The Outerverse - Part 5 in Tamil Fiction Stories by tamilarasan books and stories PDF | The Outerverse - Part 5

Featured Books
  • કોપીપેસ્ટ

    ડૉ.નભ M.s પછી સુપર સ્પેશીયલાઈઝેશન માટે U.S.A ગયા.ત્યાં ડૉ જલ...

  • સંગત થી રંગત

    મારી સંગત માં ,મારી પાસે આવનાર લોકો ને સ્વસ્તિ,શાંતિ, પ્રસન્...

  • કાયામત: અંતિમ આશ્રય - 9

    પ્રકરણ ૯: ગુપ્ત સંદેશ અને શંકાની સોયસમય: ટકરાવના ૧૫ દિવસ પછી...

  • ભ્રમજાળ - 4

    #ભ્રમજાળ​ભાગ ૪: કઠપૂતળીનો ખેલ​હોસ્પિટલના એ અંધારા ઓરડામાં દૂ...

  • ગોળધાણા ઉજવણી

    લગ્ન માટે ઘણાખરા કેસમાં વડીલો દ્વારા શોધવામાં આવેલ સામેનું પ...

Categories
Share

The Outerverse - Part 5

வெளிப்புற வெற்றிடம் 1 – ஏதியனின் விழிப்புணர்வு

ஏதியோன் மெதுவாகக் கண்களைத் திறந்தான். அவன் ஒரு பழக்கமில்லாத பகுதியில் படுத்திருப்பதைக் கண்டான், பிறகு அவன் எழுந்து வெளியே வந்தான். 

திடீரென்று, இங்கு இருக்கும் அனைவரும் Aethionனை பார்த்தனர்! 

வெல்துரியன் புன்னகையுடன் பேசினான்:

> “எந்திரிச்சிட்டியா. நல்லா தூங்கினியா?”

ஏதியோன் குழப்பத்துடன்:

> “நான் எப்படி இங்கு வந்தேன்?”

வெல்துரியன் பேசினான்:

> “நாங்கதான் உன்ன அங்க இருந்து இங்க தூக்கிட்டு வந்தோம் . கவலைப்படாதே இப்போது நீ இங்க பாதுகாப்பாக இருக்கிறாய்.”

வெல்துரியன் ஏதோ ஒன்றை நீட்டினான் - ஒரு வளையல்.

வெல்துரியன் சொன்னான்:

> “வெளிப்புற வெற்றிடம் 2 இல், இது... உன் அருகில் கிடப்பதைக் கண்டேன். இது உன்னுடையதா?

ஏதியோன் வளையலை எடுத்து இறுக்கமாகப் பிடித்தான்.

ஏதியோன் சொன்னான் :

> “நான் பாதுகாப்பாக இருக்கலாம்... ஆனால் என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.”

வெல்துரியன்:

> “என்ன…?”

ஏத்தியோன் சோகமாக நடந்ததை கூறினான்:

> “எலாரியா... என்ன காப்பாத்த அவளோட உயிரை தியாகம் பண்ணிட்டா  

அமைதி அவர்களைச் சூழ்ந்தது. தெய்வங்கள் துக்கத்தில் தலை குனிந்தன.

வெல்துரியன்:

> “மன்னிக்கவும், ஏத்தியன். நாங்கள்... அந்த டோமினுக்குள் நுழைய முடியவில்லை.”

ஏத்தியோன்:

> “எனக்கு தெரியும் இது உங்களோட தப்பு இல்ல .”


அவன் திரும்பிப் பார்த்தான்.

வெல்துரியன் சொன்னான்:

> “ஆனால் கவலைப்படாதே... உன்னோட சர்வ லோகத்துக்கு எதுவும் ஆகல அது பாதுகாப்பா இருக்கு .”

ஏதியன் ஆச்சரியத்துடன் கேட்டான்:

> “என்ன? எப்படி? என்னோட சர்வ லோகத்தை எப்படி காப்பாத்துனீங்க?

வெல்துரியன் புன்னகையுடன் கூறினான்:

> “நீ போனதுக்கப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?”

---

வெல்துரியன் இதுக்கு முன் என்ன நடந்தது என்பதை கூறுகிறார்: 

Aethion வெற்றிட இரண்டுக்குள் இருக்கும்போது.              
                                                                                                                                                                         வெல்துரியன் அந்த பண்டைய தெய்வீக மனிதர்களிடம் வாதிட்டான்:  
> “உன் நண்பர்கள் அப்படி ஆபத்தில் இருந்தால், நீ அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்க மாட்டாயா? எனவே நாங்கள் முடிவு செய்தோம் - எதுவாக இருந்தாலும் சரி, நாங்கள் ஏதியனைக் காப்பாற்றப் போகிறோம்.”

வெல்துரியன் மற்றும் பல கடவுள்கள் வெளிப்புற வெற்றிடம் 2 இல் நுழையத் தயாராக இருந்தனர்.

ஆனால்— 

அவர்கள் போவதற்கு முன்பு, பண்டைய மனிதர்கள் அவர்களின் பாதையைத் தடுத்தனர்.

பண்டைய மனிதர்களில் ஒருவர் அதிகாரத்துடன் பேசினார்:

> “ஏதியன் நம்மள மாதிரி நீங்க நினைக்கிறீங்களா?”

வெல்துரியன் மற்றும் மத்த கடவுள்கள் குழப்பத்துடன் பார்த்தார்கள்.

 பண்டைய மனிதர் ஒரு உண்மைய சொல்கிறார்கள்:

> “அவன் நம்மள மாதிரி கிடையாது Aethion நம்மளுக்கும் அப்பாற்பட்டவன்’

பண்டைய மனிதர்கள் முன்னோக்கி வந்து சொன்னார்கள்:

> “நீங்கள் தீர்க்கதரிசன புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்கு ஏற்கனவே உண்மை தெரிய வந்திருக்கும் . ஆனால் யாராவது அதைப் படிக்க விரும்பினால், அவர்கள் முதலில் சர்வலோகங்களையும் அனைத்து யதார்த்தங்களையும் பல ஆண்டுகளாகப் இங்கேயே தங்கி பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் இந்த தீர்க்கதரிசன புத்தகத்தை படிக்க தகுதியானவர்களாக ஆகுவார்கள். இனி உண்மையை மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தீர்க்கதரிசன புத்தகத்தில் எழுதப்பட்டதைப் போலவே - இங்கே இருக்கவங்க எப்போ கெட்ட பாதைக்கு போறாங்களோ இல்ல நல்லவங்க கெட்டவங்களா மாறுறாங்களோ , ஒரு தெய்வீக சக்தி அவதாரம் எடுத்து அனைத்து ஊழல் தீய சக்திகளையும் அழிக்கும்."

> "இந்த உண்மைய யார்கிட்டயும் பகிரவும் இல்ல சொல்லவோ கூடாது . தீர்க்கதரிசனத்தைப் படிப்பவர்கள் அதைத் தங்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அதுல சொல்லப்பட்டது. யாராவது அதை மீறி சொன்னால், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் - பேசியவர்களும் கேட்டவர்களும் ஒன்றாக அழிக்கப்படுவார்கள். அதனால்தான் நாங்கள் முன்பு உங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் அப்படிச் சொன்னிருந்தால், நாம் அனைவரும் அழிந்து போயிருப்போம்."

> "ஆனால் இப்போது... அந்த தீர்க்கதரிசனத்தில் எழுதப்பட்டிருக்கிற படி சரியாக இப்போ நடந்துகிட்டு இருக்கு. விதியின் பாதையிலிருந்து நாம் விலகி இருப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக... Aethion தான் நமக்கும் சரி எல்லாத்துக்கும் பேரரசன் ." 

திடீரென்று, இன்னொருவர் விரைந்து வந்தார்:

> “நம்முடன் இருக்கும் சில கூட்டாளிகள் ஏதியோனின் சர்வ லோகத்தில் நுழைந்துள்ளனர்!”

பிறகு வெல்துரியன் மற்றும் அவருடன் கூட்டாளிகளும் சேர்ந்து, அங்கு சென்று பார்த்தபோது அது Zaryon ஆட்கள் என்று தெரிந்தவுடன் அவர்களை சிறை பிடித்து விட்டனர் பிறகு அவர்கள் அனைவரும் வேறு ஏதோ ஒன்றை உணர்ந்தனர். 

வெளிப்புற வெற்றிடம் 2 இன் முழு டோமீன்களும் சரிந்தது. 

அவர்கள் அங்கு விரைந்து சென்றனர் பிறகு அங்கே ஒரே ஒரு உருவம் மட்டுமே கிடப்பதைக் கண்டார்கள்... அது ஏதியோன்.

வெல்துரியன்:

> “அதன் பிறகுதான் நாங்கள் உங்களை இங்கு அழைத்து வந்தோம்.”

வெல்துரியன் அவருக்கு அருகில் மண்டியிட்டு கூறினார்:

> “தீர்க்கதரிசனம் சொன்னது போல... நீங்கள் அந்த அனைத்து தீய சக்திகளையும் அழித்துவிட்டீர்கள்.”

பண்டைய மனிதர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தனர்:
> “Zaryonக்கு இதெல்லாம் எப்படியோ தெரிய வந்திருக்கு . அதனாலதான் உன்னை எப்படியாச்சி அழுச்சே ஆகணும்னு அவன் துடிச்சிட்டு இருந்தான். ஆனா கடைசியில, நீ அவனோட சேர்ந்து அவங்களோட முழு அஸ்திவாரத்தையும் அழிச்சிட்ட.”

---

ஏதியோன் தீர்மானம்

ஏதியோன் தன் வளையலை எடுத்துப் பார்த்தான்.

ஏதியோன்:

> “நான் போகணும்.”

வெல்துரியன் பேசினான்:

> “நீ எங்கே போற? நீ இங்கே எங்களுக்குத் தேவை.”

ஏதியோன் வேறு திசையில் பார்க்கிறான்:

> “இந்தப் பதவிக்கு நான் தகுதியானவன் இல்லை. அவள் என்னைக் காப்பாத்தலைன்னா ... நான் ஒரு தவறான முடிவு எடுத்திருப்பேன். என்னால அவங்களை தோற்கடிக்க முடிந்திருக்காது. அவள் தான் இதுக்கு தகுதியானவள். நான் இல்லை.”

வெல்துரியன் உறுதியுடன் பேசினான்:

> “இல்லை, ஏதியோன் நீ எல்லாத்துக்கும் தகுதியானவன் தான் சில தகுதி இல்லாதவர்கள் கூட உயர்ந்த நிலையில் இருக்கும்போது யாருமே செய்ய முடியாத தியாகத்தை நீ செஞ்சிருக்க அப்படி இருக்கும்போது நீ தகுதி இல்லாதவன்னு நினைக்கிறாயா  

ஏதியோன் மெதுவாக வளையலை அவன் கையில் போட்டான். 

ஏதியோன் பேசினான்:

> “...சரி. நான் இப்போது கிளம்புகிறேன். ஆனால் நான் விரைவில் திரும்பி வருவேன்.”

வெல்துரியன்:

> "சரி ஆனா. நாங்க உனக்காகக் காத்திருப்போம், ஏதியோன்.”

---



ஏதியோன் டெலிபோர்ட் செய்து தனது சொந்த சரவலோகத்திற்கு வெளியே நின்றார். திடீரென்று, வளையல் ஒளிர்ந்தது. 

அவர் கண்டார்: எலரியா ஏற்கனவே அதில் ஏதோ எழுதியிருந்தாள்—“நீதான் எனது முழு சர்வ லோகமே, . நான் உன்னை என் இதயத்தில் வைத்து நேசிக்கிறேன் ஏதியோன்.” அந்த வார்த்தைகள் பிரகாசித்தன.

அப்போதுதான் ஏதியோன், ஒன்றை உணர்ந்தான்:

> “எலரியா... உன்... உன்னுடைய சர்வ லோகம்?!”.                                                   
ஏதியோன் உடனடியாக எலரியாவின் சர்வ லோகத்திற்கு பயணித்தான். 

அவர் வெளியே நின்று அதை தூரத்திலிருந்து பார்த்தார் - முழு சர்வ லோகமே சரிந்து கொண்டிருந்தது. 
அதைப் பாதுகாக்க அவர் தனது சக்தியைப் பயன்படுத்தி அவள் சர்வ லோகத்தை காப்பாற்றினார் , ஆனால் எலரியா இறந்ததால் அதில் பல கடவுள்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர், மேலும் சிலர் சிதைக்கப்பட்டனர் சர்வலோகம் சரியாக இல்லை!

 ஏதியன் கூறினார்:

> “ஆம்... நீங்கள் சொல்வது சரிதான், எலரியா. நான்தான் உன்னோட முழு சர்வலோகமே அதற்கு ஒருபோதும் எதுவும் நடக்காது - ஏனென்றால் அதைப் பாதுகாப்பது என்பது என்னைப் பாதுகாப்பதாகும்."

ஏதியனின் கண்களில் இருந்து கண்ணீர் விழுந்தது - மூன்று துளிகள் விழுந்தன. அந்த மூன்று துளிகளில் இருந்து ஏதியன் போலவே மூன்று அவதார சக்திகள் பிறந்தநா 
பிறகு அந்த மூன்று ஏதியன் அவதாரங்களும் 
 சொன்னார்கள்:

> “ஆம், என் ஆண்டவரே. நாங்கள் உங்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும்?”

ஏதியன் பதிலளித்தார்:

> “நீங்கள் சென்று அவளுடைய சர்வலோகத்தை அமைதியான ஒரு சிறந்த இடமாக மாற்ற வேண்டும்.”

அவர்கள் சொன்னார்கள்:

> “ஆம், நீங்கள் கூறியபடி என் ஆண்டவரே.”

அவர்கள் எலரியாவின் சர்வலோகத்திற்குள் நுழைந்தனர்.

ஏதியன் அதைப் பார்த்துட்டு சொன்னார்:

> “நீ என்னைக்குமே என்னோட இதயத்துக்குள்ள தான் இருப்பே எலரியா...”

பின்னர் அவர் தனது சொந்த சர்வலோகத்திற்குத் திரும்பினார்.

---



அனைத்து கடவுள்களும் கூடி ஏதியனை வாழ்த்தினர்.

கடவுள்கள்:

> “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, ஏதியன் அவர்களே?”

 ஏதியன்:

> “ஆ, நான் நல்லாத்தான் இருக்கேன் நீங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா?”

கடவுள்கள்:

> “ஆம், நாங்கள் முற்றிலும் நலமாக இருக்கிறோம்!”

அதைக் கேட்டு ஏதியன் திருப்தி அடைந்தார்.

தெய்வங்கள் கூறின:

> “எங்களுக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும். வெல்துரியன் எங்களிடம் எல்லாத்தையும் கூறிவிட்டார் . கவலைப்பட வேண்டாம், இந்த சர்வ லோகத்தை நாங்கள் கவனித்துக்கொள்வோம்.”

ஏதியன்:

> “இவ்வளவு உற்சாகத்துடன் நீங்கள் கூறும் போது பிறகு, இல்லை என்று சொல்வது நன்றாக இருக்காது. சரி—நீங்கள் அனைவரும் இதை கவனித்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.”

தெய்வங்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

---

பிறகு 

வெளிப்புற வெற்றிடம் 1 இல் மீண்டும், வெல்துரியன் மற்றும் மற்றவர்கள் ஒரு பெரிய சிம்மாசனத்தை உருவாக்கி ஏதியனை ஆச்சரியப்படுத்தினர்.

வெல்துரியன்:

> “நாங்கள் உங்களுக்காக இந்த சிம்மாசனத்தை கட்டினோம்.”

ஏதியன் நடந்து சென்று அதன் மீது அமர்ந்தார். அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

 பின்னர் அவர் புதிய விதிகளை அறிவித்தார்:

> “எந்தவொரு சர்வ லோக ஆட்சியாளரோ அல்லது படைப்பாளரோ அநியாயமாக ஆட்சி செய்தால், அவர்களைக் கொல்லாதீர்கள். அதற்கு பதிலாக, அவர்களின் நினைவுகளை அழித்து மறுபிறவிக்கு அனுப்புங்கள் - அதனால் அவர்கள் சிறந்த மனிதர்களாகத் திரும்பலாம். நீங்கள் ஒரு தீய ஆட்சியாளரை சிறைப்பிடித்து விட்டீர்கள் என்றால், அவர்களின் சர்வ லோகத்தை ஆள உங்களுக்கு இனி அனுமதி உண்டு. ஆனால் அது உங்கள் சொந்த விருப்பம். சர்வ லோகத்தை ஆள்வது - அல்லது அதைச் செய்யாமல் இருப்பது - உங்கள் விருப்பம்."

அவர் வெல்தூரியனை நோக்கித் திரும்பி கூறினார்:

> “நான் இந்தப் பொறுப்பை உங்களிடம் தருகிறேன். நீங்கள் இதை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.”

வெல்தூரியன்:

> “நிச்சயமாக, என் ஆண்டவரே.”

ஏதியன் சிரித்துவிட்டே சொன்னார்:

> “என்னை ஏதியன் என்று கூப்பிடு. நீ என் நண்பன், நினைவிருக்கிறதா?”

வெல்தூரியன்:

> “சரி, ஏதியன்.”

அனைத்து கடவுள்களும் ஒன்றாக ஆரவாரம் செய்து கொண்டாடினர்.