்யம் கட்டி ஆடிக்கொண்டிருக்க, சென்னையில் தன் தள்ளாத வயதிலும் இந்த நிறுவனத்தைச் சிதையாமல் காப்பாற்றும் ஆருத்ராவின் நேர்மையும் தைரியத்தையும் அவர் அவ்வளவு அதிகமாக மதிப்பார்......


இரண்டு வருடம் முன்பு இழுத்து மூட வேண்டிய கம்பெனி இவள் சாமாத்தியத்தால் இன்று வரை இழுத்து பிடித்து கொண்டு இருக்கிறாள்......


மே கம் இன் என்று ஒருவர் கேக்க வர சொன்னார் ரகுவீர்..


சார் இதுல உங்க சைன் வேனும் என்று சொல்ல..

ருத்ரா அத வாங்கி படிச்சி பாரு என்று சொல்ல....


எல்லாம் சரியா இருக்கு சார் என்றார் மேனேஜர் திவாகரன்.......


சோ வாட் அவ ஒரு டைம் பாக்குறதுல உங்களுக்கு ஏதும் பிராப்ளமா என்று உறுதியான குறளில் கேக்க....


நோ சார் என்றார் திவாகர்.......


நான் படிச்சிட்டு சைன் வாங்கி தரேன் நீங்க கிளம்புங்க என்று ஆருத்ரா சொல்ல...


அவளை ஒரு முறை முறைத்து விட்டு சென்றார் மேனேஜர்...


இந்த கம்பெனியின் சீனியர் இவர்...


இவர் மீது வைக்காத நம்பிக்கையை ரகுவீர் இரண்டு வருடம் முன்பு வேலைக்கு வந்த ஆருத்ரா மீது வைத்து இருப்பது  அவளை தன் பிஏ வாக அப்பாயிண்மெண்ட் பண்ணியது தான் அவர் முறைப்பிற்கு காரணம் அதை எல்லாம் ஒரு பொருட்டாக கண்டு கொள்ள மாட்டாள் ஆருத்ரா........


ஆருத்ரா உதவியோடு இன்றைய மீட்டிங் எல்லாம் முடித்தவர் இதெல்லாம் அவன் பாக்குற வேல ஆனா போன கூட எடுக்க மாட்டுறான் ருத்ரா என்ன  பண்றதுனு தெரியல என்று சொல்லிய படி சோர்வாக தன் நாற்காலியில் சாய்ந்தார் தாத்தா.......


அவர் மனம் படும் வேதனை புரிய ஆருதலாக ஒரு பார்வை பார்த்தாள் ருத்ரா.......


மீண்டும் வருவாள்...........


பூஜா ❤️ 🫶🏻 



நம்ம ஹீரோயின் இன்ரோ எப்படினு கமெண்ட்ல சொல்லிட்டு போங்க.....


உங்க கமெண்ட் தான் என்ன மேலும் கதையை சிறப்பாக எழுத ஊக்குவிக்கும் சோ சைலண்டா படிச்சிட்டு போகாம ஒரு கமெண்ட போட்டுட்டு போங்க.......