ஒண்ணுமில்லை நீ டென்ஷன் ஆகாதே ..தாங்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றான் நீலன் .இந்த அருமையான ட்ரிப்பை நீ கூப்பிடாவிட்டால் மிஸ் பண்ணியிருப்பேன் .நான் உன்னுடைய பெங்களூர் மாற்றலுக்கு முயற்சி செய்கிறேன் என்றாள். ஃபோன் வைத்து விட்டான். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி என்றான் பிரேம். மாமா இதெல்லாம் காதலாய் மாறுமா ? எனக்கெப்படி தெரியும் . அப்போ சும்மா இருங்கள் என்றாள் சிரித்தபடி. ரஞ்சனி ஆபீஸ் வந்ததும் எல்லோருக்கும் நன்றி சொன்னாள் ட்ரிப் சக்ஸஸ் ஆனதற்காக.சௌமியா நாளை நீயும் வருகிறாயா ? என்றாள் எங்கே புது வீடு ரெடி ஆகி கொண்டிருக்கிறது அதை பார்க்க. நிச்சயம் வருகிறேன்.நான் , நீ ,ராக்கி மூன்று பேரும் போகிறோம் என்றாள். பிரேம் மாமா வரவில்லையா? அவனுக்கு கொஞ்சம் வேலை அதனால் அப்புறம் வருகிறேன் என்று சொல்லிவிட்டான். எத்தனை மணிக்கு ? ஆபீஸ் முடிந்ததும் போகலாம் இங்கே பக்கத்தில் தான் 10கி மி தொலைவில் இருக்கிறது என்றாள்.நானும் ஆவலாய் இருக்கிறேன் உங்கள் வீட்டை பார்க்க என்றாள் ரஞ்சனி.
தீபா என்னை ஏன் சௌமியா கூப்பிடவில்லை என்றாள். அதெல்லாம் நீ பிரேம் மாமாவோடு போகும்போது கேள் . சாயங்காலம் நான் லேட்டாகத்தான் வருவேன் என்றும் சொன்னாள் .குமரன் எங்கே போகிறீர்கள் சித்தி என்றான். அவனுக்கும் ஒரு விளக்கத்தை கொடுத்தாள். ராக்கி வண்டியை ஓட்டினான். மாலை வேளையிலும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. இவனுடையது ஃபர்ஸ்ட் ஃபுளோர். முக்கால்வாசி வேலை முடிந்து விட்டது . இன்னும் carpentry வேலைகள் கொஞ்சம் பாக்கி என்றான். சௌமியா கவனமாக வா . இது கிச்சன் . இது இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு என்றாள்.ஹால் . 4 பேருக்கு இது தாராளமாய் போதும் என்றாள் ரஞ்சனி.தண்ணீர் வசதி இருக்கிறது. பிரேமுக்கு நாங்கள் வாழ்நாளெல்லாம் கடமைப்பட்டு இருக்கிறோம் என்றாள் சௌமியா. என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறீர்கள் என்றாள் ரஞ்சனி. நாம் எங்காவது டின்னர் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றாள் சௌமியா.மூவரும் ஹோட்டல் ஒன்றிற்கு போனார்கள்.
என்ன சொன்னாள் சௌமியா என்று பிரேம் கேட்டான். உனக்கு வீடு பிடித்திருந்ததா? எல்லாம் நன்றாக இருந்தது.சௌமியா எமோஷனல் ஆகிவிட்டாள் என்று ரஞ்சனி சொன்னாள். அது என்னவோ அவள் அப்போதிருந்தே அப்படித்தான் என்றான். தீபா அப்போ நான் எமோஷனல் இல்லையா ? நீ அற்புதம் தெரியுமா என்றான், கிண்டல் பண்ணாதீர்கள்.நீலனிடம் பேச வேண்டும் போல இருந்தது . அவன் தப்பாய் நினைத்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தாள். நீலனும் அவனும் எடுத்துகொண்ட போட்டோவை பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்தாள். தனக்கு காதல் எல்லாம் செட் ஆகாது என்று சொல்லிக்கொண்டாள். வீணாக தன்னையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என்றும் நினைத்தாள். சுபா பிரேமுக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். எப்போது வருகிறாய் இந்தியாவிற்கு என்றான். சௌமியா குழந்தை பிறந்த பிறகு வருவேன் , நேற்று நீலனிடம் பேசினேன். ரொம்ப நன்றி பிரேம் அவன் மாறியிருக்கிறான். உங்கள் அன்புதான் அவனை மாற்றியிருக்கிறது என்றாள்.லலிதா எப்படி இருக்கிறாள். அவள் இப்போவே குமரன் வீட்டுக்கு கூட்டி போ என்கிறாள். சின்ன பிள்ளை தானே போக போக சரியாகிவிடும் என்றான்.
பிறகு தீபாவுடனும், ரஞ்சனியுடனும் பேசினாள்.
சுபா அக்கா வந்தால் அவன் நிச்சயம் வருவான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.அவனுக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கட்டும் பிறகு பார்க்கலாம் . இப்படியாக அவள் மனதில் எண்ணங்கள் ஓடின.
சுபா அக்கா வந்தால் இங்கேயே தங்கும்படி செய்ய வேண்டும். அவனுக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்தாலும் நம் வீட்டிலேயே தங்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். மனம் முழுக்க நீலன் நினைப்பிலேயே இருந்தாள். நீலன் மனதிலோ தனக்கு ஆதரவு அளிப்பவர்களை காயப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணமே இருந்தது.காதல் எல்லாம் நம்முடைய தகுதிக்கு செட் ஆகாது என்றும் நினைத்திருந்தான். பிரேம் தன்னுடைய எதிர்காலம் குறித்து யோசித்து வைத்திருந்தான். ரஞ்சனி கல்யாணமே அதில் கேள்விக்குறியாய் நின்றது. தன் கடமை முடிந்துவிட்டால் சொந்த ஊருக்கே போய்விட வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. தீபா,குமரன் இருவர் விருப்பமும் மாறுபடலாம். ஆனால் தான் அதில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று சொல்லிக்கொண்டான். அவ்வப்போது அவன் அது குறித்து பேசினாலும் யாரும் அதை ஒரு பொருட்டாய் எடுத்துக்கொள்வதில்லை.
என்ன ரஞ்சன் நீலன் ஃபோன் பண்ணுகிறானா? என்றாள் சௌமியா. ஓ அவனுக்கு நிறைய வேலை, அதனால் எப்போதாவது பேசுகிறான் என்றாள். நீ எதையும் எதிர்பார்க்காதே.. நான் உன் நல்லதுக்கு சொல்கிறேன் என்றாள் சௌமியா. புரிகிறது.அவள் தன் வேலையை பார்க்க போய்விட்டாள். நான் என்ன எதிர்பார்க்கிறேன் அவனுடைய அன்பையா? அல்லது கருணையையா ?. இது கிடைத்தால் போதும் என ஏன் நினைக்கிறேன். ஸ்வாமிகளை பார்க்க வேண்டும் போல இருந்தது. பிரேமுக்கு ஃபோன் பண்ணி சொன்னாள். நாளைக்கு போவோமா என்றான். சரி . மறுநாள் காலையிலேயே வர சொல்லிவிட்டார். பிரேம், தீபா, குமரன், ரஞ்சனி ஆகியோர் அவர் கண் திறக்க காத்திருந்தனர். ரஞ்சனி மனதில் என்ன திடீர் சலனம்? அதெல்லாம் பார்க்கிற வேலையில் கவனம் செலுத்தினால் ஓடி விடும் என்றார். நீங்கள் விரும்புவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் . காலம் கனிய துவங்கி இருக்கிறது. தீபாவுக்கு குறை இல்லை. அவள் மகாராணி என்றார்.பிரேமுக்கு இன்னும் பக்குவம் தேவை என்றார். விடைபெற்றுக்கொண்டனர். குமரனுக்கு ஆசீர்வாதம் செய்தார்.
அவர் ஏன் என்னை மகாராணி என்று சொன்னார் பிரேம். உண்மையில் நீ மகாராணிதான் என்றான்.எனக்குத்தான் உன்னை அணுக பக்குவம் தேவை என்றார்.இனிமேலும் உனக்கு சந்தேகம் இல்லையே ரஞ்சனி?இல்லை. நானாக எதையும் ஃபோர்ஸ் பண்ண போவதில்லை. சரியான முடிவு.கிருஷ்ணர் கோவிலுக்கு போனார்கள். பிரேம், அவன் குடும்பம் எல்லோரும் சாமி கும்பிட்டார்கள் .நான் தியான கிளாஸ் போகட்டுமா என்றாள் ரஞ்சனி. உனக்கதற்கு நேரம் இருக்குமா? கிடைக்கிற நேரத்தில் பண்ணுகிறேன் என்றாள். உன் விருப்பம் என்றான் பிரேம். நானும் தியான வகுப்புக்கு போகட்டா என்றாள் தீபா. உனக்கு எதுக்கு இந்த வீண் வேலை என்றான். குமரனுக்கு பாடம் சொல்லிக்கொடு. சகல பொறுமையும் வந்து விடும் என்றான்.
தியான வகுப்பில் சேர்ந்து விட்டாள் ரஞ்சனி. மனம், அதன் போக்கு , அது ஏற்படுத்தும் தாக்கங்கள் எல்லாம் சொன்னார்கள். விரும்புகிற எதையும் அடைய துடிக்கிற மனம் ஆபத்தானது. பொறுமையுடன் தன் தகுதிக்கு உண்டானதை ஆண்டவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லி வந்தார்கள். நீலன் ஃபோன் பண்ணியிருந்தான் அடுத்த வாரம் பெங்களூர் வருகிறேன் என்றான். என்ன விஷயம். பாஸ்போர்ட் விஷயமாக. நீ பாஸ்போர்ட் வைத்திருக்கவில்லையா ? இருக்கிறது ரெனிவல் பண்ண போகிறேன். வீட்டுக்கு வா நீலன். நேரம் கிடைத்தால் நிச்சயம் வருகிறேன் என்றான். பிரேமிடம் இதை சொன்னாள். எந்த தேதி என்று கேட்டுக்கொண்டான். நீலன் வரும் போது எல்லாம் சரியாக இருக்க வேண்டும். தீபா நீலன் நம்ம வீட்டு பையன் மாதிரிதானே இதற்கு ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றாள்.
சௌமியாவும்,ராக்கியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் . அவர்கள் வீட்டு கிரகபிரவேச பத்திரிக்கையை வைக்க வந்திருந்தார்கள். அன்றைக்குத்தான் நீலன் வருகிறான். சௌமியா, ராக்கி முகத்தில் சந்தோஷம் நிரம்பியிருந்தது. காபி கொண்டு வா தீபா என்றான். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன. காலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்கு ஐயர் வைத்து கணபதி ஹோமம் செய்கிறார்கள். தீபா நாங்கள் முன்னமே வந்து விடுகிறோம் என்றாள். சௌமியா நான் உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது பிரேம் என்றாள். நீ எப்பவுமே சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்றான். குமரா புது வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்றான்.நீலனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள் . நீயும் புதுமனைபுகுவிழாவிற்கு வர வேண்டும் என்றாள். நான் எப்படி? அதெல்லாம் எனக்கு தெரியாது காலையில் தான் முகூர்த்தம். சரி நான் வருகிறேன் என்றான்.தாங்க்ஸ் என்றாள்.
கண் எரிச்சல் இருந்தாலும் கடவுள் காரியமல்லவா? புது வீடு அந்த அதிகாலையில் இவர்கள் வருகைக்காக காத்திருந்தது. ஹோமம் வளர்க்கப்பட்டது. எல்லோருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. நீலன் வருகையை சௌமியா, ராக்கி எதிர் பார்க்கவில்லை. அவனை வரவேற்றார்கள். எல்லோருக்கும் டிபன் பரிமாறப்பட்டது, நீலன் இலையை ஓரக்கண்ணால் பார்த்தபடி பக்கத்தில் அமர்ந்திருந்தாள் ரஞ்சனி. அவனுக்கு இன்னும் இரண்டு வடைகள் வைக்க சொன்னாள். எதுக்கு ரஞ்சனி ? பேசாமல் சாப்பிடு தினமும் ஹோட்டல் சாப்பாடு தானே சாப்பிடுகிறாய் என்றாள். நானும் வரவா உன்னோடு ? எங்கே ?பாஸ்போர்ட் ஆபீஸ். சரி வா என்றான். 10 மணிக்குத்தான் அப்பாய்ண்ட்மென்ட். மணி 7 தான் ஆகிறது . சரி வா வீட்டுக்கு போகலாம் என்றாள். சௌமியா, ராக்கியிடம் சொல்லிவிட்டு தீபாவிடம் வீட்டு சாவியை வாங்கி கொண்டாள் ரஞ்சனி.
வா நீலன் என அழைத்து போனாள். டிவி பார்த்து கொண்டிரு இப்போது வந்து விடுகிறேன் என உள்ளே போனாள்.உடை மாற்றிக்கொண்டு வந்திருந்தாள். ஏதாவது வெளிநாடு போக திட்டமா? இல்லை நான் தனியாக போய் என்ன செய்ய போகிறேன். நாம் ஃபேமிலி ஆக போகலாமே என்றாள்.அதாவது பிரேம்,குமரன், தீபா அக்கா எல்லோரும் சேர்ந்து போகலாம் என்றேன் என்றாள். ம் நிச்சயம். நான் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைக்கிறேன் என்றான். சரி வா அவளுடைய அறைக்கு அழைத்து சென்றாள். அவன் ஒரு நிமிடம் தயங்கினான். நீ தூங்கு நான் ஒரு மணி நேரம் கழித்து உன்னை எழுப்புகிறேன் என்றாள். அதற்குள் பிரேம், தீபா எல்லாம் வந்து விட்டார்கள். என்ன நீலன் எங்கே என்றாள் தீபா. தூங்கி கொண்டிருக்கிறான். சரி என்றாள். நான் தியான கிளாஸ் போய் வருகிறேன் என்றாள். இந்த பெண் என்னென்ன வேலை செய்கிறாள் என்றான் பிரேம்.
அவள் திரும்பி வந்த போது நீலன் ஹாலில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தான். நன்றாக தூங்கினாயா?ம் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது . நான் இப்போது வருகிறேன் என உள்ளே போனாள். தீபாவிடம் பேசினாள். என்னடி நீ பாட்டுக்கு அவனை இங்கே விட்டுட்டு எங்கேயாவது போயிடறே என்றாள். நான் பாஸ்போர்ட் ஆபீஸ் போகிறேன் அவனோடு என்றாள். அவனுக்கு பாஸ்போர்ட் ரெனிவல் பண்ண வேண்டுமாம் என்றாள்.சரி பார்த்து போயிட்டு வா என்றாள் தீபா.