Silence is the flower of Shiva.. Part 12 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 12

Hi,
நான் உங்கள் சிவா,
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக

Office Canteen..

மலர் Matter யை பட்டும் படாமலும் நந்தா விடம் Discuss பண்ணும் போது.. நந்தாவிடம் மலர் என் லவ் Proposal யை Accept பண்ணி விட்டாள் என்று சொன்னவுடன் நந்தா செமையா Happy யாக Feel பண்ணி.. ரவி Super டா கையை கொடுடா.. சாதிச்சிட்ட மச்சான், யப்பா எவ்வளவு நாளுடா.. ரப்பர் மாதிரி இழுத்து கிட்டே இருந்தது இந்த Happy News ய கேட்குறதுக்கு.. Any way இனி அடுத்து Marriage தான். Grand ஆ பண்ணனும் டா என்று வாழ்த்து சொல்ல நான் மலர் Marriage க்கு Ready ஆக இல்லை என்பதை நந்தாவிடம் சொல்லவில்லை.

தினமும் மலரிடம் ஃபோனில் அடிக்கடி பேசிக்கொண்டு இரண்டு நாளுக்கு ஒரு தடவை Evening வெளியே Meet பண்ணிக்கொண்டு இருக்க லைஃப் ஜாலியாக போய் கொண்டு இருந்தது. மனதில் ஓர் ஓரத்தில் எப்படியாவது மலர் மனதில் Marriage விஷயமாக என்ன Problem இருக்கு என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

வழக்கம் போல ஒரு நாள் காலை, மலருக்கு போன் பண்ணினால் Continuous ஆக Out of Coverage Area என்று வர, இரண்டு மூன்று தடவை Try பண்ணி, வேலை Busy ல் மறந்து விட்டேன். Evening 4 pm போல கவிதாவிடமிருந்து போன் வந்தது. தன்னை அவசரமாக Meet பண்ண சொல்லி, ஃபோனில் சொல்ல முடியாது என்றும் கொஞ்சம் அவசரம் அதுவும் தானும் மலரும் சம்பந்தப்பட்டது என்று சொல்ல எனக்கு பகீர் என்றது. என்ன ஏது? நானும் நந்தாவும் வரலாமா? என்று கேட்க, நம்பிக்கை யான ஃப்ரண்ட் என்றால் பரவாயில்லை.. But பயப்படுவதற்கு ஒண்ணுமில்லை. நேரில் வந்தால் எல்லாம் விளக்கமாக சொல்கிறேன் என்றாள்.
University Canteen பக்கம் மரத்தடி மேடையில் யாரும் இல்லாத இடத்தில் நான் நந்தா, கவிதா மூன்று பேரும் உட்கார்ந்திருந்தோம். கவிதா சொல்ல ஆரம்பித்தாள்.

அதன் சாராம்சம்...
கவிதா மலர் இரண்டு பேரும் Work பண்ணுகிற University Office ல் இவர்கள் Work பண்ணும் Section க்கு ராம் என்ற ராமச்சந்திரன் இவர்களின் Boss ஆக 3 Months முன்னால் Deputation ல் வந்தான். இவர்கள் Wing ல் மொத்தம் 23 Staffs ல் 12 பேர் Ladies Staff இதில் மலரையும் கவிதாவையும் சேர்த்து 4 பேர் திருமணமாகாத வர்கள். ராம் திருமணமான நடுத்தர 45 வயது Officer. இங்கே வந்த முதல் நாளிருந்து Ladies Staffs க்கு Torture Start ஆனது. ராம் ஒரு Sex maniac.. அவன் Sex torture க்கு பயந்து சிலர் ஒதுங்க பலர் பயந்து போய் தினமும் பயத்துடனே Duty க்கு வர ஆரம்பித்தார்கள். திருமணமான பெண்களையும் அவன் விட்டு வைக்கவில்லை. அவன் வலையில் சில பெண்கள் விழ, அதை தனக்கு சாதகமாக அவர்களை மாற்றிகொண்டு மற்ற பெண்களையும் வேட்டையாட முனைந்தான். Lady Sweepers கூட விட்டு வைக்க வில்லை. மலரும் கவிதாவும் அவனை எதிர்த்து Top Mgmt. போய் அவனைப்பற்றி Complaint கொடுத்தாலும் அவனை ஒண்ணும் பண்ண முடியவில்லை. அவ்வளவு Influence ஆன Candidate அவன். Last week மலர் கொடுத்த Written Complaint Copy யை அவன் எப்படியோ எடுத்து வந்து மலர் கவிதா முன்பு கிழித்து போட்டு ஆணவத்துடன் சிரித்து தன்னை யாரும் இங்கே ஒண்ணும் பண்ண முடியாது.. மேலும் மலரையும் கவிதாவையும் தான் சொன்ன படி கேட்டால், தனக்கு தேவையானது கிடைத்து விட்டால் விட்டு விடுகிறேன். So, அவர்கள் இருவரையும் தன் Guest House வரச்சொல்லி இப்ப 2 நாளாக ஆக Torture கொடுக்க ஆரம்பித்து விட்டானாம்.

நடுவில் ஒரு 15 நாள் ராம் எங்கோ Camp போக இவர்கள் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்க, இப்ப வந்து இரண்டு நாளாக பெரும் பிரச்சனையாக இருக்கிறது, அவன் மலரையும் கவிதாவையும் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் Work பண்ணும் போது தன் Mobile ல் அசிங்கமாக Photo எடுத்து வேண்டுமென்றே அவர்கள் முன்னாடியே அந்த Photos பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறானாம்.

நான் உடனே..
கவிதா, இதையெல்லாம் ஏன் நீங்க இரண்டு பேரும் முன்னாடியே சொல்லலை.

இல்ல ரவி இது ஒரு Sensitive issue... எங்க Staff Ladies சம்பந்தபட்டது. இதை எப்படி வெளியே..

அப்ப நாங்க அவ்வளவு அந்நியமா போயிட்டோம்ல..

ஐயோ ரவி, அப்ப நாங்க Easy யா நாமளே இதை சமாளிச்சிடலாம் னு நினைச்சோம். இந்த மாதிரி problems Work பண்ற Ladies எங்க Life ல் நாங்க எவ்வளவு Face பண்ணியிருப்போம்.

கவிதா அந்த மாதிரி சொன்ன வுடன் எங்கள் இருவர் மனதும் கனத்தது. சே இந்த மாதிரி எவ்வளவு Problems, Torture இவங்க Face பண்றாங்கன்னு. ஒண்ணும் பேச முடியாமல் Silent ஆனோம்.

மேலும் கவிதா, ராம் ரொம்ப Danger ஆன ஆளு.. அவனைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியாது. அவனுக்கு எல்லா இடத்திலும் ஆளு இருக்கு Power ம் இருக்கு. இன்னொன்னு மலர் இந்த Matter யை உன்கிட்ட சொல்லி உன்னையும் Tension ஆக்க வேண்டாம்.. இதுல நீ Involve ஆகி உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்து, என்னையும் சொல்ல வேணாம் னு சொன்னாள். But நேத்து Evening மலருக்கு நடந்த issue ல..

என்ன கவிதா என்னாச்சு நேத்து என்ன நடந்தது?

அவன் ராம் எங்களை அசிங்க அசிங்கமா photo video எடுத்து வச்சிருந்தான்ல.. அதை மலர் Picture யை ஏதோ Morphing பண்ணி Net ல போட்டு அசிங்க படுத்த போறேன்னு பயமுறுத்த.. மலர் கோபம் வந்து அவனை கன்னத்தில அடிச்சிட்டா.. அவன் உடனே React பண்ண போக நான் நடுவுல புகுந்து இப்ப நீ பேசுனதெல்லாம் என் Mobile ல Record பண்ணிட்டேன். இதை எல்லோருக்கும் அனுப்பிடுவேன்னு சொல்ல கொஞ்சம் பயந்து பின் வாங்கிட்டான்.

வாவ், கவிதா நல்ல வேலை பண்ண நீ அந்த Record பண்ண video வை எனக்கு அனுப்பி வை..

கவிதா தயங்கியபடியே.. இல்லை ரவி நான் அப்படி ஒரு Video Record பண்ணலை.

என்னது? Record பண்ணலை யா? ஏன்?

அந்த சமயத்தில அவனை பயமுறுத்த அப்படி Record பண்ணேன்னு ஒரு பொய் சொன்னேன். அத கேட்டு அவன் பயந்துட்டான். இது எனக்கும் மலருக்கும் மட்டும் தான் தெரியும். இப்ப உங்களுக்கு.

நந்தா கவிதா வை Appreciate பண்ணி கவிதா நல்ல காரியம் Spontaneous ஆ பண்ணிங்க. Good. இப்படி தான் இருக்கனும். ரவி, கவிதா சொன்னதை வச்சு பார்த்தால் நாம சும்மா ராம் யை Deal பண்ண முடியாது. வேற பக்கா Plan பண்ணனும். அத அப்பறமா நாம Discuss பண்ணலாம். கவிதா எனக்கு கொஞ்சம் ராம் ட Details வேணும் Like அவன் Address, Family பத்தி, Contact number, Day to day Activities.. இந்த மாதிரி..

கவிதா தனக்கு தெரிந்த விபரம் எல்லாம் கொடுக்க நந்தா வாங்கி கொண்டான்.

நான் கவிதாவிடம் சரி, இப்ப மலர் எங்கே? நான் Morning Phone Try பண்ணேன். Out of Coverage னே வந்துட்டிருந்தது. என்னாச்சு..

நான் காலையில் Office கிளம்பி வரும் போது மலர் Headache இன்னைக்கு Leave னு சொன்னாள். இப்ப Flats ல Rest எடுத்து கிட்டு இருக்கா. May be Phone Switch off பண்ணியிருந்திருக்கலாம். ரவி இப்ப அவ நல்லா Rest எடுக்கட்டும். பாவம் ரொம்ப Disturb ஆகியிருக்கா. Evening Meet பண்ணுங்க. ஏன் ரவி Evening வரைக்கும் Wait பண்ணுவில்ல.. இல்ல.. என்று சிரித்துக்கொண்டே கவிதா கேட்க. நானும் சிரித்த படியே தலையாட்டினேன்.

இன்னொரு விஷயம் நான் இப்ப உங்க இரண்டு பேர் கிட்டயும் இந்த Matter யை Discuss பண்ணது மலருக்கு தெரிய வேணாம். Feel பண்ணுவா.
வேற ஏதாவது information வேணுமா?
நந்தா கவிதாவிடம் இந்த ராம் Problem பற்றி சீரியஸாக ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க, நான் மலரைப்பற்றியும், இந்த Problem எப்படி Solve பண்ணப்போறோம் என்பது பற்றியும் யோசனையில் ஆழ்ந்தேன்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் அனுப்ப Please Mail to siva69.com@gmail.com

உங்கள் சிவா.