காலந்தோறும் உடலும் ,மனமும் மாறிக்கொண்டு வரும்போதும் அவர்களிடத்தில் அன்பு ஒன்றே மாறாமல் இருந்தது. தீபா பிரேமின் மீது கொண்ட அன்பும் அத்தகையதுதான். ராக்கி, சௌமியாவின் மீது கொண்ட அன்பும் அப்படித்தான்.வீடு சீர் செய்ய ஆரம்பித்து 3 மாதங்கள் ஓடி விட்டன. இவனால் ஊருக்கு போய் பார்க்க முடியவில்லை. அது ஏமாற்றத்தை கொடுத்தது. தீபா நானும், குமரனும் போகட்டுமா போய் பார்த்து வரட்டுமா என்றான். நிஜமாக சொல்கிறாயா ? ஆமாம் அது நம்முடைய வீடு. நிச்சயம் போய் பார்க்கிறேன் என்றாள்.இந்த வாரம் குமரனுக்கு பரீட்சைகள் முடிந்ததும் அழைத்து போகிறேன் என்றாள். நான் இஞ்சீனியர் கிட்ட பேசிடறேன் என்றான். நீ கவலைபடாதே பிரேம். அவள் இன்னும் சிறு பெண் தான். ரஞ்சனி நானும் வரவா என்றாள். இப்போது வேண்டாம் என்றாள் தீபா.
திட்டமிட்டபடி தீபா கிளம்பி விட்டாள். குமரன் சீட் பெல்ட் போட்டுக்கோ.. அம்மா பேச்சை கேக்கணும் என்றான் பிரேம்.அவள் கார் ஓட்டும் விதமே அலாதியானது. ஸ்டைல் ஆகவும் ஓட்டுவாள்.மம்மி நாம எந்த ஊர் போறோம் ?உங்க அப்பா பிறந்து வளர்ந்த ஊருக்கு.அங்கே யாரெல்லாம் இருக்காங்க. இப்போ யாருமில்லே. சித்தப்பா ரமேஷ் , சித்தி பூஜா இருந்தாங்க.ம் தாத்தா கட்டுன வீடு அது.நாம எங்க தங்க போறோம். கதிரேசன் அங்கிள் இருக்காரு , அவர் உங்க அப்பவோட குளோஸ் ஃப்ரெண்ட்.. அவர் வீட்டுலதான் தங்க போறோம் என்றாள்.அங்கே வேறென்ன இருக்கு, கோவில் இருக்கு.. அப்புறம் மேஜிக் ஷோ நடக்கும் எப்பவாவது . என்னை கூட்டிட்டு போங்க மம்மி மேஜிக் ஷோவுக்கு என்றான். நிச்சயமா என்றாள். கதிரேசன் இவர்களை வரவேற்றான். பிரேம் ஃபோன் பண்ணியிருந்தான் நீ வந்ததுல ரொம்ப சந்தோஷம். உள்ளே வாங்க என்றாள் கதிரேசன் மனைவி. அந்த வீடு சிறியதாய் இருந்த போதும் தீபாவுக்கு பிடித்திருந்தது.
கதிரேஷனுக்கு இரண்டுமே பெண்கள். பெரியவள் 6 வதும், சின்னவள் 3 வதும் படித்து வந்தனர். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு இரவு உணவு சாப்பிட்டனர்.எங்க வீட்டு சாப்பாடு தம்பிக்கு பிடிக்குதோ இல்லையோ என்றாள். அதெல்லாம் நான் பார்க்க மாட்டேன் நல்லா சாப்பிடுவேன் என்றான் குமரன். எல்லோரும் சிரித்தார்கள். பிரேமுக்கு ஃபோன் பண்ணி சேஃப் ஆக வந்து விட்டதாய் சொன்னாள். ரஞ்சனியும் பேசினாள். சித்தி கிட்ட பேசு என்றாள் குமரனிடம்.என்ன சித்தி மொபைல் ரொம்ப பாக்காதீங்க என்றான். நீ சொல்லுறியா அதை என்றாள் ரஞ்சனி. தூக்கம் சொக்கியது தீபாவுக்கு. குமரன் தூங்காமல் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்தான். அவனிடத்தில் இருந்து போனை பிடுங்கி வைத்தாள். அவன் திரும்பி படுத்துக்கொண்டான். அம்மா சொன்னா கேக்கணும் என்று சொன்னாள்.
வீட்டு வேலைகள் மும்முரமாய் நடைபெற்று கொண்டிருந்தன. இவள் சற்று நிழலாக இருந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தாள். குமரனும் அருகில் நின்றிருந்தான். இஞ்சீனியர் என்ன என்ன மாற்றங்கள் செய்ய போகிறோம் அதோடு இதுவரை என்ன செய்திருக்கிறோம் என விளக்கினார். சில போட்டோக்களை அவள் தன் மொபைலில் எடுத்தாள். அதை பிரேமுக்கு அனுப்பி வைத்தாள். அவன் குட் ஜாப் தீபா என ரிப்ளை அனுப்பி இருந்தான். கதிரேசன் வந்திருந்தான். இளநீர் சாப்பிடுங்கள் என்று சொல்லி வாங்கி வந்திருந்தை கொடுத்தான். தாங்க்ஸ் மாமா என்றான் குமரன்.குறிப்பிட்ட டையத்தில் வேலை முடிந்து விடும் என்று சொன்னார் இஞ்சீனியர். இந்த வருட தீபாவளியை நாம் இங்குதான் கொண்டாட போகிறோம் என்றாள் குமரனிடம். அவன் எனக்கு இந்த வீடு பிடித்திருக்கிறது என்றான். மதியம் கதிரேசன் வீட்டில் சாப்பாடு. கொஞ்சம் வெயில் தனியட்டும் மறுபடி போகலாம் என்றாள் கதிரேசன் மனைவி. குமரன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான்.
தான் வாங்கி வந்திருந்த விளையாட்டு பொம்மைகளையும்,புடவையையும்,வேஷ்டியையும் கதிரேசன் மனைவியிடம் கொடுத்தாள். இதெல்லாம் எதுக்கு எங்களுக்கு நீங்கதான் சொந்தம். மத்தவங்க கூட இப்படி எங்களை பார்க்கலை என்றாள் தீபா. மாலை 4 மணிக்கு இவள் மட்டும் சைட்டுக்கு போனாள். குமரன் வீட்டிலேயே கதிரேசன் பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருந்தான். பிரேம் வீடு எனும் போது பிரேம் அறையை பார்க்காமல் இருக்க முடியுமா . அந்த அறைக்கு என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம் என கேட்டிருந்தார் இஞ்சீனியர். வெளிர் நீலமே அடியுங்கள் அதுதான் பிரேமின் விருப்பம் என்றாள். டீயும் சமோசாவும் வந்தது,சாப்பிட்டாள் . நான் நைட் கிளம்புகிறேன் என்றாள் கதிரேசனிடம் . இன்னும் ஒரு நாள் இருங்கள் பிள்ளைகள் சந்தோஷபடுவார்கள்.நாளைக்கு ஊரில் மேஜிக் ஷோ துவங்குகிறது அதையும் பார்த்து போகலாம் என்றான். சரி .
மறுநாள் காலை 11 மணிக்கு மேஜிக் ஷோ கதிரேசன் குழந்தைகள் இருவரையும், குமரனையும் அழைத்து கொண்டு போயிருந்தாள்.சின்ன சின்ன விஷயங்கள் தான் அவை எப்படி நம்முடைய கவனத்தை திசை திருப்புகின்றன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டாள் . குமரன் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தான்.மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தார்கள். குமரன் மேஜிக் பற்றியே பேசிக்கொண்டு இருந்தான். இரு சிறுமிகளும் அவன் பேசுவதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்தனர். என்ன குமரா நான் போகட்டுமா நீ இங்கே தங்கி விடுகிறாயா என்றாள் தீபா. மம்மி இல்லாம எப்படி இருப்பேன் என்றான். அவள் சிரித்தாள். மாலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள்.கதிரேசன் குடும்பத்தார் அவளை வழி அனுப்பி வைத்தார்கள். பிரேமுக்கு ஃபோன் செய்து ஊரில் இருந்து கிளம்பி விட்டதாக தகவல் சொன்னாள் .
பிரேமுக்கு அவள் பத்திரமாக வந்து சேர வேண்டும் என்ற கவலை இருந்தது. அவள் புத்திசாலி ஆனால் பதற்றம் வந்துவிட்டால் ரொம்ப சிரமப்படுவாள் .கதிரேசன் மனைவி இவளுக்கு ஒரு டப்பா நிறைய முறுக்கு செய்து கொடுத்து அனுப்பி இருந்தாள். இவர்கள்தான் எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள் பதிலுக்கு எதையும் எதிர்பாராமல். காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தாள். பிரேம் வாசலிலியே காத்துக் கொண்டிருந்தான்.அவளை அணைத்து கொண்டான். என்ன பிரேம் நான் இல்லாமல் ஒரே கொண்டாட்டமா என்றாள். அவன் சிரித்தான். காரில் தூங்கி கொண்டிருந்த குமரனை தோளில் தூக்கி சென்றான். அவனை அவன் படுக்கையறையில் விட்டான். ரஞ்சனி இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். நீ நல்ல காரியம் செய்திருக்கிறாய் என்றான். அந்த இஞ்சீனியர் உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி இருப்பாரே ? கிண்டல் பண்ணாதே பிரேம் . எனக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது . கொஞ்சம் பிடித்து விடுகிறாயா என்றாள். ஆகா இதுவரை நீ கேட்டு நான் இல்லையென்று எப்போது சொல்லி இருக்கிறேன் என்றான். ஆசை அவ்வளவும் ஆசை என் மேல்.
ரஞ்சனி எழுந்த போது மணி 7 30. குட் மார்னிங் மாமா.அக்கா வந்து விட்டாளா. ம் 6 மணிக்கு வந்தாள் . ஏன் என்னை எழுப்பவில்லை. குமரனை பார்த்து எத்தனை நாளாகிறது . சரி போய் பார் என்றான். தீபா கொடுத்த விவரங்கள் துல்லியமாக இருந்தன. அதன் பொருட்டு அவளுக்கு முத்த மழை பொழிந்தான் பிரேம். போதும் பிரேம் என்றாள் சிணுங்கியபடி. ஆபீஸ் கிளம்பிவிட்டான். ரஞ்சனியும் கூடவே போனாள். குமரன் இன்னைக்கு ஸ்கூல் போகனுமா மம்மி என்று அடம் பிடித்தான். 3 நாளாச்சு நீ ஸ்கூல் போய் .. போ கிளம்பு என்றாள். அவனை கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு வந்தாள் . அவளுக்கு மயக்கமாய் இருந்தது . ஃபிரிஜில் இருந்து ஐஸ் வாட்டர் எடுத்து குடித்தாள்.
சௌமியா ,ராக்கி வீடு கட்ட கம்பெனி யில் லோன் அப்ளை செய்யுமாறு சொல்லி அனுப்பினான். சௌமியா அதெல்லாம் வேண்டாம் பிரேம் என்றாள். நீ அம்மாவையும் பார்க்க வேண்டும் அவர்கள் கொஞ்சம் வசதியாய் இருக்கட்டுமே என்றான். நான் யோசிக்கிறேன் என்றாள். ராக்கி வந்து ரொம்ப தாங்க்ஸ் சார் நானே கேக்கணும்னு இருந்தேன். ராக்கி நீயும் சௌமியாவும் எப்பவும் சந்தோஷமா இருந்தாதான் எனக்கு சந்தோஷம் என்றான். ரஞ்சனி மாமா எனக்கு ஏதும் இல்லையா என்றாள் சோகமாக. எல்லாம் இருக்கு டைம் வரட்டும் சொல்லுறேன் என்றான். சௌமியா அம்மாவை பார்த்து ரொம்ப நாளாகிறது அவர்களை பார்க்க போக வேண்டும் என்று தோன்றியது. தீபாவிடம் சொன்னான். நாளைக்கே போகலாம் என்றாள்.
அந்த வீட்டில் சௌமியா அம்மாவுக்கென அறை இருந்தது. அதில் சௌமியா அப்பா போட்டோ பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது. அதில் விளக்கு ஒன்றும் எரிந்து கொண்டிருந்தது. இவன் வந்ததும் வாப்பா பிரேம் , வா தீபா குமரன் வரவில்லையா என்றாள். அவன் கொஞ்சம் விளையாட்டு பையன் சும்மா இருக்க மாட்டான் என்றாள். நீ எப்படி இருக்கிறாய் பிரேம்.நீங்க மறுபடி செக் அப் போனீர்களா. போன வாரம் போனோம். வாக்கிங் போக சொல்லுகிறார்கள். சரிதான்.பழக்கூடையை கொடுத்தாள் தீபா.கொஞ்சம் இருங்கள் காபி போட்டு எடுத்து வருகிறேன் என போனாள். தீபாவும், பிரேமும் வீட்டை சுற்றிவந்தனர். அப்போது இவனும் சௌமியாவும் இருக்கும் சிறுவயது ஸ்கூல் போட்டோ ஒன்று தென்பட்டது. அதை தீபா பார்த்துவிட்டாள் . ஓ பிரேம் நீதான் எவ்வளவு கியூட் என்றாள்.சௌமியாவும் நல்ல அழகு என்றாள்.
உங்களுக்கு எப்போது எது தேவைப்பட்டாலும் சொல்லுங்கள் என்றான் பிரேம். விடை பெற்றுக்கொண்டனர்.
பிரேம் சௌமியா கொடுத்து வைத்தவள் என்றாள் தீபா. ஆரம்பித்து விட்டாயா ? அப்படியில்லை பிரேம்.அதோடு அவன் பேசவில்லை.அவள் மனதில் பொறாமை இல்லை. ரஞ்சனி எங்கே போயிருந்தீர்கள் மாமா என்றாள். சௌமியா அம்மாவை பார்க்க . ஓ என்னை விட்டு விட்டு படத்துக்கு போய் விட்டீர்கள் என நினைத்தேன். குமரன் எங்கே. வீடியோ கேம்ஸ் விளையாடுகிறான். குமரா என்றாள் ஓடி வந்தான். என்ன மம்மி ? அப்பா உன்னிடம் ஏதோ சொல்ல வேண்டுமாம். நீ இப்போது பெரிய பையன் ஆகையால் பொறுப்புடன் படிக்க வேண்டும் என்றான் பிரேம். சித்தி ஏதாவது சொன்னார்களா? டேய் என்னிடம் ஏன் வம்புக்கு வருகிறாய் என்றாள். நீங்கதான் சித்தி நான் இடைவெளி விடாமல் கேம்ஸ் விளையாடுகிறேன் என்று சொல்லி இருப்பீங்க என்றான். எல்லோரும் சிரித்தார்கள்.
ரஞ்சனியின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஃபேமஸ் ஜோதிடரிடம் போகலாம் என முடிவெடுத்தார்கள். ரஞ்சனிக்கு இது தெரியவே கூடாது என தீபா நினைத்தாள் . சௌமியா , ராக்கி, பிரேம் அதோடு தீபா என நால்வரும் சென்று இருந்தனர். அவர் ஜாதகத்தை பார்த்து விட்டு இவள் தேவ மங்கை என்றார். அதெல்லாம் கல்யாணம் கண்டிப்பாய் நடக்கும் . அவன் வந்து கொண்டே இருக்கிறான்.ரஞ்சனிக்கு பிடித்த அந்த பையன் ரஞ்சனியை தேடி வருவான் என்றார். ஆனால் அவளாகவே கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டும் என்றும் சொன்னார். தீபாவுக்கு ஒரே சந்தோஷம்.