Sivavin Yoga Ellam Maya Part 9 books and stories free download online pdf in Tamil

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 9

நான் உங்கள் சிவா..
மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

நான் கார்த்தி...


Office லிருந்து Car யை எடுத்து கொண்டு மாயா வைப் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில்... அவளுக்கு வழியில் Already Online ல் பார்த்து order பண்ணியிருந்த Gift pack யை வாங்கிக்கொண்டு boutique shop போய் சேர்ந்தேன்.
மாயா என்னை பார்த்தவுடன் முகம் மலர்ந்து புன்னகையுடன் வந்து என் கையை பிடித்து கொண்டு அவளது Office Private Room க்கு கூட்டிச் சென்றாள். Lunch time ஆனதால் staffs யாரும் இல்லை.

மாயா white Gold colour printed saree with black sleeveless ஜாக்கெட்டில், Red lipstick, கழுத்தில் மெல்லிய தங்க செயின், கையில் braceletடன், Simple makeup ல் தலை முடியை தூக்கி வாரி ponytail போட்டு மிக அழகாக இருந்தாள். என் கண்களுக்கு பேரழகி போல தெரிந்தாள்.

Room க்கு போனவுடன் அவளை அப்படியே தழுவி கொண்டு நெற்றியில் கண்களில் முத்தமிட்டு, அவள் பின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டேன்.

மாயா வை பார்க்கும் வரை ஏதோ ஒரு வித Feelings ல் Mood swings ல் இருந்தேன். என்னவென்று எனக்கே தெரியவில்லை. அவளை அணைத்து கொண்ட பிறகு தான் அவளின் அன்யோன்யம் எனக்கு ஏதோ ஒரு தெம்பு கொடுத்தது போல் பாதுகாப்பாக உணர்ந்தேன். அப்படியே கொஞ்ச நேரம் அவளை அணைத்தபடியே இருந்தேன். எதற்கோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் தளும்பியது.

மாயா வும் என்னை உணர்ந்தது போல் எதுவும் செய்யாமல் என்னை அணைத்தபடியே என் முதுகை தடவிக் கொடுத்துக்கொண்டே இருந்தாள். இருவருடைய இதயத்துடிப்பும் ஒரே லயத்துடன் அடித்து கொள்ள, அதை, அணைத்து கொண்டு இருந்த நாங்கள் இருவரும் உணர்ந்தோம். என்னுடைய feelings அவளுக்கு புரிந்திருக்க வேண்டும். அவளின் அணைப்பில் ஒரு தாய்மையின் அரவணைப்பு இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து என்ன சிவா? என்னாச்சு? என்று என் முகத்தை பார்க்க அவள் விலக முற்பட,.. நான் மறுபடியும் அவளை இழுத்து அணைத்து கொண்டேன். மாயா வும் என் Feelings யை புரிந்து கொண்டு அப்படியே இருந்து விட்டாள். மாயா வின் கூந்தல் வாசம், perfume மற்றும் அவளின் பிரத்யேக உடம்பின் வாசனை எல்லாம் என்னை கிறங்கடித்தது.

மாயா வின் intimacy, அவளின் அணைப்பில் நான், அவளின் ஸ்பரிசம் எல்லாம் எனக்கு ஒரு வித பரவசத்தை, security யை, peace of mind யை கொடுத்தது. இப்படியே இருவரும் இருந்து விட்டால் போதும் வேறு எதுவும் இந்த பிரபஞ்சத்தில் தேவையில்லை என்றே எனக்கு தோன்றியது. அதனால் அப்படியே மாயா வை அணைத்தபடியே இருந்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து மாயா என் காதில் மெதுவாக கார்த்திக், ஏம்மா? என்னாச்சு? என்றாள். நான் ஒன்றும் பேசவில்லை. என் கைகள் அவளின் முதுகை தழுவியிருந்தது. அவளின் மார்பகங்கள் என் மார்பை அழுத்தியிருந்தது.
பின் சிறிது நேரம் கழித்து என் பிடி தளர..
மாயா என்னை மெதுவாக ஏறெடுத்து பார்த்து, என் நெற்றியில் முத்தமிட்டு பின் என் கண்களில் முத்தமிட, கலங்கியிருந்த என் கண்கள் அவளுக்கு ஏதோ உணர்த்தியிருக்க வேண்டும்.
என்ன வென்று கண்களால் கேட்க,

நான் அவளின் உதட்டில் முத்தமிட்டு..
மாயா என்னை நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவியா?
என் வாழ்நாள் முழுவதும் என் கூடவே
இருப்பியா? ப்ளீஸ் மாயா.. தழுதழுத்த குரலில்.

டேய், இதெல்லாம் நான் உன்னை கேட்கவேண்டியது ..

இல்லை மாயா, உன்னைவிட்டு பிரிஞ்சி ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியல. அதுவும் நமக்குள்ள இந்த மாதிரி நேத்து நடந்து, நாம ஒண்ணா கலந்ததுக்கப்பறம்... நான் எப்பவும் இந்த மாதிரி இருந்ததில்லை.
இப்ப கூட உன்னை பார்த்ததுக்கு அப்புறம் உன்னோட அன்யோன்யம் கிடைச்ச பின்னாடி தான், என்னால Normal ஆ feel பண்ண முடியுது, Breathe பண்ண முடியுது.
காலை லேயிருந்து ஏதோ miss பண்ண மாதிரி, பைத்தியம் பிடிச்ச மாதிரி.. ஏதேதோ.. Feelings.
உன்னோட அழகான முகத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் என்னால நிம்மதியாக மூச்சு கூட விட முடியுது.
மறுபடியும் மாயா வை கட்டிப்பிடித்து கொண்டேன்.

கார்த்திக், என் மேல இவ்ளோ லவ் ஆ?
இவ்வளவு நாள் இந்த லவ் வை எங்கடா வச்சிருந்த..?

உண்மைய சொல்லட்டுமா? உன்னோட அழகுக்கு முன்னாடி நானெல்லாம்...

நீ என்னை லவ் பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்லை. ஆனால் நான் உன்னை பார்த்த first day லிருந்து லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எங்க நான் propose பண்ணி நீ என்னய reject பண்ணிடுவியோனு பயத்துல propose பண்ணலை. ஆனால் நீ என் பக்கத்திலேயே இருக்கனும்.. உன்னை பார்த்து கிட்டே இருக்கனும் தான் உன்னையும், ஸ்ருதி யும் வம்பு பண்ணிகிட்டே இருந்தேன். சில நிகழ்வுகள் தன்னால நடந்தது.

அன்னைக்கு அந்த Cancer - மாலா அம்மா reports meeting போது தான் உன் கண்ணுல என் மேல் காதல், எனக்கு ஏதோ ஆயிடுமோங்கிற பரிதவிப்பை பார்த்தேன். உடனே லவ் propose பண்ணிட்டேன். இப்பவே உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு துடிச்சிகிட்டிருக்கேன் என்று சொல்லி யபடியே Gift யை மாயா விற்கு கொடுத்தேன். கண்கள் விரிய சின்ன குழந்தை போல பிரித்து பார்க்க அழகான diamond ring.

ஆச்சரியத்துடன் என்னடா gift ஆ கொடுத்து அசத்துற. So sweet..

நான் Ring யை அவள் அழகான மென்மையான நீண்ட விரல்களில் மோதிர விரலில் போட்டுக்கொண்டே.. இது இன்னொரு engagement மாதிரி அதனால் இன்னைக்கு கூட... என்னை சொல்ல விடாமல் தன் உதடுகளால் என் வாயை மூடினாள். பின் அவள் எனக்கொரு Gift Pack Present பண்ண.. பிரித்து பார்க்க அருமையான T Shirt அதனுடன் Gold Chain. Chain யை அவளே என் கழுத்தில் போட்டு அழகு பார்த்து..

வாவ் Super ஆ இருக்கு கார்த்தி.. இது எப்பவும் உன் கழுத்திலேயே இருக்கனும்.

Thanks மாயா.. Madam Order யை எப்பவும் நான் தட்ட மாட்டேன் என்றேன் அவளை அணைத்து கொண்டே..

கொஞ்ச நேரம் கழித்து..
என்ன மாயா இப்பல்லாம் Saree ல அசத்துற?

ஆமாம் உனக்கு தான் நான் Saree கட்டுனா ரொம்ப பிடிக்குமே. அதான்.

நான் சந்தோஷத்தில் அவளை என் அருகில் இழுத்து இடுப்பில் கை வைத்து மெதுவாக அமுக்க.. ஸ்.. கார்த்தி என்று கண் சொருக... அப்படியே அவளை என் மார்பில் அணைத்து கொண்டு அவள் தலை முடியை கோதி விட்டு நெற்றியில் முத்தமிட்டேன்.

மாயா உனக்கு தெரியுமா நான் அன்னைக்கு Yoga Class ல First kiss உன்னய அடிச்சதுக்கப்பறம், ஒரு தடவை எங்க ஊருக்கு போய் எங்க அம்மா கிட்ட இந்த மாதிரி நான் ஒரு பொண்ணை பார்த்திருக்கேன். ரொம்ப அழகாயிருப்பா. ஆனால் அவ என்னை லவ் பண்ணுவாளோ கல்யாணம் பண்ணிப்பாளோ னு எனக்கு தெரியாது. But நான் லவ் பண்றேன், எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்னு சொல்லி.. உனக்கு தெரியாமல் எடுத்த உன் photos சில அம்மா கிட்ட காண்பிச்சேன்.
அம்மா வுக்கு உன்னை photo ல பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். ரொம்ப ரொம்ப அழகா இருக்க னு சொல்லிகிட்டே இருந்தாங்க. அப்படி லவ் success ஆயிடுச்சுன்னா உடனே phone பண்ணி அவங்களுக்கு சொல்ல சொன்னாங்க.. முடிஞ்சா அப்படியே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொன்னாங்க.

மாயா ஆச்சரியத்துடன் நான் சொல்ல சொல்ல.. தன் அழகான பெரிய விழிகள் விரிய என் கைகளை பிடித்து கொண்டு அவ்வப்போது என் மார்பில் சாய்ந்து கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

அதுவும் நான் என் அம்மாவிடம் அவளை பற்றி சொன்னேன் என்பதை கேட்டவுடன், அம்மா அவளை பற்றி சொன்னது எல்லாம் கேட்டவுடன் அவளாள் தாங்க முடியவில்லை. கண்ணீருடன் என்னை தழுவி என் கண்களில் முத்தமிட்டாள். பின் நான் அவளுக்கு தெரியாமல் எடுத்திருந்த photos பார்த்து சிரித்து கொண்டே... என்னை செல்லமாக அடித்தாள்.

பின் அவளிடம் மாயா அம்மாகிட்ட பேசறியா? போன் போட்டு தரேன்.

கார்த்திக் என்ன திடுதிப்புனு.. i am not prepared .
பரவாயில்லை மாயா நீ பேசுனா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க, ப்ளீஸ் .

சரி கார்த்திக்.. ஆனா எனக்கு பயமாயிருக்கு..

அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. நீ casual ஆ பேசு.
நான் போன் பண்ணி அம்மாவிடம் பேசி எல்லா விபரமும் சொல்லி விட்டு.. அம்மா உன் கிட்ட மாயா இதோ பேசறா.. என்று மாயா விடம் போன் யை speaker ல போட்டு கொடுத்தேன் .

அம்மா எப்படி இருக்கீங்க? நான் மாயா பேசறேன்.

அம்மாடி, மாயா என் தங்கம்.. நல்லாயிருக்கியாம்மா? நான் நல்லா இருக்கேன்மா. போன தடவை இங்க கார்த்திக் வந்தப்ப உன்ன பத்திதான் அடிக்கடி ரொம்ப பேசிகிட்டிருந்தான். அவனுக்கு உன் மேல ரொம்ப ஆசைம்மா.. அவன் ரொம்ப நல்லவன்மா. என்ன கொஞ்சம் விளையாட்டுதனம் தான் ஜாஸ்த்தி.
நீ சம்மதிச்சா கல்யாணம் பண்ணிக் கனும்னு ரொம்ப ஆசைபட்டான்மா.. என் கிட்ட சொல்லிகிட்டே இருந்தான்மா.. இப்ப நீங்க இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துட்டீங்களா? அடிக்கடி சண்டை போட்டுக்குவோம் சொன்னான். இப்ப உங்க இரண்டு பேர் மனசும் ஒண்ணா சேர்ந்திடுச்சா? ரொம்ப சந்தோஷம்மா, நானும் சாமிய வேண்டிகிட்டே இருந்தேன். உங்க இரண்டு பேர் மனசும் ஒண்ணாகனும் னு. என் வேண்டுதல் நிறைவேறிடுச்சு. சாயந்திரம் கோவிலுக்கு போய் என் பிரார்த்தனைய நிறைவேத்திட்டு நெய் விளக்கு போடனும்.

மாயா வுக்கு உணர்ச்சி பெருக்கால் வார்த்தை கள் வரவில்லை. ஊம்.. ம். என்றுதான் குரல் வெளியே வந்தது.
என்னை கட்டிபிடித்து கொண்டு என் மார்பில் சாய்ந்து கொண்டு அவ்வப்போது என்னை நிமிர்ந்து பார்த்து கொண்டு என் கையை முத்தமிட்டு கொண்டே இருந்தாள். கண்களில் கண்ணீர்.

அவள் நிலைமை யை புரிந்து கொண்டு..

நான், அம்மா நீ கோவிலுக்கு போய் விளக்கு போட்டால் போதும். அப்பறம் அது என்ன வேண்டுதல் னு ஏதோ சொன்ன?

அதெல்லாம் ஒண்ணுமில்லை டா, நீயும் மாயா வும் மனசு ஒண்ணாகி நீ ஆசைபட்ட படி மாயா உன்னய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா, நம்ம அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு போட்டு, அடிபிரதட்சணம் பண்றேன் னு வேண்டிகிட்டேன்டா. இன்னைக்கு போய் அந்த வேண்டுதலை நிறைவேற்றிடுவேன்.

அம்மா ஏற்கனவே உனக்கு pressure இருக்கு ஓவரா ஆடாதே.

போடா கிறுக்கு பயலே.. தங்க விக்கிரகம் மாதிரி எனக்கு நல்ல மருமகள் கிடைச்சிருக்கா.. எனக்கு என்னடா?
போடா..
அதற்குள் மாயா அம்மா, உடம்பை வருத்திக்காதிங்கம்மா.. ஜாக்கிரதைம்மா என்று சொல்ல..
அம்மா மாயா, உரிமையோட அத்தை னு கூப்பிடும்மா.. அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே ஆகாதும்மா.

மாயா புன்முறுவலுடன் சரிங்க அத்தை..

சரிடா தங்கம், என் பிள்ளைய ஜாக்கிரதை யா பார்த்துக்கோம்மா. அவன் ஏதாவது உன் மனசு கஷ்ட்டபடற மாதிரி நடந்துகிட்டானா என் கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன். அப்படியே முடிஞ்சா நீயும் கார்த்தியும் ஒரு எட்டு திருச்சி நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்கம்மா.. என்னையும் மாமாவையும் பார்த்த மாதிரி இருக்கும்ல.
அப்படியே அத்தை. கண்டிப்பா வர்றோம்.

பின் நான் அம்மா விடம் பேசி முடித்ததும்,

மாயா என்னை கட்டிபிடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
மாயா என்னாச்சு? ஏம்மா? என்று கேட்க..
அழுகையுடன் எப்படிரா நீயும் உங்க அம்மா வும் sorry அத்தையும் ஒரே மாதிரி இருக்கீங்க? இவ்வளவு பாசத்தையும், அன்பையும் என்மேல கொட்டுறீங்க? நான் அவ்வளவு அதிர்ஷ்டசாலி யா? Thanks Karthi, எனக்கு ஒரு அருமையான உறவை family ய கொடுத்த துக்கு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யபோறேன்னு தெரியலை.
நாம கல்யாணம் பண்ணிக்க னும்னு அங்கே அத்தை.. சாமிய வேண்டிகிட்டு.. அவங்களை வருத்திகிட்டு.. மாயாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

நான் அப்படியே அவளை அணைத்து கொண்டு.. கண்ணீருடன் இருந்த கண்களை மாறி மாறி முத்தமிட்டபடியே..
அதுதான் மாயா லவ்... உறவுகள்.. பாசம்.. நம்ம சொந்தங்கள்.
நீ எனக்கு உன்னையே தரலையா? இப்ப கூட தரப்போறில்ல.. என்ன தருவில்ல? ஆசையோட இருக்கேன். மாயா சிரித்து கொண்டே என் முகத்தில் எல்லா இடங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.
பின் என்னை எடுத்துக்கோ கார்த்திக்.. நான் உனக்காகத்தான். இன்னைக்கு என் மனசு நிறைஞ்சிருக்கு.. எல்லாம் உன்னால் தான் கார்த்திக் என்றாள். வா Lunch க்கு போயிட்டு Flats க்கு போவோம்.

நான் உணர்ச்சி மேலிட அவள் முகத்தை என் கையில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே கண்கள், மூக்கு, கண்ணங்களில், உதட்டில் முத்தமிட்டு..
மாயா நீ எனக்கு கிடைச்ச பெரிய Gift, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றேன்.

இரண்டு பேரும் உணர்ச்சி பெருக்கில் இருந்தோம்.

இவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் நன்றாகத்தான் இருக்கும்.. ஆனால் விதி யின் விளையாட்டு அவர்களை விடுமா?.... பொருத்திருந்து பார்ப்போம்..


உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

தொடரும்...