கனவு 8
ஆறுமுகம் சௌமியாவை விரும்பும் விஷயத்தை எப்படியாவது சௌமியாவிடம் தெரிவித்து விட வேண்டுமென்று ஹரிதா நினைத்தாள். அவளுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதனால் அவர்கள் நட்பு பாதிக்கப்பட கூடாதென்று யோசித்தாள். சுற்றுலா விடுமுறை முடிந்து எல்லோரும் ஸ்கூல் திரும்பிய பின்னும் அதன் அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தார்கள். வயது இந்த விஷயத்தில் எல்லோரையும் ஒரே மாதிரி சிந்திக்க தோன்றியது. ஆறுமுகம் மறுபடி ஹரிதாவிடம் சௌமியா பற்றி பேசவில்லை. சமர் தன்னுடைய அண்ணன் கல்யாணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தான். சௌமியா அதே நாளில் ரஞ்சித் வெளிநாடு செல்ல இருப்பதால் தான் வர முடியாமல் இருப்பதாக சொன்னாள். ஆறுமுகமும்,ஹரிதாவும் அவசியம் வந்துவிடுவதாக சொன்னார்கள். ரஞ்சித் வெளிநாடு போவதை சௌமியா தடுக்க விரும்பவில்லை. அவளால் என்ன செய்ய முடியும் . சிறு பெண் தானே . ஆனால் அவன் முன்னேறினால் நல்லதுதானே என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
அன்று சௌமியா நல்ல மூடில் இருப்பதை உணர்ந்த ஹரிதா அவளிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொன்னாள். என்ன விஷயம் ஏதாவது உனக்கும் சமருக்கும் பிரச்சனையா என்று கேட்டாள். அதெல்லாம் ஒன்றுமில்லை. நம்ம ஆறுமுகம் ஆமாம் அவனுக்கென்ன அவன் உன்னை விரும்புகிறான். இதை கேட்ட சௌமியா திடுக்கிட்டாள். ஆனால் ஒன்றும் சொல்லாமல் நான் ஆறுமுகத்திடமே பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டாள். இவள் தான் அவசரப்பட்டு விட்டோமோ என எண்ணினாள். ஆனால் சௌமியா நிதானமாகத்தான் இருந்தாள் . அவள் உடனே ஆறுமுகத்திடம் பேசிவிட வில்லை. நாளை இருவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என ஆறுமுகத்தையும். ஹரிதாவையும் அழைத்தாள் சௌமியா. ஆறுமுகத்திடம் தான் அவன் காதல் விஷயத்தை சௌமியாவிடம் சொல்லிவிட்டதாக சொன்னாள். ஏன் இப்படி பண்ணினாய் ஹரிதா என்றான். அதெல்லாம் அவள் கோபப்படவில்லை என்றாள். ம் இப்படியே போனால் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டான் ஆறுமுகம்.
காதல் பற்றிய புரிதல் இல்லாத பருவம் மேலும் அதனை உணர வயது போதவில்லை மூவருக்கும். ஆனால் காதல் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவர்களிடத்தில் இருந்தது. சாயங்காலம் போல சௌமியா வீட்டுக்கு போனார்கள் ஆறுமுகமும் , ஹரிதாவும் . அவர்களை வரவேற்றாள் சௌமியா. அவளுடைய அப்பா, அம்மா ஷாப்பிங் போயிருப்பதாக சொன்னாள். என்ன ஆறுமுகம் இவளை தூது அனுப்பியிருக்க நீயே என்னிடம் சொல்லியிருக்கலாமே என்றாள். என்ன பேச்சே காணோம் அது வந்து என் மனசுல பட்டத ஹரிதாகிட்ட சொன்னேன் அவ அவசரப்பட்டு உன்கிட்ட சொல்லிட்டா. ம் எதைப்பார்த்து என்னை லவ் பண்ணுற என்றாள். ஆறுமுகம் புன்னகைத்தான். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. நாமெல்லாம் ஃபிரண்ட்ஸ் அதில் மறைக்க ஒண்ணுமில்லை. அதனால் நான் என்னுடைய மனதில் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. ஆறுமுகம் நீ என் ஃப்ரெண்ட் அவ்வளவுதான் . நான் வேண்டுமென்றே அப்படி சொல்லவில்லை. எனக்கு உன்னை வெறுக்க தோனலை ஆனா காதல் வேற என்றாள். சரி எனக்கு புரிஞ்சது என்றான் ஆறுமுகம். அவள் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். ஹரிதா எதுவும் பேசும் நிலையில் இல்லை. ஆறுமுகமே பேசினான். நான் ஆசைப்பட்டேனே தவிர அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி யோசிக்கவில்லை . ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துவிடு என்றான். ஹரிதாவும் , ஆறுமுகமும் விடை பெற்றுக்கொண்டார்கள்.
ஆறுமுகம் பழையபடி சௌமியாவிடம் உறுத்தல் இல்லாமல் பழகி வந்தான். அது ஹரிதாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்படிடா ஒரே நாளிலே மாறின என்றாள். அதெல்லாம் ஒன்னுமில்லை . அவ மனசுல நான் இல்லை அதை புரிஞ்சுகிட்டேன் என்றான். ம் எப்படியோ நீ ஒரு புதிர் அதனால நான் அதிகம் கேள்வி கேட்க விரும்பவில்லை . சமர் அண்ணன் கல்யாணத்துக்கு ஆறுமுகம், ஹரிதாவை பிக்அப் செய்ய கார் ஏற்பாடு செய்திருந்தான் சமர். இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்தான்.குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்தான். ஹரிதா தான் அளவுக்கு அதிகமாக இப்படி நடத்தப்படுகிறோமோ என நினைத்தாள். அதெல்லாம் ஒன்றுமில்லை என்றான் ஆறுமுகம். நீ டான்ஸ் ஆட போகிறாயா என கேட்டான் . அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. சாப்பாடும் நன்றாக இருந்தது. கிப்ட் கொடுத்தார்கள் அதோடு போட்டோவும் எடுத்து கொண்டார்கள். அடுத்து என்ன என்பது போல பார்த்தாள் ஹரிதா. சமர் நீங்கள் இருவரும் வந்ததிலே எல்லோருக்கும் சந்தோஷம் என்றான். நாங்கள் கிளம்புகிறோம் என்றார்கள் . ஈவினிங் ரிசப்ஷன் , மியூசிக் கச்சேரி இருக்கிறது என்றான். பரவாயில்லை நீ எங்களுக்காக இவ்வளவு தூரம் செய்ததே எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றான் ஆறுமுகம். இருவரும் விடைபெற்றுக்கொண்டார்கள்.
என்னம்மா கல்யாணம் எப்படி நடந்தது என விசாரித்தாள் அம்மா. சூப்பர் நல்லா கவனித்து கொண்டார்கள் என்றாள். உன் கல்யாணத்தையும் இப்படி நடத்தனும் என்றாள் அம்மா. போம்மா உனக்கு எப்போதும் என் கல்யாண நினைப்புதான் என்றாள். படிச்சு நல்ல வேலைக்கு போகணும் அதுதான் ஃபர்ஸ்ட். இரவு 10 மணி போல ஃபோன் பண்ணினான் சமர். ரொம்ப தாங்க்ஸ் நீ கல்யாணத்துக்கு வந்ததுக்கு இதுக்கு எதுக்கு தாங்க்ஸ் நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றாள். நம்ம கல்யாணமும் இப்படி நடந்தால் ஓகே வா என்றான். நீ ரொம்ப கனவு காண்கிறாய் ஆனால் அதற்கு நிறைய டைம் இருக்கிறது . நீ இன்னும் ஒண்ணும் வாய் திறந்து சொல்லவில்லையே என்ன சொல்லணும். ஐ லவ் யு அப்படின்னு. ம் நான் சின்ன பொண்ணு . எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் உன்கிட்ட கிடையாது. குட் நைட் எனக்கு தூக்கம் வருது என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் . அவள் அப்படி சொல்லிவிட்டாளே தவிர சமரின் தீவிரமான மனநிலை குறித்து யோசித்து பார்த்தாள். அவனுக்கு எல்லாமும் உள்ளது . நாம் நினைப்பதெல்லாம் நடக்குமா ? தூங்கி போய்விட்டாள்.
சௌமியா அவன் கல்யாணம் வரை போய்விட்டான் என்றாள் அதுக்கென்ன நீ இடம் கொடுத்தால் எதுவும் நடக்கும் என்று சௌமியா சொன்னாள். ம் ஆறுமுகம் நீ என்ன நினைக்கிறாய். நானே ஒரு லவ் ஃபெய்லியர் ஆளு . இதை கேட்டதும் சௌமியா சிரித்தாள். இவனுக்கு இன்னும் மீசையே முளைக்கல.. அதுக்குள்ள எப்படி பீல் பண்ணுறான் பாரு .. சும்மா கிண்டல் பண்ணாதீர்கள். கல்யாணம் எல்லாம் பெரிய விஷயம். நீ ஒரு முடிவெடுக்க வேண்டும் ஹரிதா சும்மா அவனுக்கு ஆசை காட்டி அப்புறம் அவனை ஏமாற்றாதே உன்னுடைய மனதில் இருப்பதை சொல்லிவிடு என்றாள் சௌமியா. ம் நீ சொல்லுவதும் சரிதான். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். ரஞ்சித் என்ன சொன்னான் என்றாள் ஹரிதா. நிச்சயம் திரும்ப வந்து அழைத்து போவேன் என்றான். ம் உனக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா ? இருக்கு ஆனால் என்ன ஆனால் அவன் மனதும் மாற வாய்ப்பிருக்கிறது. ம் தைரியமாக இரு ஆறுமுகத்தை போல என்றாள் ஹரிதா. ஆறுமுகம் ஹரிதாவை ஆழமாக பார்த்தான்.
சமர் மறுபடி ஹரிதாவை கோவிலில் வைத்து பார்த்தான். இருவரும் பிரகாரத்தை சுற்றி வந்தனர். ஐயர் பிரசாதம் கொடுத்தார். என்ன சமர் எதுவும் பேசாமல் வருகிறாயே என்றாள். எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது என்றான். நான் என் மனதிலே எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது அது காதலாய் மாற டைம் எடுக்கும். அதுவும் எல்லாம் கூடி வந்தால் நாம் ஒன்று சேர முடியும். இதைத்தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும். நான் எதிர்பார்த்தேன். எனக்கு பொறுமை இருக்கிறது. உன்னைப் போன்ற பெண்ணுக்காக காத்திருக்கலாம் தப்பில்லை. ம் என் மேல் கோவம் இல்லையே.. நிச்சயம் இல்லை. அவன் கிளம்பிவிட்டான். இவள் கொஞ்சநேரம் சன்னிதியில் உட்கார்ந்திருந்தாள் . கடவுளே எனக்கு நிதானத்தை கொடு என்று வேண்டிக்கொண்டாள் . வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் புத்தகத்தை எடுத்து புரட்டினாள் . கொஞ்ச நேரம் படித்து விட்டு சௌமியாவுக்கு ஃபோன் போட்டாள். அவள் எடுக்கவில்லை. சௌமியா ஏதாவது வேலையாக இருப்பாள் என நினைத்து கொண்டாள்.
சௌமியா உனக்கு ஃபோன் பண்ணியிருந்தேனே என்றாள் ஹரிதா. ம் நான் தூங்கி விட்டேன் அதுதான் எடுக்கவில்லை என்றாள். சரிதான் எக்ஸாம்ஸ் வேறு வருகிறது நான் நேற்று கொஞ்சம் படித்தேன் .. ஆறுமுகம் ஆளை காணோமே என்பதற்குள் வந்து சேர்ந்தான். சமர் என்ன சொன்னான் என்று கேட்டான். ம் அவனுக்கு என்னையே கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமாம் அதுவரை காத்திருப்பானாம். நல்லது அப்படிப்பட்ட ஒருவன் கிடைப்பது கஷ்டம் . நானும் அப்படித்தான் காத்திருக்க போகிறேன் என்றான் ஆறுமுகம். சௌமியா எதுவும் சொல்லாமல் சிரித்தாள். எக்ஸாம்ஸ் நெருங்குவதால் ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். நாம் கம்பைன் ஸ்டடி பண்ணினால் என்ன என்று கேட்டாள் சௌமியா. நீ டாப் ரேங்க் ஹோல்டர் நான் சுமார் . அதெல்லாம் பரவாயில்லை நானே நாளை ஈவினிங் 6 மணிக்கு உன் வீட்டுக்கு வருகிறேன் . சரி வா நான் ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வைக்கிறேன் என்றாள்.
சௌமியா சொன்னபடி வந்துவிட்டாள் . ஆறுமுகம் ஹாஸ்டலில் விட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டான். அவன் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் . இருவரும் படித்துக்கொண்டிருந்த போதே சௌமியா நம்பரில் சமர் கூப்பிட்டான். இவள் வாங்கி வெளியில் போய் பேசிவிட்டு வந்தாள். இதுக்கு இவனையே கல்யாணம் பண்ணியிருக்கலாம் என்றாள் ஹரிதா. அவன் ஒரு சாமியார் நீ ஒரு சாமியாரிணி நல்ல பொருத்தம் என சௌமியா சிரித்தாள். 9 மணி போல சௌமியா கிளம்பிவிட்டாள். பாவம் சௌமியா ரஞ்சித் நினைப்பு அவளை வாட்டி எடுத்திருக்கும்.எப்படித்தான் சமாளிக்கிராளோ என ஹரிதா வருத்தப்பட்டாள். அப்பாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அவர் அட்வைஸ் பண்ணுகிற ஆள்தான். ஆனால் பிரியத்திற்க்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது. என்ன ஆச்சு கம்பைன் ஸ்டடி என்றான் ஆறுமுகம். இடையில் இந்த சமர் ஃபோன் பண்ணியதால் அரைமணி நேரம் போச்சு என்றாள் ஹரிதா.நான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை ..இப்படித்தான் எப்பவும் சொல்வாய்
சரி உன்னுடைய ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி எல்லாம் எப்படி இருக்கிறது. இங்கே ஸ்போர்ட்ஸ் என்றாலே லைப்ரரிக்கு விரட்டுகிறார்கள் என்றான் ஆறுமுகம் .
ஆரம்பத்தில் ஹரிதாவுக்கும் எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்தது. அப்புறம் கூச்சப்பட்டுக்கொண்டு எதிலும் கலந்து கொள்வதில்லை. முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்கிற ரீதியில் அவளுடைய பேச்சு மாறியிருந்தது.