ஒரு புறம் சௌமியா மறுபுறம் தீபா என பிரேமின் நாட்கள் நகர தொடங்கியது . சௌமியாவுடனான காதல் முடிந்து போன கதை. அதை மீண்டும் தொடர முடியாது. இதை பிரேம் நன்கு உணர்ந்து இருந்தான். ஆனால் அவள் வாழ்வை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் பிரேமுக்கு இருந்தது. தீபா இதை பற்றி வெளிப்படையாக பேசமாட்டாள். அவளுக்கும் சில எல்லைகள் இருந்தன. என்ன பிரேம் டீப் திங்கிங் ? என்றாள் தீபா. சௌமியாவுக்கு நாம் என்ன செய்தால் சரியாக இருக்கும் . நீயே கல்யாணம் செய்து கொள் என்றாள். நான் சீரியஸ் ஆக கேட்கிறேன். அவளிடமே இந்த கேள்வியை கேட்பது நல்லது. அது வேண்டாம். நீ இப்படியே இரு சாமியார் பிரேம். கரெக்ட் நாம் ஸ்வாமிகளை பார்த்து வருவோம் . அவர் சொன்னால் சரியாக இருக்கும். நான் வரவில்லை. நீயும் சௌமியாவும் மட்டும் போய் வாருங்கள் என்றாள். இவன் சௌமியாவை தேடினான். ரொம்ப தேடாதே நான் ரூமில் தான் இருக்கிறேன் என்றாள்.
ஸ்வாமிகள் என்ன பிரேம் நீயாக தேடிக்கொண்ட பிரச்சனைக்கு என்னிடம் பதில் கேட்டால் எப்படி என்றார். நான் நெருப்பின் மீது இருப்பதாய் உணர்கிறேன் என்றான். அது வெறும் நடிப்பு . உனக்கு இன்னும் சௌமியா மீது காதல் இருக்கிறது. அவன் முகம் வெளிறிப் போனது. நீ அந்த பெண் விருப்பபட்டால் அவளையே திருமணம் செய். இல்லையென்றால் அவளை வேறு ஒரு திருமணம் செய்ய சொல்லி கட்டாயபடுத்தாதே . சௌமியா கண்களை மூடிக்கொண்டிருந்தாள். நன்றி சுவாமி என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அவளை அவளுடைய ஆபீசில் டிராப் செய்தான்.தீபா ஃபோன் செய்து இருந்தாள். குழந்தைக்கு ஜுரமா இருக்குன்னு ஹாஸ்பிடல் வந்தேன். நீங்க எங்க இருக்கீங்க என்றாள். உடனே எந்த ஹாஸ்பிடல் என விசாரித்து விட்டு கிளம்பினான், கிளைமேட் மாறி இருக்கிறது. அதுதான் குழந்தைக்கு ஒத்துக்கலை என்றார் டாக்டர்.
ரஞ்சனி 3 மணிக்கெல்லாம் வந்து விட்டாள். குமரன் தூங்கிக்கொண்டிருந்தான். அவ்வப்போது குமரனை தொட்டு தொட்டு பார்த்து கொண்டிருந்தாள் ரஞ்சனி. போதும் மாமா நீங்கள் பிறருக்கு உதவி செய்தது. என்றாள் ரஞ்சனி. நீயே சின்ன பெண் எனக்கு அட்வைஸ் பண்ணுகிறாயா என்றான், என் மேல் எனக்கே நம்பிக்கையில்லை. ம் நல்ல தத்துவம் . கிண்டல் பண்ணாதே உனக்கும் அப்படி ஒரு காலம் வரும் என்றான். அது ராக்கி என்பவன் ரூபத்தில் வரும் என்று நினைக்கவில்லை. சினிமாவில் வரும் வில்லனை போல உயரம், தோற்றம். இவளுடைய சீனியர் மேனேஜர் ஆக வந்து சேர்ந்தான். இங்கே எல்லாமே நீதான் என்கிறார்கள். உன்னை பார்த்தால் சிறுபிள்ளை போல இருக்கிறாய் என்றான். இவள் சிரித்தாள். நாளைக்கே நாம் வட இந்தியாவுக்கு ஒரு மார்கெட்டிங் டூர் போகிறோம் என்றான். சரி சார் என்று சொல்லிவிட்டாள் .
பிரேம் இதெல்லாம் சகஜம் நீ ரொம்ப கஷ்டபட வேண்டாம். அவன் பார்க்கத்தான் ஆள் அப்படி , நீ உன் வேலையை மட்டும் செய் ரஞ்சனி என்றான். தீபா எதுக்கு அவ்வளவு தூரம் என்றாள். எல்லாம் காரணமாகத்தான்.இப்போது குமரனுக்கு ஜூரம் தேவலை. சௌமியா கூட விளையாடிகொண்டிருந்தான். ரஞ்சனி எத்தனை மணிக்கு ஃப்ளைட்? காலை 3 மணிக்கு. சரி நான் உன்னை ஏர்போர்ட்டில் டிராப் பண்ணி விடுகிறேன் என்றான். ராக்கி அதிகம் லக்கேஜ் வைத்திருக்கவில்லை. இவளும் அவனும் அருகருகே சீட். இவள் ஒன்றும் சொல்லவில்லை. ரஞ்சனி நீ ஏதாவது சொன்னால்தான் எனக்கு தெரியும். என்னிடம் பேசு என்றான். சரி மாமா போய் வருகிறேன் என்று போனை அணைத்து வைத்தாள். அவனுக்கு இதுதான் முதல் முறை வட இந்திய பயணம் என்பதை கண்டுபிடித்தாள். ஃப்ளைட் உணவு அவளுக்கு செட் ஆக வில்லை. பிஸ்கட் மட்டும் கேட்டு வாங்கி கொண்டாள்.
டெல்லி நோக்கித்தான் அவர்கள் பயணம் மேற்கொண்டு இருந்தார்கள். அவளுக்கும் ரொம்ப நாளாக தாஜ்மஹால், ஆக்ரா போன்றவற்றை பார்க்க ஆசைதான் . நேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள். டெல்லி வந்து சேர்ந்ததும் இவர்கள் ஹோட்டல் ஒன்றிற்கு போனார்கள். ஏற்கனவே இவள் ரூம் புக் செய்து வைத்திருந்தாள் . இவன் ஹிந்தியில் சரளமாக பேசுவான். அவளால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேச வராது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம் என்றான். ஃப்ளைட்டில் வரும்போது ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். இவள் அத்தனை சிரத்தையுடன் கேட்கவில்லை. மணி 7 இருக்கும் இவள் பார்க்க வேண்டிய கிளையண்ட் லிஸ்ட் தவற விட்டிருந்தாள் . சிஸ்டம் முழுவதும் தேடியும் கிடக்கவில்லை. அவன் 7 30 அளவில் தயாராகி வந்து விட்டான். என்ன ஆச்சு கிளையண்ட் லிஸ்ட் மிஸ் ஆகி விட்டிருக்கிறது என்றாள். என்ன விளையாடுகிறாயா ? நன்றாக தேடிப்பார் என்றான். மறுபடியும் தேடினாள். சரி விடு என்னிடம் ஒரு காப்பி இருக்கிறது நேரத்தை வீணாக்க வேண்டாம்.
இருவரும் டிபன் சாப்பிட்டு விட்டு ஹோட்டல் விட்டு புறப்பட்டனர். டாக்ஸி ஒன்றை பிடித்திருந்தான். அவள் ஒரு முக்கியமான பிரசன்டேஷன் கொடுக்க வேண்டும் . இன்று எதுவும் சொதப்பி விடக்கூடாது என வேண்டிக்கொண்டாள். அவளுக்கு பிரேமிடம் பேச வேண்டும் போல தோன்றியது. என்னம்மா ஏன் இவ்வளவு டென்ஷன் ? எல்லாம் அப்படித்தான் நடக்கிறது என்றாள். நீ கவலைப்படாதே. எமர்ஜென்ஸி என்றால் அடுத்த ஃப்ளைட்டில் நான் அங்கு வருவேன் என்றான். தாங்க்ஸ் மாமா. என்ன ஆச்சு பிரேம். தீபா கிளையண்ட் லிஸ்ட் இங்கேயே விட்டு போய்விட்டாள்.
அதுதான் சமாதானம் சொல்லி கொண்டிருந்தேன். அன்று நாள் முழுக்க வேலை . மாலை 4 மணி போல தாஜ்மஹால் பார்க்க போலாமா என்றான் ராக்கி. போலாமே என்றாள். இன்று அலைந்தது ஒன்றும் அத்தனை யூஸ்புல் ஆக இல்லை என்றான். ஆம் இது எதிர்பார்த்தது தான் என்றாள்.. நாம் நாளை ஒரு நாள் தங்கி இருந்து முயற்சி செய்து பார்ப்போம் என்றான். தாஜ்மஹாலின் அழகை ரசித்தார்கள். அவர்கள் போட்டோ எடுத்து கொண்டார்கள்.
8 மணிக்கெல்லாம் ரூமுக்கு திரும்பினார்கள். குட் நைட் என்றான். இவள் நன்கு தூங்கி விட்டாள். யாரோ பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. கதவை திறந்தாள். பிரேம் நின்றிருந்தான். மாமா என்னாச்சு? இன்று ஒன்றும் உருப்படியாய் இல்லை என்று ராக்கி சொன்னான். அதுதான் வந்தேன். ராக்கியை பார்த்துவிட்டு தான் உன்னை பார்க்க வந்தேன் என்றான். எனக்கு வேறு ரூம் புக் பண்ணி இருக்கிறேன். ராக்கி டிஸ்கஷன் பண்ண விரும்புகிறான். அதனால் நைட் தூக்கம் இருக்காது போல என்றான். சரி குட் நைட் என சொல்லிவிட்டு ராக்கி தோளில் கை போட்ட படி போனான். தீபாவும். சௌமியாவும் இவனுக்கேன் இந்த வேலை ?பாதி ராத்திரியில் ஃப்ளைட் பிடித்து போயிருக்கிறான். அவனுக்கு அந்த ராக்கி மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் என்றாள் சௌமியா.
மறுநாள் பிரசன்டேஷன் சிறப்பாக பண்ணினாள் ரஞ்சனி. எல்லோருக்கும் பிரேமே நேரில் வந்ததில் சந்தோஷம். ஜெய்பூர் போகலாமா என கேட்டாள். சுற்றிப்பார்க்கவா அப்படி என்றால் போகலாம் என்றான் ராக்கி. இவன் உனக்கு மேல் இருக்கிறான். வட இந்தியாவை சுற்றிப்பார்க்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறான். மூன்றாம் நாள் சாயங்காலம் இவர்கள் திரும்ப வீடு வந்து சேர்ந்தார்கள். குமரன் ஓடி வந்து சித்தி என கட்டிக்கொண்டான். இப்படியா சுற்றிப்பார்க்க போவீர்கள் நாங்களும் வந்து இருப்போம் தானே என்றாள் தீபா. இது சும்மா sample. நாம் எல்லோரும் அமெரிக்கா செல்ல இருக்கிறோம் சுபா வீட்டுக்கு என்றான். எப்போ ?எப்போ என்றாள் தீபா. இன்னும் மூணு மாதத்தில். ரஞ்சனி எப்பவுமே நாம் டொமினாண்ட் ஆக இருக்க வேண்டும் நம்மை யாரும் கேள்வி கேட்கும் நிலையில் வைத்திருக்க கூடாது என்றான். சரி மாமா.
ராக்கி ஃபோன் பண்ணியிருந்தான். இன்றைக்கு ஆபீஸ் வருகிறீர்களா என்றான். இல்லை வரவில்லை. எனக்கு டீடெயில்ஸ் அனுப்பி வையுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்றான். சரி. யாரு ராக்கியா ஆமாம் அவனே தான் . ரொம்ப துடிப்பானவன் .அவர்கள் எடுத்த போட்டோவையே பார்த்து கொண்டிருந்தாள். தாஜ்மஹால் மறக்க முடியாததாகிவிட்டது. அதுக்காகவெல்லாம் அவனை கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியாது. நமக்கு பிஸினஸ் முக்கியம். தீபா என்ன ரஞ்சனி ஆளே மாறிவிட்டாய் . அப்படியெல்லாம் இல்லை என்னவோ வெட்கப்பட்டு சிரிக்கிறாய் என்று மாமா சொல்கிறார். அவருக்கு வேறு வேலை இல்லை.
மறுநாள் ஆபீஸ் போயிருந்தபோது நேற்று நீங்கள் ஏன் வரவில்லை ராக்கி பர்த்டே நேற்று ஆபீசே கொண்டாட்டமாய் இருந்தது என்றார்கள். இவள் அவனுடைய கேபினுக்கு போனாள் . பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றாள். அவ்வளவுதானா என்றான். என்ன வேண்டும் என்றாள். என்னுடைய ஃபிரண்ட்ஸ் பார்ட்டி ஒன்று இருக்கிறது கலந்து கொள்வீர்களா என்றான். சாரி மாமாவுக்கு அது பிடிக்காது சாரி என்றாள். எப்போ பார்த்தாலும் மாமா மாமா என்றான். அவள் எதுவும் சொல்லவில்லை. உள்ளுக்குள் வருத்தப்பட்டாள். அவன் அவளை விரும்ப தொடங்கியிருந்தான். நமக்கு காதல் எல்லாம் செட் ஆகாது என்று சொல்லிக்கொண்டாள் .
சிறிது நேரம் கழித்து அவனிடத்தில் இருந்து ஃபோன் வந்தது . சாரி உங்கள் பெர்சனல் விஷயத்தில் நான் தலையிட்டு இருக்க கூடாது என்றான். இவள் இட்ஸ் ஓகே என்றாள்.
ரஞ்சனி இந்த ராக்கி நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை இவனிடம் எப்படி பழகுவது என்றாள். , ரொம்ப ஆபத்து, நீதான் அவனிடம் நெருங்கி போகிறாய் , வேண்டுமென்றே அவனை டீஸ் செய்கிறாய் என்றான். அப்படியில்லை மாமா. எனக்கும் காதல் என்னவெல்லாம் செய்யும் என புரியும். இது காதலே அல்ல என்றாள். சரி நான் சொன்னால் நீ நம்பவா போகிறாய். நீயே உணரும் போது கல்யாணம் செய்து கொள்.தீபா இதெல்லாம் உங்களுக்கு வேண்டாத வேலை அவளை சும்மா உசுப்பி விடுகிறீர்கள். நீ வா ரஞ்சனி சாப்பிடலாம் என்றாள்.
ராக்கி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ரஞ்சனி அழகுக்கு முன் துரும்பென தெரிந்தான். ஆபீஸில் சில பேர் அதெல்லாம் இருக்காதுப்பா என்றார்கள். அவர்கள் அடுத்த முறை பயணம் எப்போது போவார்கள் என பிரேம் காத்திருந்தான். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ரஞ்சனி விரும்பவில்லை.
காதல் மலர்வதெல்லாம் கஷ்டம். தானாக ஒடுவதுதான் இஷ்டம் என பேசிக்கொண்டிருந்தான் பிரேம். நீங்கள் எப்படி சௌமியா மேல் காதல் கொண்டீர்கள் என கேட்டால் ரஞ்சனி. அது ரொம்ப சிம்பிள் . நான் அவளை மட்டுமே காதலித்தேன் அவள் என்னை மட்டுமே காதலித்தாள். எங்களுக்கு சாய்ஸ் தேவைப்படவில்லை என்றான். அவளும் நானும் இன்ஜினியரிங் ஒரே வகுப்பு நான் சுமார், அவள் சூப்பர் என்று சிரித்தான். இப்போதும் அவள் நினைவுகள் பசுமையாய் உள்ளன. போதும் கேட்டது என்றான் பிரேம்.