நீலன், ரஞ்சனியின் நிச்சயதார்த்தமும், கல்யாணமும் ஒரே நாளில் நடை பெற இருந்தது. சுபாவின் கணவர் வாசன் குறித்த
நேரத்தில் நிச்சயதார்த்ததுக்கு வந்து விட்டார்.சுபா என்ன இப்படியா குறித்த நேரத்துக்கு வருவது என்றாள். லலிதா எங்கே என்றான். அவள் குமரனுடன் விளையாடிக்கொண்டிருப்பாள் என்று சொன்னாள் . பிரேமையும் தீபாவையும் பார்க்கலாம் வாருங்கள் என்று மண மேடைக்கு அழைத்து போனாள். பிரேம் ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுல என்றான். தீபா வாசனை சாப்பிட அழைத்துகொண்டு போ சுபா என்றாள். சரி வாங்க என்று வாசன் கையை அவள் பிடித்த பிடியை விடவில்லை. சௌமியா, ராக்கியும் வாசனை நலம் விசாரித்தார்கள். எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது. நிச்சயதார்த்த சடங்குகள் முடிவடைந்தன அடுத்து கல்யாணம்தான். ரஞ்சனி தன் அப்பாவை நினைத்து கொண்டாள். நீலன் இனி நமக்கு நாம் தான் என்றான். நீலனும், ரஞ்சனியும் மணமேடையில் ஏறி எல்லோருக்கும் வணக்கம் சொன்னார்கள். வாசன் மேடையில் ஏறி நீலனுக்கும், ரஞ்சனிக்கும் கைகுலுக்கி வாழ்த்து சொன்னான்.
சடங்குகள் , மேலும் சடங்குகள் எப்போடா ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டுவோம் என நீலன் காத்திருந்தான்.நல்ல நேரம் நெருங்கியது. சுபமுகூர்த்தத்தில் அய்யர் மந்திரங்கள் முழங்க, மேளம் அதிர ரஞ்சனியின் கழுத்தில் தாலி கட்டினான் நீலன்.பிரேமும், தீபாவும் கண் கலங்கினார்கள் . அக்கினி குண்டம் வலம் வந்தார்கள் நீலனும், ரஞ்சனியும். குமரனை தூக்கி இடுப்பில் வைத்திருந்தாள் தீபா. கொஞ்ச நேரத்தில் இறங்கி ஓடி விட்டான்.மண மேடைக்கு சௌமியாவும், ராக்கியும் வந்தார்கள். பிரேம் அவர்களுடன் கை குலுக்கினான். கதிரேசனும் அவன் குடும்பத்தாரும் வந்திருந்தனர். அந்த சிறுமிகள், லலிதா, குமரன் எல்லோரும் சேர்ந்து விளையாட துவங்கி இருந்தனர்.நீலனும், ரஞ்சனியும் பிரேம், தீபா காலில் விழுந்து ஆசீர்வசாதம் வாங்கினார்கள். பிறகு சௌமியா அம்மா காலில் விழுந்து கும்பிட்டார்கள். சுபா காலில் நீலன் விழப்போவதை அவள் தடுத்து விட்டாள். நீ நல்லா இருப்ப தம்பி என்றாள்.
பிரேம் தன்னுடைய கண்ணும் மனமும் நிறைய மணமக்களை வாழ்த்தினான். மதியம் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. நீலன் என்ன ரஞ்சனி ஆள் அப்படியே சைலன்ட் ஆகி விட்டாயே என்றான். எல்லா நேரமும் உன்னிடம் இனி பேச ஜெயிக்க முடியாதே என்றாள். திருமண போட்டோஷூட் நடந்தது. சாயங்காலம் வரவேற்பு நிகழ்ச்சி வைத்திருந்தார்கள். ஆபீஸ் ஸ்டாப் எல்லாம் வருவார்கள். பிரேம் குமரனை தேடினான். குமரன் இங்கே வாப்பா என்றான். அப்பா ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போகிறேன் என்றான். தீபாவையும் கூட்டிக்கொண்டு மணமகள் அறைக்கு சென்றான்.
அங்கிருந்தவர்கள் வெளியே சென்றார்கள். தீபா உனக்கே தெரியும் நான் எந்த முடிவெடுத்தாலும் அதை யோசித்துத்தான் எடுப்பேன் என்று. இப்போ என்ன குமரன் பற்றி சீக்கிரம் சொல்லுங்கள். நான் குமரனை சுபாவோடு அமெரிக்கா அனுப்ப தீர்மானித்திருக்கிறேன். அதெல்லாம் முடியாது. என்னாலும் , அவனாலும் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாது என்றாள். நன்றாக யோசித்து பார். அவன் எதிர்காலம் கருதித்தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன். நாம் வளர்ந்த சூழல் வேறு, வாய்ப்புகள் வேறு. அவனுக்கு நாம் அந்த கஷ்டத்தை கொடுக்க வேண்டாம் என பார்க்கிறேன் என்றான்.
தீபா நான் ரஞ்சனியோடும், சுபாவோடும் பேச வேண்டும் என்றாள்.ரஞ்சனியும், சுபாவும் கொஞ்ச நேரம் கழித்து வந்தார்கள். நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் என்றால் சுபா. ரஞ்சனி ஏன் மாமா இந்த திடீர் முடிவு என்றாள். நான் பட்ட கஷ்டம் என் மகன் படக்கூடாது என்பதற்காகத்தான்.அக்கா வேறு வழியில்லை மாமா பிடிவாதம் தான் தெரியுமே என்றாள் ரஞ்சனி. நீலனும் கொஞ்ச நேரத்தில் அங்கு வந்து விட்டான். குமரன் நீ சுபா ஆண்ட்டி கூட அமெரிக்கா போகிறாய் .அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்.சமத்தாக இருக்க வேண்டும் என்றான் . தீபா ஒரு மாதிரியாக சம்மதம் தெரிவித்தாள் . மாலை வரவேற்பு நிகழ்ச்சியோடு இசைக்கச்சேரியும் நடைபெற்றது.
சௌமியாவும், ராக்கியும் ஏன் இப்படி பண்ணுகிறாய் பிரேம் குமரன் சின்ன பையன் என்றார்கள். இல்லை அவன் வளர்ந்து வரும் போது எல்லாமே மாறிவிடும். உறவுகளின் அருமை அப்போதுதான் அவனுக்கு தெரியும் என்றான் பிரேம். தீபா மண மேடையில் ரஞ்சனி கூட நின்றாள். ரஞ்சனி எனக்கு இன்னும் பிரேம் மாமா என்னென்ன செய்ய போகிறரோ என்று கவலையாக இருக்கிறது என்றாள் .இனிமேல் எல்லாவித சங்கடங்களையும், பிரச்சனைகளையும் நாமே தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் . தீபா குமரனின் கையை பிடித்திருந்தாள். பிரேம் விழாவிற்கு வந்தவர்களை உபசரித்து கொண்டிருந்தான். குமரன் பிரிவு அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. சொந்தம், பந்தயம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பிரிந்து தான் ஆக வேண்டும். வாசன் பிரேமை கூப்பிட்டார். சுபா எல்லாம் சொன்னாள்.நீங்கள் குமரன் விஷயத்தை நன்றாக யோசித்து விட்டீர்களா. ம். எனக்கு அவனுடைய எதிர்காலம்தான் முக்கியம். உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றான்.
மாலை விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு எல்லோரும் கிளம்ப தொடங்கினர். நன்றி தெரிவித்து தாம்பூல பைகளை வழங்கினான் பிரேம்.சௌமியா வீடு வரைக்கும் போய் விட்டு வருகிறேன் என ராக்கியை கூட்டிக்கொண்டு போனாள். கதிரேசன் கூட கிளம்பி விட்டான். நிறைய வேலை இரூக்குப்பா . நீ என் பசங்களுக்கு ஸ்காலர்ஷிப் அரேஞ்ச் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம் என்றான். மண்டபம் காலி செய்து எல்லோரும் வீட்டுக்கு வந்தனர். களைப்பாக இருந்தனர். தீபா ரஞ்சனியை அழைத்து போய் அவள் உடை மாற்ற உதவி செய்தாள். இன்றைக்கே ஃபர்ஸ்ட் நைட்டா . அக்கா இன்னொரு நாள் வைக்க கூடாதா என்றாள். நீலன் காத்திருக்க மாட்டான். முகூர்த்தம் எல்லாம் பார்த்து தான் இந்த ஏற்பாடு . காதல், கல்யாணம், அப்புறம் இந்த சடங்கெல்லாம் தள்ளி போடக்கூடாது என்றாள் தீபா.
நீலன் இருக்கும் ரூமுக்குள் சென்றாள் ரஞ்சனி.ரொம்ப பயமுறுத்தாதீர்கள் மாப்பிள்ளை என்று கிண்டல் செய்தனர். நீலன் ரஞ்சனியின் கையை பிடித்தான். இதென்ன லட்டு ? ஜாங்கிரி .. ஹல்வா கூட இருக்கிறது என்றாள். ரஞ்சனி நான் பேராசைக்காரன்.இந்த மொத்த அழகும் எனக்குத்தான் . நீலன் வசனம் பேசும் முன் இந்த பாலை கூடி என்றாள்.இன்னமும் இது நடக்கிறதா? என்றான். அவள் எனக்கு இன்னும் டைம் தேவை என்றாள். எதுக்கு எல்லாம் அதுக்கு தான். சரியா போச்சு. நான் ஏமாந்துவிட்டேன். சும்மா கலாட்டா பண்ணாதே . சரி உன் விருப்பம் குட் நைட் என்றான். ஒருவேளை உனக்கு ஏதாவது தோன்றினால் என்னை எழுப்பு.மறக்காதே என்றான்.
அவள் உடை மாற்றிக்கொண்டு தூங்கியும் விட்டாள்.
சுபா இன்னும் இரண்டு நாட்களில் ஊருக்கு கிளம்புகிறாள். குமரன் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி கொடுத்தான் பிரேம். அப்பா நீங்கள் என்னை பார்க்க வருவீர்களா? நிச்சயம் வருவேன் என்றான். சௌமியா, ராக்கி வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களும் குமரனுக்கு நிறைய டாய்ஸ் வாங்கி வந்திருந்தனர். எதுக்கு இதெல்லாம் சௌமியா? என்றான் பிரேம். நீ வேண்டுமானால் இப்படி செய்யலாம். எனக்கு அதில் உடன்பாடில்லை என்றாள். ராக்கி அந்த டாகுமெண்ட்ஸ் சரி பார்த்து விட்டாயா என்றான். சரி பார்த்து விட்டேன். ஆனால் அதில் இருக்கும் விஷயம் . உண்மைதான்.பிரேம் நீ செய்வது நியாயம் தானா. என்னை தீபா அப்பா எப்படி நம்பினாரோ அதற்கு நியாயம் செய்ய வேண்டியது என்னுடைய கடமை என்றான். சரி உன் விருப்பம் என்றான் ராக்கி . சௌமியா மோகிதாவை பெரிய டாக்டர் ஆக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது என்றான்.
அமெரிக்கா திரும்ப வேண்டிய நாள் வந்ததும் லலிதா அழ தொடங்கினாள். நம்ம கூட குமரன் வருகிறான். இது நம்முடைய வீடு இல்லை அல்லவா? நம்முடைய வீடு அமெரிக்காவில் இருக்கிறது என்று சமாதானம் சொன்னாள் சுபா. வாசன் நீ என்னை நம்பி குமரனை ஒப்படைத்திருக்கிறாய். நான் நிச்சயம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றான். தீபா அழுதாள். ரஞ்சனியும் அழுதாள். நீலன் அவர்களை சமாதானபடுத்த முயன்றான். ஏர்போர்ட் போயிருந்தார்கள் வழி அனுப்ப.ராக்கியும். சௌமியாவும் கூட வந்திருந்தார்கள். குமரன் அப்பா போயிட்டு வரேன் என்றான் .தீபா அவனை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். பிரேம் குமரா இனிமே எல்லாமே சுபா ஆண்ட்டி அப்புறம் வாசன் அங்கிள் தான் என்றான்.ஃப்ளைட் கிளம்பி ஆகாயத்தை கிழித்து கொண்டு புறப்பட்டது.
சௌமியா இன்னும் பிரேம் மேல் கோபத்தில் இருந்தாள். இது அவர்கள் சொந்த விஷயம் என்றான் ராக்கி.வீட்டுக்கு வந்த பின் குமரகுரு போட்டோவை வணங்கினான் பிரேம். தீபா எல்லோருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். என்னப்பா ரஞ்சனியையே சுற்றி வருகிறாயே என நீலனை கிண்டல் செய்தான் ராக்கி. எல்லாம் ஒரு ஹனிமூன் ட்ரிப் போனால் மாறிவிடும் என்றாள் சௌமியா.ஹனிமூன் எங்கு பிளான் பண்ணியிருக்கிறீர்கள் என்றாள் சௌமியா.சிம்லா போகலாம் என்று நினைத்திருக்கிறோம். எல்லோரும் சேர்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டனர். ராக்கியும் ,சௌமியாவும் விடைபெற்றுக்கொண்டனர். ரஞ்சனி, நீலன் அவர்களுடைய அறைக்கு சென்றனர். தீபா குமரன் இல்லாத தனிமையை உணர்ந்தாள். நான் ஆபீஸ் வரை போய்விட்டு வருகிறேன் என்றான் பிரேம்.
உனக்கு twins மேல் ஆசையில்லையா ? கிட்டே வா என்றான் நீலன். அவள் ஹனிமூன் ஏற்பாடு மெயில் செக் பண்ணிக் கொண்டிருந்தாள். எல்லா ஏற்பாடும் பக்கா.அவன் தோளில் சாய்ந்தாள். என்னவோ இந்த மயக்கம் எப்போது தீருமோ என்றாள். அவன் அவள் உதட்டில் முத்தமிட்டான். நீ வாய்ப்பு கிடைத்தால் உடனே காரியத்தில் இறங்கி விடுகிறாய் என்றாள்.
பிரேம் ஆபீஸ் வேலைகள் முடித்து திரும்ப மணி 7 ஆகி விட்டது. கல்யாணம் நல்லபடியாய் முடிந்தால் திருப்பதி வருகிறேன் என வேண்டிக்கொண்டேன் என்றான். நீயும் வருகிறாயா தீபா? சரி நாளை காலையில் புறப்படுவோம் என்றான். அவர்கள் தனியாய் இருப்பார்கள். அதுதான் இனி தேவை என்றான் பிரேம். காலையில் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள் பிரேமும்,தீபாவும். திருப்பதி தரிசனம் செய்தார்கள். நீலன் என்ன நம்மை விட்டுவிட்டு போய்விட்டார்கள் என்றான். எல்லாம் அதுக்குத்தான் என்றாள். இவன் ரஞ்சனியை தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்குள் நுழைந்தான். காதல், கல்யாணம், ஹனிமூன் என அடுத்தகட்ட நகர்வுக்காக ஏர்போர்ட்டில் காத்திருந்தார்கள் . ரஞ்சனியும், நீலனும். பிரேமும் , தீபாவும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.