Shiva's Yoga is all Maya - Part 6 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 6

The Author
Featured Books
Share

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 6


நான் உங்கள் சிவா.

மறுபடியும் இந்த கதை தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com


நான் கார்த்திக்...


என் flat door Bell ring ஆனது.
கடுமையான migraine headache னால sofaல சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கண்ணுக்கு வெளிச்சம் படாம black eye pouch கட்டியிருந்தேன்.

மறுபடியும் Door Bell அடிக்க..
டேய் குமார் (flats maintenance boy) door open ல இருக்கு உள்ள வாடா..
ஏண்டா இவ்ளோ late.. டேய் தலைவலி மண்டைய பொளக்குதுடா... அந்த pills கிடைச்சதா?

யாரோகிட்ட வர எனக்கு மாயா perfume வாசனை அடிக்க..

மாயா?. என்று eye pouch யை கழட்டி கொண்டே...

ஆமாம் நான் தான்.. என்னாச்சு கார்த்திக்? ராம் க்கு போன் பண்ணினேன். அவர் தான் சொன்னார்.
நேத்து ஈவினிங் லேருந்து நீ sick னு..

இதற்குள் குமார் வந்து pills கொடுத்து விட்டு, ஏதாவது தேவையா? என்று கேட்டுவிட்டு, எங்கள் இருவரிடமும் சொல்லிட்டு கிளம்பினான்.

எனக்கு inform பண்ணக்கூடாதா,? ஏன் என்னாச்சு?

அது ஒண்ணுமில்லை மாயா.. work stress.
Project ஒண்ணு சொன்ன time க்கு complete ஆகலை. அதான் overstay பண்ணி.. இந்த மாதிரி work pressure இருந்தாலே சரியான தூக்கம் இல்லைனாலும் migraine வந்துடும்.
நம்ப குமார் கிட்ட tablet வாங்க சொல்லி அனுப்பியிருந்தேன்.. அது போட்டா சரியாயிடும்.

எங்க கிட்ட சொல்லியிருந்தா.. ஏதாவது food, juice பண்ணி எடுத்துட்டு வந்திருப்போம்ல.

அதெல்லாம் ஒண்ணும் problem இல்லை மாயா.. food online ல order பண்ணா வந்துடப்போகுது. ஆனா பசியே இல்லை. சரி கட்ட புஸ்க்கு sorry ஸ்ருதி எங்கே?

அவ பாலக்காடு போயிருக்கா, அவ என்ன சொன்னா தெரியுமா?

என்னய நல்லா கலாய்ச்சிருப்பாளே..

ஆமாமாம்.. சார் முதல்நாள் ஒவரா தண்ணி அடிச்சி மட்டையா ஆயிருப்பாரு.. அதான் hangover ஆகியிருக்கும்.

அப்படியா சொன்னா.. இரு கட்டபுஸ்க்கு வரட்டும்.. அவளுக்கு இருக்கு.

சரி, ரொம்ப pain ஆ இருக்கா? கார்த்தி, pills எடுத்துக்கிற.. என்று என் நெற்றியில் மெதுவாக மாயா கை வைக்க..

ஐய்யோ.. என்ன இது என் தலைவலி போயிந்தே.. போயே போச்சு, It's Gone. சுத்தமா போயிடுச்சு. உன் கை பட்டதும்..

டேய், இந்த லொள்ளு தானே வேணாங்கிறது.. ஆனா இந்த smartness தாண்டா உன்கிட்ட எனக்கு பிடிச்சிருக்கு என்றாள் சிரித்து கொண்டே.
ஏதாவது வேணுமா கார்த்தி.. சாப்பிடறதுக்கு?

ஒண்ணும் வேணாம் மாயா., கீழே காஃபி ஷாப் போய் சாப்பிடலாமா? காபி குடிக்கனும் னு போல இருக்கு.‌ ரொம்ப நேரமா Room ல இருட்டுல இருக்கேன். கொஞ்சம் வெளியே போய் fresh air inhale பண்ணா நல்லாயிருக்கும். Company தருவியா?

Oh.. sure வா போகலாம்.

‌ஜஸ்ட் 1 minute.. face wash பண்ணிட்டு fresh up ஆயிட்டு வந்தர்றேன்.

காபி ஷாப் போய் order கொடுத்து விட்டு, wait பண்ணும் time ல்,
மாயா, advanced Happy Birthday என்று அவளுக்கு வாங்கி வைத்திருந்த Gift யை suprise ஆக கொடுத்தேன்.

அவளுக்கு ஆச்சரியம்.. என் இரு கைகளையும் பிடித்து கொண்டு கண்கள் விரிய, சிரித்து கொண்டே.. கார்த்திக் so cute.. என்று gift யை open பண்ணி பார்க்க.. அழகான bracelet... ரொம்பவும் பிடித்து போக.. அப்போதே என்னை அவள் கையில் மாட்டிவிட சொன்னாள்.
Bracelet யை கையில் மாட்டும் போதே மாயா இதோ பார் நமக்கு engagement ஆன மாதிரி.. அதற்கு அடையாளம் தான் இது. so, நாம husband - wife ஆகிட்டோம். நைட் மஜா தான் ஓகே என்றேன்.

மாயா முகம் மலர்ந்து. கன்னத்தில் குழி விழ சிரித்து. வெட்கத்துடன் என் கையை யாருக்கும் தெரியாமல் முத்தமிட.. அவள் கன்னங்கள் சிவந்து மிகவும் அழகாக தெரிந்தாள்.

கார்த்திக் இந்த bracelet எப்பவும் என் கூடவே இருக்கும். என் கையில் உரசிக்கொண்டு.. உன் ஞாபகமாகவே,

ஐயோ அப்படி தெரிஞ்சிருந்தா கழுத்துக்கு கீழே போடுற மாதிரி long chain வாங்கியிருப்பேனே.. அதுவும் அங்கே உரசிக் கொண்டே..

ச்சீய் எப்படி தான் இப்படி எல்லாம் பேசறியோ?
ஆனால் அதை மாயா ரசித்ததை என்னால் உணர முடிந்தது.

நேரம் போனதே தெரியாமல் ஏதேதோ future பத்தி பேசிக் கொண்டே இருந்தோம். மாயா ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாள்.

அடுத்த நாள் காலை நான்
Office போய் போனை எடுத்து பார்த்தால் ஸ்ருதி யிடமிருந்து 2 missed calls Just 2 minutes before.

உடனே ஸ்ருதி யை contact பண்ணேன். அவள் சொன்னதிலிருந்து..
இன்னைக்கு morning 8.40 லேருந்து மாயா வை contact பண்ண முடியவில்லை. Last call 7.40 am க்கு இரண்டு பேரும் பேசியிருக்காங்க. அதற்கப்புறம் 8.40 வரை what's up ல் active ஆ இருந்தது, இப்ப போன் switched off . No more calls from மாயா. அவளோட car colony ல் கீழே park பண்ணியபடியே இருக்கு. So, எங்கேயும் வெளியே போகலை.

நான் உடனே alert ஆனேன். ஏதோ தப்பு நடந்திருக்கு என்று என் உள்ளுணர்வு சொன்னது.

நான் 8 .30 am போல duty க்கு car ல் போகும் போது colony front gate வெளியே cross பண்ணும் போது என்னை ஒரு bike cross பண்ணியது. 3 பேர் இருந்தனர். அதில் ஒருவன் என்னையே பார்த்துக் கொண்டு cross பண்ண.. அது அந்த Dr. பையன். என் எதிர் flat.
நான் கண்டுகொள்ளவில்லை, ஏதோ பசங்க வெட்டியா சுத்திகிட்டிருக்கானுங்க னு. அது ஞாபகத்துக்கு வந்தது.

உடனே திரும்ப colony க்கு போனேன். மாயா car இப்பவும் அதே parking area விலே நின்றிருந்தது. நான் ஏதோ tension டன் தேடுவதை பார்த்த எனக்கு ரொம்பவும் தெரிந்த security guards இரண்டு பேர் என்ன என்று விசாரிக்க.. எல்லா matterம் சொல்லி இது confidential ஆ இருக்கட்டும். யாருக்கும் தெரிய வேண்டாம். ஏன்னா இது மாயா சம்பந்தப்பட்ட விஷயம்.

பின் morning அந்த bike என்னை cross பண்ணியது, Dr. பையன்.. இதெல்லாம் ஞாபகம் வர, Guard சரவணனிடம் என் opp. Flat Dr. son பற்றி விசாரிக்க... அவன் பெயர் சர்வா முழு பெயர் சர்வானந்த் Dr. மூர்த்தி பையன் என்று சொன்னான்.

உடனே security office போய் CCTV footage check பண்ண, சர்வா அவன் friends morning இரண்டு பேரும் colony க்குள் bike ல் உள்ளே வந்தது தெரிந்தது. ஆனால் இப்ப வரை வெளியே போகவில்லை.
So. இங்கேதான் அவர்கள் இருக்கிறார்கள். அது confirm ஆனது. Suspected cars or any vehicles ஏதும் colony யை விட்டு வெளியே போகவில்லை. So, இந்த மூன்று பேரையும் பிடித்தால் ஏதாவது clue கிடைக்கும்.

முதலில் colony க்குள் check பண்ணுவோம் என்று நானும் guards இரண்டு பேரும் தேட ஆரம்பித்ததோம்.
Water Pumping station பக்கம் போனபோது எனக்கு கீழே தரையில் நான் மாயா விற்கு Gift கொடுத்த bracelet கிடைத்தது.
ஏதோ நடந்திருக்கு.. அந்த வழியாக வே போக..

கொஞ்ச தூரத்தில் motor Room பக்கத்தில் இருந்து சர்வா வர, எங்களை பார்த்து திகிலுடன் ஓட ஆரம்பித்தான். Guard சரவணன் துரத்தி பிடித்து இரண்டு அடிபோட எல்லா உண்மைகளையும் கக்கினான்.

சர்வா வும் அவன் friends இரண்டு பேரும்.. அன்று Beer bottle.. teasing கலாட்டாவிலிருந்து என்னையும் மாயாவையும் எப்படி யாவது பழிவாங்கனும் இல்லைனா அவமானபடுத்தனும் என்று grudge வச்சுகிட்டு, ரொம்ப நாளா watch பண்ணி ட்டே, ஒரு நல்ல சமயத்திற்கு wait பண்ணி... இன்னைக்கு plan போட்டு morning மாயா வை தூக்கியிருக்கானுங்க. இவனுங்களுக்குள்ள ஏதோ problem வர.. அப்ப பார்த்து நாங்கள் வரும் sound கேட்டு.. சர்வா க்கு பிடிக்காமல் வெளியே வர எங்கள் கிட்ட மாட்டிகிட்டான்.

முதலில் மாயா எங்கே என்று நான் கேட்க சர்வா பயந்தபடியே அந்த motor Room யை நோக்கி கையை காட்டினான். எனக்கு பக் கென்றது.. பயத்துடன் அந்த Room நோக்கி சென்றேன்.

உங்கள் கருத்துக்களை share செய்ய pl. mail to siva69.com@gmail.com

தொடரும்..