சின்ன சின்ன விஷயங்களை கவனிப்பது ரொம்ப முக்கியம் என்று தீபாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் பிரேம். ஆமாம் இது ரொம்ப முக்கியம் என்றவளை இழுத்து பிடித்து நீ ஏன் அழகாயிட்டே போற நான் அதுக்கு ஆப்போஸிட்டா போறேன் என்று கேட்டான். அதெல்லாம் சும்மா.. சௌமியா அக்காவை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள் என்றாள். சொன்னவள் சாரி நான் வேண்டுமென்றே அவளை நினைவு படுத்தவில்லை என்றாள். அவன் அது கிடக்கட்டும் பிள்ளை அழுகிறான் போய் பார் என்றான். தீபா வாசனை இவன் மேலெங்கும் கொட்டிக்கிடந்தது. என்ன மாமா காலையிலேயே ரொமான்ஸ் ஆ ? அதெல்லாம் இல்ல ரஞ்சனி. சௌமியா என்ன பண்ணுகிறாள் என்பதே தெரியவில்லை. ஒரு காலத்தில் நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எப்படி நம்மை விட்டு கண் காணாத தூரத்துக்கு போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்றான். சரி நான் விசாரித்து சொல்கிறேன் . அக்காவுக்கு தெரிய வேண்டாம் வருத்தப்படுவாள். சரி மாமா.
சில நினைவுகள் ரொம்ப முக்கியமானவை, அதே சமயம் ஆபத்தானவை கூட. மாலை 5 மணி டீ பிரேக்கில் ரஞ்சனியை சந்தித்தான் பிரேம். நான் சொல்ல போவது அத்தனை மகிழ்ச்சியான செய்தி அல்ல என்றாள். எதுவானாலும் சீக்கிரம் சொல் . சௌமியா இப்போது சென்னையில்தான் இருக்கிறார்கள். விவாகரத்து போன வருஷம் கிடைத்திருக்கிறது, வேலைக்காக சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்பா போன வருடம் இறந்து விட்டார். கேட்கவே கஷ்டமாக இருக்கிறது, அவள் காண்டாக்ட் நம்பர் இருக்கிறதா என்றான். இருக்கிறது என்று ஒரு சீட்டில் எழுதி கொடுத்தாள். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் மாமா. அதுதான் எனக்கும் புரியவில்லை. சுபா கூட ஏன் இதை சொல்லவில்லை நம்மிடம்.சௌமியாவுக்கு ஃபோன் செய்தான். நான் பிரேம் பேசுகிறேன் என்றான். எந்த பிரேம் ? நீயா பிரேம் நீயா பேசுகிறாய் ஆமாம். ரொம்ப நல்லது இனிமேல் ஃபோன் பண்ணாதே என்றாள்.இவன் தவித்து போனான்.
சௌமியா எப்படியெல்லாம் இருந்தவள் இன்று இவ்வளவு விரக்தியாய் பேசுகிறாளே .இரவு 9 மணி இருக்கும் சௌமியாவிடம் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது. திரும்ப அடித்தான். ஃபோன் எடுக்கவில்லை. எதற்கு இந்த கண்ணாமூச்சி என்று புரியவில்லை. 10 மணிக்கு ஃபோன் வந்தது . பிரேம் என்னால் இங்கே தனியாய் இருக்க முடியவில்லை.. என்னை வந்து கூட்டிப்போ என சொன்னாள். இவன் கண்கள் கலங்கி விட்டது. நான் வருகிறேன் என்று மட்டும் சொன்னான். தீபா இதெல்லாம் உன் வேலையா என்றாள் ரஞ்சனியை பார்த்து . நான் இல்லை அக்கா. மாமாதான் அவள் பாவம் என்று சொன்னார். தீபா தீபா என்று கூப்பிட்டான் அவள் திரும்பி படுத்துக்கொண்டாள்.இப்போதைக்கு கோவமாய் இருப்பாள் அப்புறம் சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்தான்.
காலையிலே முதல் ஃப்ளைட் பிடித்து சென்னைக்கு போனான். அவள் முகவரி மெசேஜ் செய்திருந்தாள். அவள் அப்பா எப்பேர்ப்பட்ட கோடீசுவரர்.சௌமியா கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தினார் . அவள் வாசலிலே நின்று கொண்டிருந்தாள். பிரேம் டாக்ஸியில் இருந்து இறங்கியவன் அவள் முகம் காண முடியாமல் தவித்து நின்றான். என்ன பிரேம் என்னை அடையாளம் தெரியவில்லையா? இல்லை அடையாளமே என்னிடத்தில் இல்லையா என்றாள். வா உள்ளே போகலாம் என அழைத்து போனாள். அது ஒரு காற்றோட்டமில்லாத அறையாக இருந்தது. மூச்சு முட்டியது . பிரேம் சொல் என்ன சாப்பிடுகிறாய்? எதுவாக இருந்தாலும் நீதான் வாங்க வேண்டும் என்றாள்.அவன் அருகே விளையாடிகொண்டிருந்த பையனை கூப்பிட்டு டிபன் வாங்கி வர செய்தான். ஏன் இவ்வளவு காலமாக்கினாய் பிரேம் என்னை தேடி வர ? முதலில் நீ சாப்பிடு என்றான்.
அவள் கண்களில் பசி தெரிந்தது. சாப்பிட்டு முடித்தவள், உனக்கு நான் பாரமாய் இருக்க மாட்டேன். உன் கம்பெனி ஏதாவது ஒன்றில் வேலை கொடு என்றாள். நான் உனக்கு வேலை கொடுப்பதா என்றான். அப்பா தொழிலில் நஷ்டம் ஆகிவிட்டது. மனம் உடைந்து இறந்து விட்டார். நான் உயிரோடு இறந்து கொண்டிருக்கிறேன் என்றாள். நீ புறப்படு என்னோடு.. எங்கே ?என் வீட்டுக்கு.
சௌமியாவோடு வருகிறேன் என வீட்டுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான். நீ மட்டும் வா என்று தீபா ரிப்ளை அனுப்பி இருந்தாள். இவன் தயங்கி தயங்கி வாசலுக்கு போனான். பிரேம் தீபா என குரல் கொடுத்தான். ரஞ்சனி தான் வந்தாள். இவங்களை ரூமுக்கு அழைத்து கொண்டு போ என்றான் . தீபா பூனை போல வெளியே வந்தாள். நான்தான் சொன்னேனே என்றான். உன் இஷ்டம் என்றாள். சௌமியா அதிகம் பேசவில்லை அவள் ஓய்வெடுத்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான். அவள் அறை மாடியில் இருந்தது. குமரன் கூட கொஞ்ச நேரம் விளையாடுவாள். தீபா இவனிடம் சரியாக பேசுவதில்லை. நாளைக்கு இந்த கம்பெனி இன்டர்வியூ இருக்கிறது என ரஞ்சனி சௌமியாவிடம் சொன்னாள். ரொம்ப தாங்க்ஸ் ரஞ்சனி. நான் அல்ரெடி பேசிட்டேன் . இன்டர்வியூ ஒரு ஃபார்மாலிட்டி தான் என்றாள் ரஞ்சனி.
சௌமியா அக்கா என் கூட கார் ல வாங்க நான் உங்களை டிராப் பண்ணுறேன் என்றாள் ரஞ்சனி . அதெல்லாம் வேண்டாம் நான் ஆட்டோ ல போறேன் என்றாள். சொன்னா கேளுங்க. எல்லாம் சரி ஆகிடும் என்றாள். ஆல் தி பெஸ்ட் என்றாள். இன்டர்வியூ முடிந்ததும் நானே பிக்அப் பண்ணிக்கொள்கிறேன் . சரி ரஞ்சனி. சௌமியாவுக்கு வேலை கிடைத்து விட்டது. தீபா வாழ்த்துக்கள் சௌமியா என்று சொன்னாள். நான் கிளம்பட்டுமா என்றாள் அதெல்லாம் வேண்டாம் நிலமை சரியாகும் வரை எங்களுடனே இருங்கள் .தீபா நான் உன்னை தொந்தரவு செய்யும் நோக்கில் இங்கு வரவில்லை என்றாள் .உங்களை அப்படியே விட்டுவிட எங்களுக்கு மனசாட்சி இல்லாமல் இல்லை. சௌமியா பிரேம் வீட்டில் இருந்தே அலுவலகத்துக்கு போய் வந்தாள்.
சுபா ஃபோன் பண்ணி பேசியிருந்தாள். பிரேம் நீ ரொம்ப நல்லவன் என்றாள். அதெல்லாம் இருக்கட்டும் நீ கூட சௌமியாவை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று கடிந்து கொண்டான்.ஒரு மாதம் ஓடி விட்டது சௌமியா வாங்கிய சம்பளத்தில் எல்லோருக்கும் கிப்ட் வாங்கி வந்திருந்தாள். எதுக்கு இதெல்லாம். எனக்குன்னு யாரும் இல்லை அப்படிங்கிரத மறக்கத்தான் என்றாள். சௌமியா, தீபா, ரஞ்சனி, குமரன் எல்லோருடனும் பீச் போனான். கடல் காற்று வாரி அடித்தது. அவனுடைய நினைவலைகள் அதில் மிதந்தன . தீபா பிரேம் கையை பிடித்துகொண்டாள். என்ன யோசனை என்றாள். இவ்வளவு ஆக்ரோஷமான அலைகளை இப்போதுதான் பார்க்கிறேன் என்றான். அவள் சிரித்தாள். நீ நார்மல் மோடுக்கு வா,குமரனை தூக்கி கொண்டு இங்குமங்கும் ஓடினான்.
ரஞ்சனி எல்லோருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தாள் . ரஞ்சனியும் சௌமியாவும் பேசிக்கொண்டிருந்தனர். தீபா எவ்வளவு நாள் ஆச்சு பீச் வந்து என்றாள். இப்போதாவது தோன்றியதே என்று சொன்னாள்.இனி அடிக்கடி வருவோம் என்றான். குமரன் பலூன் வேண்டும் என்றான். சிவப்பு வண்ணம் ஒன்று, நீல வண்ணம் ஒன்று என வாங்கினான். அடுத்த வருஷம் ஸ்கூல் சேர்க்க வேண்டும் என்றாள் தீபா.மணி 8 ஆகி விட்டது . வழியிலே ஒரு ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டார்கள். ரஞ்சனி மாமா அவர்கள் உன்னை பற்றித்தான் பேசுகிறார்கள் எப்பவுமே என்றாள். அது அவள் பழக்கம் என்றான். மறு நாள் சண்டே என்பதால் எல்லோரும் இன்னமும் தூங்கி கொண்டிருந்தார்கள். பிரேம் முன்னதாக எழுந்து விட்டான். ஃபிரெஷ் ஆகி வெளியே வந்த போது சௌமியா காபி போட்டு எடுத்து வந்தாள். இதை தீபா கவனிக்க தவறவில்லை.
பிரேம் அப்பா சௌமியாவிடம் பேசினார். எப்படிம்மா இருக்கே என விசாரித்தார். பிரேம் ரொம்ப கவலைப்பட்டான். நல்ல வேலை நீ எங்க கூட இருக்குற . ரொம்ப சந்தோஷம் என்றார். அடுத்த மாசம் சின்னவன் ரமேஷ் மனைவிக்கு வளைகாப்பு நீ அவசியம் வரணும் என்றார். சரிப்பா நான் வரேன் என்றாள். இன்னும் ஒரு மாசம் இருந்தது வளைகாப்பு நிகழ்வுக்கு. பிரேம் எனக்கொரு வீடு பாரேன் வாடகைக்கு என்றாள் சௌமியா. அதெல்லாம் வேண்டாம் என்றாள் தீபா. அது என்னவோ என்னால் உங்களுக்குள் பிரச்சனை வேண்டாம் என்றாள் சௌமியா. ஒரு பிரச்சனையும் இல்லை. நீ தாராளமாய் இங்கே இருக்கலாம் என்றான். வளைகாப்பு சீர் செய்ய ஷாப்பிங் போக முடிவெடுத்தார்கள் பிரேமும், தீபாவும்.
என்னென்ன வாங்க வேண்டும்என லிஸ்ட் போட்டு எடுத்து போனார்கள். பிரேம் சௌமியாவுக்கான வளையல்களை
தேர்ந்தெடுத்தான். மாமா நீங்கள் பெரிய ஆள்தான் என்றாள் ரஞ்சனி. அது ஒண்ணுமில்லை என்று சமாளித்தான்
வளைகாப்பு விழாவுக்கு செல்ல ஊருக்கு கிளம்ப தயாரானார்கள். சௌமியாவும் கிளம்பி விட்டாள். தீபா அவளுக்கு ஒரு முறை திருஷ்டி சுற்றி போட்டாள் .ஊரில் யார் எது சொன்னாலும் நீ கண்டுகொள்ளாதே என்றான் பிரேம்.பூஜா புதிதாக வெட்கப்பட்டு கொண்டிருந்தாள். ரமேஷ் வந்தவர்களை உபசரித்து கொண்டிருந்தான். ரமேஷ் பிரேமிடம் சௌமியாவா இது ஆளே மாறிவிட்டாள் என்றான். அதெல்லாம் பேச நேரம்இல்லை நீ வந்தவர்களை கவனி என்றான். பெட்டிக்கடை சீரமைக்கப்பட்டு இருந்தது. பிரேம் அம்மாவை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். சௌமியா வளையல்கள் போட்டுக்கொண்டாள். நைசாக வந்து பிரேமிடம் காட்டி சென்றாள். இவனும் நன்றாக இருக்கிறதென்றான். எல்லா சடங்குகளும் நடைபெற்றது. பூஜா அருகே ரஞ்சனி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கும் இந்த கல்யாண ஆசை வராதா என்று பிரேமுக்கு தோன்றியது.
சாப்பாடு பிரமாதமாக இருந்தது. பிரேம் எல்லோருக்கும் பரிமாறினான். குமரனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார் பிரேம் அப்பா. மனநிறைவுடன் கிளம்புகிறேன் என்றான் பிரேம். குமரனுக்கு மொட்டை அடித்து காது குத்த வேண்டும் குழ தெய்வம் கோவிலில் எப்போது வருகிறாய் என கேட்டார் பிரேம் அப்பா. கூடிய சீக்கிரம் வருகிறேன் என்றான். பிரேம் அப்பா சௌமியாவிடம் ஏதோ பேசினார். காலம் விரைந்து கொண்டிருந்தது. பூஜாவும், ரமேஷூம் வழியெங்கும் பிளெக்ஸ் பேனர்களில் சிரித்தார்கள். அதில் குமரன் படமும் இருந்தது.தீபாவி இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகலாம் என சொன்னார் பிரேம் அப்பா. அவள் மறுத்துவிட்டாள். என்ன பிரேம் நாம் இங்கே ஒரு வீடு வாங்கினால் என்ன ?என்றாள் தீபா. இங்கே வாங்கினால் லாண்ட் மதிப்பு ஏறாது என்றான்.
ரஞ்சனி அடுத்த முறை வரும் போது ஒரு 5 நாட்களாவது தங்க வேண்டும் என்றாள். உன் கல்யாணத்தையே இங்கு வைத்துக்கொள்வோம் நீ சரி என்று சொல் என்றான். ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் நிச்சயம் கல்யாணம் செய்து கொள்கிறேன். ரஞ்சனிக்கு ஆபீசில் ப்ரமோஷன் கிடைத்தது, மார்கெட்டிங் மேனேஜர் என்ற பதவிக்கு உயர்ந்திருந்தாள். பிரேம் நீ உண்மையிலேயே திறமைசாலி என்றான் . மாமா எல்லாம் உங்கள் ட்ரைனிங் .