nizhal tharum vasantham in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 38

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 38

என்ன பிரேம் ஜோசியர் சொன்னது நடக்குமா ? நம்பித்தான் ஆக வேண்டும் . ரஞ்சனி எங்கு போய்விட்டு வருகிறீர்கள் எல்லோரும் என்றாள். சும்மா ஒரு பீச் வாக் . நானும் வந்திருப்பேனே ? ம் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள் என்றாள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை காபி போட்டு எடுத்து வருகிறாயா பிளீஸ் என்றான் பிரேம். சரி சரி போகிறேன். ரஞ்சனி ஆபீஸ் வேலைகளில் முக்கியமான முன்னேற்றத்தை கொண்டு வந்தாள். அவளுக்கு மற்றுமொரு ப்ரமோஷன் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். அவளுடைய சுதந்திரம், எண்ணம் எல்லாம் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது.

அந்த வருட தீபாவளிக்கு எல்லோருக்கும் டிரஸ் எடுக்க தீர்மானித்து ஷாப்பிங் சற்று முன்னதாகவே போனார்கள். குமரன் விருப்பபடியே பட்டாசுகள் வாங்கப்பட்டது. சௌமியாவும்,ராக்கியும் ஊருக்கு இவர்கள் கூட வருவதாக சொன்னார்கள்.ஸ்வீட்ஸ் தயார் செய்யும் பணியில் தீபா மும்முரமாக இருந்தாள். பிரேம் அந்த வீட்டை பற்றிய கற்பனையில் இருந்தான். வீடு நல்லவிதமாக சீரமைக்கபட்டது குறித்து இஞ்சீனியரிடம் நன்றியும் பாராட்டும் தெரிவித்தான். அப்பா, அம்மா இல்லாத வீடாய் அது மாறிப்போனது ஏமாற்றம் அளித்தது.ரஞ்சனிக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் அப்புறம் இவன் ஊருக்கே போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தான். இதை தீபாவிடமும் சொன்னான். நம்முடைய பையனின் எதிர்காலம் குறித்து யோசிக்க மாட்டீர்களா என்று கோபித்து கொண்டாள். நான் அவனுக்கான ஏற்பாடுகளையும் நிச்சயம் செய்வேன் என்றான்.வேலை தேடி அலைந்த நாட்களை நினைத்து பார்த்தான்.

சுபாவுக்கு ஃபோன் செய்து ரொம்ப நாட்கள் ஆயிற்று என்று தீபா நினைவு படுத்தினாள். என்ன தீபாவளி எல்லாம் வந்துவிட்டதா என்றான் பிரேம். லலிதா எப்படி இருக்கிறாள்? வாசன் எப்படி இருக்கிறார் என்றான். எல்லோரும் நன்றாய் இருக்கிறார்கள்.என்னுடைய சொந்தக்கார பையன் ஒருவனுக்கு உன் கம்பெனியில் வேலை கிடைக்குமா என்றாள் சுபா. ரெஸ்யூம் அனுப்பு நிச்சயம் ஹெல்ப் பண்ணுகிறேன் என்றான். அவன் பெயர் நீலன் .பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்றான். அதெல்லாம் ஆள் மிகுந்த நேர்மறை சிந்தனை கொண்டவன்.நான் சொன்னதால் உடனே வேலை கொடுக்க வேண்டாம். எல்லோரையும் போல அவனுக்கும் டெஸ்ட் வைத்து பார். சரி சுபா. ரஞ்சனியிடம் ரெஸ்யூம் ஃபார்வார்டு செய்தான். ஆள் ஒரு இடத்தில் கூட ஆறுமாதம் வேலை பார்த்ததில்லை போல . அவள் பிரேமிடம் எதுவும் சொல்லவில்லை. நீலன் என்று சொல்லி பார்த்தாள்.

ஒரு வாரம் கழித்து அவனுக்கு இன்டர்வியூ மெயில் அனுப்பினாள் ரஞ்சனி. அவள் எவ்வித காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பாதவள் . சௌமியாவை விட்டே இன்டர்வியூ எடுக்க சொன்னாள். ராக்கியும் அதில் சேர்ந்து கொண்டான். அவர்கள் இவன் எல்லாம் வேலைக்கு லாயக்கு இல்லை வெறும் பேப்பர் வீரர்கள் என்று நினைத்தார்கள்.கடைசியாக நீலன் வந்து விட்டான். அவன் ஒயிட் கலர் பாண்ட் நீல நிற சட்டை அணிந்திருந்தான். டை கட்டி இருந்தான். அவனை ரஞ்சனி வரவேற்றாள். சௌமியா ரூமுக்கு அழைத்து சென்று அவனை அவர்களிடம் அறிமுகபடுத்தினாள். சௌமியாவும், ராக்கியும் அவனிடம் கேள்விகள் கேட்க தொடங்கினர். அவன் பதில் சொல்ல தெரிந்தும் வேலையில் விருப்பம் இல்லாதவன் போல காட்டி கொண்டான். சௌமியா ராக்கியிடம் அவனை ஒப்படைத்து விட்டு ரஞ்சனி ரூமுக்கு போனாள். சரியான முரடன் என்றாள் சௌமியா . லேடீஸ் என்றாலே ஆகாது போல என்றாள். ஓ அப்படியென்றால் நம்முடைய சென்னை கிளைக்கு அனுப்ப வேண்டியது தான் என்றாள்.

ராக்கி வியர்த்து விறுவிறுத்து போய் வந்தான். நம்மால் இவனுக்கு இங்கே வேலை கொடுக்க முடியாது . சென்னைக்கு அனுப்பலாம் இல்லையென்றால் ஹைதராபாத் என்றான். சரி நான் ஒரு முறை பேசி பார்க்கிறேன் என்றாள் ரஞ்சனி. அவனை வர சொல்லுங்கள் என்றாள். இன்று வேணாம் இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்றாள். அவனிடத்தில் அவ்வாறே சொல்லப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து வந்தவன் ஏன் என்னை அலைக்கழிக்கிறீர்கள் என்றான் ரஞ்சனியிடம். அப்படியில்லை உங்கள் பொறுமை எங்களுக்கு ரொம்ப பிடித்து விட்டது. நீங்கள் ஏன் ஒரே பொய்யாக பேசுகிறீர்கள் என்றான். சரி உங்களுக்கு வேண்டாம் என்றால் எங்களுக்கும் வேண்டாம். நான் அப்படி சொல்லவில்லை. நாங்களும் அப்படி நினைக்கவில்லை என்றாள். நீங்கள் சென்னைக்கு அல்லது ஹைதராபாத் செல்ல தயாராக இருந்தால் தொடர்ந்து பேசுவோம். இல்லையென்றால் இத்தோடு முடித்து கொள்வோம் என்றாள். நான் தயார் என்றான். நாளைக்கு வந்து அப்பாய்ன்ட் ஆர்டர், சம்பள விவரங்கள் போன்றவற்றை பெற்று கொள்ளுங்கள் என்றாள். அவன் விடை பெற்று கொண்டான்.

சுபா ரஞ்சனிக்கு ஃபோன் செய்தாள். பையன் அப்பா இல்லாமல் அம்மா வளர்த்த பையன் அதனால்தான் அப்படி நடந்து கொள்கிறான். தாங்க்ஸ் ரஞ்சனி என்றாள். இதுக்கு எதற்கு தாங்க்ஸ் அக்கா, எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்றாள். நீலன் ஃபோன் செய்திருந்தான்.ஆர்டர் வாங்கிவிட்டேன் என்றான். நல்லது நாங்கள் உங்கள் திறமையை நம்புகிறோம் என்றாள். பிரேம் மகிழ்ச்சி அடைந்தான் . எப்படியும் நீ அவனை பெயில் ஆக்கிவிடுவாயோ என பயந்தேன் என்றான் பிரேம்.நான் ஏன் அவ்வாறு செய்ய போகிறேன் இத்தனைக்கும் அவன் கணக்கு மேஜர். அவனிடம் எப்படி வேலை வாங்க போகிறார்கள் என்ற கவலையும் இருக்கிறது எனக்கு. அவன் 6 மாசம் தாண்டினால் பெரிய விஷயம்.

தீபாவளி நெருங்கி கொண்டிருந்தது. எல்லோரும் உற்சாகத்துடன் பணி புரிந்து கொண்டிருந்தனர். பிரேம் பல தருணங்களில் ஊருக்கு வேலையில்லாமல் போவதை நினைத்து வேதனைப்பட்ட நாட்கள் உண்டு. அதை சௌமியா அறிவாள் . தீபா என்ன பழைய கதையா ? ம் நீயும் உண்டு அதில் நீதான் ஹீரோயின் என்றான்.டம்மி ஹீரோயின் ஆ? ஒரிஜினல் ஹீரோயின். போதும் ஐஸ் வைத்தது . எத்தனை நாள் அங்கு தங்குவதாய் பிளான் என்றாள்.தீபாவளிக்கு முதல் நாள் காலையிலேயே அங்கு போகிறோம் . மறுநாள் தீபாவளி. அதற்கு அடுத்த நாள் தங்கிவிட்டு கிளம்பி விடுவோம் என்றான்.நான் ஒரு வாரமாவது தங்குவோம் என நினைத்தேன் . நாம் எப்படியும் அங்குதான் செட்டில் ஆக போகிறோம் அப்புறம் என்ன என்றான். சரி பிரேம் எனக்கு இன்னும் பலகார வேலையெல்லாம் இருக்கிறது முடித்து விட்டு வருகிறேன் என்றாள்.

நீலன் சென்னையில் ஜாயின் செய்து ஒரு மாதம் ஓடிவிட்டது. எந்த பிரச்சனையும் இல்லை என்பது ரஞ்சனிக்கு ஆறுதலாக இருந்தது. நீலன் அவன் பிரச்சனைக்காக காத்திருக்கிரானோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.சௌமியாவிடம் தன் கவலையை சொன்னாள்.அப்படி எதுவும் நடக்காது, நீ தைரியமாய் இரு என்று சொன்னாள். சௌமியா அம்மாவையும் தீபாவளிக்கு நம்முடன் அழைத்து போக வேண்டும் என்றாள். அதுக்கென்ன இன்னொரு கார் அரேஞ்ச் செய்தால் போயிற்று என்றாள் ரஞ்சனி. அப்போது தான் அந்த செய்தி வந்தது . நீலன் வேலையை காட்டி விட்டான். நீலன் யாரையோ கை ஓங்க போக அவர்கள் எல்லாம் சேர்ந்து நீலனை சாத்திவிட்டார்கள். இப்போது அவன் சென்னை ஹாஸ்பிடலில் . இவள் ஃப்ளைட் பிடித்து உடனே கிளம்பினாள் . சுபாவுக்கு தகவல் சொன்னாள். அவள் அதெல்லாம் அவனுக்கு சாதாரணம் என்றாள். இவளுக்கு ஒரே ஆச்சரியமாய் போய் விட்டது.

அவன் இருக்கும் இடம் போய் விசாரித்தாள். அவன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஒரு வழியாக ஹாஸ்பிடல் அடைந்தாள். அவன் ஆரஞ்சு தின்று கொண்டிருந்தான். கையில் கட்டு போட்டிருந்தார்கள். அவன் அம்மா கவலையுடன் அருகில் இருந்தாள். என் பெயர் ரஞ்சனி என்றாள்.இவங்கதான் நான் அடி வாங்கணும்னே என்னை சென்னைக்கு அனுப்புனவங்க என்றான். பிளீஸ் நீங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. கூட்டி பெருக்கிற பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க போனான். அவனை அடிக்க போனேன். அவன் என்னை அடித்து விட்டான். இது ஒரு வேலையா? நான் என்ன செய்யணும் உங்களுக்கு. இனிமே நான் யாரையும் அடிக்க போக மாட்டேன். இவனை வேலைய விட்டு மட்டும் தூக்கிறாதீங்க என்றாள் அவன் அம்மா. ஒரு மன்னிப்பு லெட்டர் எழுதி கொடுத்துட்டு ஜாயின் பண்ணிக்கோங்க . நான் ஹாஸ்பிடல் பில் பே பண்ணிடறேன் என்றாள்.

இவளுக்கு அவனை நினைத்தால் சிரிப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. பிரேம் ஃபோன் பண்ணியிருந்தான் . ஒண்ணுமில்லை மாமா என்று நடந்ததை சொன்னாள். அவனுக்கு கையில் கட்டு . இரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். சரிம்மா நீ ஜாக்கிரதையாக வந்து சேர் என்றான். மழை வரும் போல இருந்தது. எப்படியோ ஊர் வந்து சேர்ந்து விட்டாள். தீபா நீ ஏன் அவசரமாக போனாய். வேறு யாராவது இல்லையென்றால் ராக்கியை அனுப்பி இருக்கலாமே என்றாள்.அவனை பார்த்தால் பிரேம் மாமா மாதிரியே இருக்கிறான். அதுதான் போய்விட்டு வந்தேன். நீ டின்னர் சாப்பிடு என்றாள். என்ன நடந்தாலும் ரஞ்சனி மனசை மாத்த முடியாது என்றான் பிரேம். ஏன் அப்படி சொல்லறீங்க ? எனக்கென்னவோ அவளை அப்படியே விட்டுடுறது நல்லதுன்னு தோணுது.

தீபாவளிக்கு எல்லோருக்கும் போனஸ் வழங்கப்பட்டது. கம்பெனி நல்ல லாபத்தில் இயங்குவதால் குறையின்றி எல்லோரும் வேலை செய்தார்கள். சௌமியா ஹோம் லோன் பிராசஸ் ஆகிவிட்டது. ராக்கி ரொம்ப நெகிழ்ந்து போனான். இனியாவது குழந்தையை தள்ளி போட வேண்டாம் என ராக்கியிடம் பிரேம் சொன்னான். நிச்சயமாக தள்ளிப்போட மாட்டோம் என்றான் ராக்கி. நாளைக்கு நீயும் சௌமியாவும் வீட்டுக்கு வாருங்கள் ஊருக்கு போகிறதை பற்றி பேசுவோம் என்றான். சரி நிச்சயம் வருகிறேன் என்றான்.நீலன் ஃபோன் பண்ணியிருந்தான் ரஞ்சனிக்கு . ஹாப்பி தீபாவளி என்றான். நீலன் எப்படி இருக்கிறீர்கள் என்றாள். நான் நன்றாக இருக்கிறேன். அம்மா எப்படி இருக்கிறார்கள். அம்மா இப்போது என்னுடன் இல்லை. என்ன ஆச்சு ? அவன் அழ தொடங்கிவிட்டான். அவங்க ரெண்டு மாசம் முன்னே இறந்து விட்டார்கள் என்றான். நீங்க அழாதீங்க என்றாள். ஃபோன் வைத்து விட்டான்.

ரஞ்சனி பிரேமிடம் இந்த விஷயத்தை சொன்னாள். சுபா கூட நம்மிடம் சொல்லவில்லையே என்றான். என்னவோ நடக்கிறது.அவனையும் நம்முடன் தீபாவளிக்கு வர சொல்லலாமா என்றாள் தீபா. அவனையா ? இப்போது வேண்டாம் . அவன் முதலில் நிலை கொள்ளட்டும் பிறகு இங்கேயே அவனை மாற்றிவிடலாம் என்றான் பிரேம். சௌமியா , ராக்கி இருவரும் வந்திருந்தார்கள். ரஞ்சனி சோகமாக இருப்பதை பார்த்தவள், நானும் கேள்விப்பட்டேன்
அவனுடைய நிலமை கஷ்டம் தான் என்றாள் சௌமியா. குமரன் ஸ்வீட்பாக்ஸ் கொண்டுவந்து சௌமியாவிடம் நீட்டினான்.