Nizhal Tharum Vasantham - 11 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 11

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 11

தன்னுடைய இலக்கு என்ன என்பதே அறியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்ததாய் பிரேம் நினைத்தான். தன்னுடைய தனித்த அடையாளத்துக்கு தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும், அந்த முடிவில் உறுதியாய் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.தீபாவோ, ரஞ்சனியோ இந்த விஷயத்தில் அவர்கள் அப்பா பேச்சைத்தான் கேட்பார்கள். எனவே அவர்களை இதில் சம்பந்தபடுத்த வேண்டாம். நாமே சொந்தமாய் தொழில் தொடங்கலாம் என எண்ணினான்.அவனுடைய அப்பாவிடம் இது பற்றி பேசலாம் என அவருக்கு ஃபோன் போட்டான் அவனுடைய அம்மாதான் எடுத்தாள். என்ன சும்மா ஏன் அப்பா ஃபோன் எடுக்கலை ? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை நீ எப்படி இருக்கே ? தீபா எப்படி இருக்கா ? ரஞ்சனி காலேஜ் ல சேர்ந்தாச்சா என்று கேள்விகளை அடுக்கினாள் . அம்மா நான் சொந்தமா தொழில் தொடங்கலாம்னு இருக்கேன். ஏண்டா உனக்கு இந்த வேலை ஒழுங்கா ஒரு இடமா இருக்க முடியலயா நீ கஷ்டபடுறது இல்லாம எல்லாரையும் கஷ்டபடுத்த திட்டமா என்றாள். நீ அப்பாகிட்ட பேசிட்டு சொல்லு. நான் முடிவு பண்ணிட்டேன் என்றான். சரிடா அவர் கோவப்பட போறாரு .. நீ என்ன இன்னும் சின்ன பிள்ளையா ? தீபாகிட்ட முதல்ல பேசு அப்புறம் மாமா கிட்ட பேசு .. சரிம்மா என்று போனை வைத்தான்.

சொந்தமா தொழில் பண்ண போறியா ?ஏன் உனக்கென்ன ஆச்சு .. நாங்க யாரும் உன்னை மரியாதை குறைவா நடத்துனோமா ?அதெல்லாம் இல்லை . எனக்கு நானே பாரமா இருக்குறது மாறி ஒரு பீல். இதை கேட்ட தீபா இதுக்கே இப்படி சொல்லுற இத்தனை வருஷமா அப்பா பேச்சை மீற முடியாம தவிக்கிற எங்களை நினைச்சு பார்த்தியா ? தீபா நீயாவது என்னை புரிஞ்சுக்கோயேன் .. சரி நான் யோசிச்சு சொல்லுறேன். ரஞ்சனி வந்து அதே பதிலை வேறு மாதிரி சொல்லிப்போனாள் . என்ன மாமா வெளிநாடு போற ஆசை வந்துடுச்சா ? நீங்க எங்க வேணா போங்க ஆனா எங்களையும் கூட்டிப்போங்க. காலேஜ் முழுக்க பிரபலம் ஆகியிருந்தாள் தீபா. தொழிலதிபர் குமரகுரு மகள் அதோடு அவளுக்கு நடக்க இருக்கிற திருமணம் . இவள் எவ்வளவோ சொல்லியும் சக மாணவ மாணவிகள் இவளை கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். அப்போதுதான் கிருஷ்ணாவை சந்தித்தாள். அசிஸ்டண்ட் புரோபசர் ஆக இருந்த கிருஷ்ணா சின்ன வயதிலேயே அந்த லெவலுக்கு வந்தது எல்லோரையுடைய புருவங்களையும் உயர்த்தியது. கிருஷ்ணாவிடம் தீபா புகார் குடுக்க சென்ற போது தான் அவளுக்கு இது சாதாரண ஒரு தடை என்று விளக்கினார். இதை விட தடைகளை கடந்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்றான். நீ பயப்படுகிறாய் அதனால்தான் எல்லோரும் உன்னை கிண்டல் செய்கிறார்கள். நீ பயத்தை வெல்லு உன் திறமையை படிப்பில் காட்டு என்றான். புரிகிறது உன் கஷ்டம் நானும் இதை பற்றி உன் வகுப்பு மாணவர்களிடம் பேசுகிறேன் என்றான். ரொம்ப நன்றி கிருஷ்ணா சார் நான் இப்போது தெளிவாகிவிட்டேன் என்றாள்.

ரஞ்சனியிடம் கிருஷ்ணா பற்றி சொன்னாள். ம் எதுக்கும் கவனமா இரு அட்வாண்டேஜ் எடுத்துக்க போறாரு என்றாள் ரஞ்சனி. அதெல்லாம் இல்லை அவர் நிஜமாகவே நல்ல மனிதர். பிரேம் கிருஷ்ணாவுக்கு ஃபோன் பண்ணி நன்றி தெரிவித்தான். நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வாருங்கள் என்றான். குமரகுரு வந்திருந்தார். ஆபீஸ் விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார். அதோடு கல்யாண விவகாரங்களையும் பேசினார். எனக்கு உங்களிடம் பேச வேண்டும் என்றான். சொல்லு பிரேம் நான் சொந்த தொழில் செய்யலாம் என இருக்கிறேன் .இப்போது இருக்கிற சூழ்நிலையில் அதெல்லாம் வேண்டாம் பிரேம். உன்னை நம்பி நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். இங்கேயே உனக்கான பிஸினஸ் ஸ்கோப் இருக்கிறது . நீ அலைவது எனக்கு விருப்பமில்லை. என்னை பார் என் பெண்களின் வாழ்வை பார்க்க கூட நேரம் இல்லை என்றார். இவன் சோர்ந்து போனான். நீ இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திரு மொத்தமும் நான் உன் பெயருக்கே எழுதி வைக்கிறேன். உன் குடும்பத்தை வரவழைத்து கொள் . சந்தோஷமாக வாழ் என்றார். இவன் மையமாக தலையாட்டினான். இவனுக்கு அவருடைய சொத்தில் எல்லாம் நாட்டம் இல்லை. தன்னிறைவு பெற்ற வாழ்வொன்றை வாழவே விரும்பினான்.

இவன் சோர்ந்து போய் இருப்பதை பார்த்த தீபா என்னாச்சு அப்பா என்ன சொன்னார். சொத்து தருகிறாராம் யாருக்கு வேண்டும் சொத்து . நீ கிடைத்ததே பெரிய சொத்து. எனக்கு கொஞ்சம் தனிமையில் இருக்க வேண்டும் நான் என் அறைக்கு போகிறேன் என்றான். பிரேம் நீ கவலைப்படாதே என்றாள்.சிறிது நேரம் கழித்து ரஞ்சனியும், பிரேமும் இவனுடைய அறைக்கு வந்தனர். வா சாப்பிடலாம் என்றார்கள். எனக்கு வேண்டாம் என்றான். இதென்ன பிடிவாதம் ? எங்களை நினைத்து பார்த்துத்தான் அப்பா அப்படி சொல்லியிருக்கிறார். நீயும் வெளிநாடு சுற்ற போய்விட்டால் எங்களுக்கு யார் இருக்கிறார்கள் . சரி முதலில் சாப்பிடு என்றாள் தீபா. இவன் உணவு மேஜையில் அமர்ந்தான். ரஞ்சனி ஏதாவது டூர் போகலாமா என்றாள். இப்போது வேண்டாம் நானே சொல்கிறேன் என்றான். சப்பாத்தி, பன்னீர் மசாலா செய்திருந்தாள் தீபா.ரொம்ப நன்றாயிருக்கிறது தீபா.

குமரகுரு தீபா, பிரேம் கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அவர் மனதில் பிரேம் பேசியது ஓடிக்கொண்டே இருந்தது. ரஞ்சனியை அழைத்து பேசினார். பிரேம் ரொம்ப கவலைப்படுகிறான் . அதற்கு அவசியம் இல்லை. நீயும் அக்காவும் அவனை சமாதானபடுத்துங்கள் என்றார். சரி அப்பா. ரஞ்சனி எக்ஸாம் ரிசல்ட்ஸ் எப்போது வருகிறது என்றார். அடுத்த வாரம் என்றாள். இரு பெண்களையும் நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நாம் உன்னுடைய அப்பா அம்மாவை பார்த்துவிட்டு வந்தால் என்ன என்றாள் தீபா. இந்த வாரம் போவோம் எனக்கு லீவு தான் ஆனால் என்னுடைய அப்பா எப்படி நடந்துகொள்வாரோ என்றான். அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். சரி நானே அம்மாவிடம் ஃபோன் பண்ணி சொல்லுகிறேன் . கல்யாண பத்திரிக்கை தயாராகிவிட்டதா என விசாரி தீபா என்றான். அதெல்லாம் எப்பவோ ரெடி ஆகி விட்டது. ரஞ்சனி நீயும் வருகிறாயா ? நிச்சயம் வருவேன் என் மாமா சொந்த ஊரை நான் பார்க்க வேண்டும் .

அம்மாவுக்கு ஃபோன் செய்த போது ரொம்ப சந்தோஷம் இப்போதாவது உனக்கு இங்கு வர வேண்டும் என்று தோன்றியதே என்றாள். அவர்கள் சமாளித்து கொள்வார்களா இங்கே வசதி குறைவு . அதெல்லாம் அவர்கள் சமாளித்து கொள்வார்கள். போயிட்டு வா பிரேம் என்னாலதான் வர முடியல.. நான் அவங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்லு என்றார் குமரகுரு. அது ஒரு சண்டே காலை என்பதால் அதிக டிராஃபிக் இருக்காது என்றெண்ணினான். அவன் ஊருக்கு போகிற விஷயத்தை சுபாவுக்கும் சொல்லி இருந்தான். கதிரேசனை வந்து பார்ப்பதாகவும் சொல்லி இருந்தான். அவர்கள் பயணத்துக்கு தயாரானார்கள். இவன் வண்டி ஓட்ட வேண்டாம் டிரைவர் போட்டுக்கொள்ளலாம் என்று தீபா சொல்லிவிட்டாள்.


காலை 4 மணிக்கே கிளம்பி விட்டார்கள். இவனுடைய சிறு வயது நினைவுகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தான். சகோதரிகள் இருவரும் தூங்கி விட்டிருந்தனர் . இவனும் சற்று கண் அயர்ந்தான். அப்பா அம்மாவை பார்க்க இத்தனை நாட்கள் ஆகிவிட்டது என யோசித்தான். இடையில் லஞ்ச் சாப்பிட நிறுத்தினார்கள். என்ன என் கதையை கேட்டால் தூக்கம் வருகிறதா என்றான். அப்படித்தான் என்னவோ தூங்கி விட்டோம் என்றார்கள். தீபாவும், ரஞ்சனியும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றெண்ணி கொண்டான். மாலை 7 மணிக்குத்தான் இவனுடைய ஊருக்கு போய் சேர முடிந்தது. இவனுடைய தம்பி வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். பிரேமுடைய அப்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். தீபாவையும் , ரஞ்சனியையும் வரவேற்றாள் பிரேம் அம்மா. என்னடா இவ்வளவு லேட் என்றார் பிரேம் அப்பா. அது நார்மல் ஸ்பீட் தான். சரி சரி உள்ளே வாங்க . அவனுடைய தம்பியை அறிமுகபடுத்தி வைத்தான் தீபாவுக்கும் ரஞ்சனிக்கும் . அவன் நைட் டியூட்டி என்று கிளம்பி விட்டான். சிறிய நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. நீங்க இந்த ரூம் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார் பிரேம் அப்பா. அதெல்லாம் அப்புறம் முதலில் எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் என்றாள் தீபா. பிரேம் அப்பா நெகிழ்ந்து போனார். பிரேமும் , தீபாவும் அவர் காலில் விழுந்தனர்.

இரவு உணவு ஹோட்டலில் இருந்து வரவழைத்திருந்தார் பிரேம் அப்பா. எதுக்கு இதெல்லாம் வீட்டிலேயே செய்யலாமே என்றான். அதெல்லாம் அப்படித்தான் நீங்க சாப்பிடுங்கம்மா என்றார். டிரைவர் வெளியில் சாப்பிட்டு கொள்வதாக சொன்னார். தீபாவும், ரஞ்சனியும் பிரேம் அம்மாவுடன் கிச்சன் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.என்னாலதான் உங்க நிச்சயத்துக்கு வர முடியாம போயிடுச்சு என்றாள் வருத்தத்துடன். இவர்கள் பரவாயில்லை அத்தை கல்யாணத்துக்கு கட்டாயம் வருவீங்க அப்படின்னு பிரேம் சொன்னார். பிரேம் கதிரேசனுக்கு ஃபோன் செய்தான் காலையில் வந்து பார்ப்பதாய் சொன்னான்.அப்போது குமரகுரு வீடியோ காலில் வந்தார். ரஞ்சனி அவர் பேசுவதை பிரேம் அப்பாவிடம் காட்டினாள். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க உங்க புள்ளை தங்கமான பிள்ளை . நான் பத்திரமா பார்த்துக்குவேன் என்றார்.ரொம்ப நன்றி சார் என்றார்.

இவர்கள் மூவரும் அந்த அறைக்குள் படுத்துக்கொண்டனர். என்ன தீபா உனக்கு ஏதாவது தொந்தரவு இருக்கா என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை நீ குடுத்து வைத்தவன் பிரேம் என்றாள். மறுநாள் காலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு போய் வந்தனர் எல்லோரும்.காலை 10 மணி போல கதிரேசன் வீட்டுக்கு போய் கல்யாண பத்திரிக்கை வைத்தனர்.அவனுடைய இரு பிள்ளைகளுக்கும் சாக்லேட் கிப்ட் ஒன்றை வழங்கினாள் ரஞ்சனி. அவர்களுக்கு டிரஸ் எடுத்திருந்தான். அதையும் கொடுத்தான். தீபா அப்பா அம்மாவுக்கு, தம்பிக்கு அது அவர்களை அழைத்து போய் வாங்கி தரலாம் என்றெண்ணினேன் என்றாள். சரி தீபா. நாங்கள் கிளம்புகிறோம் என்றான். இன்னும் சிலருக்கு பத்திரிக்கை வைத்தான். மேற்கொண்டு மதியம் லஞ்ச் வீட்டிலேயே தயார் பண்ணி இருந்தார்கள். எல்லோரும் 3 மணி போல துணிக்கடைக்கு போக தயாராயினர். அவர்களுக்கு பிடித்தமான உடைகளை எடுத்து கொடுத்தான் பிரேம்.இரவு 8 மணி போல ஊருக்கு திரும்ப ஆயத்தமாயினர். கல்யாணபத்திரிக்கை கொஞ்சம் உங்களிடத்தில் இருக்கட்டும் என்றான். நீங்கள் அவசியம் வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்றான். சரிப்பா அவசியம் வருகிறேன் என்றார் பிரேம் அப்பா. எல்லாவித சங்கடங்களும் தீர்ந்ததாக அவனுக்கு தோன்றியது. அவனுடைய மனம் நிம்மதி அடைந்தது. தீபா அவன் தம்பியிடம் பாங்க் அக்கவுண்ட் நம்பர் கேட்டு வாங்கி கொண்டாள்.பிரேம் போகலாம் என்றான்.